Episode -15
“உங்களை யங் மாஸ்டர் எல்லா இடத்திலும் தேடிட்டு இருக்காங்க மா!” என பணிப்பெண் ஒருத்தி சொல்லிவிட்டு போக..
“போனை எடுத்து பார்த்தாள். அச்சோ இத்தனை மிஸ்ட் கால்ஸ்சா? போச்சு கோபமா இருப்பாரே!” என வியர்வையை துடைத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் கண்மணி.
நிவாசுக்கு பிடித்த அனைத்து அசைவ பட்சிகளையும் பார்த்து பார்த்து செய்தாள். வாத்து கறி நிவாசுக்கு மிகவும் பிடித்தம். கடைசியாக பன் அல்வாவில் வந்து முடித்திருந்தாள். அரக்க பறக்க வேகமாக அவளது அறைக்கு சென்றாள்.
“நிவா! எங்கே இருக்கீங்க?” என தேடியவள். சரி அவரோட ரூம்ல இருக்காரா! பார்ப்போம் என அறையை விட்டு வெளியே வர, பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேகம் சிலிர்த்தது பெண்ணவளுக்கு, “ப்ச் விடுங்க நான் ரொம்ப அழுக்கா இருக்கேன் குளிச்சிட்டு வரெனே!”
“இல்லையே உன் மேலே வாசமடிக்குதே!”
என்ன வாசம்? என அவன் தொடுதளில் நெளிந்தாள்.
“குட் ஸ்மெல் தான்! இப்போ உன் மேலே இருக்கும் வாசம் எனக்கானதுன்னு தோணுதே.மேடம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? என்றவன் அவளின் பின் கழுத்தில் வடிந்து கொண்டிருக்கும் வியர்வை முத்தை ஒற்றி வாய்க்குள் சுவைத்தான்.
“நி.. நிவா!.. என்ன பண்றீங்க? விடுங்க.. இப்பல்லாம் உங்க கிட்ட பேச வரவே பயமா இருக்கு”
ஏன் என அவனது புருவங்கள் இடுங்க, “அச்சோ புருவத்தை சுறுக்காதீங்க. அட்லீஸ்ட் நிச்சயம் வரைக்கும் பொருக்கலாமே! உங்க அம்மா ரொம்ப டெரரா இருக்காங்க எனக்கு பயமா இருக்கு” என்றாள் கண்களை மூடிக் கொண்டே..
“இன்னும் ஒன் வீக் இருக்கு கண்மணி. என்னால முடியல டி! பெங்களூர்லயே இருந்திருக்கலாம்ன்னு தோணுது.”
“இல்ல உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க வேணும் சீக்கிரமா!”
நிவாஸ் அவள் முகத்தை திருப்ப.. “எனக்கு பயமாறுக்கு நிவா! சீக்கிரம் உங்களுக்கு சொந்தமாகிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும். இப்போ வரைக்கும் நான் யாரு என்னன்னு யோசிக்கிறேன். திடீர்னு யாராவது வந்து உங்களையும் என்னையும் பிரிச்சிட்டா? என்னால தாங்க முடியாது. அதுக்குள்ள நான் உங்களுக்கு சொந்தமாகிட்டா! எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்” என கூறி முடித்தாள்.
கவலை படாத கண்மணி என் கிட்டருந்து உன்னை யாராலயும் பிரிக்க முடியாது. என்றவன் அவளை அணைத்துக் கொண்டான். கண்மணி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
இப்படியே நேரம் போக, “பசிக்கலயா உங்களுக்கு…”
“பசிக்குது தான்!”
“அப்போ வாங்க சாப்பிடலாம். உங்களுக்காக பார்த்து பார்த்து பண்ணிருக்கேன்.”
“சாப்பிடலாம் எனக்கு நீ இப்படியே இருக்கணும்னு ஆசை!”
“எப்படி உங்களோட நெஞ்சிலே முகத்தை புதைச்சுக்கிட்டு இருக்கணுமா?” என கண்மணி சிரிக்க..
“ஆமா அப்படிதான்னு வச்சுக்கோயேன்” என நிவாஸ் அவளின் கழுத்தில் மென் முத்தங்களை பதித்துக் கொண்டிருக்க.. போதும் போதும் வாங்க போலாம் நான் குளிச்சிட்டு வந்து உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.
