Episode- 75
அந்த ஆர்டரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நிலா. இவன் மட்டுமா பிரச்னை செய்கிறான்? என் பிறந்த வீட்டு குடும்பமும் இவனுக்கு கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை. ஏற்கனவே முருங்கை மர உச்சியில் தான் முகத்தை வைத்து கொண்டு சுற்றுவான் இப்பொழுது இப்பொழுது சவுக்கு மரம் பாக்கு மரம் தென்னை மரம் என இன்னும் உயரமான மரத்தில் நிற்பது போல திரிவான் என வேதனையுடன் பார்த்தாள்.
எங்கே இருக்க? எப்போ டா வருவ? என ரிதம் ஆயிரம் முறை போன் செய்து விட்டாள்.
RTO ஆபிஸ் வந்துட்டேன். அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரம் தான் வந்துடுவேன் டி! என சத்ய தேவ் கூறினான்.
சரி சீக்கிரம் வா! என அவள் போன் வைக்க போக..
ராவடி உன்னோட தம்பி வந்துட்டானா? என்று இடைமறித்தான்.
அதானே பார்த்தேன். அவனை நினைக்காம உன்னால இருக்க முடியாது. அப்படி தான டா! என ரிதம் பற்களை கடிக்க..
அப்படி இல்ல டி! சும்மா கேட்டேன். என சத்ய தேவ் சமாளித்தான்.
அவன் மட்டும் என்னோட தங்கச்சியா இருந்தால் நீ அவனை தான் லவ் பண்ணிருப்ப எனக்கு தெரியும் டி!
சே சே சான்சே இல்ல.
பொய் சொல்லாத!
அவனுக்கு கணக்குழி இல்லையே! உனக்கு இருக்கு. எனக்கு அடங்கி போற பொண்டாட்டிய விட என்னை அடக்கி ஆளும் உன்னை தான் புடிச்சிருக்கு. தோத்து போகணும் கம்பீரமா மீசையில் மண்ணு ஒட்டாமல்.. இது ஒண்ணு போதாதா? என கூறினான்.
ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சத்ய தேவ் தலையை கோதி விட்டபடி வீட்டுக்கு வந்ததும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.
என்ன? என ரிதம் கேட்க..
வீட்டுக்கு வந்துட்டு சொல்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு டி! என சொல்லி விட்டு போனை வைத்தான்.
ரிதம் தீவிரமாக யோசித்து பார்த்தாள். போலீஸ்காரா! என்னடா முக்கியமான விஷயம்? என மெசேஜ் தட்டி விட்டாள்.
வந்து சொல்றேன் டி! போக்கிரி பொண்டாட்டி என தட்டி விட்டு புன்னகையுடன் போனை பாக்கெட்டில் போட்டு கொண்டான் சத்ய தேவ்.
அய்யோ டென்ஷன் பண்றானே! டேய் குட்டி குஞ்சா உன் அப்பா என்ன சொல்ல போறான்? உனக்கு எதுவும் தெரியுமா? யோசி டா அம்மா கிட்ட சொல்லு டா! என ரிதம் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசி கொண்டே யோசித்தாள். ஆனால் கடைசி வரை அவன் என்ன விசயம் என பிடிபட வில்லை அவன் எப்பொழுது வருவான் என காத்திருந்தாள்.
மா இப்போவே வா! என ருத்ரன் விவேகாவின் பின்னால் சுற்றி கொண்டிருக்க..
விவேகா முறைத்து பார்த்தபடி, இனி நீ நிலா பொறுப்பு! போ அவளை ஊட்டி விட சொல்லு! வந்துட்டான் செல்லம் கொஞ்சிட்டு! என கூறி விட்டு நகர்ந்தார்.
மா இப்போ வர போறியா இல்லையா? என ருத்ரன் புடவையின் முந்தியை பிடித்துக் கொண்டு அவரின் அருகில் அமர்ந்து கொண்டான்.
என்ன வேணும் எங்க மாப்பிள்ளைக்கு? என மகி சிரித்து கொண்டே கேட்க..
மாமி! கிண்டல் பண்ணாதீங்க! என விவேகாவை முறைத்து விட்டு எழுந்தான்.
தீரா! என பின்னால் குரல் கேட்க.. கண்களில் கோபம் மின்னவே திரும்ப நினைத்தான். ஆனால் அவனை சுற்றி இருக்கும் அத்தனை ஆட்களும் அவளின் தாய் வழி உறவு! பற்களை கடித்து கொண்டே திரும்பினான்.
வாங்க உங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டேன். நானும் இன்னும் சாப்பிடல ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் நிலா.
என்னால சாப்பிட முடியாது நீ ஊட்டி விடனும் சரியா? என அவளின் பின்னால் சென்றான்.
மீனாட்சி இந்த காட்சியை எல்லாம் ஏக்க பார்வையில் பார்த்து கொண்டே நிவாசை பார்த்தாள். இது போல என்று இவன் கேட்பான் என இருந்தது.
Spr க்கு ருத்ரன் என்பவன் அவரின் முன் மலையளவு உயர்ந்த மனிதன் தன் பெண்ணை தாங்கும் ஒருவன். இருவரின் அன்யோன்யம் நெருக்கம். அனைத்தும் உண்மையான காதல் கொண்ட ஜோடியை கூட தோற்கடிக்கும் என்று தோண வைத்து விட்டது.
