Episode -40
என்னோட கைய விடேன் டா!! உன்னோட கை ஸ்வெட்டிங்கா இருக்கு! போடா!! என கைகளை விடுவித்து கொள்ள போராடினாள் ரிதம்.
சத்ய தேவ் கைகளை விடுவித்து கொண்டு அவளின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டான்.
இப்போ எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? மலை மாடு மாதிரி இருந்துகிட்டு உன்னோட மொத்த வெயிட்டையும் என் மேலே போடுற? என்ன தான் டா உனக்கு வேணும்? என ரிதம் நொந்து கொண்டே கேட்டாள்.
சத்ய தேவ்வின் கைகள் அவளின் இடையை வருடி கொடுக்க.. ரிதம் நெளிந்தாள்.
ஸ்டேஜ்ல நிதின் – ஹரிணி ரெண்டு பேரும் எப்டி ரொமான்டிக்கா நிக்கிராங்க பார்டி! அது மாதிரி நீயும் நானும் ஜோடியா நிக்கிற நாளை எண்ணி தான் நான் காத்துட்டு இருக்கேன்.
அது ஒன்னு தான் குறைச்சல்! என முகத்தை திருப்பினாள் ரிதம்.
நிறைய குறைச்சல் இருக்கு டி! உன்னோட வளைகாப்பை ஈரோட்டில் வைக்கணும். ஆர்பாட்டாமில்லாம கொண்டாடனும். உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். உன்னை டெலிவரி கவுன்சிலிங் கிளாஸ் கூட்டிட்டு போகனும். என அவனது விருப்பங்களை பட்டியலிட்டு கொண்டிருந்தான் சத்ய தேவ்.
ஈரோடு செல்ல வேண்டும் என்று சொன்னதும் அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. போன முறை இருவரும் ஈரோடு சென்ற நேரம். நைட் ட்ரிப் அழைத்து சென்றான். இருவரும் பைக்கில் ஈரோடு சென்று நேரம் செலவழித்து விட்டு வந்தார்கள். அவனை கட்டி கொண்டு வந்தாள் அந்த இரவு நிலா வெளிச்சத்தில்..
என்ன தீவிரமாக எதையோ யோசிக்கிற மாதிரி இருக்கே! என்ன விசயம்? என சத்ய தேவ் கேட்க.. சட்டென சுய நினைவுக்கு வந்தவள். எனக்கு அதெல்லாம் இஷ்டம் இல்ல. எங்கேயும் வர முடியாது. என முகத்தை தூக்கி கொண்டாள்.
நீ வருவ!!
மாட்டேன்!
நீ வரலைன்னா நான் உன்னை தூக்கிட்டு போவேன் என காதில் கிசுகிசுத்தான் சத்ய தேவ்.
அந்த இடத்தில் சக்தியின் அம்மா அப்பா மகிழினி, சூர்ய தேவ் மற்றும் ரிதமின் பெற்றோர்கள் இன்பா, விவேகா அனைவரும் நின்றிருக்க..
ரிதம் அவர்களை பார்த்ததும் முகம் மாறி போனது. நான் உட்காரணும் என ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
மகி தன் மகனை பார்க்க, சரி இங்கேயே இரு அம்மாவை பார்த்திட்டு வரேன் என சென்றான்.
ரிதம் போனை நோண்டி கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தவளுக்கு தன் தந்தையின் நினைவு தான் வந்து சேர்ந்தது.
அம்மா என சக்தி நேராக தன் குடும்பம் இருக்கும் இடத்துக்கு சென்றான்.
சக்தி கண்ணா!! என மகி கைகளை பிடித்து கொண்டார்.
எல்லாம் ஓகே தானே!! என தந்தை சூர்ய தேவ் கேட்க..
எல்லாமே ஓகே என தன் மாமனார் இன்பாவின் தோல் மேல் கை போட்டு கொண்டான்.
பார்த்துக்கோங்க உங்க பையன் உங்களை பார்க்க வரல! அவனோட மாமனார் பக்கம் நிக்கிறான் என மிதுன் குரல் கேட்க..
சக்தி தன் தம்பியை முறைத்து பார்த்தான். பார்த்தால் இப்போ என்ன? போடா!! என்றார் சூர்யா. எப்போவுமே அவனையே தலையில் தூக்கி வச்சு கொண்டாடுங்க என மிதுன் கோபத்துடன் திரும்பி கொள்ள.. மித்து குட்டி என விவேகா அவனை சமாதானம் செய்தார்.
“சக்தி ரித்துமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன் டா! நான் பார்த்துக்கிறேன் டா!! எனக்கும் என்னோட மருமகள்! வாயும் வயிருமா இருக்காள்! அவளை கொஞ்சனும்னு ஆசை இருக்குமே!”
எதுக்கு கா? அவள் இன்னும் தலை மேலே ஆடவா? இப்போவே அப்படி தான் நடந்துக்கிறா! என் பொண்ணு இப்படியான்னு தோணுது. வேணாம் கா! அவள் சக்தி கூடவே இருக்கட்டும். உங்களோட அன்புக்கு அவள் தகுதியானவ இல்ல. என கொதித்தார் விவேகா.
அதுக்கில்ல! என்னோட மருமகள் அப்படி பட்ட குணம் இல்ல. நீ தேவையில்லாம மசக்கையா இருக்கவளை திட்டாத விவேகா என மருமகளுக்கு சப்போர்ட் செய்தார்.
என்ன மாமா? எதாவது பேசுங்க!! அமைதியா இருக்கீங்க என சத்ய தேவ் தன் மாமனாரை கிண்டல் செய்ய..
அவள் இப்படி ஆடுறதுக்கு காரணமே உன்னோட மூளை இல்லாத மாமன் தான். என்றாள் விவேகா.
