Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode-39

ஹே என்னடி பண்ற? என ருத்ரனின்  குரல் கேட்க… வெடுக்கென திரும்பினாள் நிலா. 

அய்யயோ நல்லா மாட்டிக்கிட்டேனே! அன்னிக்கு வேணாம்னு வாமிட் பண்ணிட்டு இன்னிக்கி ஃப்ளாஷ்க்கில் வச்சு ஊத்தி குடிக்கிற அளவுக்கு வந்ததை அவர் பார்த்தால் என்னோட நிலமை? என அவளின் மூக்குக்கு கீழ் முத்து முத்தாக வியர்த்தது. 

என்ன வேர்க்குது? என்னடி டி சரக்கடிக்கிறயா? என அருகில் வந்தான். 

இல் இல்லங்க! இது வெஜ் சூப் என அசடு வழிந்தாள். 

அப்படியா இங்கே காட்டு! எனக்கு ரொம்ப தலை வலிக்குது! என அருகில் நெருங்கினான். 

இல்ல இது தீர்ந்து போச்சு! ஹான் பங்ஷன் நடக்கிற இடத்துக்கு போகனும். என அவள் வேகமாக அருகில் இருக்கும் சிங்கிள் ஊற்றி கழுவினாள். பின்னால் இருந்த ஃப்ளாஷ்க்கை அவசர அவசரமாக எடுக்க வர.. 

அதற்குள் ருத்ரன் எடுத்து விட்டான். இது இது வந்து!! என் கிட்ட கொடுங்க நான் கழுவி வைக்கிறேன். என நிலா பிடுங்க வர.. அதை ஓபன் செய்து பார்த்தவன். நிலாவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே இது ஆட்டு கால் சூப் சரி தானே! 

நிலா கண்களை மூடி முகத்தை ஒரு மாதிரி சுளிக்க.. ருத்ரன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான். 

சாரிங்க நீங்க தானே குடிச்சு பழக சொன்னீங்க! அதான் டிரை பண்ணேன். 

எப்படி இருந்தது? என அவனது குரல் கரகரக்க.. 

சூப்பரா இருக்கு என மூணு விரலை தூக்கி எக்ஸ்பிரசன் செய்தாள். 

அப்படியா! சொல்ற பேச்செல்லாம் கேட்கற? 

ம்ம் டேஸ்ட் நாக்குல ஒட்டிகிச்சு என எண்ணெய் படிந்த உதட்டை நாவால் வட்டமிட்டாள். 

அப்பொழுது தான் ருத்ரன் அவளின் உடையை பார்த்தான். ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் நின்றிருந்தாள். உப்பி நிற்கும் முன்னழகு இரண்டும் முன்பு இட்லி போல இருக்கும் இன்று பெண்மையின் பூரிப்பில் பூரி போல மாறியிருந்தது. இடை கொஞ்சம் தெரிந்தது. சரியாக அவளின் பாவாடை தொப்புளை விட்டத்தில் கவ்வி பிடிக்க.. இன்னும் கவர்ச்சியாக தரிசனம் கொடுத்தது. 

டிஸ்யூ எடுத்து உதட்டையும் கையையும் துடைத்தவள் படுக்கையில் கிடக்கும் தாவணி முந்தியை எடுக்க.. 

அவளை பின்னால் இருந்து அணைத்தவன் கழுத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான் மோகத்தில்.. 

இந்த நொடி உடலெல்லாம் குளிர் பரவ வெடுக்கென திரும்பி அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தாள் நிலா. 

நிலாவின் கை பட்ட இடத்தை டிஸ்யூ கொண்டு துடைத்தான் ஒரு காலத்தில்.. அவள் கை குலுக்கிதை சோப்பு போட்டு கை கழுவியவன். இன்று முத்தம் பதிக்கிறான். அவளின் ஈர எட்சில் உதட்டை கவ்வி கொள்ள துடிக்கிறது உணர்வுகள். 

என்ன பண்…றீங்க? என திக்கி திணறி அவள் பேச.. 

