Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -36

எங்கே டி போற! என அவளின் இடையை பின் பக்கமாக கட்டி கொண்டான் ருத்ரன். 

என்ன பண்றீங்க? விடுங்க! என்னால சாப்பிட முடியாது என நிலா அழ ஆரம்பித்தாள். 

ஹே குடிக்கிற! இப்படி தான் உன்னை வித விதமா அழ வைக்கணும். இன்னும் அழு டி! என அவளின் கண்ணத்தோடு கண்ணம் உரசினான் ருத்ரன். உள்ளுக்குள் எதோ செய்தது. அவள் பேசுவது எதுவும் அவன் காதில் விழ வில்லை. உள்ளுக்குள் இருக்கும் மிருகம் எழுந்து விடும் இவளால் என தோன்றியது ருத்ரனுக்கு. 

பிளீஸ் வேணாம் நேக்கு வேணாம் என கெஞ்சியவள் அவனது கை இடுக்கில் இருந்து தப்பித்து வெளியே வந்தாள் மூச்சு வாங்கி கொண்டே.. 

சட்டென வசந்த காலம் மறைந்து கோடை காலம் வந்ததை போல ஆகிட…  ஹே தேன்நிலாஆஆஆ! என கோபமாக அமைத்தான் ருத்ரன். 

நிலா பயந்தபடி அவனை பார்த்தவள் அப்படியே சிலையாக நின்றாள். 

வா என ஆள்காட்டி விரலை காட்டி அசைத்தான். 

நிலா எட்சில் கூட்டி விழுங்கிய படி பிளீஸ் வேணாம். என சொல்லி கொண்டே வந்தாள். 

நீ குடிக்கிற! குடிக்கணும். என ஸ்பூன் கொண்டு ஊட்டினான். 

நிலா முகத்தை சுழித்தபடி வாமிட் வருது. பிளீஸ் வேணாம் என அவள் சினுங்க..  அவளின் முகத்தில் தெரியும் ஒவ்வொரு சினுங்களும் நயனங்களாக தெரிந்தது. ரசித்த படி இரண்டு ஸ்பூன் ஊட்டி விட்டவன். அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்தி கொள்ளாமல் அவளை விட்டு விட்டு பாத்ரூம் செல்ல.. 

பிளீஸ் நான் போறேன் என வாயை பொத்தி கொண்டு நிலா முன்னால் ஓடினாள். 

வயிற்றை பிடித்தபடி அவள் அனைத்தையும் கக்கி கொண்டிருக்க, உச்சம் சிதறி.. வேகமாக நிலாவின் அருகில் சென்றவன். என்னாச்சு? என அவளின் முகத்தை பார்த்தான். 

நிலா கண்கள் கிறங்க அனைத்தையும் கக்கியவள். வாயை கழுவி கொண்டு அது எனக்கு குமட்டல் வந்திடுச்சு. பிளீஸ் வேணாம். நான் உங்களை கட்டிகிறதுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட பழகிடுறேன். விட்டிடுங்கோ! என்றாள். 

ஓகே இப்போ உனக்கு எப்டி இருக்கு? நீ ஓகே தானே! என கன்னத்தில் மின்னி கொண்டிருக்கும் நீரை துடைத்து விட்டான். 

ஹான் நான் ஓகே என அவள் வெளியே வந்தாள். ருத்ரன் அவளின் கண்ணுக்கு வேறு ஒருவன் போல தெரிந்தான். அந்த நொடி மனதுக்குள் அப்படியே பதிந்து போனது. தவிப்புடன் அருகில் வந்து என்னாச்சு என கேட்ட ருத்ரன் மனதில் பதிந்து போனான். 

உனக்கு டயர்டா இருக்கும் குடி என வெஜ் சூப் நீட்டியவன். படுக்கையில் படுத்து கொண்டான். 

நிலா ஹாங் என வாயை பிளந்தபடி பார்த்தாள். இந்த அளவுக்கு இதமான பேச்சு? என அவனையே வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள். 

ஹேய் என்னடி அப்படி பார்க்கிற? என ருத்ரன் புருவம் சுருக்கி பார்க்க, ஒன் ஒன்னுமில்லை என வேகமாக சூப்பை குடித்தாள். 

பின்னிஷ் பன்னிட்டியா?

ம்ம்! 

அப்போ இங்கே வா! எனக்கு தலை வலிக்குது பிடிச்சு விடு! என அதிகாரமாக கூறினான். 

எப்டி? என நிலா கேட்க.. வா இங்கே வந்து உட்காரு! என அழைத்தான். 

இவனை புரிஞ்சுக்க எதுவும் புக் கிடைக்குமா? Encyclopedia ல எல்லாமே இருக்கும் ன்னு சொல்லுவாங்களே அதுல இவனை பத்தி இருக்குமா? என யோசித்தவள். தலைவலி தைலத்தை கைகளில் கொஞ்சம் எடுத்து சூடு பறக்க தேய்த்து கொண்டு அவனுக்கு பூசி மென்மையாக நீவி விட்டாள். 