கண்மணி!.. நானும் வரட்டா!
எங்கே என கப்போர்டை திறந்தாள்.
உன் கூட சேர்ந்து..
என்ன? என அவள் திரும்பி பார்க்க.. “இல்ல டி! உனக்கு குளிக்கும் போது முதுகு எட்டாது. அதான் நான்”
“ம்ம் வரலாமே!”
என்ன என வேகமாக பட்டனை கழட்ட ஆரம்பித்தான் நிவாஸ்.
“உங்க அம்மா வர மாதிரி இருக்கே!”
“வரட்டுமே!” என நிவாஸ் அவளின் அருகில் நெருங்கினான் ரெஸ்ட் ரூம் பக்கமாக..
நிதின் பாவா? என கண்மணி ஒற்றை புருவம் தூக்க..
சான்சே இல்ல என இன்னும் நெருங்கினான்.
நிவாஸ் என வீடே அதிரும் படி நிதின் கத்த, அன். அண்ணயா இதோ வரேன் என வேகமாக ஓடி விட்டான்.
கண்மணி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, ஒரு நாள் மொத்தமா இருக்கு டி கண்மணி என அவளின் சின்ன மோவாயை திரும்பி வந்து கடித்து விட்டு ஓடினான்.
நிச்சயதார்த்த வேலைகள் பற்றி பேசத்தான் நிதின் அழைத்திருந்தான்.
ஹரிணி தன் அத்தை தேஜுவை பார்க்க, என்னாச்சு? ஓகே தானே!.
இல்ல மாமி! கொஞ்சம் நெஞ்சில் இருக்க மாதிரி இருக்கு. ரசம் செஞ்சு தரீங்களா? கூடவே மோர் சாதம் என ஹரிணி கேட்க.. அவ்ளோ தான நான் செஞ்சு தரேன் என மருமகளை வான்ஜையாக நெட்டி முறித்தவள் நேராக கிச்சன் சென்று அனைத்து உணவையும் செய்து வந்தார் அரை மணி நேரத்தில்..
குளித்து முடித்து புடவையுடன் லட்சுமி கடாட்சமாக கண்மணி வந்து சேர்ந்தாள். அக்கா மட்டன் செஞ்சுருக்கென் சாப்பிடுங்க போட்டுட்டு வரட்டுமா? என ஆசையாக கேட்டாள்.
ஒண்ணும் வேணாம். அவன் வந்துட்டான் நீ அவனை மட்டும் கவனிச்சுக்க என வெட்டி பேசினார் தேஜு.
ஹரிணி பாவமாக கண்மணியை பார்த்தாள். கண்மணி வருத்தத்துடன் எதையும் காட்டி கொள்ளாமல் சமையலறை பக்கம் சென்றாள்.
“ஏன் மாமி இப்படி பேசுறீங்க?” என ஹரிணி மெதுவாக குரலில் கேட்க..
தேஜு ஒரு பெரு மூச்சை விட்டபடி, “என் அண்ணன் உதயன் மகள் இனியாவை இவன் கட்டியிருக்கலாம். இல்லன்னா உன் மாமனார் வழியில் வருண் பொண்ணு தேவி ஶ்ரீ இருக்காளே அவளை கட்டியிருக்கலாம். இவள் யாரு என்னன்னு தெரியல. நிதின் கல்யாணம் கொஞ்சம் குளறுபடி ஆகி போச்சு. நீங்க ரெண்டு பேரும் உங்க விருப்பத்தை முதலிய சொல்லிருந்தால் நல்லா பெருசா பண்ணிருக்களாம் சடங்கு சம்பிரதாயம் எல்லாமே பண்ணி.. ஆனால் நான் நினைச்சது நடக்கல.”
“எதோ நிவாஸ் என் பேச்சை கேட்பான்னு நினைச்சேன். ஆனால் இவன் ரெண்டு வருஷமா இவள் கூட ஒரே வீட்டில் இருந்திருக்கான். என்னோட ஆசை எல்லாம் நிராசை ஆகி போச்சு. நான் போட்ட கோட்டை நிவாஸ் தாண்ட மாட்டான். ஆனால் இவழுக்காக அழிச்சிட்டு போயிட்டான்” என ஆதங்பட்டார்.
அப்போ நான் என்னை உங்களுக்கு பிடிக்களயா மாமி! என ஹரிணி நேரடியாக கேட்டாள்.
தேஜு சிரித்த படி ரொம்ப பிடிச்சிருக்கு.” நீ வளர்ந்ததை நான் சின்ன வயசில இருந்து பார்க்கிறேன்.எனக்கு பிரச்னை அதில்லை ஹரிணி. எந்த கோபமும் இல்ல. ஆனால் நிவாஸ் இப்படி பண்ணுவான்னு ஏத்துக்க முடியல. நல்லாருக்கட்டும் என்னை தொந்தரவு செய்ய கூடாது. என் முன்னாடி நிக்காம இருந்தால் போதும். நானும் மனுஷி தான் எனக்கும் என் பசங்க வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்னு ஆசை இருக்கும்.” என்றவர்
“சரி என் பொண்ணோட கல்யாணத்தை நல்லா கிராண்ட்டா பண்ணனும்” என கூறினார்.
கண்மணி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் நிவாசுக்கு உணவு பரிமாறினாள். நீயும் சாப்பிடு!
“இல்ல நான் அப்புறம் சாப்பிடுவேன்.”
SP சாப்பிட அமர… தேஜு இடை மரித்தாள்.
“என்ன டி!”
நிதின் கூட தானே சாப்பிடுவீங்க. உங்களுக்காக நான் தனியா சமைச்சு வச்சிருக்கேன்.
“இல்ல டி தேஜு வாத்து கறி” என sp நின்றார்.
சரி சாப்பிடு என்று விட்டு தேஜு நகர.. வாங்க பாவா உட்காருங்க என கண்மணி அழைக்க.. இல்ல மா நீ சாப்பிடு. நான் உங்க அத்தை கூட சாப்பிடுறேன் என SP பின் வாங்கினார்.
ஹரிணி நேராக கண்மணியிடம் வந்து அந்த அல்வா மட்டும் போடு பேபி நான் நைட் சாப்பிடுறேன் என சொல்ல.. கண்மணி ஆசையாக வைத்து கொடுத்தாள்.
ஹரிணி ஒரு ஸ்பூன் எடுத்து விழுங்கினாள். ஹே என்ன பண்ற? என நிதின் முறைத்தபடி நின்றான்.
என்னாச்சு?
ஸ்வீட் சாப்பிட கூடாது சளி பிடிக்கும் வச்சிட்டு வா என நிதின் அதட்ட.. ஹரிணி அவளிடம் பேபி சூப்பரா இருக்கு எனக்கு ஒரு பவுல் எடுத்து வை என சொல்லி விட்டு மெல்ல நடந்து நிதின் பக்கம் சென்றாள்.
அங்கு நிவாஸ் மற்றும் கண்மணி மட்டுமே இருக்க.. அவளின் கண்களில் நீர் வழிந்தது.
இப்போ எதுக்கு ஃபீல் பண்ற? என நிவாஸ் அவளை இழுத்து வலுக்கட்டாயமாக மடியில் அமர்த்தி கொண்டான்.
ஒன்னுமில்லை.
எனக்கு தெரியும் கண்மணி. எங்க அம்மா அப்படி தான் ஆனால் என்னோட டாடிக்கு பிடிச்சிருக்கே! என் அண்ணன் எல்லார்கிட்டயும் அப்படி தான் நடந்திப்பான் ஆனால் எங்க வதினா ஸ்வீட் பாரு. அவ்ளோ தான் கூட்டு குடும்பம் அப்டின்னா இப்படி தான் இருக்கு. நம்மள எல்லாருக்கும் பிடிக்கணும்னு கட்டாயம் இல்ல. என்றான் நிவாஸ்.
“உங்க தங்கச்சிக்காவது என்னை பிடிக்குமா? இல்ல அவளும் உங்க அம்மா மாதிரி இருப்பாளா?”
நிவாஸ் கண்ணகுழி ததும்ப சிரித்தவன். கண்டிப்பா அவளுக்கு நீ fan ஆகிடுவ! அவள் எங்க டாடி மாதிரி ஓவர் ஸ்வீட் என அவளுக்கும் உணவை ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டு முடித்தான்.
நிச்சய தார்த்த ஏற்பாடுகள் அனைத்தும் நன்றாக முடிந்தது. நிதின் பிரகாஷ் அவ்விடத்துக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்ப்பாடு செய்திருந்தான். இன்னொரு பக்கம் அனைவரும் அழைக்க பட்டார்கள்.
