Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode – 93


நீ சொல்றது எதுவும் எனக்கு புரியல!! என ரிதம் மீண்டும் சொல்ல…

நான் மாமா கிட்ட சொல்ல போறேன் என ருத்ரன் உறுதியாக கூறினான்.

நீ எதை சொன்னாலும் சாக போறது நான் இல்ல நீயும் இல்ல. சத்ய தேவ் தான் என்றாள் நிலா.

ருத்ரன் புரியாமல் பார்க்க, அவன் பழி வாங்க நினைக்கிறது நம்ப டாடிய என்றாள் ரிதம்.

என்ன சொல்ற? என ருத்ரன் அதிர்ச்சியுடன் கேட்க..

அதற்குள் துகில் சிணுங்கினான். ரிதம் அவனை ஆற்று படுத்தி கொண்டே உன்னோட வாழ்க்கையில் மீனாட்சி போனது தற்செயல் இல்ல. அது பிளான்.அதே போல உன்னோட வாழ்க்கையில் நிலா வந்தது கூட தற்செயல் இல்லை. அதுவும் பிளான். இது நாடகம் மாதிரி கன்னி தீவு மாதிரி தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கணும். எங்கேயாவது குறுக்க திரும்பினால் பிரச்னை நம்ம ரெண்டு பேருக்கும் நடக்காது. நம்மள சுற்றி இருக்க ஆளுங்களுக்கு தான் நடக்கும். டாடிக்கு சத்ய தேவ்வ என்னோட அளவுக்கு புடிக்கும் அதான் இப்போ சத்ய தேவ் இந்த நிலையில் இருக்கான். டாடிக்கு நான் அப்டின்னா உயிர் அதான் என்னை ப்ளாக் மார்கெட்ல விக்க பார்த்திருக்கான். உன்னோட காதலை பிரிச்சிருக்கான். நிலாவை உன் வாழ்க்கையில் புகுத்தி இருக்கான். நம்ம ஆக்னஸ் இருக்காளே! அதான் ஆதிரன் பொண்டாட்டி அவளோட குழந்தைய அழிச்சிருக்கான். இன்னும் நிறைய இருக்கு. நம்ம கிருஷ்ணன் தாத்தா எப்டி இறந்தார்ன்னு தெரியுமா? பாவை பாட்டிக்கு என்னாச்சுன்னு தெரியுமா? எல்லாத்துக்கும் காரணம் ஒருத்தன் தான் என்றாள் ரிதம்.

இப்போ என்ன பண்றது? என ருத்ரன் பதட்டத்துடன் கேட்க..

அழிக்கணும் ஆனால் வெளிப்படையா பண்ண முடியாது. ஏன்னா இங்கே சுவருக்கு கூட காதிருக்கும். முக்கியமான விஷயம் நிவாஸ் உன்னை வேணும்னு அடிச்சிருக்கலாம். ஆனால் நிதின் அப்படி செய்யும் ஆள் இல்லை. அவனை கூட அப்படி பண்ண வச்சிருப்பான் அந்த B*.. என்றவள் மேலும் உன்னை அவங்களுக்கு பிடிக்காம போகலாம் ஆனால் சத்ய தேவ்காக இந்த நொடி உயர் கொடுப்பான் நிதின். அவன் எந்த காரணத்தை கொண்டும் சத்ய தேவ் சாகணும்னு நினைக்க மாட்டான். இதெல்லாம் பண்ண வைக்கிறது அவன் தான் என்றாள் ரிதம்.

அது யாருன்னு சொல்லி தொலையேன் என ருத்ரன் கேட்க..

சனாதனன், துட்சாதனன், அரிச்சந்திரன், ராமசந்திரன், நீது சந்திரா என்றாள் ரிதம்.

யாரு இவங்க? என ருத்ரன் புரியாமல் கேட்க..

மதிவாணன் தாத்தா தெரியுமா? அதான் வசுமா அவங்களோட அண்ணன்.

தெரியுமே!! என ருத்ரன் கூற..

வருணி சித்தி தெரியுமா? என கேட்டாள்.

ம்ம் தெரியும் கில்லி வளவன் சிபி வளவன் அம்மா தான!!

எஸ் வருணி சித்திக்கு first ஹஸ்பன்ட் விதார்த் அவருக்கும் வருணி சித்திக்கும் விவாகரத்து ஆகிடுச்சு அவன் சித்ரவதை பண்ணான். அந்த ஆளை நம்ம டாடி தான் ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தார். அந்த ஆள் விதார்த்தோட பையன் தான் துட்சாதனன்.

வாட்? என ருத்ரன் அதிர்ச்சி ஆகிட..

ரிதம் ஒரு பெரு மூச்சுடன் அந்த ஆளுக்கும் வருணி சித்திக்கும் பிறந்தவன். வருணி சித்தியோட எக்ல பிறந்தவன் என்றாள் ரிதம்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ருத்ரனுக்கு.

