Episode-27
என் பையன் ருத்ரனுக்கு நிலாவை கட்டி கொடுக்க உங்களுக்கு விருப்பமா? தேஜு கா நான் அவளை நல்லா பார்த்துப்பேன். என எதிர்பார்ப்புடன் கேட்டார் விவேகா.
எனக்கு சம்மதம் மா! என sp கூற… தேஜூ தன் கணவனை பார்த்தாள்.
நிதின் புரியாமல் பார்த்தான். நிவாசுக்கு இப்பொழுது என்ன சொல்வதென தெரியவில்லை. அவனுக்கு துளி கூட இதில் விருப்பமில்லை. அதே போல தான் கண்மணிக்கும்.. அவளுக்கும் ருத்ரன் நிலாவை கட்டி கொள்வதில் விருப்பமில்லை.
ருத்ரன் தன் அன்னையை முறைத்து பார்க்க.. ஒரு நிமிசம் என முன்னால் வந்தாள் நிலா.
Spr மகளின் பக்கம் திரும்பி, சொல்றத கேளு பொம்மாயி என கூற..
எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல பா! சாரி அத்தை எனக்கு இதில் உடன்பாடில்லை. பிளீஸ் என தலையை குனிந்தாள்.
கண்மணிக்கு இப்பொழுது தான் உயிரே வந்தது. நல்ல வேளை இது நடக்கவில்லை என நிம்மதி பெரு மூச்சை விட்டாள். நிவாஸ் கூட அதே மனநிலையில் தான் இருந்தான்.
எனக்கு கேட்கணும்ன்னு தோணுச்சு அதான் கேட்டேன் பரவாயில்லை மா! என விவேகா சமாளித்தார்.
Spr தன் மகளின் அருகில் வந்து தோல் மேல் கைகளை போட்டவர். அவள் கல்யாணம் நின்னு போன டென்ஷனில் அப்படி சொல்லிட்டா! நீங்க நல்ல நாள் பார்த்திட்டு வீட்டுக்கு வாங்க இன்ப ராகவன். எங்க எல்லாருக்குமே சம்மதம் தான். சத்ய தேவ் உனக்கு விருப்பம் தானே! என கேட்டார்.
விவேகா, இன்பா, ருத்ரன், நிவாஸ், நிதின், கண்மணி, நிலா என அனைவரும் ஒவ்வொரு மன நிலையுடன் பார்க்க..
எனக்கு சம்மதம்! எனக்கு கூட இப்படி ஒரு யோசனை தோனல! ஆனால் என் மாமி ரொம்ப ஸ்மார்ட் கரெக்ட் டிசிசன் எடுத்திருக்கீங்க மாமி! என்றவன் பெரிப்பா எல்லாருக்கும் சம்மதம் தான் என்ன நிதின் உனக்கு சம்மதம் தானே! என கேட்க..
தடுமாறியபடி நின்றான் நிதின்.
நிலா நம்ப முடியாமல் அண்ணா என்ன பண்ற நீ? நான் என்னோட நிலமை?.
என்ன உன்னோட நிலமை? நடந்து முடிந்த விசயத்தை என்னைக்கும் நினைக்க கூடாது. எல்லாருக்கும் விருப்பம். என் மாப்பிள்ளைக்கும் விருப்பம் தான் அப்படி தான மாமி! என சத்ய தேவ் கூற.. கண்மணி இதயம் படபடக்க பார்த்திருந்தாள். கனவில் கூட நினைக்க முடியாத ஒரு விசயம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்த விடயத்தை நினைக்க நினைக்க என்ன சொல்வதென தெரியவில்லை.
இன்பா அவனருகில் வந்து இதுக்காவது ஒத்துக்க! உன் அக்கா அடாவடி ஆனால் சத்ய தேவ் பொறுமை. நீ ஒரு அடங்காதவன் அந்த பொண்ணு பொறுமைசாலி. இது தான் சரி வரும். இதுவரை நான் உன் கிட்ட எதுவுமே கேட்டதில்லை. என்ன சொல்ற? என பார்த்தார்.