நிலா மற்றும் ருத்ரன் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. ருத்ரனால் அவனது உணர்வுகளை கட்டுபடுத்த முடியவில்லை. அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என பொய் சொல்லிவிட்டு போதையை மதுவில் தேடினான். இன்னொரு பக்கம் நிலா அதே போலத் தான் இருந்தாள். ஆனால் முன்பை விட கொஞ்சம் தேரியது
நிலா நிச்சயத்துக்கு புறப்பட்டாள். “சரி பத்திரமா போயிட்டு வா நிலாமா!”
“அண்ணா நான் நிச்சயம் முடிஞ்சு உங்க கூட வந்துடுவேன்! நீங்க என்னை கூட்டிட்டு வந்திடனும்”
உங்க அண்ணனுக விடுவானுங்களா! என சத்ய தேவ் சிரிக்க.. எனக்கு நீ தான் முக்கியம் என சொல்லிவிட்டு “மன்னி வரீங்கலா என் கூட!”
அங்கே அவள் ( ஹரிணி) இருப்பா நான் வரல.. என ரிதம் முகத்தை திருப்பினாள்.
சத்ய தேவ் வேண்டுமென்றே “யாரது? நிலா மா அவள் யாரை சொல்றா? உனக்கு தெரியுமா?”
ரிதம் தன் கணவனை முறைத்தாள். நிலா கண்ணகுளி தெரிய சிரித்தவள் “அண்ணா கிண்டல் பண்ணாதீங்க!” என்று விட்டு ருத்ரனின் அறையை பெரு மூச்சுடன் பார்த்தவள் திரும்ப… நிலாவின் சித்தப்பா மகள் கணிறா வந்திருந்தாள் அழைத்து செல்ல..
அண்ணா நாளைக்கு வந்திடு என்று விட்டு கிளம்பினாள் நிலா.
அவர்கள் வீடு வந்து சேர மாலையானது. Sp அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். எப்பொழுது மகளை பார்ப்போம் என்ற தவிப்பு தான்.
பெத்தனான்னா பாப்பா வந்துட்டா என கனிரா சொன்னபடி நிலாவுடன் வந்தாள்.
பொம்மாயி என சந்தோஷம் பொங்க நுழைவு வாயில் சென்றார் sp. தாடி என கண்ணகுளி ததும்ப நிலா நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
நிலா வந்தாச்சா? என கண்மணி ஹரிணியிடம் கேட்க.. அதோ அங்கே பாரு! பாசமலரை என ஹரிணி கூற, நிவாஸ், நிதின், தேஜு என அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.
மா என தன் அன்னையை பார்த்தாள். அன்னிக்கே வந்திருக்கலாம் என நிவாஸ் அவளிடம் சொல்ல.. டாடி எனக்கு எப்போ விருப்பமோ அப்போ தான் வருவேன். சரி தானே! என நிலா கூற..
பொம்மாயி விருப்பம் தான் இங்கே ஃபர்ஸ்ட் preference என உச்சந்தலையில் முத்தம் பதித்தார் sp. நிலா மா என நிதின் அழைக்க.. ஹரிணி வந்தாள். அண்ணங்களை விடுத்து நேராக பெரிய அண்ணியிடம் சென்று விட்டாள்.
ஹே அப்புறம் உன் சின்ன அண்ணி கோவிச்சுக்க போறாங்க! அவங்களை பார்த்திட்டு வா என ஹரிணி சொல்ல.. யார் என திரும்பினாள்.
ஹாய் நிலா எப்டி இருக்கீங்க? என கையை காட்டி கொண்டே அருகில் வந்தாள் கண்மணி.
நிவாஸ் அவளது தோலில் கைகளை போட்டபடி வர, கைய எடுங்க எல்லாரும் பார்க்கராங்க என இருவரும் கிசுகிசுப்புடன் பேசிக் கொண்டே வந்து சேர..
நிலாவின் முகம் வியர்த்து போனது. இது மீனாட்சி.. தங்க மீனாட்சி தீராவோட லவ்வர் மீனாட்சி தான! இவங்க நிவாஸ் அண் அண்ணா கூட எப்படி?
தங்க மீனாட்சியா? கண்மணியா? இல்ல முத்து மீனாட்சியா?
மீனாட்சி யாரு?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