அவனிடம் பதில் இல்லை. நிலா ஒரு நொடி கண்கள் மூடியவள். இப்படி எவன் கட்டி பிடிச்சாலும் மயங்கி நிப்பியா? என ஊசி குத்தும் வார்த்தைகளை ருத்ரன் சொல்லி விடுவானோ என பயந்தவள். வேகமாக அவனிடமிருந்து விலக போராடினாள். 

பிளீஸ் விடுங்க! நான் தொட்டால் உங்களுக்கு பிடிக்காதே! என்னை தொட மாட்டேன்னு சொன்னீங்களே! இப்.. இப்போ என்ன? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? விடுங்க! எனக்கு ஏற்கனவே என அவள் ஆரம்பிக்க.. 

நிலாவின் முகத்தை திருப்பியவன். வேகமாக முத்தமிட்டான் அவளின் உதட்டில்.. நிலா திணறிய படி விலக போராட.. 

ஹே லீவ் மி இடியட்! என திட்டியபடி அவளின் இடையை பிடித்தான் அழுத்தமாக..  நிலா திக்கு முக்காடிய படி நிற்க.. சுவற்றில் ஒட்டியவன் உதட்டை கவ்வினான் ஆவேசத்துடன்..  நிலாவின் மூக்கு மிகவும் சார்பாக இருக்க.. அவனது வாசனை திரவியம் பிடிக்க வில்லை. அவள் முகத்தை சுளிக்க.. 

என்னடி முகத்தை சுளிக்கிற கொன்னுடுவேன் உன்னை.. கிஸ் பண்ணு டி! என கட்டிலில் தள்ளினான். 

அது வந்து எனக்கு உங்க பெர்ஃப்யும் ஒத்துக்கல.. அண்ட் நீங்…கககக குடிச்சிருக்….கீங்களா? என் பக்க…த்தில்.. என நிலா திக்கி திணறி முத்தத்தின் இடைவெளியில் கேட்டாள். 

குடிச்சா போதை வரும்! ஆனால் இப்போவெல்லாம் உன்னை பார்த்தால் தாண்டி போதை வருது. என மனதுக்குள் நினைத்தவன் உதட்டை இரத்தம் வரும் வரை பிச்சு தின்ன முடிவெடுத்தான்.

இருவருக்கும் இடையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் கோப தாபங்கள் பிரிவு துயரங்கள் என அனைத்தையும் தாண்டி மோகம் ஜெயித்து விட்டது. 

வேகமாக அவனது சட்டையை கழட்டி போட்டான் பெர்ஃப்யூம் பிடிக்கலன்னு சொல்லிட்டாளே! அதான். 

கழுத்தை கடித்தான் வேகமாக.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறல் நடக்க ஆரம்பிக்க.. 

அவனை ஆவேசமாக தள்ளி விட்டாள் நிலா அவனால் முடிந்த மட்டும்.. 

மூச்சு வாங்கியது. உதட்டை தொட்டு பார்த்தாள். 

ருத்ரனுக்கு இப்பொழுது தான் என்ன செய்தோம் என மண்டையில் உரைக்க.. வேகமாக பாத்ரூம் சென்றான். 

நிலா உடையை அணிந்து கொண்டு அவன் வருவதற்குள் வெளியே சென்று விட.. 

தலையை கோதியபடி வெளியே வந்த ருத்ரன். ச்ச இவள் பக்கத்தில் போயிட்டேனே! அய்யோ அவளும் அவள் மூஞ்சி முகரையும். எப்டி இது நடந்தது? எதோ பண்றா இவ! தெரிஞ்சு போச்சு! எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு! என்னை பழி வாங்கி அவள் பின்னாடி அலைய விட சூனியம் வச்சிருக்கா! சும்மா விட கூடாது இனி அவள் பக்கம் போகவே கூடாது என தனக்கு தானே சொல்லி கொண்டவன். அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

ஆனால் நிலா…? 

அங்கே நிவாஸ் – கண்மணி 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.