எனக்கு ஓகே! என்றான் தீர்க்க குரலில்..
நிலா அதிர்ச்சியுடன் ருத்ரனை பார்க்க.. எனக்கு சம்மதம் என உறுதியாக கூறினான் ருத்ரன்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய் நிவாஸ், கண்மணி, இருவரின் முன் இந்த வீட்டின் முன் தன் மதிப்பு மரியாதை கூடும். இவளை கட்டிக் கொண்டால் கல்யாண தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். இவள் என்னை வேண்டாம் என்று சொல்வதா? நான் தான் இவளை வேணாம்னு சொல்லணும். இவளுக்கு என் பக்கத்தில் நிக்க அருகதை இருக்கா! ச்சீ! என்னை வேணாம்னு சொல்றா! நிவாஸ், மீனாட்சி முன்னாடி நான் இவள் கூட இருக்கணும். என்னை விட்டு போனதை நினைச்சு அந்த மீனாட்சி வருத்தபடனும் என தீர்க்கமாக முடிவெடுத்தான் ருத்ரன்.
ரொம்ப சந்தோசம்! என பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க.. நான் அவர் கிட்ட.. நான் அவள் கிட்ட.. என இருவரும் ஒரே நேரத்தில் பேச..
விவேகா சிரித்தபடி தாராளமா பேசுங்க. ஒரு பிரச்னையும் இல்ல என நம்பிக்கையுடன் அனுப்பினார். இன்பா முதன் முறையாக ருத்ரனிடம் ஒரு விசயம் கேட்டிருக்கிறார். கண்டிப்பாக அவன் இதில் எந்த குளறுபடியும் செய்ய மாட்டான் என நம்பினார். இது அப்பா மகன் ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்க சைக்காளஜி.
நிவாஸ், நிதின், இருவரும் சத்ய தேவ்வை அழைத்து தனியாக வந்து நிலா பத்தி தெரிஞ்சா என்ன ஆகிறது? என பதட்டத்துடன் கேட்டார்கள்.
எதுக்கு தெரியணும்? மறைப்போம். எனக்கு நிலா தான் முக்கியம். இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல. இதை ஒரு இஸ்யூவா கிரியேட் பண்ணிட்டு இருக்காதீங்க. என் மாமனார் வீட்டில் இருந்தால் நிலா இன்னும் பாதுகாப்பா இருப்பா! இந்த கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும். தேவையில்லாம எதையும் கிரியேட் பண்ணாம இருங்க அதுவே போதும் என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
இந்த பக்கம் ருத்ரன் மற்றும் நிலா இருவரும் ஆள் ஆளுக்கு ஒரு திசையில் இருந்தார்கள். பிளீஸ் என்னை வேணாம்னு சொல்லிடுங்க! என அவள் கையெடுத்து கும்பிட..
முடியாது! என கேசுவலாக கூறினான் ருத்ரன். அவனுக்கு மீனாட்சி என்பவள் இப்பொழுது மறந்து போயிருந்தாள். மனம் முழுவதும் ஒருத்தி தான் இதோ எதிரில் நிற்கிறாளே! இவளை எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அதில் தான் ருத்ரனின் சந்தோஷம் இருக்கிறது.
நான் வெர்ஜின் இல்ல. ஆல்ரெடி நான்.. என்றவள் உதட்டை கடித்து கொண்டு பேச முடியாமல் திணறினாள். பிளீஸ் இந்த கல்யாணம் வேணாம். உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே! இந்த கல்யாணம் வேணாம். எனக்கும் இதில் விருப்பம் இல்ல. என்றாள் நிலா.
அதற்கு ருத்ரன்…? சொன்ன பதிலை கேட்டு நிலா…?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels
