Episode -25
விவேகா தன் மகனை பார்த்துக் கொண்டிருக்க.. இவள் அவள் இல்ல மா! நீங்க போய் சாப்பிடுங்க நான் எனக்கு முக்கியமான கால் வருது பேசிட்டு வரேன். என மிகவும் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் ருத்ரன்.
இன்பா தன் மகனையே பார்த்துக் கொண்டிருக்க..
“எதுக்கு அப்படி பார்க்கறீங்க?”
இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும்! என இன்பா அருகில் வந்தார்.
“இல்ல வேணாம். நீங்க அம்மா கூட போங்க.”
ஏன் ஒரு மாதிரி இருக்க? எதுவும் பிரச்சனையா? அவளுக்கு எதுவும் நியாபகத்துக்கு வரலயா டா! இன்னொரு முறை பேசி பார்க்கிறயா? என இன்பா கூறினார்.
ருத்ரன் தன் தந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன். வேணாம் என்றான்.
“ஏன் என்னாச்சு சொன்னால் தானே தெரியும்.”
“அதான் எதுவும் நடக்கலயே! உங்களுக்கு நிம்மதி தான” என்றான் உதட்டை கடித்து கொண்டு.
“கண்டிப்பா இல்ல! ஆயிரம் சொல்லுவேன் உங்க மூணு பேரையும். ஆனால் என்னோட பொன்னும் சரி பையனும் சரி அவங்களுக்கு பிடிச்ச விசயத்தை அடையனும் அது தான் என்னோட ஆசை. அது நடக்கவும் செய்யும். ரிதம் உன் மாமன் சத்ய தேவ் கூட சந்தோசமா தான் இருக்காள்” என்றார்.
துடிக்கும் உதட்டை அடக்கி கொண்டவன் தன் தந்தையை பார்த்து, அவளோட லவ் நான் இல்ல டாடி! பிளீஸ் இதுக்கும் மேலே எதையும் கேட்காதீங்க. என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
தன் மகனை பார்த்து வருத்தத்துடன் திரும்பினார் இன்பா. அதற்குள் சத்ய தேவின் மாமியார் தேஜூ சாப்பிட அழைக்க.. முன்னால் சென்றார். எப்படி உணவு இறங்கும். நிம்மதி இல்லாமல் அனைவரும் கலங்கி போயி நிற்கிறார்கள்.
நிலாவுக்கு தலையே சுற்றியது. எப்படி? என்னாச்சு? ஏன் தீரா அப்படி ஒரு வார்த்தையை சொன்னாரு! என யோசித்தவள். அவனை எட்டி எட்டி பார்த்தாள் தூரத்தில் இருந்து.
தோட்டத்தில் தோகையை விரித்த படி தன் இணையை மயக்க நின்றிருக்கும் வெள்ளை மயிலை விரக்தியுடன் பார்த்து கொண்டிருந்தான் ருத்ரன். பின்னால் கை வளையல் சத்தம் கேட்க.. பெரு மூச்சுடன் மெல்ல திரும்பினான்.
அங்கே நிலா சட்டென அவனை பார்த்ததும் சுவற்றுக்கு பின்னால் மறைந்து கொண்டாள்.
ஒரு சில நொடிகள் கழித்து மீண்டும் எட்டி பார்த்தாள் அவன் இல்லை. அய்யோ எப்படி கேட்பேன்? என தீவிரமாக யோசித்தவள் இரண்டடி எடுத்து வைக்க.. இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குமே! என ஒரு குரல் கேட்டது. ருத்ரன் தான் நின்று கொண்டிருந்தான். அவளை நோக்கி வந்தான்.
தீ.. தீரா! என திக்கி அழைத்தாள்.
“ச்சீ தீராவா! நீ என் பேரை சொல்லி கூப்பிட உனக்கு எவ்ளோ தைரியம் டி! இருக்காதா பின்ன ஃபார் ஜெர்ரி மினிஸ்டர் அண்ணன். கெக்கிரான் மேக்கிரான் கம்பனி வச்சிருக்க சொன்ன அண்ணன். அண்ட் அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு தங்கச்சி! உனக்கு நிலான்னு வச்சதுக்கு பதிலா அமாவாசைன்னு வச்ச்சிருக்கலாம்.”
அவளின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, “ந.. நான் என்ன பண்ணேன்?” என கேட்டாள்.
என்னோட வாழ்க்கைய அமாவாசை ஆக்கிட்டஎல்ல டி! இப்போ சந்தோஷம் தானே! சிரி டி என்னை பார்த்து.. என வார்த்தைகளை கடித்து துப்பினான்.
நிலா எதுவும் பேசாமல் மவுனமாக நிற்க.. “நீ தானே எனக்கு கால் பண்ணது. அண்ட் உன்னோட அண்ணன் போட்டோவை எனக்கு அனுப்பினது கூட நீ தான்” என அவளின் முகம் பார்த்தான் ருத்ரன்.
அதிர்ச்சியுடன் விழித்தவள். இல்.. இல்ல.
“ஆல்ரெடி நான் வெரிபை பண்ணிட்டேன் நீ தான். எதுக்கு டி பொய் சொல்ற?”
இல் இல்ல நான்.. அவங்க மீனாட்சி தான அதை உங்க கிட்ட சொல்றத பத்தி உங்களோட லவ்வர் என திக்கி திணறி தடுமாறி நின்றாள்.
ருத்ரன் விரக்தியாக சிரித்தவன். திட்டம் போட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்ட! உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே!
என்ன சொல்றீங்க? நான் உங்களுக்கு நல்லது பண்ணனும்ன்னு தான் நினைச்சேன். ஏன் இப்படி வெட்டி வீசி பேசுறீங்க? உங்களுக்கு நான் என்ன பண்ணேன்! என்னோட மனசரிஞ்சு தெரியாம கூட நான் யாருக்கும் எந்த கெட்டதும் நினைக்காதவள். ஆனால் நீங்க என்னை.. உங்களுக்கு நான் நல்லது பண்ணா கூட அதை ஏன் நீங்க என அழுதாள்.
என்ன நல்லது பண்ண? நான் உன் கிட்ட கேட்டெனா? உன்னை யாரு டி எனக்கு போட்டோ அனுப்ப சொன்னது? உன்னோட பிளான் எனக்கு நல்லா தெரியுது டி! நீயே திட்டம் போட்டு உன் அண்ணனுக்கு நிச்சயம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி எனக்கு அனுப்பினா என்னால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? என்னோட வாழ்க்கையில் உன்னை மாதிரி ஒருத்திய பார்த்ததே இல்ல டி! நல்லா பார்த்துக்கோ! இந்த ருத்ரன் கஷ்ட படுறான் அதை நீ பார்க்கணும். உன்னோட திட்டம் நல்லாவே தெரியுது. உன் அண்ணகாரன் கிட்ட கூட கூப்பிட்டு காட்டு என்றவன். ச்சீ உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்ல டி என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
நிலா அதே இடத்திலேயே அழுது கொண்டு நின்றாள். எது செய்தாலும் அவன் பார்வையில் அவள் குற்றமாக தெரிகிறாள். அவன் எவ்வளவு திட்டி அசிங்க படுத்தினாலும் அவன் முன் அவனுக்காக எதுவும் செய்ய வேண்டும் என போய் நிற்கிறாள் இந்த நிலவு மகள்..
என்ன நடக்கும்? பார்ப்போம்
என்னாச்சு? என சத்ய தேவ் கேட்க.. நிதின் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு அகிலேஷ் நிலாவை வேணாம்னு சொல்லிட்டான். எனக்கு எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல என்றான்.
நிவாஸ் கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க.. இங்கே நிலா மயக்கம் போட்டு விழுந்தாள்.
மசக்கை மயக்கம் தான்
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