இன்பா எதுவும் பேசாமல் நின்றார். எல்லாரும் கவலை படுறத நிறுத்துங்க என சக்தி தன் குடும்பத்தை பார்த்தான்.
நான் தான் அவளை உனக்கு கட்டி வச்சு.. என இன்பா ஆரம்பிக்க..
சக்தி தீர்க்கமான பார்வையுடன் ரிதம நீங்க வேற ஒருத்தனுக்கே கட்டி வச்சிருந்தாலும் அவளை போயி தூக்கிட்டு வருவேன். ஏன்னா அவள் எனக்கு மட்டும் தான் மாமா! அவள் பிறந்ததே எனக்காக தான். அதனாலே அவள் என் கூட இருக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.
இது எப்போதுல இருந்து என முந்தி கொண்டு மிதுன் தேவ், மகி, விவேகா மூவரும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.
மிதுனுக்கும், மகிக்கும் தெரிய வாய்ப்பில்லை. மாமா என சத்ய தேவ் தன் மாமனாரை பார்த்து மாமா நீங்க தானே சொன்னீங்க? உனக்கு விளையாட ஒரு பாப்பாவை ரெடி பண்ணனும்ன்னு சொன்னீங்களே! அப்போ விவேகா மாமி மை விழி சித்தி சீமந்தத்துக்கு வந்தாங்களே! என புருவம் தூக்கினான்.
“ராகவ் மாடே குழந்தை கிட்ட என்ன சொல்லி வச்சிருக்க நீ?” என விவேகா கோபத்துடன் பார்த்தாள்.
இன்பாவின் முகம் கனியாமல் எங்க எல்லாரையும் சமாதானம் பண்ண நீ என்ன வேணாலும் சொல்லலாம் சத்ய தேவ். எனக்கு என்னைக்கும் கோபம் குறையாது.
மாமா! அவள் என் பொண்டாட்டி! எனக்காக அவளை விடுங்களேன்.
இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. பிளீஸ் மாமா நீங்க பேசுலன்னா அவள் ஏங்கி போயிடுவா! என சக்தி சமாதானம் செய்தான்.
இன்பா மனதை மாற்றி கொள்ளவே இல்லை. சூர்யா தன் நண்பனை அழைத்து கொண்டு தனியே சென்றார்.
விவேகா கண்ணீர் கோர்க்க நிற்க.. அய்யோ விவேகா நீ எதுக்கு அழற? விடு அவள் நம்ம ரிதம்? என் மருமகள் அவளோட விருப்பத்துக்கு இருக்கட்டும். என் பையன் அவளை பார்த்துப்பான் என விவேகாவை மகி சமாதானம் செய்தாள்.
சத்ய தேவ் நேராக ரிதம் இருக்கும் பக்கம் சென்றான்.
எனக்கு வீட்டுக்கு போகனும்! என ரிதம் கூற..
நானும் அதை தான் சொல்ல வந்தேன்? அதனாலே போலாம் வா என ஆசையுடன் கண் சிமிட்டி பார்த்தான்.
இப்படி என்னை எல்லா நேரமும் அவனோட கட்டு பாட்டில் வச்சுக்கிட்டா நான் எப்படி? இவனை விட்டு பிரிய? என புறப்பட்டாள்.
வளைகாப்பு பங்ஷன் நல்ல படியாக முடிந்தது. இன்பா மற்றும் விவேகா இருவரும் spr – தேஜுவிடம் நாளைக்கு புடவை எடுத்து கொடுக்கிறோம். நீங்க பாப்பாவை கூட்டிட்டு வந்துடுங்க என்றார்கள்.
சரி என அனைவரும் விடை பெற்றார்கள். எங்கே டி உன் மகன்? என இன்பா விவேகாவின் தோலை இடித்தார்.
இருங்க போன் பண்றேன் என விவேகா போனை ஆன் செய்ய.. இதோ மெசேஜ் வந்தது. தீரா வீட்டுக்கு கிளம்பிட்டான்.
அப்போ சரி என அனைவரும் புறப்பட்டார்கள்.
***
இங்கே நிவாசின் படுக்கையில் வெற்று மேனியாக கிடந்தாள் கண்மணி.
நிவாஸ் மெல்ல விழிக்க.. கண்மணி அவன் மார்பில்..
கண்களை தேய்த்தபடி விழித்தவன் அதிர்ந்து போனான்.
கண்மணி! ச்ச! என்ன நடந்தது? என முழித்து பார்த்தான். அந்த அறையே அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? என கூறி விட்டது. கண்களை இறுக்கி மூடினான்.
சிறிது நேரத்துக்கு முன்;
கண்மணி அழுது கொண்டே நிவா! என கத்தினாள்.
பிளீஸ் கண்மணி தயவு செஞ்சி என் முன்னாடி வராத! எனக்கு தனிமை வேணும். எனக்கு என நிவா பேச வர..
கண்மணி ஆவேசமாக என்னை எதுக்கு நிவா காப்பாத்தினீங்க? நான் அப்படியே செத்து போயிருப்பேன்ல!! என்னோட நிவா! என்னோட நிவா எப்போவும் என்னை தள்ளி வைக்க மாட்டார். ஆனால்? எனக்கு தெரிஞ்சு போச்சு! நான் உங்க பக்கத்தில் இருக்கிறது. உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படி தானே! நான் இனி உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க மாட்டேன். நீங்க தான் இந்த உயிருக்கு சொந்தம்!! உங்களுக்கு வேண்டாத இந்த உயிர் எனக்கும் வேணாம்?
கண்மணி!! என்னை டார்ச்சர் பண்ணாத டி! என கைகளை பிடித்து இழுத்தான் நிவாஸ்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
