Episode -23
மீனாட்சியின் படங்கள் வரிசை கட்டி நின்றது.. படங்களை வருடியவன் கண்களில் அவளோடு ஒட்டி நிற்கும் நிவாஸ் மீது மெல்ல பார்வை சென்றது. ருத்ரன் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிய போனை தூக்கி விசிரியடிக்க தூக்கியவன் போனை இறுக்கி பிடித்தபடி நேராக குளியலறை சென்றான். குளிர்ந்த நீரில் வேகமாக போதை குறையும் அளவுக்கு குளித்து வெளியே வந்தான்.
விவேகா மற்றும் இன்பா இருவரும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க.. தடாலடியாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் ருத்ரன். தீரா என விவேகா எழுந்தார். சத்ய தேவ் ரிதமுக்கு ஜுஸ் போட்டு கொடுத்து விட்டு வெளியே வந்தவன். தீரா எங்கே கிளம்பிட்ட நீ? என அவன் முன் வந்து நின்றான்.
ருத்ரன் அனைவரையும் பார்த்துவிட்டு மீனாட்சியை பார்க்க போறேன் என்றான். அனைவருக்கும் அதிர்ச்சி. ரிதம் திடுக்கிட்டு பார்த்தாள். இவன் என்ன பிரச்சனைய இழுத்து விட போறானோ தெரியலையே இதெல்லாம் என் பப்பி நாய் தலையில் தான் வந்து விடியுது. இவனுங்க எல்லாருக்கும் சேர்ந்து பப்பி *ட்டைய கசக்காதது மட்டும் தான் மிச்சம் என நினைத்தாள். அந்த பப்பி நாய் வேறு யாராக இருக்க முடியும் சத்ய தேவ் தான்.
தீரா நானும் அதை தான் சொல்ல வந்தேன். என விவேகா எழுந்தாள். விவேகா வாய மூட்ரி! டேய் நீ யாரையும் பார்க்க போக வேணாம். என இன்பா கூறினார்.
“நீங்க சொல்றத உங்க பொண்ணே கேட்காதபோது நான் மட்டும் கேட்பேன்னு எப்படி நம்புறீங்க? நான் போயே தீருவேன்.” என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
சத்ய தேவ் தன் மனைவி ரிதமை ஒரு பார்வை பார்த்தான். ரிதம் அவளின் மனதில் இந்த குரங்கு போகும் போது மூடிட்டு போய் தொலைய வேண்டியது தானே! என்னை கோர்த்து விட்டு போயிடுச்சு எனும் ரீதியில் நின்றாள்.
“ருத்ரன் சொல்றத கேளு போகாத!” என சத்ய தேவ் கூற..
“மாமா நீங்களா இப்படி சொல்றீங்க? அது என்னோட மீனாட்சி மாமா!”
“தீரா அவள் ஒன்னும் தங்க மீனாட்சி இல்ல. அவளோட பேரு முத்து மீனாட்சி. உன்னோட காதலி கடலில் மூழ்கிட்டா! நான் சொல்றத கேளு தேவையில்லாம பிரச்னை பண்ணாத! இதுல நீ மட்டும் இல்ல அந்த பொண்ணு அப்புறம் நிவாஸ் ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு.” என சத்ய தேவ் கூறினான்.
“அப்படியா? சரி என்னை கூட்டி போங்க நான் பார்க்கணும் அவள் கிட்ட பேசணும்.” என விடாப்பிடியாக அதிலேயே நின்றான்.
வெயிட் பண்ணு தீரா நான் ஏற்ப்பாடு பண்றேன்.
இல்ல நான் இப்போவே பார்க்கணும் வாங்க மாமா! பிளீஸ் வாங்க எனக்கு மீனாட்சிய பார்க்கணும் என கதறாத குறையாக கூறினான்.
ரெண்டு பொண்ணா? ரெண்டும் ஒரே மாதிரி இருக்கா? என்ன சொல்றான் சத்ய தேவ் என விவேகா ருத்ரனை பார்க்க..
ருத்ரன் பெரு மூச்சை விட்டபடி மீனாட்சி twins அதாவது அவளை போல இன்னொரு ஆள் இருக்கு அதுவும் பொண்ணு. எனக்கு அவளை பார்க்கணும் மாமா பிளீஸ் என உடல் நடுங்கியது.
