Episode -22
கண்மணி! என அழைத்த படி கதவை திறந்தான் நிவாஸ்.
அண்ணா நிவாஸ் வராரு நான் வைக்கிறேன் என போனை கட் செய்தவள் கால் லாகில் இருந்து டெலிட் செய்தாள்.
சொல்லுங்க என கண்களை துடைத்தபடி பார்த்தாள். என்னாச்சு எதுக்கு அழற? என நிவாஸ் அவளது அருகில் வந்து அமர்ந்தான்.
நீ எனக்கு மட்டும் தான் கோல்ட் ஃபிஷ் என ருத்ரன் சொன்னது. கண்மணி என்னும் முத்து மீனாட்சிக்கு நினைவு வந்தது. ஆனால் அவள் தான் தங்க மீனாட்சி இல்லையே! அக்காவை விரும்பியவன். தன்னை அவள் தான் என நினைத்து காதலை கூறியிருக்க.. ருத்ரனின் அந்த துள்ளல் இளமை அவனது வசீகரத்தில் தன்னை தங்க மீனாட்சி என பொய் கூறிவிட்டாள் முத்து மீனாட்சி.
இத்தனை பிரச்னை? இதெல்லாம் நினைச்சு வேதனையா? இருக்கு. என்னோட வாழ்க்கைய நினைச்சு அதை விட வேதனையா இருக்கு. என்றாள் கண்மணி.
நான்.. நான் உனக்கு வேணாம் கண்மணி என்றான் வெடுக்கென..
இதயத்தை வாள் கொண்டு குத்துவது போல ஒரு வலி கண்மணிக்கு பரவியது. என்னாச்சு? ஏன் அப்படி சொல்றீங்க? என்னாச்சு? என அவள் பதட்டத்துடன் கேட்டாள்.
ஆமா நான் ஒரு ஆண்புள்ளையாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்ல. நான் வேணாம் உனக்கு. என் தங்கச்சி! என நிவாசின் கண்களில் நீர் கோர்த்தது.
என்ன நிவா பண்றீங்க? எதுக்கு அழரீங்க? அய்யோ இதுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? என கண்மணி அவனது மனதை தேற்ற முயற்சி செய்தாள்.
இல்ல கண்மணி! நான் என முகத்தை மூடி அழுதான் நிவாஸ்.
அய்யோ நிவாஸ்! என கண்மணி கலங்கினாள். எப்பொழுதும் கம்பீரமாக இருப்பவன் இன்று உடைந்து அழுவதை பார்த்து அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிவாசின் பக்கம் நெருங்கினால் தீராவின் நினைவு. நான் தீராவுக்கு துரோகம் செய்கிறேனா? இல்ல நிவாஸ்க்கு துரோகம் செய்கிறேனா? தீரா பத்தி நிவாஸ் கிட்ட சொல்லலாமா? என ஆயிரம் யோசனைகள் மண்டைக்குள் ஓடியது.
நிவாஸ் எதுவும் பேசாமல் இருந்தான் அவனது கண்கள் சிவந்து வீங்கி இருந்தது. இப்போ என்ன பண்றது? நிவா! உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்றவள் மெல்ல அவனிடம் ஆமா அந்த தீரா யாரு? அவர் மேலே எதுக்கு இத்தனை கோபத்தில் இருக்கீங்க என்ன பிரச்னை உங்களுக்கும் அவருக்கும் என கேட்டாள் கண்மணி.
தீரா என பற்களை கடித்தபடி பேசினான் நிவா. எனக்கு பரம எதிரின்னா அவன் தான். அவனுக்கு respect க்கு spelling கூட தெரியாது. அவனை மாதிரி ஒரு கேவலம் கெட்ட ஜென்மத்தை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. என வேக மூச்சுடன் கூறினான் நிவாஸ்.
அவ்ளோ கெட்டவரா? அவரு உங்களுக்கு எப்டி பழக்கம் என கனத்த மனதுடன் கேட்டாள். அவளின் மனதில் தீராவுக்கும் இவருக்கும் ஆகாது. தீரா பத்தி நான் சொன்னால் என்ன நடக்கும் என குதர்க்கமாக யோசித்தாள் கண்மணி.
எனக்கு அவனை சின்ன வயதில் இருந்தே தெரியும். என்னோட சித்தி பையன் சக்தி அண்ணா இருக்காங்களே அவங்க மனைவியோட தம்பி தான் ருத்ரன். எப்போவுமே சத்ய தேவ் அண்ணா பின்னாடியே இருப்பான்.. எங்க சத்ய தேவ் அண்ணனுக்கு எங்களை விட அவன் மேலே பாசம் அதிகம். எனக்கு பிடிக்காது. என்னை எல்லா விளையாட்டிலும் தோற்கடிக்க டிரை பண்ணுவான்.
கண்மணி கனத்த இதயத்துடன் பார்க்க.. ஆனால் இது வரைக்கும் எங்க ரெண்டு பேர் விளையாட்டும் டிராவில் தான் முடிஞ்சிருக்கு. என்றான் நிவாஸ்.
கண்மணிக்கு முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. இப்பொழுதும் அதே நிலையில் தான் இருக்கிறது. என கைகளை பிசைந்து கொண்டு பார்த்தாள்.
நிவாஸ் ஒரு பெரு மூச்சை விட்டு, சரி விடு இப்போதைக்கு அந்த ஜென்மத்தை பத்தி நம்ம ஏன் பேசணும். சில்லறை நாயி என வாய் மொழியாக கூறினான்.
விடுங்க நம்ம வேலையை பார்ப்போம். என அவள் சமாதானம் செய்ய.. I want hug என அவளை அணைத்து கொண்டான் நிவாஸ். குற்ற உணர்ச்சி தலைவிரித்து ஆடியது கண்மணிக்கு.
அப்படியே அமர்ந்திருந்தாள். நிவாஸ் அவளின் கழுத்து குழியில் முகம் புதைத்துக்கொண்டே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதும், இந்த வீட்டை விட்டு போயிடலாம் கண்மணி. நம்ம இங்கே இருக்க வேணாம்.
“என்ன சொல்றீங்க?” என அவனது முகத்தை பார்த்தாள்.
எங்க அண்ணனுக்கு நான் பண்றது பிடிக்கல என நிறுத்தியவன். உன்னை இங்கே இருக்க எல்லாரும் கஷ்ட படுத்திற மாதிரி ஒரு பீலிங். நீ கஷ்ட பட்டால் என்னால அதை தாங்கிக்க முடியாது டி! என்றவன் உதட்டில் முத்தமிட்டான்.
கைகளை இறுக்கி மடக்கிய படி அமர்ந்தவளின் கண்களில் நீ கோர்த்தது. தேகம் எரிவது போல ஒரு உணர்வு. உனக்கு ஓகே தானே! சின்ன வீட்டுக்கு தான் போக போறோம். எனக்கு இந்த சொத்து எதுவும் வேணாம். என் பேருக்கு பின்னாடி இருக்க பிரகாஷ் வேணாம்.
“வேணாம் நிவா! நான் உங்களை பிரிச்சு கூட்டிட்டு போற மாதிரி ஆகிடும். நம்ம கல்யாணம் எல்லார் சம்மதத்தோட நடக்கணும்.”
“அப்டின்னா கல்யாணமே நடக்காது!”
இல்ல நிவா உங்களை நான் பிரிக்கிறது… எனக்காக நீங்க ஏன் எல்லாரையும் விட்டு என கண்மணி தயங்க.. நிவாஸ் அவளின் மடியில் படுத்துக் கொண்டவன். “ஏன்னா எனக்கு எல்லாரை விட நீ தான் முக்கியம். எனக்கு யாரும் வேணாம் நீ மட்டும் போதும்.’
“என்ன இது? ஏன் இப்படி சொல்றீங்க?”
“என்னை நம்பி வந்தவள் நீ! உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கணும் கண்மணி. இந்த கண்மணிய வெறுக்கிற யாரையும் எனக்கு வேணாம். நம்ம அவங்களுக்கு பாரமாக இருக்க வேணாம். தனியா போலாம். எங்கேயாவது போவோம். உனக்கு என் கூட வர இஷ்டம் தான! படிச்சிருக்கேன் கண்மணி. வருவ தான. மும்பை போயிடலாம்.”
“உங்க அம்மா என்ன நினைப்பாங்க?” கொஞ்சம் காத்திருக்கலாம் நிவா! எனக்கும் என்னோட கடந்த காலம் பத்தி கொஞ்சம் டென்ஷனா இருக்கு. எனக்குன்னு ஒரு குடும்பம்? இல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம்? என கண்மணி ஆரம்பிக்க… அவளிடமிருந்து வெடுக்கென எழுந்தான்.
நிவா! பிளீஸ் என்னாச்சு? என அவனிடம் நெருங்கினாள். அவன் வேகமாக அவளது அறையை விட்டு வெளியேறினான்.
நிவா! பிளீஸ் நிவா! நிவா!.. என கண்மணி கத்த… அறையை டம்மென சாத்தியிருந்தான்.
கண்மணி திக்கு தெரியாமல் அதே இடத்தில் நின்றாள் மனமெல்லாம் புழுங்கி தவித்தாள்.
இங்கே சத்ய தேவ் வீட்டில் அவனது மாமனார் மாமியார் இன்ப ராகவன், விவேகா இருவரும் இருந்தார்கள்.
