Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -37

நான் ஒரு அன்லக்கி சத்ய தேவ் என்னால தான் உனக்கு எல்லா பிரச்னையும்.  ஒவ்வொரு தடவை நீ என்னை நெருங்கும் போதும் நம்ம சேர்ந்து வாழும் போது பிரச்னை தான் வருது. முதல் தடவை நான் கன்சீவாகி நம்ம குழந்தைய இழந்து நினைவை இழந்து நீ என்னை தேடி கண்டு புடிச்சு மறுபடியும் கல்யாணம் பண்ணா என் கழுத்தில் இரத்த கரையோட தான் நீ தாலி கட்டின! என்னால உன்னோட உயிர் போக இருந்தது. இதுக்கும் மேலே நான் உன்கூட இருக்கிறது அர்த்தம் இல்ல. வேணாம் நான் உனக்கு வேணாம். இது தான் எல்லாருக்கும் நல்லது. நேக்கு உன்னோட பிராணன் முக்கியம் சண்டாளா என்று அந்த ஒரு நொடி மட்டும் சைலஜாவாக மாறினாள் ரிதம். 

சுத்தம் அப்போ இந்த மூட நம்பிக்கை அத்தனையும் சைலஜா என்னும் ரிதமின் இன்னொரு மனசாட்சி அவளுக்கே புகட்டியது. நீ சந்தோசமா இருக்கணும்னா என்னை விட்டு பிரிஞ்சு இருக்கணும். இந்த பாப்பா என்னோடது சொல்ல போனால் எனக்கு சொந்தமில்லை சைலஜாவுக்கு சொந்தம்! நீ என்னை விட்டு தள்ளி இருக்கணும்னா நான் சைலஜாவா மாற போறேன். இந்த பாப்பாவோட நான் சைலஜாவாக வாழ போறேன். உன்னை விட்டு பிரியனும். அப்போ தான் பிளாக் ஈகில் உன்னை நெருங்க மாட்டான். என தேம்பி அழுதாள். 

என்ன டா சத்ய தேவ்க்கு வந்த சோதனை சைலஜாவ ரிதமா மாத்த எத்தனை ப்பாடு பட்டோம் அடங்காத அதிகாராவில்.. இதுல மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கற மாதிரி வேணும்னு ரிதம் சைலஜாவா மாறி சத்ய தேவ்வை டார்ச்சர் பண்ண போறா அவ்ளோ தான். 

குளித்து முடித்து வெளியே வந்தவள் தடுமாறினாள் ரிதம். அவளது பிறப்பிலேயே சுத்தம் என்பதில்லை. ஆனால் சைலஜா அதற்கு மாறான பெண் மிகவும் சுத்தம் பார்க்கும் பார்ப்பன பெண். அதிகாலையில் நான்கு மணிக்கு எழும் பழக்கம் உள்ளவள் சைலஜா. ஆனால் ரிதம் அவளோட சரித்திரத்தில் மிட் நைட் நான்கு மணிக்கு உச்சாவுக்கு கூட எழுந்ததில்லை. கொஞ்சம் ட்ரெயினிங் பண்ணிக்கோ ரிதம். இப்போ மாற டிரை பண்ணி அவன் கிட்ட மாட்டிக்கிட்டா அப்புறம் அவன் அதிரடிக்காரன் மச்சான் ஆவிடுவான். என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என தீவிரமாக யோசித்தாள் ரிதம். 

ஹே நிதின் வந்திருக்கான். வா இன்னும் என்ன பண்ற என துண்டோடு சுற்றி இருந்தவளை பார்வையால் களேபரம் செய்தபடி பார்த்தான் சத்ய தேவ். கதவை சாத்து டா ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என ரிதம் வேகமாக உடையை மாற்றினாள்.  

நிதின், தேஜு மாமி எப்படி இருக்கீங்க? மாமா நீங்க எப்டி இருக்கீங்க? என நலம் விசாரித்தபடி வந்தாள் ரிதம். 

நாங்க நல்லாருக்கோம். என்ன மா கொஞ்சம் மெலிஞ்சி போன மாதிரி இருக்க? ரிதம் எப்டி இருக்க? ஹெல்த் ஓகேவா என spr கேட்க அதிர்ந்து பார்த்தாள் ரிதம். 

