Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -48

தேன் நிலா சூர்ய பிரகாஷ் ரெட்டியாக இருந்தவள் இனி தேன்நிலா ருத்ரன். அதே போல இந்த பக்கம் கண்மணி நிவாஸ் பிரகாஷ் ரெட்டியாக மாறி இருந்தாள் மீனாட்சி. 

சத்ய தேவ் நிம்மதி பெரு மூச்சுடன் தனது மச்சானையும் கடை குட்டி தங்கச்சியையும் பார்த்தான். சந்தோஷமாக இருந்தது. இப்போதைக்கு அனைத்து பிரச்னைகளும் மூடி மறைக்க படும். ஒரு எட்டு மாதங்கள் வரை… மீண்டும் உருவெடுக்கும் நிலாவின் பிரசவம் முடிந்து. அப்போது பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டான். 

ஒரு பக்கம் நிலா மற்றும் ருத்ரன் இருவரும் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள். Spr இன் அன்னை நீலா ரெட்டி, நிலாவின் சித்தப்பா குரு பிரகாஷ், கவ்யா, காத்திருந்தார்கள். 

இன்பா நேராக குருவின் அருகில் சென்று சம்..சம்மந்தி!! என அழைத்தார். 

குரு பற்களை கடித்தபடி பார்க்க.. என்னை ஒன் சைடா லவ் பண்ண கவ்யாவுக்கு இப்போ நான் அண்ணன் முறை ஆகிட்டேன். கொஞ்சம் வருத்தமா இருக்கு. 

டேய் கிழட்டு பையலே! என குரு கோபத்தில் மூச்சு வாங்க.. 

அய்யோ பிரஸர்ல கை கால் இழுத்துக்க போகுது. இனி அடிக்கடி பிரஸர் வரும் என்றார் இன்பா..

அண்ணாஆஆஆ!! என குரு பிரகாஷ் கத்திட.. இன்பா புன்னகையுடன் பிரஸர் குக்கர் அதாவது என்னோட பையனை நல்ல படியா உங்க குடும்பத்தில் சேத்துட்டேன். இனி நான் தப்பிச்சென். என்ஜாய் பண்ணுங்க என விவேகாவின் அருகில் வந்து நின்று கொண்டார். 

Spr கோபத்துடன் குரு பிரகாஷை கண்ணா பின்னாவென திட்டி கொண்டிருந்தார் அங்கு என்ன நடந்தது என தெரியாமல்.. 

மகி சித்தி சூர்யா டாடி என நிலா ஆசிவாதம் வாங்க குனிய.. 

டேய் என் பொண்ணை பத்திரமா பார்த்துக்க என கூறினார் சூர்ய தேவ். 

ருத்ரன் அவளின் பிடித்த கையை விடவே இல்லை. 

மை விழி சித்தி கார்த்திக் சித்தா என காலில் விழுந்தாள் நிலா. மாமி மாமா என ருத்ரன் விழுந்தான். 

உதயன் மாமா! என நிலா தன் தாய் மாமன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். 

உன்னோட சொந்தத்தில் விழுந்தது போதும் என கையை பிடித்து இழுத்து சென்றவன் நேராக விவேகாவின் அன்னை கங்காவின் காலில் விழுந்தான். அடுத்து ரவி சந்திரன் வசுமதியிடம் ஆசிர்வாதம் வாங்கினான். அப்படியே அவனது சித்தப்பா ஆதித்யா – வென்பாவிடம் வாங்கினான். ருத்திரணின் அத்தை சுபா மற்றும் சரவணனிடம் , ருத்டனின் தாய் மாமன் வருண் – அத்தி இருவரிடமும் வாங்கி விட்டு நேராக சத்ய தேவ் அருகில் வந்தவன் தன் அக்காள் கணவனை கட்டிகொண்டான். 

ரொம்ப சந்தோசமா இருக்கு. அவளை பத்திரமா பார்த்துக்கோ! என சத்ய தேவ் கூற.. 