பிளாக் ஈகில் உண்மையான பெயர் ராம சந்திரன், அவனோட தம்பி அரி சந்திரன், தங்கச்சி நீது சந்திரா இவங்க மூணு பேரும் வருணியோட அண்ணன் இளவழகன் இருக்காரே தெரியுமா? அவருக்கு பிறந்தவங்க கிருஷ்ணன் தாத்தாவோட வாரிசுகள். அதுல நீது சந்திரா மட்டும் வர மாட்டாள் என்றாள் ரிதம்.

அவங்க மனைவி ஶ்ரீ லங்கா தான!! என ருத்ரன் கேட்க..

ரிதம் ஒரு சில நொடிகள் கழித்து விதார்த் தங்கச்சி மேனகாக்கும் கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடியே affair என்றாள் ரிதம்.

அப்போ அந்த சனாதனன்? என ருத்ரன் கேட்க..

அவன் விதார்த்தோட first wife பையன். அவன் தான் இவங்க எல்லாரையும் ஆட்டி வைக்கிறான். என்றாள் ரிதம்.

இது எல்லாம் உனக்கு எப்டி தெரியும்? என ருத்ரன் பதட்டத்துடன் கேட்க..

நான் அரிசந்திரன் மூலமாக தெரிஞ்சுகிட்டேன்.

அவன் எங்கே இருக்கான்? என ருத்ரன் கேட்க..

ரிதம் தன் மகனை கொஞ்சி கொண்டே சாதாரணமாக அவன கொன்னுட்டேன் என்றாள்.

ருத்ரன் தன் அக்காவை அதிர்ச்சியுடன் பார்க்க..

ரிதம் தன் தம்பியை பார்த்து, நம்ம சண்டை போடுற ஆள் எல்லாமே ரத்த பந்தம். கொல்ல வேண்டிய கட்டாயம். இதையெல்லாம் அப்பா கிட்ட சொல்ல முடியாது. அவருக்கு வயசு ஆகி போச்சு. அண்ட் சத்ய தேவ் மேலே கைய வச்ச அவனுகளை என்னால சும்மா விட முடியுமா? சத்ய தேவ் என்னோட உயிரு!! அவன் பக்கத்தில் யாரையும் நெருங்க விட மாட்டேன். என்றாள்.

அக்கா உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா? என ருத்ரன் பயத்துடன் கேட்டான்.

தீரா!! இதையெல்லாம் உன்கிட்ட நான் எதுக்கு தெரியுமா சொன்னேன். நீ தான் இனி எல்லாரையும் பார்த்துக்கணும். என்றாள் ரிதம்.

நானும் அவனுங்கள கொல்ல போறேன் என ருத்ரன் சொல்ல..

ரிதம் சிரித்து கொண்டே.. என்னோட ஆட்டத்தை கொஞ்சம் ஆடி முடிச்சிட்டாங்க. இப்போ அவங்க ஆட நினைக்கிறது உன் வாழ்க்கைய.. சோ மூடிக்கிட்டு குட்டி தம்பியா சமத்து பையனா அக்கா சொல்றத கேளு! அவனுங்க வழியில் போய் தான் அவனுங்கள அழிக்க முடியும். நீ இதை கொஞ்சம் லீக் பண்ணாலும் அவனுங்க முதல்ல யாரை தெரியுமா போடுவாங்க? உன்னை இல்ல. நம்ம அம்மா!! அடுத்து சத்ய தேவ், அடுத்து என தன் மகனை இறுக்கி அணைத்து கொண்டவள். என் பையன் எனக்கு வேணும் டா!! உன் பையனும் எனக்கு வேணும் தீரா!! நான் அத்தையாகிட்டேன் என ஆத்மார்த்தமாக கூறினாள் ரிதம்.

ருத்ரன் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.

ரிதம் தன் தம்பியின் அருகே வந்தவள் தலையை வருடி முத்தமிட்டு, நீ டாடி போல இருக்க!! டாடியையும் மம்மியையும் பார்த்துக்கோ! இப்போ நீ ஒரு ஆள் இல்ல. நிலா கூட குட்டி தீரா இருக்கான் உன்னை போலவே!! என்றாள்.

உனக்கு எதுவும்? என ருத்ரன் சொல்ல..

உறுதியா சொல்றேன் என்னை அவனுங்க ஏதும் பண்ண மாட்டாங்க. உன்னையும் தான். இது தான் நமக்கு இருக்க plus also minus ஆனாலும் நம்மால முடியும் என ரிதம் கூற..

பிலிஸ் அக்கா மாமாவை விட்டு போகாத!! என ருத்ரன் கூற..

ரிதம் ஒரு பெரு மூச்சுடன் வேற வழி இல்ல தீரா. அவனுங்கல நெருங்கனும் அதுக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு.

நான் என்ன பண்ணனும்? என ருத்ரன் கேட்க..

என் தம்பியா இரு!! துகில் குட்டி தீரா குட்டி நிலா எல்லாரையும் பார்த்துக்கோ. நான் மத்ததை பார்த்துக்கிறேன் என்றாள் ரிதம்.

நிலா என்னை என ருத்ரன் ஆரம்பிக்க..

நீ எதுவுமே நடக்காத மாதிரி அந்த tragedy ஆளுங்க கூட அப்படியே டிராவல் பண்ணு. நிலாவை விடாத. துகில விட உன் குழந்தை முக்கியம் ஏன்னா அது இன்பராகவன் குடும்ப வாரிசு. என்றாள்

சரி கா! சாரி கா! என அவன் மீண்டும் சொல்ல..

இதை வெளியே சொன்னால் என் சக்திக்கு தான் பிரச்னை!! அவனுக்கு எதுவும் ஆச்சு? உன்னையே கொன்னு புதைப்பேன் டா!! என துகில் குட்டியை உறங்க வைத்தாள் ரிதம்.

மாட்டேன். என ருத்ரன் கூற..

சரி என குழந்தையை தூக்கி சென்றாள் ரிதம்.

இதோ இரண்டு நாள் கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடி விட..

பிளாக் ஈகிள் அழைத்தான்.

இதோ இன்னிக்கி நைட்டு போறேன் என ரிதம் கூற..

வேணாம் என்றான் ப்ளாக்.

என்னாச்சு? என ரிதம் கேட்க..

நீ சத்யதேவ் பொண்டாட்டியா இருக்க கூடாது! ஆனா இன்பராக அவனோட பொண்ணா இருக்கலாம்! உன் குழந்தைக்கு அம்மாவா இருக்க கூடாது! ஆனா இன்பராகவனோட பொண்ணா இருக்கலாம். நீ ரிதமா இருக்கக் கூடாது. ஆனா சைலஜாவா இருக்கலாம்? நீ சத்யதேவோட பொண்டாட்டியா இருக்க கூடாது! அரிச்சந்திரனோட பொண்டாட்டியா இருக்கலாம் என்று கூறி முடித்தான்.

சத்தியமா என்னால முடியாது நீ சொல்றத என்னால பண்ண முடியாது என்று ரிதம் ஆவேசமாக கூற…

என்னடி பண்ண முடியாதுன்னு சொல்ற? பண்ணி தான் ஆகணும்! நீ தூரத்தில் இருந்தால் சந்தோஷமா இருப்ப! உன்னோட பையன் சத்யதேவ் வீட்டுல ராஜா வீட்டு கன்னுக்குட்டியா வளருவான்! நீ நிம்மதியா இருப்ப! ஆனா பக்கத்துல இருந்தா? உன் குழந்தையை தூக்க முடியாம நீ கஷ்டப்படணும். நீ இன்பராகவனோட பொண்ணா இருக்கணும். சத்திய தேவ் பொண்டாட்டியா இருக்க கூடாது அரிச்சந்திரனோட பொண்டாட்டியா இருக்கணும். என்றான் பிளாக் ஈகில்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து உனக்கு நான் எவ்வளவு செலவு கொடுத்திருக்கும் தெரியுமா உன் புருஷன பாத்துக்கலாம். உங்க அப்பா அம்மா கூட இருக்கலாம் உன் புள்ளைய பார்க்கலாம் கண்ணார ஆசை தீர ஆனா என் தம்பி பொண்டாட்டியா நீ அந்த வீட்ல இருக்கணும் என்றான்.

ரிதம் மனசு ரொம்ப இருக்கா பிளாக்கில் சிரித்துக்கொண்டே நீ தகடு தகவல பண்ணனும்னு கனவுல கூட நினைக்காத ஏன்னா உன்ன பக்கத்துல இருந்து கண்காணிக்க ஒரு ஆள் கூடவே இருக்கு. என்றான் ப்ளாக் ஈகிள்.

“என்ன பண்ணனும் இப்போ?”

I love you சைலஜா! சைலஜா! ஓ சைலு சைலு! என்றான்.

ரிதம் கண்களை இறுக்கி மூடி திறந்தாள்.


உங்களை யாரு இங்கே வர சொன்னது? வெளியே போயிடுங்க ஒழுங்கு மரியாதையா? நீங்க இங்க இருக்கிறது தெரிஞ்சா உங்களை கொன்னு போட்டுடுவாங்க! ஏன் அப்டின்னு கேட்க கூட நாதி இல்ல. நானும் கேட்க மாட்டேன் என நிலா கூற..

ருத்ரன் அவளின் அருகில் நெருங்கினான்.

வெளியே போங்க!! என நிலா மீண்டும் கூற..

ருத்ரன்..?

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.