இது வரை அவள் இத்தனை வருஷம் பார்த்ததில் spr அவளிடம் ஒரு முறை கூட பேசியதில்லை இன்று ஆச்சரியமாக இருந்தது. 

தேஜு சிரித்தபடி அப்புறம் என்னோட பேரன் என்ன சொல்றான்? செக் அப் போனியா என கேட்க.. 

ம்ம் அதெல்லாம் மாமி! போயிட்டு தான் இருக்கேன். சரி சமைக்கறேன் நீங்க சாப்பிட்டு தான் போகனும் என ரிதம் நகர.. 

இல்ல ரிதம் நாங்க நம்ம வீட்டுக்கு போகனும். உங்க ரெண்டு பேர் இல்லல்ல என்னோட பேரணையும் சேர்த்து மூணு பேரையும் இன்வைட் பண்ண தான் வந்தோம். ஹரினிக்கு சீமந்தம் அடுத்து ரெண்டு நாள் கழிச்சு நிலாவுக்கு கூரை பட்டு எடுக்கணும். என்றார். 

ரிதம் எதையோ யோசித்தவளாக மாமி நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம். போயும் போயும் உங்களுக்கு நல்ல பையன் கிடைக்கலயா? அந்த ருத்ரன் ஒரு கெட்டவன். நிலா குட் கேர்ள். நிலாவை பார்த்தாலே எதாவது சொல்லி அழ வைப்பான். அவனுக்கு போயி நிலாவை கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. அவன் ஒரு saddist மாமி என்றாள். 

நிதின் இது தான் வாய்ப்பு என்று கேட்டீங்களா டாடி! ரிதம் சரியா சொல்லிட்டா இதை தான் நானும் சொல்றேன். ஏன் டாடி நான் சொல்றத நீங்க கேட்க மாட்டிக்கிரீங்க? என கூறினான். 

ஹே கம்முன்னு இருக்க மாட்டியாடி என சத்ய தேவ் அவளை இழுத்து பிடிக்க.. தேஜு மற்றும் spr இருவரும் வாய் விட்டு சிரிக்க.. மாமா இவளை எதுக்கு நீங்க கல்யாணம் பண்ணீங்க? உங்களுக்கு நான் வேற பொண்ணு பார்க்கிறேன். இவள் ஒரு ராட்சஸி ரவுடி மாமா என சொல்லி கொண்டே முறைத்தபடி நின்றான் ருத்ரன். 

அய்யோ இவனும் வந்திட்டானா? என சத்ய தேவ் திரும்பி பார்க்க..ருத்ரன் அது அவள் சும்மா உன்னை கிண்டல் பண்ணா! Don’t get wrong. என்றவன் உள்ளே வா என அழைக்க.. 

ரிதம் தன் தம்பியை பார்த்து முறைத்தாள். தேஜு சிரித்தபடி நீ சொல்றது சரி தான் ஆனால் இதை பாரேன் உனக்கு அப்படி தோணாது என தேஜு போனை நீட்ட.. அதில் நிலாவின் மடியில் ருத்ரன் அவளின் வயிற்றை கட்டிக் கொண்டு உறங்க.. 

சத்ய தேவ் ரிதம் இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். நம்ப முடியவில்லை. 

எப்டி? என spr கேட்க.. 

இத்தனை நாள் நான் தான் கண்ணை மூடிட்டு இருந்திட்டேன் போல இந்தாங்க பெரிப்பா என நீட்டினான் சத்ய தேவ். 

என்ன போன்ல எனக்கும் காட்டுங்க என ருத்ரன்  கேட்க..  நான் காட்டுறேன் என சத்ய தேவ் கூறினான். 

சரி வந்துடுங்க நாங்க கிளம்பரோம் என இருவரும் புறப்பட அவர்களுடன் நிதின் செல்லவும் மச்சான் நிதின் மச்சான் என ருத்ரன் வேண்டுமென்றே அழைத்தான். 

டெய் மச்சானா? யார்ரா உனக்கு மச்சான்? உன்னை கொல்ல போறேன் என ஒரே கையில் அவன் கழுத்தை இறுக்கி தூக்கினான் நிதின். 

மாமா ஹெல்ப் பண்ணுங்க என ருத்ரன் தவித்தபடி கூற.. மாமா மச்சான் உள்ளே ஆயிரம் இருக்கும். நான் எப்டி நடுவில். டேய் சக்தி உன்னை கொன்னு போட்டுடுவேன். டேய் மச்சான் மச்சான் சொல்லுவியா நீ என நிதின் பற்களை கடிக்க.. நிதின் என spr வெளியே இருந்து கத்த இதோ வரேன் டாடி என நிதின்  வேகமாக கையில் இருப்பவனை கெடாசி விட்டு ஓடியிருந்தான். 

பாத்து போங்க மச்சான் என ருத்ரன் சிரித்தபடி கூற..  மச்சான்னு சொல்லிட்டான் என்னை மாச்சான்னு சொல்லிட்டானே என்று புலம்பியபடியே சென்றான் நிதின். 

ரிதம் வா உன்கிட்ட சாரி கேட்கிறேன். என விட்ட இடத்தில் இருந்து ரொமான்ஸ்சை கண்டின்யூ செய்ய அழைக்க.. போடா போய் சமைச்சு வை ரொம்ப பசிக்குது. என புருஷனை சமைக்க அனுப்பி விட்டு படுக்கையறை சென்றாள் . 

மாமா! ஒரு போன் கூட பண்ண மாட்டிக்கிறீங்க? என ருத்ரன் சக்தியின் பின்னால் செல்ல.. அதுக்கு சார் ஃப்ரீயா இருக்கணும் ஆனால் சார் எப்போ பார்த்தாலும் பிஸியா இருக்கீங்க. அதை விட அதிகமா ஹைதராபாத் பறக்கிறதா கேள்வி பட்டேனே என்ன விசயம்? யாரை ஏமாத்த  இப்படி பறந்திட்டு இருக்க என மொத்த குட்டையும் உடைத்தான் சத்ய தேவ். 

எதுக்கு நான் ஏமாத்தணும்? உண்மையாக இருக்கேன் மாமா! என்றான் ருத்ரன். 

“இங்கே என்னை பாரு?”

“சத்தியம் மாமா. உண்மையா தான்”

சத்ய தேவ் தீவிரமான முகத்தை வைத்து கொண்டு நீ மீனாட்சியை பார்க்க போகலயே? 

அவ என்னோட மீனாட்சி இல்ல. அவள் அந்த நிவாசோட கண்மணி. என்றான் கோபமாக.. 

அப்புறம் வேற எதுக்கு போற? நிலா கூட நெருக்கமாக இருக்கிற மாதிரி காட்டி கண்மணியோட மனசை சஞ்சலபடுத்த வேதனை படுத்த போறியா? நீ நிலாவை பயன்படுத்துரத நான் பார்த்திட்டு சும்மா இருப்பேன்னு நினைக்காத ருத்ரன். அப்புறம் நீ சத்ய தேவ் யாருன்னு பார்ப்ப என்றான் சத்ய தேவ். 

ருத்ரன் எப்படி சொல்வான்? அவளருகில் இருந்தால் எதோ செய்கிறது. அவளுடன் ஒட்டி கொண்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதே. 

சத்ய தேவ் அவனை பார்த்து நான் நல்லா பேசுரன்னு என்னை சாதாரணமா எடை போட வேணாம். எந்த அளவுக்கு நான் சாதாரணமா இருக்கேனோ அதை விட அசாதாரணமா இருப்பேன். நீ அவளை கஷ்ட படுத்தின அவ்ளோ தான் என்று விட்டு தன் இராவடி க்கு சமைக்க ஆரம்பித்தான். 

இதோ ருத்ரனை சோதனை செய்ய வந்தது. ஹரிணி நிதின் சீமந்த விழா. 

நிலாவை என்ன செய்ய போகிறான்? 

ஹே don’t லீவ் மி டி! You bluddy என இழுத்து நிலாவின் உதட்டை கவ்வினான் ருத்ரன். 

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.