உணவுகளை போட்டு பிசைந்து அவள் ஊட்ட.. ருத்ரன் போனை நோண்டி கொண்டே சாப்பிட்டான்.
என்னங்க?
பதில் இல்லை!
தீரா! பிளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. எனக்கு வேலை விசயம் பத்தி சத்தியமா தெரியாது. நம்புங்க!.. என அவள் அழுகையை அடக்கி கொண்டு கூற..
ருத்ரன் சாப்பிட்டு முடித்து தண்ணீரை குடித்தவன் அவளின் மேல் சட்டையை இழுக்க.. அருகில் ஒட்டியவள் பதட்டத்துடன் விலக போராடினாள்.
அவளின் வாசத்தை உள் இழுத்து கொண்டே உதட்டை துடைத்தவன். என்னை உங்க குடும்பத்துக்கு அடிமையா கொண்டு வரது தான் உன்னோட திட்டம்னு எனக்கு தெரியும் டி! என்ன வேணாலும் செஞ்சுக்க இதையெல்லாம் என் அம்மாவுக்காக மட்டும் தான் பொறுத்திட்டு இருக்கேன். நீ இனி உண்மையையே பேசு! பொய் சொல்ல அவசியம் இல்ல.. கடைசியா உன் புத்தியை காட்டிட்ட என்று விட்டு நகர்ந்தான்.
நிலாவின் மனம் மேலும் சுக்கு நூறாக உடைய.. அழுகையை அடக்கி கொண்டு அறைக்கு விரைந்தாள்.
இதோ சத்ய தேவ் வந்து விட்டான். இரவு உணவு தயாராகி கொண்டிருக்க ரிதம் கைகளில் மருதாணியுடன் அமர்ந்திருந்தாள்.
இன்பா அவனை வழி மறித்து பேசி கொண்டிருக்க.. சத்ய தேவ் தன் மாமனிடம் பேசியபடி ரிதமை பார்த்தான்.
ராகவ் அவன் கிட்ட நாளைக்கு விசாரிச்சுக்க! இப்போ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடட்டும் என விவேகா உள்ளே அழைத்து சென்றார்.
ரிதம் காந்த கண்களில் அவனை பார்க்க, உதட்டை கடித்து காற்றில் முத்தமிட்டான்.
ப்ளடி பிஸ்கட் என உதட்டை கடித்தாள்.
கண்ணடித்தபடி படி ஏரியவனை தொற்றிக் கொண்டான் ருத்ரன். கிட்ட தட்ட ஒரு மணி நேரம் விடவே இல்லை. சத்ய தேவ் குளிக்க பாத்ரூம் சென்றாலும் வெளியில் இருந்து பேசினான் ருத்ரன். விடவே இல்லை ருத்ரன். விடாப்பிடியாக கதைகள். ரிதமை எப்பொழுது பார்ப்போம் என திண்டாடி கொண்டே இருந்தான்.
மாமா! மாமா! நான் சொல்றது கவனிக்கிறீங்களா? இல்லையா? என ருத்ரன் கேட்க..
தீரா! என விவேகாவின் குரல் கேட்க..
மாமா நான் போயிட்டு வந்துடுறேன். என ருத்ரன் இறங்கி செல்ல ..
அனைவருக்கும் பந்தி போட்டு உணவு பரிமாறபட்டது.
சத்ய தேவ் அவளுக்கு அழைக்க..
போனை எடுத்ததும் முத்தங்கள் தான்.. ஆயிர கணக்கில் இச் இச் என்று.
விவேகா தயக்கத்துடன் போனை நீட்டி போடி போய் சக்திய கூட்டிட்டு வா! ஒரு எட்டு மணிக்கு என அனுப்பி வைத்தாள்.
என்னாச்சு பேபி? என ரிதம் புரியாமல் பார்க்க..
போடி! போ! என அனுப்பி வைத்தார்.
என்னாச்சு? ஏன் இந்த பேபி இப்படி behave பண்றா என ரிதம் அவர்களின் அறைக்கு சென்றாள்.
ஹே எப்டி இருந்துச்சு?
என்ன?
கிஸ் டி!
எப்போ?
இப்போ?
டேய் பப்பி நாயே! எங்க அம்மாவுக்கு கிஸ் பண்ணியிருக்க நீ! என ரிதம் கோபமாக முறைத்தாள்.
என்னடி சொல்ற? மாமிக்கா? என எச்சில் கூட்டி விழுங்கினான்.
ஆமா!
உன்னை யார் போனை அவங்க கிட்ட கொடுக்க சொன்னது? அய்யோ மாமி என்னை என்ன நினைச்சிருப்பாங்க? என சத்ய தேவ் யோசிக்க..
வேற என்ன? நீ சரியான காஜி! காஞ்சு போயிருக்க அப்டின்னு நினைச்சிருப்பாங்க! என ரிதம் சொல்ல..
பத்தவே இல்ல!! என அவன் முத்தமிட வர..
முதல்ல விசயம் அப்புறம் தான் மத்தது. சீக்கிரம் சொல்லு! என ரிதம் அவன் முகத்தை பார்க்க..
சத்ய தேவ்..?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels
