Episode- 79
சரிகா வேகமாக ரிதமின் முடியை கொத்தாக பிடித்து இழுக்க… ரிதம் பாக்கெட்டில் சொருகி இருந்த பேனாவை எடுத்தவள் தோல் சப்பையில் குத்தினாள்.
அய்யோ!! ஹே you b* என துப்பாக்கி கன் எடுத்து நெற்றியில் குறி வைத்தாள் சரிகா.
ரிதம் மூச்சு வாங்கி கொண்டே அவளை பார்க்க, சரிகாவின் சப்பையில் இருந்த ரத்தம் வந்தது.
ஹே பேனாவை கீழ போடு! உன்னை இங்கேயே நசுக்கி போடுறேன் பாரு டி! என சரிகா அவளை நோக்கி ஒரு எட்டு வைக்க..
என்னடி? இங்கே நசுக்கி போடுறேன்னு சொன்னியே வாடி! எனக்கு எதை நினைச்சும் கவலை இல்ல. அதே போல நீ என்னை கண்டிப்பா கொல்ல மாட்ட அது எனக்கு நல்லாவே தெரியும். நீ என் மேலே கைய வச்சா! கார்கோடன் உன்னை சும்மா விட மாட்டான். அது கூடவே என் புருஷன் இருக்கானே! அவன் உன் பாஷை விட பயங்கரமானவன் சொல்ல போனால் என் மேலே பைத்தியக்காரன். உன்னை சாம்பலாக்கி கரைச்சு விட்டடுடுவான் என சட்டை பட்டனை தூக்கி விட்டபடி நின்றாள் ரிதம்.
சரிகா ஒரு நொடி சுதாரித்து விட்டு ஹே கடைசியா உன்னை பார்க்க தான் அரிச்சந்திரன் ஒழுங்கா சொல்லு என கேட்டாள்.
ரிதம் அவளை சாதாரணமாக பார்த்து உனக்கு அரிச்சந்திரா பத்தி தெரியனுமா? பிளாக் ஈகில் பத்தி தெரியனுமா?
ஹே ரெண்டு பேரும் ஒன்னு தான என்ன உளறிட்டு இருக்க? என சரிகா கேட்க..
உண்மைய சொல்லு ரெண்டு பேரும் ஒரே ஆளா என்று ரிதம் அவளை உற்று பார்க்க..
சரிகாவின் முகம் சடுதியில் மாறியது. அய்யோ வாய்ப்பே இல்லை. நம்மிடம் விளையாடுகிறாள் என்று.
சொல்லு! என ரிதம் குரல் கொடுக்க..
ஹே ரெண்டு பேரும் ஒருத்தர் தான். என சரிகா கூற..
எனக்கு ரெண்டு பேரையும் தெரியும் என்றாள் ரிதம்.
சரிகா எச்சிலை விழுங்கி கொண்டு பார்க்க, ரிதம் அவளை கண்டு கொள்ளாமல் முன்னாள் நடக்க.. சரிகாவின் கையில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பெரிய காயம் இல்லை ஆனால் ஆழமான காயம்.
ரிதம் வீட்டினுள் நுழைய, ஹே சொல்லு டி! என சரிகா அவளின் பின்னால் சென்றாள்.
ரிதம் அவளின் பக்கம் திரும்ப,..
சரிகா தன்னை சரி செய்து கொண்டு அரிச்சந்திரா உன்னை பார்க்க தான் வந்தான். அதுக்கு அப்புறம் வரல! அவன் எங்கே? ஒழுங்கா சொல்லு! நாங்க எல்லாத்தையும் செக் பண்ணிட்டு தான் சொல்றோம் என சில படங்களை அவளின் முன் போட்டாள்.
அப்போ ப்ளாக் ஈகிள், அரிச்சந்திரா ரெண்டு பேரும்? என ரிதம் புருவத்தை தூக்க..
ட்வின்ஸ் என்றாள் சரிகா.
( சைலஜாவை திருமணம் செய்து கொண்டது அரிச்சந்திரன். ருத்ரனுடன் நேபாள எல்லையில் இருந்தது பிளாக் ஈகில் இருவரும் இரட்டையர்கள்)
ரிதம் அமைதியாக அவளை பார்க்க, சொல்லு அரிச்சந்திரா எங்கே? ரிதம் வயிற்றை பிடித்து கொண்டு நீயே பார்த்துக்கோ இது என் புருஷன் என்னை கண்காணிக்க வச்ச cctv camera footage இதுல நான் எங்கே இருந்தேன் அவன் எங்கே இருக்கான் எல்லாமே உனக்கு தெரியும். என ரிதம் சொல்லி கொண்டே சூடாக பீட்சா ஆர்டர் செய்தாள்.
ஹே!
நீ பாரு!! நான் ஒன்னும் பண்ணல என ரிதம் அமைதியாக அமர்ந்திருக்க..