மாமா என்ன பண்றது? என சத்ய தேவ் கேட்க.. பெரிய மனுஷன் சொல்றத கேளு டா! என் கிட்ட ஏன் கேட்கிற? உன் அப்பன் கொடுத்து வச்சவன். உங்க வீட்ல எல்லாரும் சூரிய தேவ் பேச்சை கேட்கிறாங்க. அந்த கொடுப்பனை எனக்கில்லை.. கட்டினவ எப்போ ஏறி மிதிக்கலாம்ன்னு காத்திருக்கா! ஏற்கனவே இதயத்தை கூறு போட்டு போயாச்சு ஒருத்தர். இந்த உயிரை குடிக்க இவன் இருக்கான். என்னோடது குடும்பமா அப்டின்னு எனக்கே தெரியல.. வல்லவனா இருந்திருக்கனும் தெரியாம நல்லவனா இருந்துட்டென் என்றார்.
டாடி நான் என ரிதம் பேச வர.. புறபடலாம் என இதயத்தை கல்லாக்கி கொண்டு கிளம்பினார். அங்கே எவ்ளோ பெரிய பிரச்னை நடக்குமோ தெரியல.. என்ன பண்றது எப்படியும் ஒரு பிரச்னை நடக்க தான் போகுது. எப்போ நடந்தால் என்ன? என்ற நினைவில் தான் கிளம்பினார்கள்.
சத்ய தேவ்வின் தங்கைகள் இருவரையும் அழைத்து ரிதமை பார்த்து கொள்ளும்படி வீட்டில் விட்டவன். அதன் பின் சென்றான். சரியான டைவர்ஸ் கேஸ்.
சத்ய தேவ் கூட இன்பா ஃபேமிலி வருதாம். சத்ய தேவ் ஓகே அவன் கூட எதுக்கு அந்த இன்பா ஃபேமிலி வரணும்? என நிவாஸ் ஒருபக்கம் கேட்டான். தெரியல வந்தால் தான் தெரியும் என சமாளித்து விட்டு நகர்ந்தாள் ஹரிணி.
ஹரிணி மற்றும் சத்ய தேவ் இருவரும் சிறுவயதில் இருந்தே நெருக்கமான நண்பர்கள். பார்க்க போனால் சத்ய தேவ் தான் ஹரிணியை கல்யாணம் செய்திருக்க வேண்டும். ஆனால் நிதின் பல வேலைகள் பார்த்து தன்னை விட இரண்டு வயது பெரிய பெண்ணான ஹரிணியை கட்டிக் கொண்டான். அதற்கு முன்பிருந்தே நம்ப சத்ய தேவ் ரிதமை லவ்வோ லவ்வு செய்ததெல்லாம் வேறு கதை.. சத்ய தேவ் ரிதம் லவ் flash back ஒன்னு இருக்கு.
சரி கதைக்கு வருவோம். அதிகாலை கோழி கூவுவதற்கு பதில் இன்பாவின் குடும்பம் மொத்தமும் SPR வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வருகிறார்கள் என தெரிந்ததும் நிலா உற்சாகனானாள் கண்டிப்பா நான் அனுப்பின விசயத்தை தீரா பார்த்திருப்பார். தீரா வாழ்க்கை நல்ல படியா அமையனும் என நினைத்தாள்.
அப்போ தன் அண்ணனை விட அவளுக்கு ருத்ரன் தான் முக்கியமா என கேட்டால் அப்படி இல்லை. ருத்ரனின் காதலி தான் கண்மணி என வரும்காலத்தில் எப்பொழுது தெரிந்தாலும் பிரச்னை கண்டிப்பாக வெடிக்கும்.
எதற்கு தேவையில்லாத வேலை இப்பொழுதே சொல்லிவிட்டால் பிரச்னை இல்லையே தன் அண்ணன் விரும்பிய பெண் அவனுக்கே அவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்தாள் நிலா.
கண்மணி இன்னும் வாடி போனாள். நிவாஸ் அவளை நேற்று விட்டு சென்றதில் இருந்து இதுவரை ஒருபேச்சு கூட இல்லை. இதில் தீரா வருகிறான் என்ற செய்தி சந்தோசபடுவதா? வறுத்தபடுவதா? வயிற்றில் பயபந்து உருண்டது.
வாங்க என SP அழைக்க.. அந்த நேரம் பார்த்து நிதினுக்கு அகிலேஷ் அதாவ்து நிலாவின் நிச்சயம் செய்தவரிடம் இருந்து அழைப்பு வந்தது. நிவாசுக்கு இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறான் அவன் எடுக்கவில்லை என்றதும் நித்தினுக்கு அழைத்து விட்டான்.
ஹே அகிலேஷ் கால் பண்ணிருக்கான் உன்னோட போன் என்னாச்சு? என்னோட பெர்சனல் நம்பர் எதுக்கு ஷேர் பண்ண? நீ? என நிதின் கேட்க.. என்ன பெர்சனல் நம்பரா? நானா? என புரியாமல் கேட்ட நிவாஸ் உடனே போனை வாங்கிகொண்டு தள்ளி சென்றான்.
நிதின் வேண்டா வெறுப்பாக நிவாஸ் பின்னால் சென்றான். வளர்ந்து தனியாக குடும்பம் என வந்து விட்டால் அண்ணன் தம்பி உறவுகள் போய் பங்காளி உறவு வருமோ என்னவோ!..
வாங்க உள்ளே வாங்க நீ பாதியிலேயே கிளம்பி போயிட்ட போல விவேகா என்னாச்சு திடீர்னு.. என தேஜூ பேச்சு வாக்கில் கேட்டாள்.
ஆன்டி! உங்க மருமகள் மீனாட்சியை வர சொல்றீங்களா என எடுத்ததும் நேராக பாயிண்டுக்கு சென்றான் ருத்ரன்.
சத்ய தேவ் அவனை முறைத்து விட்டு தேஜுமா அந்த பொண்ணனை இவனுக்கு தெரியும். அவங்க ஃபேமிலி பத்தி தெரியும் இவனோட ப்ரெண்ட் அந்த பொண்ணு. அதான் கூப்பிடுறான். அதாவது கண்மணி யோட உண்மையான பேர் மீனாட்சி. முத்து மீனாட்சி பிராமண பொண்ணு என்றான்.
தேஜு நிம்மதியுடன் அப்படியா! எனக்கு அதுதான் உறுத்திக்கிட்டே இருந்தது. இப்போ கொஞ்சம் நிம்மதி என்றவர். கண்மணி! கண்மணி என அழைத்தார்.
ஹரினியுடன் நடந்து வந்தாள் மீனாட்சி. இன்னொரு பக்கம் நிலாவும் வந்தாள். ருத்ரனின் பார்வை முழுவதும் எதிரில் வரும் பெண்ணின் பக்கம். கண்மணி தலையை தாழ்த்திய படி வந்தாள். நிமிர்ந்து பார்க்க திராணி இல்லை. அவளின் தீரா வந்திருக்கிறான்.
அதே நேரம் ருத்ரனுக்கு ஒரு போன் கால் அழைப்பு. போனை எடுத்துக் கொண்டு தனியே சென்றான். மறுமுனை சொன்ன செய்தியை கேட்டதும் பற்களை கடித்தபடி திரும்பி பார்த்தான் நிலாவை..
அண்ணா என நிலா கண்ணகுளி புன்னகையுடன் சத்ய தேவ் அருகில் வந்தாள். தேஜு கண்மணியை அருகில் அழைத்து, உன்னோட கடந்தகாலம் தெரிஞ்சு போச்சு. இப்போ தான் தீரா சொன்னான். என்றார்.
இதயம் படபடக்க துடிக்கும் உதடுகளுடன் பார்த்தாள் கண்மணி. தேஜு அவளின் கைகளை வருடி கொடுத்து எதுக்கு மா பயப்படுற.. ஒன்னுமில்லை. ஒன்னுமில்லை நாங்க இருக்கோம். இது என்னோட சம்மந்தி குடும்பம். அதாவது என் தங்கச்சி மகி இருக்காளே உன்னோட சின்ன மாமியார் அவளோட சம்மந்தி குடும்பம். என விளக்கினார்.
ருத்ரன் கம்பீர நடையுடன் மீனாட்சியை நோக்கி வந்தான். இதய துடிப்பு பன்மடங்கு துடிக்க ஹரிணி, சத்ய தேவ், இன்பா என அனைவரும் அவர்கள் இருவரையும் தான் பார்த்தார்கள்.
ஆன்டி மீனாட்சி கிட்ட நான் தனியா பேசணும். என ருத்ரன் கூற..
நான் கட்டிக்க போறவ கிட்ட சார் எதுக்கு தனியா பேசணும் என கேட்ட படி நிவாஸ் வந்தான்.
நிவாஸ் – கண்மணி மீனாட்சி – ருத்ரன்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
