Episode -44
என்ன சொன்னீங்க? என்று அப்பட்ட அதிர்ச்சியுடன் கேட்டாள் நிலா.
நான் சொல்லும் போது உன்னோட கவனத்தை எங்கே வச்சிருந்த? ஒரு தடவை தான் சொல்ல முடியும் என்றவன். போனை பவா கிட்ட கொடு!! என கட்டளையிட்டான்.
நான் சொன்னது உங்களுக்கு புரியுதா இல்லையா? இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னேன்!
நான் கவனிக்கல! நீ போனை பவா கிட்ட கொடுடி!
பிளீஸ் தீரா! என நிலா கமரிய குரலில் கூற..
கைகளை இறுக்கி மடக்கியவன். என்ன காரணம்? என்னை வேணாம்னு சொல்ல? உன்னோட முன்னால் காதலன் வந்துட்டானா என்ன?
நிலா கொஞ்சம் திடமான குரலில் நான் வர்ஜின் இல்ல தீரா. எனக்கு என்னோட பாஸ்ட் பத்தி என அவள் சொல்ல வர..
எனக்கு அது பிரச்னை இல்லை. இனி உன்னோட பாஸ்ட் அண்ட் பிரசெண்ட் ப்யுச்சர் எல்லாமே நான் தான். உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல தான்! என்ன பண்றது? என்னோட அம்மா ஆசைபட்டா அதை செஞ்சு தான் ஆகனும். இதுக்கும் மேலே எதுவும் உனக்கு பேச இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்க.. உன்னோட மொத்த குடும்ப டிராமா கேங்கும் என்னை பார்க்க இங்கே வராங்க அப்போ உனக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று போனை கட் செய்ய சென்றவன்..
ஸ்கை ப்ளூல முகூர்த்த புடவை எடு! அது தான் எனக்கு பிடிக்கும். அண்ட் அதை தான் நீ எடுக்கணும் என்று கட்டளையிட்டு விட்டு கட் செய்தான்.
தனது வீட்டில் தாய் தந்தையை தவிர இரண்டு சகோதரர்களுக்கும் இந்த திருமணம் நடப்பதில் பிடித்தம் இல்லை. அதை விட காதல் இல்லாத கல்யாணம் செய்ய விருப்பமில்லை. (எத்தனை தடவை இந்த ரைட்டர் இதையே சொல்லும் அப்டின்னு உங்க எல்லாருக்கும் தோணும்)
நிலா திரும்பும் நேரம் இந்த கலர் எடுப்பா இருக்கும் என விவேகா நீல வண்ண பட்டு புடவையை எடுத்து வந்து பொருத்தி பார்த்தார்.
மாமி இது சூப்பரா இருக்கு என பவன்யா கூற.. நிலா பொம்மை போல நின்றாள். தீராவுக்கு போட்டோ எடுத்து அனுப்புவோம். என பவன்யா அந்த ப்ராசஸ் செய்து கொண்டிருக்க.. உப்பும் சக்கரையும் வாங்கி இரண்டு சம்மந்தி குடும்பங்களும் மாற்றி கொண்டார்கள்.
ரிதம் ஓரிடத்தில் போனை நோண்டி கொண்டு அமர்ந்திருக்க.. என்ன பண்றீங்க மேடம் என அருகில் அமர்ந்தான் சத்ய தேவ்.
போனை ஸ்குரோல் செய்தாலே தவிர அவனிடம் பேசவில்லை.
என்ன டி முகம் வாடி போயிருக்கு.
ஒன்னுமில்லை.
சத்ய தேவ் அவளின் கைகளை பிடித்து கொண்டு உன்னோட டாடி எட்ட நிக்கள! நீ எட்ட நிறுத்தி வச்சிருக்க.. இதழ், இனியா, சிவி, பவா எல்லாரும் இருக்காங்க. அதே போல ஆனால் நீ தான் எல்லாரையும் ஒதுக்கி வச்சிருக்க..