சரி மாமா என தலை அசைத்தான் ருத்ரன். ரிதம் நிலாவை பார்த்து ரொம்ப கஷ்டம்! நீ கல்யானத்துக்கு முன்னாடியே கொஞ்சம் யோசிச்சு முடிவெடுத்திருக்கலாம் என்றாள் ரிதம். 

ரிதம் என சத்ய தேவ் அதட்ட.. ரிதம் தன் கணவனை கண்டு கொள்ளாமல் இவன் ஒரு அரகண்ட்.. கூடவே அரை மெண்டல். என்னோட என நிறுத்திய ரிதம். என்னோட டாடி மாதிரி இவன் இல்ல. என்னோட டாடிக்கு அப்போசிட் கூடவே என் மம்மியோட badness இவன் தான். என்றாள். 

மாமா அவளோட வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும் கம்முன்னு இருக்க சொல்லுங்க என ருத்ரன் கூற.. 

சக்தி என இன்பாவின் குரல் கேட்டது. 

நிலா திரும்பி மாமா என்னை பிளஷ் பண்ணுங்க என விழ போக.. 

அச்சோ என்ன மா இது? என்னோட ப்ளஸ் உனக்கு இருக்கும். என தலையை வருடி விட்டவர். உன்னை பெத்த பாவத்துக்கு காலில் விழு டா மகனே என்றார் இன்பா. 

நான் என் அம்மா கிட்ட வாங்கிப்பேன் என ருத்ரன் நேராக தன் அன்னை விவேகா பக்கம் சென்றான். நிலாவை கூட்டி கொண்டு.. 

சத்ய தேவ் புன்னகை முகம் மாறாமல் அனைவரையும் பார்த்து கொண்டிருக்க.. ரிதம் தன் சைக்கோ காதலனை இமை வெட்டாமல் பார்த்தாள். 

கண்மணியின் பார்வை ருத்ரன் மற்றும் நிலாவின் மீது விழுந்தது. மொத்த குடும்பமும் அவர்கள் இருவரையும் கொண்டாடியது. ஆனால் நிவாஸ் மற்றும் கண்மணி இருவருக்கும்? அது கிட்ட வில்லை. நிவாஸ் நேராக தன் அண்ணன் நிதினின் காலில் விழுந்தான். 

நிதின் அவர்களை அழைத்து கொண்டு முதல்ல மூத்தவன் கிட்டருந்து ஆரம்பிக்க வேணும் என சத்ய தேவ் அருகில் கூட்டி சென்றான். 

நிவாஸ் காலில் விழ போக.. என்ன இது? ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க. மீனாட்சி வாழ்த்துக்கள் மா என்றான் சத்ய தேவ். 

தேங்க்ஸ் அண்ணா என கண்மணி புன்னகையுடன் கூற.. 

அண்ணன் இல்ல மாமா!! என்றான் நிதின். 

கண்மணி அமைதியாக இருக்க… அவளுக்கு விருப்ப பட்ட மாதிரி கூப்பிடட்டும் என கூறினான் சத்ய தேவ். 

ஹே மீனாட்சி!! நீ உன்னை அனுபூர்ல அந்த பட்ட பட்டா கோவில்ல நான் பார்த்திருக்கேன். 

இல்ல அது தங்க மீனாட்சி என்னோட அக்கா! நான் கும்ப கோணத்தில் சித்தப்பா வீட்ல இருந்தேன் என்றாள் கண்மணி. 

வாட் எவர் பட் யூ ஆர் அ லக்கி பெல்லோ! நிவாஸ் ரொம்ப ரொம்ப நல்ல பையன் என்றாள் ரிதம். இதை கேட்டதும் கண்மணிக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. நிவாசை அவள் காதலுடன் பார்த்தாள். 