ரிதம் தன் தந்தையை ஏக்கத்துடன் பார்த்தாள். ஆனால் இன்பா தன் மகளின் பக்கம் திரும்பவே இல்லை. ருத்ரன் படுக்கை அறையில் உறங்கி கொண்டிருந்தான்.
“நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? அந்த பொண்ணுக்கு பழசு எல்லாமே மறந்து போச்சு. இப்போ அவள் நிகழ் காலத்தில் நிவாஸ்சை கட்டிக்க போறா! நீங்க இதுல என்னத்தை சொல்லி விளக்குவீங்க? ருத்ரன் அவள் முன்னாடி போய் நின்னாலும் யாருன்னு கேட்பா அந்த பொண்ணு!” என்ன மாமி பண்ண போறீங்க என கேட்டான் சத்ய தேவ்.
“என் பையன் தான் ஏமாரணுமா?” என சேலையின் தலைப்பால் கண்களை துடைத்தார்.
சரி மாமி! நான் ருத்ரனை கூட்டிட்டு போறேன். நீங்க பேசுங்க நிவாஸ் கிட்ட, ஏற்கனவே உங்க குடும்பத்துக்கும் எங்க பெரியம்மா குடும்பத்துக்கும் ஏழாம் பொருத்தம். இதுல நீங்க போய் பேசி.. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல நான் வேடிக்கை மட்டும் தான் பார்க்க போறேன். மாமா நீங்களாச்சு உங்க குடும்பமாச்சு என உடனே போன் செய்தான் ஹரிணிக்கு..
இன்பா தன் மனைவியை பார்த்து, “விவேகா சொல்றத கேளு! அந்த பொண்ணு எல்லார் முன்னாடியும் உன் பையனா வேணாம்ன்னு சொல்லி அந்நிய பார்வை பார்த்தால் இன்னும் உடைஞ்சு போயிடுவான் டி நம்ம பையன். சொல்றத கேளு” என எடுத்து கூறினார்.
என் பையனோடது உண்மையான காதல். கண்டிப்பா அவளை பார்த்தால் ருத்ரன் நிச்சயம் மாறிடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு. இத்தனை வருஷம் அவளை மனசுல நினைச்சிட்டு இருக்கான். கண்டிப்பா மீனாட்சி அவனோட வாழ்க்கையில் வந்தால் எல்லாமே மாறிடும் என உறுதியுடன் கூறினார் விவேகா.
என்ன டா சொல்ற? குடிக்கிறானா? நம்ம தீராவா? என ஹரிணி பேசுவது நிலாவின் காதில் விழுந்தது.
நிலா கண்களை துடைத்தபடி ஹரிணி பேசும் விவரங்களை காதில் வாங்கினாள். தீரா ஏன் இப்படி இருக்காரு? எவ்ளோ காதல் அந்த மீனாட்சி மேலே இருக்கும்? அவளுக்காக பரதம் கத்துகிட்டார், அவளுக்காக லக்ச்சரரா மாறினார். அவளோட கால் தரையில் படாமல் பார்த்துண்டார் அந்த அளவுக்கு அவ மேலே தீராவுக்கு பிரியம். அவள் இல்லாத வாழ்க்கை தீராவுக்கு நரகம். கண்டிப்பா தீராவுக்கு தான் மீனாட்சி கிடைக்கணும். அப்போ தான் அவர் சந்தோசமா இருப்பார். என நினைத்தவள் வேகமாக மிகப்பெரிய அதிக பிரசங்கி வேலையை செய்தாள்.
நிவாஸ் மற்றும் கண்மணி இருவரும் சேர்ந்து இருக்கும் நிச்சய படங்களை அவனுக்கு மெயில் செய்தவள். உடனே தீராவுக்கு போன் செய்தாள். ஹலோ என போதையில் போனை காதில் வைத்தான் ருத்ரன்.
ஹலோ உங்களோட காதலி மீனாட்சி திரும்ப கிடைச்ச்சிட்டாங்க தீரா!. என்றாள் நிலா.
ஹலோ யாரு? என ருத்ரன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு கேட்க…. உங்களோட மீனாட்சி திரும்ப வந்துட்டாங்க. நிவாஸ் அவங்களை கட்டிக்க போறான்.
நீ யாரு? என ருத்ரன் கேட்க… நான் யாரு அது முக்கியம் இல்ல. எப்படியாவது நீங்க மீனாட்சி கூட சேரனும். எதுவும் பண்ணி அவங்களுக்கு பழசை நியாபக படுத்துங்க! அவங்களோட நீங்க சந்தோசமா இருக்கணும் என சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.
ருத்ரன் எண்களை பார்க்க அது பிரைவேட் நம்பர். அனானிமஸ் மெயிலில் நிவாஸ் மற்றும் மீனாட்சி இருக்கும் நிச்சய படங்கள் வரிசை கட்டி லோட் ஆனது.
அதை பார்த்த ருத்ரன்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