எனக்கு டைவர்ஸ் கொடு சத்ய தேவ்! எனக்கு உன்கூட இருக்க பிடிக்கல! என மீண்டும் கூறினாள்.
அதுக்கு மட்டும் வாய்ப்பு இல்ல. என அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். இடம் பொருள் ஏவல் பார்க்காமல்..
ரிதம் அவனை அப்பட்ட அதிர்ச்சியில் பார்க்க.. உங்க அப்பா முன்னாடி உன்னை லிப் கிஸ் அடிக்க போறேன் என சத்ய தேவ் நெருங்க…
ராஸ்கல் என எழுந்து சென்று விட்டாள்.
இன்பா அப்டின்னா கெத்து! அவளோட அப்பாவோட கெத்து குறைய கூடாது அவளுக்கு. ஆனால் இப்படி கிறுக்கதன வேலையை செய்வாள் ரிதம்.
அனைவரும் புறப்பட்டார்கள். லட்சுமி ஹொட்டேல் சேலத்தில் மிகவும் பிரபலம். அங்கே அழைத்து சென்றாள் விவேகா. அனைவரும் சாப்பிட்டார்கள். ராடிசன் ஹோட்டலில் தான் ருத்ரன் இருக்கிறான். இந்த மொத்த கும்பலும் ராடிசான் ஹோட்டல் சென்றது.
நிலா முகத்தை தொங்க போட்டபடி இருக்க.. சீக்கிரம் பெங்களூர் போகனும் என ரிதம் சத்ய தேவ்விடம் சண்டையிட்டு கொண்டே வந்தாள்.
அவர்கள் வந்ததும் ருத்ரன் அவர்களை அழைக்க சென்றிருந்தான்.
இப்போ உங்களுக்கு ஓகேவா? என spr கேட்க..
ம்ம் பரவாயில்லை மாமா என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
ஹே எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டி! என்று இன்பா கூற..
என்ன ராகவ்?
உன்னோட பையன் காலில் வுழுறான்! ஸ்பிளிட் பெர்சனால்ட்டி மாதிரி தோணுது எனக்கு!! எதோ பெரிய வில்லங்கம் இருக்கோ!
கொஞ்சம் கம்முன்னு வா என் பையன் மேல கண்ணு வைக்காத என விவேகா தன் மகனை பார்த்தார்.
ருத்ரன் spr கிட்ட பேசி விட்டு நேராக சத்ய தேவை அணைத்து கொண்டான்.
ஓகே டா ஒகே டா பாசத்தை பொழிஞ்சது போதும் என்றான் சத்ய தேவ்.
ஈவ்னிங் ஃப்ளைட் இருக்கு அதுல பெங்களூர் போலாம் இப்போ ரெஸ்ட் எடுப்போம் உங்களுக்கு ரூம் ஆல்ரெடி புக் பண்ணிட்டேன் மாமா என ருத்ரன் ரூம் கீயை கொடுத்தான்.
Spr மற்றும் தேஜு இருவரும் புன்னகையுடன் அவர்கள் அறைக்கு சென்றார்கள்.
அங்கே இதழ், இனியா, சிவி என மொத்த பட்டாலமும் ருத்ரனுக்காக காத்திருக்க..
ஹே டையர்டா இருக்கு என்னை விட்டுடுங்க டி! என கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் இருந்து தப்பித்து விட்டான்.
நிலா வந்து ரெஸ்ட் எடு என தேஜு அழைக்க..
மாமி! நான் இன்னும் சாரிய பார்க்கவே இல்லை. சோ என தன் மாமியாரையும் நிலாவையும் பார்த்தான்.
சரி தீரா! நிலா நீ தீராவுக்கு காட்டு! அரை மணி நேரம் தான் டைம் பேசிட்டு வா நிலா என்று விட்டு தேஜு முகூர்த்த புடவை கட்ட பையை நீட்டினார்.