சரி சரி மாப்பிள்ளை பொண்ணு நாலு பேரும் சபையினர்க்கு வணக்கம் சொல்லிட்டு சாப்பிட வாங்க என அழைக்க பட்டது அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் வைத்து விட்டு நிலா வேகமாக செல்ல.. 

எங்கே போற? என மாலையை கழட்டி மேடையில் வைத்தபடி பின்னால் வந்தான். 

பாத் பாத்ரூம் வருது! 

நானும் வரேன் வா! என அவன் பின் தொடர.. அதற்குள் ஜெனிஷா, அக்ஷயா என நிலாவின் நட்பு வட்டங்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நிலாவிடம் பேச்சு கொடுக்க.. 

ஹலோ கேர்ள்ஸ் என அழைத்தான் அனைவரையும். என்ன எதோ என அவர்கள் திரும்பி பார்க்க… 

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நீங்க வரலாம். இனி அவளுக்கு துணைக்கு நான் போறேன். நீங்க சாப்பிட போங்க! போட்டோ கிராபர் அந்த பக்கம் போட்டோ எடுத்திட்டு இருக்கார் போயி போஸ் கொடுக என்றான். 

கேப்டன் ரொம்ப பாஸ்டா இருக்கார் நிலா இனி உனக்கு திண்டாட்டம் தான் என சிரித்தபடி சென்று விட்டார்கள். 

Spr சந்தோசத்துடன் ருத்ரன் மற்றும் நிலாவை பார்த்தார். ருத்ரன் ஒரு நொடி கூட நிலாவை பிரியவில்லை. 

நிலா ருத்ரனை வெற்று பார்வை பார்த்தவள். பாத் ரூம் சென்றாள். அது வரை அவளுக்காக வெளியில் காத்து கொண்டிருந்தவன். அவனது பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை பற்ற வைத்து வட்ட வட்டமாக விட்டு கொண்டிருந்தான். 

நிலாவின் கண்கள் கலங்கி இருக்க துடைத்து கொண்டே வெளியே வந்தாள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். 

இதோ அரை மணி நேரத்துக்கு முன் இதே அறையில்.. ருத்ரன் நிலாவின் முன்.. என்னாச்சு எதுக்கு வர சொன்ன? என ருத்ரன் கேட்க.. 

நான் கன்சிவா இருக்கேன். இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்றாள் நிலா. 

ருத்ரன் அவளை நம்ப இயலாமல் பார்க்க.. ஆமா நான் பிரக்நண்ட்! இதை சொல்ல தான் கூப்பிட்டேன். வீட்ல எல்லார் கிட்டயும் சொல்லிடுங்க என நிலா கூறி விட்டு திரும்ப.. அதிர்ந்து போனாள். 

ருத்ரன் அவளுக்கு மிக அருகில்… ஒட்டி கொள்வது போல நின்றிருந்தான். 

என்ன பண்றீங்க? என நிலா வாயை திறக்க..  ம்ம் இன்டர்ஸ்டிங் நீ ப்ரக்நண்ட்டா இருக்க? அந்த அளவுக்கு உன்னையே மறந்து ஒருத்தன் கூட இருந்திருக்க? அவ்ளோ லவ் இல்லையா? 

தேவையில்லாம பேச வேணாம். என நிலா கூறி விட்டு விலக பார்க்க.. 

அவனை உன்னால மறக்க முடியலயா? என புருவம் உயர்த்தினான். 

நிலா தடுமாறி கொண்டே ஒரு பொய் கட்டி விட்டாள். ஆமா அவர் என்னை அந்த அளவுக்கு விரும்பினார். நான் என்னையே மறந்து அவர் கூட… விருப்ப பட்டு தான் நடந்தது. என்றவள் தலை தாழ்த்தி கொண்டே எங்களுக்குள்ள கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டான்டிங் பிரிஞ்சி போக வேண்டிய கட்டாயம். அதான் பிரிஞ்சுட்டோம். 

இப்போ சார் என்ன பன்றாறு? உன்னோட மனம் கவர்ந்த கள்வன் என சிகரெட்டை வேகமாக உள் இழுத்தான். அவனது நெஞ்சம் தகித்து கொண்டிருந்தது. 

“தெரியாது! ஃபுல் கான்டாக்ட் கட் ஆகிடுச்சு! இப்போ அதெல்லாம் எதுக்கு? பிளீஸ் கிளம்புங்க. கல்யாணம் நின்னுடுச்சு” எங்க வீட்ல உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணுவாங்க ஒத்துக்க வேணாம். சக்தி அண்ணா கூட சொல்லுவார். எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல” என நிலா சோர்வுடன் நகர பார்க்க… 

அவன் திரும்ப வர மாட்டானா? 

நாங்க ப்ரேக் அப் பன்னிக்கிட்டோம் என்றாள் நிலா. 

இந்த நாலு வருஷமும் ஆர்மியில் என் கண்ணு முன்னாடி தானே இருந்த? அவன் ஆர்மி மேனா? என வேகமாக இழுத்தான் புகையை.. 

அவரை பத்தின விவரங்களை உங்க கிட்ட சொல்ல எனக்கு அவசியம் இல்ல. வாங்க போலாம் என்றாள் நிலா. 

வா போலாம் மாலையை போட்டுக்க என ருத்ரன் போட்டு விட.. என்ன பண்றீங்க ருத்ரன்? எனக்கு இந்த குழந்தை வேணும்! நீங்க நினைக்கிற மாதிரி அபார்ட் பண்ண மாட்டேன். என்றாள் நிலா. 

உனக்கு குழந்தை வேணும். எனக்கு என்னோட அம்மா சந்தோஷம் வேணும். இது ரெண்டும் இந்த கல்யாணத்தில் இருக்கு. நான் உன்னை வேணாம்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம். ஆனால் நீ என்னை வேணாம்னு சொல்ற அளவுக்கு நான்!! என நிறுத்தியவன். முகம் சிவக்க எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும். இந்த குழந்தை உன்னோட புரோபர்ட்டி. நீ என்னோட புரோபர்ட்டி. சோ புரியும்ன்னு நினைக்கிறேன் வா என தோள்களை பற்றினான். 

நிலாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்ட.. தீரா நான்  வேணாம் உங்களுக்கு? இப்படி பட்ட பொண்ணு உங்களுக்கு வேணாம். விட்டுடுங்க பிளீஸ். எனக்கு இஷ்டம் இல்ல என கதறினாள். 

ருத்ரன் அவளின் முகத்தை நிமிர்த்தி எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒரு பொண்டாட்டி வேணும். உலகத்துக்காக..  இந்த குழந்தைய பத்தி நான் எதுவும் கேட்க மாட்டேன். வச்சுக்கோ! இப்போ வா கல்யாணம் பண்ணிக்கலாம். என அழைத்தான் 

தீரா நான் சொல்றத என நிலா ஆரம்பிக்க.. சுவற்றில் ஒட்டி உதட்டுடன் உதட்டை பொருத்தி கொண்டான். முத்தங்கள் நீண்டு போனது. அவனது கைகள் அவளின் புடவைக்குள் செல்ல.. தீரா பிளீஸ் என தடுமாறினாள். 

வாடிஇஇஇ!! நீ என் பொண்டாட்டியா தான் சாகனும்! என கழுத்தில் கடித்து முத்தமிட்டவன் அவளை மண மேடைக்கு அழைத்து வந்தான். தன்னில் பாதியாக்கி கொண்டவன் இப்பொழுது ஊர் அறிய தாலி கட்டி முழுமையாக சொந்தமாக்கி கொண்டான். 

இப்பொழுது நிலா – ருத்ரன் அதே அறையில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள…  அறையின் கதவு  தட்டும் சத்தம் கேட்டது. 

தொடரும். 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.