Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -43

திரும்ப திரும்ப நிலா அவனுக்கு அழைத்தாள். கடுப்புடன் போனை பார்த்தவன். அங்கும் இங்கும் நடந்தான் ருத்ரன். 

நிலா ஓயுந்து இன்னொரு முறை அழைத்தாள். அங்கே தானே வரேன் இவளுக்கு என்ன கேடு? எதுக்கு என்னை இப்படி தொல்லை பண்றா! இவள் மூஞ்சியில் எப்டி நான் முளிப்பேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி!! என யோசித்தவனுக்கு தலை சுற்றியது. 

இல்ல போக கூடாது என நினைத்து கொண்டான். ருத்ரன் வரலயா? என அங்கிருக்கும் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க ஆரம்பித்தார்கள். 

இன்பா விவேகாவை முறைக்க.. என்னாச்சு மாப்பிள்ளைக்கு? அன்னிக்கு அத்தனை தடவை சொல்லிட்டு போனாரு இன்னிக்கு இன்னும் வரலயே என spr கேட்டார். 

அது வந்து என இன்பா தயங்க.. நானே மாப்பிள்ளைக்கு கால் பண்றேன் என spr அழைத்தார். 

ருத்ரன் குத்த வைத்து பாத்ரூமில் நிலாவின் படங்களை பார்த்து கொண்டிருந்தான். சட்டென spr அழைக்க.. அய்யோ இந்த ஆளு எதுக்கு இப்போ எனக்கு கூப்பிடுறார்? F* என நினைத்து கொண்டே அட்டன் செய்தான். 

“ஹலோ சொல்லுங்க மாமா!”

என்ன மாப்பிள்ளை நீங்க இன்னும் வரவே இல்லை! உங்களுக்காக நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என spr புன்னகையுடன் கூற.. 

அது அது வந்து மாமா! எனக்கு கொஞ்சம் வயிறு சரி இல்லை. அதான் நானும் வர கிளம்பிட்டேன். சடனா இப்படி ஆகி போச்சு என்றான் ருத்ரன். 

அப்படியா மாப்பிள்ளை இப்போ உங்களுக்கு எப்டி இருக்கு பரவாயில்லையா? என spr பதட்டத்துடன் கேட்க.. 

இல்ல மாமா ஆக்சுவலி நீங்க கால் பண்ணும் போது நான் பாத்ரூம்ல இருந்தேன். என்றான் ருத்ரன்.

ஓ அப்படியா மாப்பிள்ளை சரி நீங்க பாருங்க நான் தொந்தரவு பண்ணல என்று விட்டு போனை வைத்தார் spr. 

இந்த ஆளு வேற லூசு மாதிரி போன் பண்ணி டென்ஷன் பன்றாரு. என போனை படுக்கையில் தூக்கி போட்டான் ருத்ரன். 

என்னாச்சு? என தேஜு கேட்க.. 

மாப்பிளைக்கு வயிறு சரி இல்லையாம் அதனால அவரால வர முடியாதுன்னு சொன்னார். நம்ம நாளைக்கு கோட் ஷூட் வேஷ்டி சட்டை இதெல்லாம் அவரை கூட்டிட்டு போயி ஸ்டிட்ச் பண்ண கொடுப்போம் என்றார் spr. 

அவனுக்கு கேடா? வாய்ப்பே இல்லையே அவனால சுத்தி இருக்கிறவங்களுக்கு மட்டும் தானே கேடு வரும் என இன்பா கூற.. மாமா என்ன மாமா நீங்களே இப்படி சொல்றீங்க? என சத்ய தேவ் கொஞ்சம் அதிர்ந்து கேட்டான். 

அது தான் மாப்பிள்ளை உண்மை! என்றவர் எண்ணமெல்லாம் தன் மகளின் மீது தான் இருந்தது. யாரோ ஒருத்தி போல ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள் ரிதம். 

தேஜு நிலாவின் அருகில் வந்து சரி நீ செலக்ட் பண்ண சாரிய தீராவுக்கு அனுப்பி விடு. வீடியோ கால் பண்ணு பேசலாம் என கூறினார். 

பெரிமா தீரா வரலையா? என இதழ் கேட்க.. 

மாப்ளைக்கு வயிறு சரி இல்லையாம் அதனாக வரல என்றார் தேஜு. 

அப்படியா! எப்படியும் அவன் இங்கே வந்திருந்தா கூட வயிறு கலக்கி இருக்கும் என பவன்யா கூறினாள். உடனே பெண்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். 

இதழ் அண்ணி நீ தீரா அண்ணனுக்கு வீடியோ கால் பண்ணு கொஞ்ச நேரம் நிலா அப்புறம் தீரா ரெண்டு பேரையும் வச்சு கிண்டல் பண்ணனும். இப்போவே என இனியா கூறினாள். 

இதழ் புன்னகையுடன் அவ்ளோ தான இதோ இப்போவே பண்றேன் என வேகமாக அழைத்தாள். 

அக்கா வேணாம் கா என நிலா மெல்லிய குரலில் கூற.. சிவன்யா தான் தங்கையை பார்த்து பாரேன் எதுக்கும் வாய திறக்காம இருப்ப? இன்னிக்கி என்ன அவனை பத்தி சொன்னதும் வாயை திறக்குறீங்க மேடம்! என்றாள். 

இந்த தீரா பைய சரியான பிராடு! நம்ம முன்னாடி இவளை பிடிக்காத மாதிரி சீன் போட்டுட்டு நம்ம இல்லாத நேரமா பார்த்து வேலை பண்ணி பிக் அப் பண்ணிட்டான். என்னை கூட கல்யாணம் பண்ணிக்கரன்னு சொல்லி ஏமாத்திட்டான் என்றாள் பவன்யா. 

நிலா திடுக்கிட்டு பார்க்க.. அவளை சுற்றி இதழ், இனியா, பவன்யா, சிவன்யா என அனைவரும் சிரித்தார்கள். 

அய்யோ நீ கவலை படாத நிலா குட்டி நீயே வச்சுக்கோ அவனை!.  என்னால முடியாது பா! எனக்கு என்னோட டாடி மாதிரி தான் ஒரு பையன் வேணும். இந்த தீரா, நிதின் அண்ணா, நிவாஸ் எல்லாம் டிபரன்ட் கேஸ். 

அப்போ சக்தி அண்ணா? என இதழ் கேட்க.. 

சக்தி அண்ணா பார்க்க தான் அப்படி ஆனால் தீராவை விட மோசம் சலைன்ட் கில்லர். அண்ணனுக்கு எல்லாம் ரிதம் தான் சரி! போக்கிரி ராஜாவின் சண்டை ராணி! என்றாள் பவன்யா. 

அதற்குள் இதழ் வீடியோ கால் செய்து விட்டாள். 

லிப்ஸ் ஏன் இப்போ கால் பண்றா? அய்யோ என வெளியே வந்தான் ருத்ரன். 

தலையை சரி செய்தபடி டயடாக இருப்பதை போல முகத்தை வைத்து கொண்டு அட்டன் செய்தான். 

அந்த டிஸ்ப்ளேவில் மொத்த கூட்டமும் இருந்தது. எங்கே போனாலும் இப்படி கேங்கா போய் இம்சை பன்றாலுக! என உள்ளுக்குள் நினைத்தவன். ஹே லிப்ஸ் வாட்ஸ் அப் யா? என ருத்ரன் பதில் கொடுக்க.. 

ஓ இப்போ தான் நாங்க கண்ணுக்கு தெரியரோம் அப்படி தான என போனை பவன்யா வாங்கினாள். 

அய்யோ பவா பேபி அப்படி இல்ல நான் எனக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ அதான் வரல என முகத்தை பாவமாக வைத்து கொண்டான். 

நிலா ஓரிடத்தில் அவளது முகத்தை காட்டாமல் நின்று கொண்டிருக்க.. யாரு போன்ல என அங்கே வந்தார்கள் தேஜு, மகி, மை விழி, விவேகா என நால்வரும். 

அது தீரா இருக்கான் லைன்ல என இனியா கூற.. 

நல்லதா போச்சு! இங்கே கொடு! என்ற விவேகா. பவன்யாவிடம் நீ ஸாரி போட்டு காட்டு பவா ருத்ரன் பாக்கட்டும். நிலாவுக்கு எது பொருத்தமா இருக்கு அப்டின்னு பார்க்கட்டும் என கூறினார். 

சரிங்க அத்தை என பவன்யா நிலாவை நிற்க வைத்து புடவையை போட்டு காட்ட.. அங்கிருக்கும் மொத்த கும்பலும் ருத்ரனின் முக மாற்றத்தை தான் பார்த்தார்கள். 

எந்த புடவை அவளுக்கு அழகா இருக்கு? சொல்லு தீரா என அனைவரும் மாறி மாறி கேட்க.. 

யாரடி நீ மோகினி படத்தில் சிகப்பு கலர் தான் கீர்த்திக்கு அழகா இருக்கும் என்று சொன்னால் அது தனுஷ். 

ஆனால் ருத்ரன் கொஞ்சம் இடக் மடக். ..

எதோ ஒரு வண்ணத்தை சூஸ் செய்தான். 

இருவருக்கும் தனிமை கொடுத்து அனைவரும் தள்ளி சென்று விட.. நிலா அவனை பார்க்காமல் வாய்ஸ் கால் வர முடியுமா? என கேட்டாள். 

என்ன விசயம்ன்னு சொல்லு? என ருத்ரன் கேட்க.. 

எனக்கு இதுல விருப்பம் இல்ல. பிளீஸ் இந்த கல்யாணம் வேணாம் என கண்களில் நீர் கோர்க்க கூறினாள் நிலா. 

என்ன சொன்ன? என ருத்ரன் கேட்க.. 

செலக்ட் பண்ணியாச்சா? என தேஜூ விவேகா அருகில் வந்தார்கள். 

வாய்ஸ் கால்ல சொல்றேன் எந்த புடவை புடிச்சிருக்குன்னு என பற்களை கடித்து கொண்டு கூறியவன். வெடுக்கென கட் செய்தான்.

இதோ ருத்ரன் என்னும் ரவுத்திரனின் எண் அதிர்ந்தபடி சிணுங்க . 

எட்சிலை கூட்டி விழுங்கியவள் அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.

சொல்லுங்க என நிலா பதில் கொடுக்க.. தேஜு விவேகா இருவரும் புடவையை பார்த்து கொண்டு எப்படி ஃப்ளவ்ஸ் ஆரி ஒர்க் செய்வது என பவன்யாவிடம் பேசி கொண்டிருந்தார்கள். 

ஹலோ நான் சொன்னது பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க! பிளீஸ் வேணாம் என நிலா கூற.. 

பவன்யா நிலாவின் அருகில் வந்து கேட்டியா எது அவனுக்கு புடிச்சிருக்கு என கேட்டாள். 

ருத்ரன் தன்னை வேண்டாம் என்று சொல்லவேண்டும் என நினைத்து கொண்டே நின்றிருந்தாள். 

எதுவுமே இல்லாம இருந்தால் இன்னும் அழகா இருக்கும். என்றான் ருத்ரன் 

நிலா அதிர்ச்சியுடன் என்ன சொன்னீங்க என கேட்க.. 

ருத்ரன்…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.