ருத்ரன் புன்னகையுடன் வாங்கி கொண்டவன். தனக்கு அருகில் நின்றிருப்பவளை மெல்ல கை பிடித்து கொண்டான் தேஜுவின் பார்வைக்கு.. ஆனால் அந்த பிடியில் ஒரு சூறாவளி அடங்கி இருக்கிறது என நிலாவுக்கு மட்டும் தானே தெரியும். அவளை இழுத்து கொண்டு அறைக்குள் நுழைந்தவன் எதிரில் இருக்கும் சோபாவின் மேல் பையை வீசி விட்டு காலால் எட்டி உதைத்து கதவை லாக் செய்தான்.
பிளீஸ் தீரா இந்த கல்யாணம் வேணாம் என நிலா ஆரம்பிக்க.. உனக்கு கல்யாணத்தை நிறுத்த லட்சம் காரணம் இருக்கலாம். எனக்கு அதெல்லாம் பெருசு இல்ல. எனக்கு உன்னை கட்டியே ஆகனும் டி! இனி உன்னோட வாயில் இருந்து கல்யாணத்தை நிறுத்து அப்டின்னு பேச்சு வந்தது!! என அருகில் நெருங்கியவன் அவளை சுவற்றில் ஒட்டினான்.
நிலாவின் கண்களில் நீர் வழிய எங்க அண்ணா ரெண்டு பேருக்கும் உங்களை…
சரி வாடி கல்யாணத்தை நிறுத்தலாம் உங்க அப்பன் கிட்ட போய் சொல்லு! நீ சொன்னத கேட்டு உன் அப்பன் மேலே!! என கை காட்டினான்.
தீராஆஆ! என கோபத்தில் நிலா கத்த..
பார்ரா நிலாவுக்கு கோபமெல்லாம் வருமா? நிலாவுக்கு என் மேல் என்னடி கோபம்?
நீ கோபப்பட தகுதி இருக்கா என்ன? என அருகில் நெருங்கியவன் கண்ணகுளியில் விரல்களை வைத்து பார்த்தான். முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டான்.
நிலா அவனை விலக்கி என்னையே தொட எப்டி பிடிக்குது? உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே! என அவள் நகர இரண்டு கைகளையும் சுவற்றில் வைத்து லாக் போட்டு கொண்டவன் அவளின் மேல் பசை போல ஒட்டி கொண்டான். நிலாவால் அவனது அருகாமையில் இயல்பாக இருக்க முடியவில்லை.
பிளீஸ் தீரா!! விடுங்க என்னை!!
இது இல்லாம பார்க்கணும்! காட்டுவியா என அவளின் உதட்டில் முத்தமிட்டான். எல்லாம் போதை மருந்து எடுத்து கொள்ளாமல் தன்னை தானே கட்டு படுத்தி கொண்டிருப்பதால் வந்த விபரீதம்.
பிளாக் ஈகில் அவ்வளவு வீரியம் மிக்க மருந்துக்கு ருத்ரனை அடிமையாக்கி வைத்திருக்கிறான்.
என்ன? என நிலா அதிர்ச்சியில் கேட்க..
உதட்டை கவ்வி கொண்டான் கைகளை பிடித்து கொண்டு, முத்தங்கள் வேகத்துடன் பயணம் செய்தது. அங்கும் இங்கும் பிஞ்சு விரல்கள் தடுக்க போராட.. பீரங்கி பிடித்த விரல்கள் சுற்றி வளைத்து கட்டு படுத்தியது. சிறிது நேரத்தில் முத்தங்கள் இரு மடங்காக பெருகி போனது. அவளும் எதிர்வினையாற்ற ஆரம்பித்திருந்தாள்.
உன்னை வெறுக்க பிடிக்குது டி! என ருத்ரன் கிறக்கத்தில் கூற..
சட்டென நிலா மூச்சு முட்ட அழுகையுடன் அவனிடமிருந்து விலகினாள்.
ருத்ரன் தள்ளாடியபடி அவளை பார்த்தான்.
தொடரும்..
அடுத்து திருமணத்தில் சந்திப்போம் கல்யாணம் நடக்குமா நடக்காதா?
பார்ப்போம்
do like and share pradhanyakuzhalinovels