வதன வாசனையிலும் அவளின் விரல் ஜாளத்தில் சொக்கி போனவனாக மெல்ல மெல்ல அவனது தலை அவளின் மடிக்கி வந்திருந்தது. நிலாவும் மும்முரமாக நெற்றியை தடவி விட்டவள் கைகள் அவனது கேசத்தில் நுழைந்தது. 

அய்யயோ! திட் திட்டுவாரா? என ஒருவித பயத்துடன் பார்க்க.. பண்ணு டிஇஇஇ! என இடையை கட்டிக் கொண்டு உறங்கி விட்டான். 

“நிலவின் மடியில் ருத்ரன்”

கோபமான ரவுத்திரன் நிலவின் மடியில் நிம்மதி தேடுகிறான். இப்படி கூட வச்சுக்கலாம். 

நிலா மெல்ல கோதி விட்டவள் கைகளை ஆசையுடன் கோதி விட ஆரம்பித்தது. அவனது முகத்தை ரசிக்க ஆரம்பித்தாள். எவ்ளோ வெறுத்தாலும் எவ்ளோ கோபமா நீங்க பேசினாலும் என்னால வெறுக்க முடியல தீரா! நீங்க எனக்கு வேணும் தான். ஆனால் நான்? நான் உங்களுக்கு தகுதி இல்ல. நான் ஒரு அழுக்கு. உங்களுக்கு களங்கம் இல்லாத ஒருத்தி தான் சொந்தமாகனும் என கண்களில் நீருடன் பார்த்து கொண்டிருந்தாள். 

சத்தமில்லாமல் கதவை ஒரு தட்டு தட்டிய படி திறந்தார் தேஜு. 

நிலாவின் கைகள் தன்னிச்சையாக கோதி கொடுத்து கொண்டிருக்க, ருத்ரன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். நிலாவும் தூங்கியிருந்தாள். ஆனால் விரல்கள் மட்டும் கோதுவதை நிறுத்தவில்லை. 

இந்த காட்சிகளை காண இரண்டு கண்கள் போதாது என தேஜு அதை அப்படியே போட்டோ எடுத்து கொண்டவள். சந்தோசமாக sp யை அழைத்து வந்தாள். 

ஏமண்டி! ஜருகண்டி அக்கட நிலா! அக்கட நிலா!.. என மூச்சு வாங்கி கொண்டே வந்தார் தேஜூ. 

என்னாச்சு பொம்மாயிக்கு என்ன? என spr பதட்டத்துடன் கேட்க.. 

இங்கே வாங்க! என கையை பிடித்து இழுத்து சென்ற தேஜூ இருவரின் நிலையையும் காட்ட.. 

Spr ஒரு நொடி திகைப்பில் ஆழ்ந்தவர். சந்தோசத்துடன் உன்னோட உதவாக்கரை நாயிங்க ரெண்டு இருக்கே அதுங்களை வர சொல்லு. பார்த்திட்டு போகட்டும் இனி எவனாவது கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னா எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று உற்சாகத்துடன் கூறினார். 

நிதின் மற்றும் நிவாஸ் இருவருக்கும் அவர்கள் கண்களை அவர்களால் நம்ப முடியவில்லை. அதை விட பொங்கி கொண்டிருந்தது கண்மணி தான். 

இருவரையும் தொந்தரவு செய்யவில்லை. அவர்களுக்காக உணவுகளை அறைக்கே கொண்டு வந்து வைத்து விட்டு கிளம்பினாள் தேஜூ. 

மதியம் இரண்டு மணிக்கு பசி எடுக்க வயிற்றை பிடித்தபடி எழுந்தான் ருத்ரன். 

நிலா களைப்புடன் உறங்கி கொண்டிருக்க.. அவளை தொந்தரவு செய்யாமல் உணவு எடுத்து வைத்து சாப்பிட்டான் அவளை பார்த்து கொண்டே.. குழந்தை உறங்குவது போல இருந்தது. ஒர்த் மெட்டீரியல் என தோன்றியது. 

அவளிடம் சொல்லாமல் புறப்பட்டான். ருத்ரன் சாப்ட்டாச்சா? என தேஜூ கேட்க..

நான் சாப்பிட்டேன் மாமி. அப்புறம் நான் கிளம்புறேன். நீங்க வந்துடுங்க என கூறினான். 

வீட்ல விசேஷம் இருக்கு ரெண்டு நாளில். அதுக்கு அடுத்த நாள் எல்லாரும் வரோம். நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன். அம்மா அப்பாவுக்கு இன்வைட் பண்ண.. என்றார். 

சரி மாமி என அவன் நகர.. 

நிலா எங்கே என கேட்டார் தேஜு. 

அவள் தூங்கிட்டு இருக்கா. நானும் டிஸ்டர்ப் பண்ணல மாமி. 

சரிப்பா பத்திரமா போயிட்டு வா! மாமா வெளியே இருக்கார். 

ஹரிணி அக்கா உங்க சன்ஸ் கிட்ட சொல்லணும்மே! 

அவனுங்க கடக்குறானுங்க நான் சொல்லிக்கிறேன் வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுங்க என்று விட்டு வழி அனுப்பினார். 

என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என கண்மணி வந்து நின்றாள் எதிரில்..

பிளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடேன். என முகத்தில் அடித்தார் போல பேசினான் நிவாஸ். 

ஏன் நிவா இப்படி பேசுறீங்க? நான் உங்க காலையே சுத்தி சுத்தி வரேன். நான் என்னை பார்த்தால் நோக்கு எப்டி தோன்றது? வெறுப்பா இருக்கா! என அழுதபடி கேட்டவளை. 

பிளீஸ் என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு கண்மணி பிளீஸ் என கையெடுத்து கும்பிட்டவன் வேறு அறைக்கு சென்று மதுவை அருந்தினான். 

நிவா! என கண்மணி அழுதபடி அவன் முன்னால் நிற்க.. 

என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? என்னை தனியா விடு கண்மணி என கத்தி விட்டான் நிவாஸ்.

கண்மணி நொந்து போயி அவனை பார்த்தவள். அழுதபடி அவ்விடத்தை விட்டு சென்று விட்டிருந்தாள். 

நிவாஸ் மொத்தமாக தன் சுயத்தை மறக்கும் அளவுக்கு குடித்தவன். படுக்கையில் சரிந்தான். 

அவனது முகத்துக்கு நேராக காலை நீட்டினாள் ரிதம். 

சத்ய தேவ் முறைத்து பார்க்க, என்ன முறைக்கிர? உன்னோட குழந்தைய தானே இங்கே சுமந்திட்டு இருக்கேன் செய் டா சண்டாலா கால் வலிக்குது உன்னோட இரும்பு கரம் கொண்டு என்னோட காலை ரொம்ப மென்மையா ரொம்ப ரொம்ப மென்மையா இப்போ அமுக்கி விடு. ம்ம் do it என உத்தரவு போட்டாள் மகாராணி ரிதம். 

சத்ய தேவ் எதுவும் பேசாமல் அவளின் பாதங்களை பிடித்து விட.. ஹே குதி கால் ரொம்ப வலிக்குது ஹான் ஹான் அப்படி தான்.. ஹே சோல்டர் கொஞ்சம் புடிச்சு விடு. நான் ஸோபாவில் படுத்துகிறேன் பிடிச்சு விடு. இப்படி வா! என வேலை வாங்கினாள் இஷ்டத்துக்கு. டேய் என்ன உன்னோட கை ரொம்ப சாப்ட்டா இருக்கு பொம்பளை கை மாதிரி நல்லா புடிச்சு விடு டா என ரிதம் தெனாவெட்டாக கூற.. 

ம்ம் இப்போ பாரு என என அவளின் விரல்களை கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான் சக்தி. 

டேய் தண்டம் வலிக்குது டா! உள்ளே பாப்பா கையும் சேர்ந்து வலிக்கும். டேய் வலிக்குது டா தடிதாண்டவராயா சண்டால பாவி என அவள் திட்ட.. 

ஹே நிஜமா வலிக்குதா? மெதுவா தாண்டி புடிச்சேன் என மெல்ல பிடித்து விட்டான். 

சத்ய தேவ் பிடித்து விட்ட இடம் சிவந்து போக.. பாவி பாரு டா சிவந்து போச்சு என ரிதம் கூற.. 

சாரி டி என முத்தமிட்டான். ரிதமின் குரல் ஸ்ருதி குறைய… சாரி என முத்தங்கள் மெல்ல மெல்ல மலையேறி அவளின் உதட்டுக்கு வர.. 

அய்யோ இவனை ஆக்டிவேட் பண்ணிட்டேனே! இப்போ தானே வேலைய முடிச்சு வந்தான். இவனுக்கு மறுபடியும் வேலை கொடுத்தால் இந்த பாவி வேலை பண்ணா எனக்கு டயர்ட் ஆகுமே! அய்யோ என்ன பண்றது என ரிதம் விலகி கொண்டே நகர.. 

ராவடி! வாடி என அவளின் மேல் சட்டையை கழட்டி போட்டவன் கீழே உருவ.. 

பிளீஸ் சக்தி நான் உன்னை டைவர்ஸ் பண்ண போறேன். என்னை வெருக்கணும் டா நீ! என் கிட்ட சண்டை போடணும் அதை விட்டு இப்படி பண்ண கூடாது சண்டாளா! எனக்கு ரெஸ்ட் ரூம் வருது என கைகளை மறைத்து கொண்டு உடல் குலுங்க அவள் பாத்ரூம் செல்ல.. நானும் வரேன் என அவளின் பின்னால் சென்றான். 

அய்யோ என ரிதம் நொந்து கொள்ள..  காலிங் பெல் சத்தம் கேட்டது. 

ரிதம் நிம்மதி பெரு மூச்சை விட்டவள். போ கதவை திற.. போடா என வெளியே தள்ளி கதவை சாத்தியவள் கண்ணில் நீர் கொட்டியது. 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.