சரிகா அனைத்தையும் செக் செய்தாள். ஆல்ரெடி அவள் இந்த டவர்சிப் அப்பார்ட்மெண்ட் footage ஏற்கனவே செக் செய்து விட்டாள். அதில் அரி வந்து சென்றதற்கான அடையாளம் இருந்தது. அதன் பின் அவனது போன் ரீச் ஆகவில்லை. அன்றில் இருந்து இதோ 15 நாட்கள் அவனை தேடுதல் வேட்டை செய்கிறார்கள். கிடைக்கவில்லை.
சரிகா தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க.. பீட்சா சாப்டுறயா? என ரிதம் கேட்க..
ஹே you f* என வெகுண்டு எழுந்தாள் சரிகா.
இப்போ சத்ய தேவ் வர்ற நேரம் என ரிதம் கூற..
கடைசியா என்ன சொன்னான் உன்கிட்ட? என சரிகா கன்னை லோட் செய்து ரிதமின் நெற்றிப்பொட்டில் குறி வைத்தாள்.
நான் சத்ய தேவ விட்டு போயிடனும் அப்டின்னு சொன்னான். வேற என்ன? அவ்ளோ தான்.
ஹே!!
என்னடி ஹே ஹே! இன்னும் கொஞ்ச நேரம் இருந்தன்னு வை அப்புறம் நீ அ ஆகிடுவ! இந்நேரம் சத்ய தேவ் கீழே வந்திருப்பான் என ரிதம் கூற..வேகமாக பால்கனி பக்கம் எட்டி பார்த்தாள் சரிகா.
சத்ய தேவ் வருவது போல தான் தெரிந்தது. நான் மறுபடியும் வருவேன் டி! என திரும்பியவள். எப்போ அவனை விட்டு போக போற!!
எனக்கு எப்போ போகணும்னு தெரியும். இப்போ நீ போகல அப்புறம் ஒரேயடியா போய் சேர்ந்திருவ என்றாள் ரிதம்.
சரிகாவுக்கு அந்த நேரம் போன் வர, இங்கே இல்ல நான் அந்த போலீஸ்காரன் பொன்னை செக் பண்ணிட்டேன். இப்போ அடுத்து என்ன பண்றது. என பேசி கொண்டே சென்றாள்.
ரிதம் அவள் சென்றதும் ஹாயாக ஷோபாவில் சாய்ந்தாள். உதட்டில் குரூர புன்னகை!! இருக்காதா பின்ன? சத்ய தேவ் பொண்டாட்டி சாதாரண பொண்டாட்டி இல்லையே ரவுடி கிரிமினல். என்ன நடந்திருக்கும்?
(அன்று)
அரிச்சந்திரன் அவளிடம் லெட்டர் கொடுத்து விட்டு நாலு பக்க வில்ல வசனம் பேசி விட்டு போக அதை பார்த்து எழுந்தவள். ஹலோ செக்யூரிட்டி C3 ப்ளாக் பக்கம் திருடன் வந்திட்டு போயிருக்கான்.அதுவும் கொரியர்காரம் போல இப்போ தான் அவனோட ட்ரெஸ் கோட் இது தான். எதுக்கும் எல்லாரையும் செக் பண்ணிட்டு வெளியே அனுப்புங்க. என போனை போட்டு பற்ற வைத்தவள்.
கருப்பு ரெயின் கோட் சூட் எடுத்து கொண்டு அவளுக்கு தேவையான இன்னும் சில பொருட்களை எடுத்து கொண்டு, பாத்ரூம் பக்கம் சென்றாள். அங்கே வெஸ்டன் டாய்லெட் மேல் ஒரு ஆள் வெளியே செல்லும் அளவுக்கு துவாரம். அதன் வழியாக கீழே செல்லவில்லை. தன் வீட்டு பின்னால் இருக்கும் இன்னொரு அப்பார்ட்மெண்ட் வீட்டின் பாத்ரூமின் கண்ணாடியை எடுத்து வைத்து மெல்ல கஷ்டபட்டு சென்றாள்.
யாரு என வீட்டின் உரிமையாளர் பதற்றத்துடன் வர!!.. அவரின் முன் ரிதம் தனது போலீஸ் ID கார்டை காட்டினாள். இது யாருக்கும் தெரிய கூடாது. தெரிஞ்சது. உங்களை இன்வால்வ் பண்ணிட்டு நான் போயிடுவேன் என மிரட்டினாள்.
இப்போ என்ன பண்ணனும்? என பயத்துடன் கேட்டார்கள். என் கூட வரணும். என்னை ஃபாலோ பண்ணனும் என துப்பாக்கியை காட்டி மிரட்டினாள். அரண்டு விட்டது மொத்த குடும்பமும். அங்கிருந்து நேராக வெளியே வந்தவள் வேகமாக கீழே சென்றாள்.
நீ மாசமா இருக்க மா!! எதுக்கு இந்த ரிஸ்க் என அந்த வீட்டின் உரிமையாளர் வைபவ் கேட்க..
ஷட் அப் என திட்டியவள். பின் கேட்டின் வழியாக வெளியே சென்று வைபவின் காரை எடுத்து வர சொல்லி விட்டு முன்னால் அரிச்சந்திரா செக்யூரிட்டி கிட்ட விளக்கம் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்தாள்.
வைபவ் காரை எடுத்து கொண்டு வந்ததும் அவள் அருகில் செல்ல.. என்னை 10 step distance ல ஃபாலோ பண்ணுங்க. என மிரட்டினாள் வைபவ் முகத்தை துடைத்து கொண்டு பார்த்தான்.
மழை வேறு கொட்டி கொண்டிருந்தது. அரி வெளியே வந்ததும் அவனது வண்டியில் ஏறி கொண்டு புறப்பட்டான். ரிதம் ஒரு ஆட்டோ பிடித்து அவனுக்கு முன்னால் சென்றவள் சிக்னல் போட்ட நேரத்தில் அரிச்சந்திரா முன் போய் நின்றாள்.
ஹே ஷைலஜா என்று அவன் அதிர்ச்சியுடன் அழைக்க..
வண்டிய நான் சொல்ற இடத்துக்கு விடு! உன்கிட்ட டீலிங் பேசணும். என கூறினாள் ரிதம்.
கார் நேராக சிவன்யாவின் பழைய அப்பார்ட்மெண்ட் இருக்கும் வீட்டுக்கு சென்றது. எங்கே கூட்டிட்டு போற? என்ன கெட் அப் இது? என்னை மறக்க முடியலையா? இது நம்ம குழந்தை தான! உன்னோட அழகில் நான் சத்யமா முடியலடி! ஒரே ஒரு தடவை!.. வேணாம் வேணாம் நீ என் கூட வந்திடு. நான் ப்ளாக் ஈகிள் கிட்ட பேசி உன்னை விட சொல்றேன். என ஆபாச வார்த்தை பேசி அவளின் மேல் உள்ள மயக்கத்தில் உளறினான்.
ரிதம் எதுவும் பேசாமல் அழைத்து சென்றவள். ஹே இது? என அறி கேட்க..
இது என் டாடியோட இன்னொரு அப்பார்ட்மெண்ட் என அழைத்து சென்றவள். உள்ளே வந்ததும் அவனை பார்த்தபடி கோட்டை கழட்டி வைத்தாள்.
இதென்ன இங்கே ஒரே பறவை, நாய், பூனை, மீனு ஆமை எல்லாம் இருக்கு? என அவன் புரியாமல் கேட்க..
அதுக்கு முன்னாடி இந்த தண்ணிய குடி!
என்னடி விஷம் கலந்த தண்ணியா? என அறி கேட்க..
என்னதான் இருந்தாலும் நீங்க தாலி கட்டின புருஷன்! அதுவும் முதல் புருஷன். நோக்கு போய் எப்டி? நான்? என நேரத்தை பார்த்தாள். மணி 2.00.
நான் கெட்டவன் தான்! ஆனால் நான் நல்லவனா இருந்தது உன்னோட விஷயத்தில் தான். நீ செதுக்கி வச்ச சிலை டி! உன்னை அனுபவிக்க தான் காத்துட்டு இருந்தேன். கல்யாணம் பண்ணி உன்னை ஆல்மோஸ்ட் நெருங்குட்டேன். அதுக்குள் அந்த சத்ய தேவ். உன்னோட மனசுல அவன் தான இருக்கான்? உனக்கு எப்படி நியாபகம் வந்தது. வாய்ப்பில்லை உன்னை பார்த்ததும் அதிகமா உன் மேலே ஆசை வச்சு ஒரு வருஷம் உன்னை மெமரி லாஸ் பண்ண டைம் எடுத்தேன் என்றான் அரி.
அதுக்காக தான் வந்திருக்கேன். எனக்கு உங்களை மறக்க முடியல இதுக்கு மேலே முடியாது சந்திரன் என்றவள் அருகில் நெருங்கினாள்.
உன்னை பத்தி சனாதனன் கிட்ட சொல்லி உன்னை மட்டும் பழி வாங்க வேணாம்னு சொல்றேன் என்றவன் அவளை முத்தமிட வர, அவனது கழுத்தை பிடித்து நெருங்கியவள் stainless wire rope வைத்து இறுக்கி பிடித்தாள் ரோப் அவனது தொண்டையை கிழிக்க ரத்தம் அப்படியே மூக்கில் தெரித்தது.
ஹே என ரிதமின் கழுத்தை பிடித்தான். அவளின் கழுத்தை இறுக்கினான். ரிதம் கூட சளைக்காமல் கம்பி கொண்டு இறுக்கினாள்.
இரும்பி கொண்டே ரத்தம் தெறிக்க பொத்தென்று விழுந்தான் அரி சந்திரன்.
ரிதமின் முகத்தில் ரத்தம் தெறித்து இருக்க அதை துடைத்தபடி நின்றாள்.
என் சத்ய தேவ்வ கொல்ல போறேன்னு சொல்றியா? செத்து போடா! என அங்கே சோபாவில் அமர்ந்தாள். மணி 3.00
சத்ய தேவ் ஆறு மணிக்கு வந்து விடுவான்.
வைபவ் வெளியே காத்து கொண்டிருந்தார்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
