Episode – 2
சக்தி என அருகில் நெருங்கினான் தமன். தமன் நிஜ.. நிஜமாவே நீங்க தானா? அய்யோ என்னோட அஸ்வத்தாமனா? என்னால நம்ப முடியலயே! என சக்தி வேக மூச்சுடன் திணறினாள்.
“நம்ப நான் என்ன பண்ணனும் சக்தி? என்றவன் மெல்ல அவளின் அருகில் நெருங்கி can I kiss you? அந்த உணர்வுகள் உனக்கு சொல்லுமே? நான் உனக்கு பக்கத்தில் இருக்கேன்னு? கொடுக்கவா?”
“என்ன? என்ன அஸ்வந்த் சொல்றீங்க? அய்யோ பெருமாளே நான் என்ன பண்ணுவேன்?” என சக்தியின் முகமெல்லாம் பூரிப்பில் சிவக்க மெல்ல அருகில் நெருங்கினான் அஸ்வத்தாமன்.
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே என்ற வரிகள் மனதிற்குள் ஓட… அஸ்வத்தாமனின் ஃபேமஸ் லவ் லவ் ஹேப்பி லவ் ஆல்பம் பாட்டு காதுகளில் கேட்க மெல்ல இதழின் அருகில் நெருங்கினான்.
“என்ன இதம் ஹா ஹா என்ன இதம்!”
ஹே வெந்து போயிடும் டி உன்னோட உதடு! என அஸ்வந்தின் குரல் வித்யாவின் குரலாக மாறியது.
அய்யோ உதடு எப்டி சூடா இருக்கு? என சக்தி வித்யாவை பார்க்க, நீ முத்தம் கொடுக்கிறது அந்த ஹீரோ அஸ்வத்தாமனுக்கு இல்ல டி! அயன் பாக்ஸ்க்கு என்றாள் வித்யா.
அய்யோ அயன் பாக்சா ஹ அய்யோ என்று வெடுக்கென எழுந்தாள் சக்தி.
வித்யா சிரித்துக் கொண்டே பார்க்க, என்ன டி! திமிரா!.. என வேகமாக போனை எடுத்து நோண்டினாள் சக்தி.
இப்போ எங்கே போறேன்னு எனக்கு தெரியுமே! அந்த fans group வச்சிருக்கயே அதுக்கு தான என வித்யா கூற, ஆமா என திறந்து பார்த்தாள் சக்தி.
அதற்குள் 5000 likes அதனுடன் 1000 hearts கூடவே கருத்துக்கள் என சக்தியின் முகம் இன்னும் பிரகாசமானது.
வித்யா தலையில் அடித்துக் கொண்டாள். “என்ன டி? இப்போ தலையில அடிச்சுக்குற அளவுக்கு என்ன நடந்தது? என சக்தி உதட்டை சுழிக்க, பொம்பள சோக்கு கேக்குதா கோபி என பரிதாபங்களில் சுதாகர் கேட்பது போல…
வித்யா சக்தியை பார்த்து உனக்கு “அஸ்வத்தாமன் சோக்கு கேக்குதாடி? உனக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் இருக்கு? இப்போ பைனல் இயர் படிக்கிற! கூடவே பார்ட் டைம ஜாப்புக்கு வேற போயிட்டு இருக்க. லாஸ்ட் இயர்ல இன்டெர்ன்ஷிப் பண்ணனும். பீஸ் கட்டணும். இத்தனை இருக்கு. இது இல்லாம ஒரு வேலையில புடிச்சு நிலையா உக்காரனும். சம்பாதிக்கணும். ஆனா அதையெல்லாம் அதை பத்தி எல்லாம் யோசிக்கரத விட்டுட்டு போயும் போயும் படத்துல நடிக்கிற ஒருத்தனுக்கு கொடி பிடிச்சிட்டு இருக்குற? உனக்கே அசிங்கமா தெரியலையா?” என்று மாணவாரியாக கேட்டாள்
சக்தி சிரித்தபடி எனக்கு அஸ்வத்தாமன ரொம்ப பிடிக்கும். அதனால பாக்குறேன். இதுல என்ன தப்பு இருக்கு? என்று சக்தி கேட்க..
உனக்கு லைப்ல சீரியஸ்னஸ் தெரியல சக்தி என்று வித்யா அவளருகில் அமர்ந்தாள்.
சக்தி ஒரு பெருமூச்சை விட்டபடி நீ எதுக்காக வேலைக்கு போற?நீ வேலைக்கு போய் என்ன பண்ண போற? என்று கேட்டாள்.
நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு வாழ்க்கையில செட்டில் ஆகுவேன். எங்க அம்மா அப்பாவுக்கு கொடுப்பேன் என்று கூறினாள் வித்யா.
“சரி நான் சம்பாதிச்சு வேலைக்கு போய் நிலையாக உட்கார்ந்து யாருக்கு கொடுக்கணும் யாரை சந்தோஷமா பாத்துக்கணும்? இப்போ யாரு என்ன சந்தோசமா பார்த்துக்கிறா? என்னை பிறந்ததும் நடு ரோட்டில் தூக்கி போட்டுட்டு போனவங்க தானே என்னோட பெத்தவங்க! நான் எதுக்காக இதையெல்லாம் நினைச்சு கவலைப்படணும்?” என்று கேட்டாள் சக்தி.
“ஹே நான் உன் மேலே இருக்க அக்கரையில் சொல்றேன் டி!”
சக்தி சிரித்தபடி “உனக்கு டெடி பியர் ஏன் புடிச்சிருக்கு?” என்று கேட்டாள்.
“இது என்ன கேள்வி? அதுக்கு காரணம் இல்ல. புடிச்சிருக்கு அதை கட்டிப்பிடித்து படுத்துக்கலாம் அது நல்லா மெத்து மெத்துன்னு இருக்கும்” என்று வித்யா கூறினாள்.
“உனக்கு டெடி பியர் மாதிரி எனக்கு அஸ்வத்தாமன். நீ உயிர் இல்லாத அந்த பொம்மை மேல அஃபெக்ஷனோட இருக்க. அதை கட்டிப்பிடித்து தூங்குற. அதுபோல தான் நான் அஸ்வத்தாமனோட படங்கள பாக்குறேன். எனக்கு புடிச்சிருக்கு என்ஜாய் பண்றேன்” அவ்ளோதான் சிம்பிள்.
“இப்படி லாக் பண்ணாத சக்தி. நீ பண்றது சம்டைம் இரிட்டேடிங்கா இருக்கு. நீயே நம்மளோட ரொம்ப பாரு! ஒரு இடம் விடாம அந்த அஸ்வத்தாமனோட போட்டோவ ஒட்டி வச்சிருக்க. பத்தாததுக்கு டயலாக்ஸ் வேற எழுதி வச்சிருக்க. உன்னோட போன்ல அஸ்வத்தாமனோட போட்டோ, உன்னோட பேக்ல அவனோட போட்டோ, அது இல்லாம மூணு நோட்டுக்கு அவனோட படம் மொத்தமா பேஸ்ட் பண்ணி வச்சிருக்க. ஆர்டிகிள்ஸ்ல போட்டோ புடிக்கிற, அதுக்கு காசு செலவு பண்ணி ஆர்ட்டிகல்ஸ் வாங்குற, இந்த அளவுக்கு பைத்தியமா ஏன் இருக்கிற? அதுக்கு என்னோட டெடி பியரே எவ்வளவு பரவா இல்லையே! அந்த அஸ்வத்தாமன் உனக்கு என்ன கொடுக்கப் போறான்? அவனால உனக்கு என்ன வந்தது? செலவு மட்டும் தாண்டி மிச்சம்” என்று சலிப்புடன் கூறினாள் வித்யா.
சக்தி அந்த அறையை சுற்றி பார்த்தவள் இந்த விஷயம் எல்லாம் என்னை சந்தோஷமா வச்சுக்குது அதனால நான் செய்யறேன்.
இது பைத்தியக்காரத்தனம் இனி உன்கிட்ட இத பத்தி நான் பேசவே மாட்டேன் டி என வித்யா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
உன்னோட அக்கறை எனக்கு புரியுது. நீ சொல்றது எனக்கு புரியாம இல்லடி நான் புரிஞ்சுக்கிறேன். ஆனா உனக்காக கவலைப்பட உன்னோட குடும்பம் இருக்கு. நீ அவங்ககிட்ட உன்னோட சந்தோஷங்களை ஷேர் பண்ணிக்குவ. ஆனால் எனக்காக என்னை ஆறுதல் படுத்தவும் என்ன சந்தோஷப்படுத்தனும் யாரும் இல்ல. ஒரு பொம்மை பிடிச்சிட்டு நீ தூங்குற பாரு உனக்கு உன்னோட டெடி பியர் பொம்மை மாதிரி எனக்கு சினிமாவுல வர அஸ்வத்தம்மன் அவ்வளவுதான்.. என்றாள்.
வித்யா முகத்தை திருப்பி கொள்ள, சாரி டி செல்லக் குட்டி.. என தன் தோழியை சமாதானம் செய்ய பின்னால் சுற்றினாள் சக்தி. ஏன் சக்தி இப்படி இருக்கா? அவள் பிறந்ததுமே வேண்டாம் என நினைத்த பெற்றோர் தூக்கி வீசி விட்டு சென்று விட்டார்கள். ஒரு அனாதை இல்லத்தில் எடுத்து வளர்க்கபட்டாள். பதினெட்டு வயது வரை இல்லத்தில் இருந்து படித்தாள். நல்ல மதிப்பெண் எடுத்ததால் பொறியியல் சாப்ட்வேர் என்ஜினியரிங் சேர்ந்து கொண்டாள்.
நல்ல மதிப்பெண் என்பதால் கல்லூரியில் செமஸ்டர் ஃபீஸ் இல்லை. ஆனால் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டும். உறைவிடம் இலவசம் அவளுக்கு மட்டும் ஆனால் உணவுக்கு பணம் தேவை. அவளது நேரம் ஒரு foodie tasty என்ற கடையில் பார்ட் டைம் வேலை செய்கிறாள். வேறு வழி இல்லை. இது தான் அருகில் இருக்கிறது. தூரம் சென்றால் ஹாஸ்டலுக்கு நேரமாக வர முடியாது. அதனால் இந்த வேலை. விடுமுறையில் அஸ்வத்தாமன் படம் வந்து விட்டால் உடனே தியேட்டர் சென்று விடுவாள் தனியாக கூட… அந்த அளவுக்கு அஸ்வத்தாமன் படங்கள் பிடிக்கும். அவனையும் பிடிக்கும். அவளுக்கான சந்தோஷம் அவளுக்கான சின்ன உலகம் அதில் அஸ்வத்தாமன் மதிப்பு மிக்க ஒருவன்.
எதற்கு இப்படி அஸ்வத்தாமன் மீது பைத்தியமாக இருக்கிறாள் சக்தி? இது மட்டுமா காரணம்? அவனை ஒரு சினிமா நடிகனாக பார்த்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனது போஸ்ட் மற்றும் அவனது தொண்டுகள் அனைத்தையும் பார்த்து ஈர்க்கபட்டாள்.
அவன் சம்பாதிக்கும் 50 சதவீத பணத்தை முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றர்கள் என அனைவருக்கும் உதவுகிறான். அதை எங்கேயும் வெளிக்காட்டி கொள்ள மாட்டான். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், மற்றும் மேகசீன்களில் எதோ ஒரு மூலையில் இந்த செய்திகள் வரும். அவனது நேர்கொண்ட பார்வை, அவனது கன்னியதன்மை. என அவனது ஒவ்வொரு குணத்திலும் ஈர்க்கபட்டாள். அவனை வேறு ஒருவனாக பார்த்தவள். தன்னில் ஒருவனாக தனக்குள் ஒருவனாக பார்க்க ஆரம்பித்தாள். இது வரை அப்படி தான் இருக்கிறாள்.
இப்படி அவள் மனதில் மதிப்பு மிக்க ஒருவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இன்னும் தமன்! இன்னும் தமன்! நான் உன்னோட B* என தன்னை தானே கேவலமாக பேசிய படி அவனுடன் கட்டிலில் இளைந்தாள் விதர்சனா.
நான்கு முறை முடித்து விட்டு எழுந்தவன். ம்ம் கிளம்பு என அவள் மேல் இருபது லட்ச ரூபாய் பணத்தை கட்டிலில் போட்டான்.
இன்னும் 24 மணி நேரம் முடியலயே தமன். இன்னும் கொஞ்ச நேரம் என அவன் மேல் மீண்டும் விழுந்தாள் விதர்சனா.
மதுவை ஊற்றி கொண்டே அவளை பார்த்தவன். உன்னை பார்த்தால் எனக்கு பொண்ணு ஃபீலிங் வரவே மாட்டிக்கிது என்றான் தமன்.
அவன் முன் நிர்வாணமாக நின்றவள். எப்டி இருக்கணும்னு சொல்ற? எனக்கென்ன குறை? என கோபத்துடன் வந்து நின்றாள் விதர்சனா.
என்ன குறையா? உன் கிட்ட என்ன நிறை இருக்கு? என இகழ்ச்சியாக உதட்டை வளைத்தவன். பொண்ணை பார்த்ததும் இயற்கை புணர்ச்சி தோன்றனும் அப்டின்னு தொல்காப்பியம் சொல்லுது. உன்னை பார்த்தால்.. என முகத்தை சுளித்தான்.
இரவு முழுவதும் என்னிடம் என்ன தோன்றியது இவனுக்கு மொத்தமாக என்னை அனுபவித்து விட்டு இப்படி சொல்லிக் கொள்கிறான். மானம் கெட்டவன். இவனை எப்படி நினைத்தேன். இருப்பதிலேயே மோசமானவன் இவன் தான். நான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கூட அடுத்த படம் நடிக்க இருக்கேன். என்னோட அழகு என்னன்னு இவன் சர்டிஃபிகேட் கொடுக்க எந்த அவசியமும் இல்லை என நினைத்த படி நின்றாள்.
அவளை அருகில் இழுத்தவன். பொண்ணோட கண்கள் அதை எதுக்கும் ஒப்பிட கூடாது. அவளோட கண்களை தான் எல்லாத்துக்கும் உதாரணமாக சொல்லணும். அப்படி இருக்கும் பெண்ணின் கண்ணுக்கு சொந்தக்காரியா அந்த கண்கள் இருக்கணும்.
அவள் விடும் மூச்சில் மொத்தமா கரைய தோணனும். அந்த உதடுகளுக்கு சாயம் பூசி மெழுகு மாதிரி மின்ன வைக்க தேவையில்லை. இயற்கையாக இருந்தாலும் போதை ஏறனும். என்றவன். இறுதியில் ஒரு பொண்ணோட வியர்வை தான் முக்கிய வாசனை திரவியம். அதுல எந்த வாசனை திரவியமும் சேர்ந்து கண்டாமினேட் ஆகி இருக்க கூடாது. இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இதுல உன் மேலே ஒரு விசயத்தை டெஸ்ட் பண்றேன். உன்னோட வியர்வையில் நாற்றம் அடிக்கல அதுக்கு பதிலா ஆடர் பெர்ஃப்யூம் ஸ்மெல் அடிக்குதே அப்போ உன் வாசனை உனக்கே என நிறுத்தி கொண்டான்.
அவன் பேச்சில் மயங்கியவள். சட்டென சுயம் தெளிந்து அப்படி ஒரு பொண்ணை நீ கண்டு புடிச்சா என் கிட்ட சொல்லு நான் அப்போ ஒத்துக்குறேன். எனக்கு ஸ்ட்ரக்ச்சர் இல்லன்னு என எழுந்தாள் விதர்சனா.
அப்படி ஒரு பொண்ணு இருப்பாளா என்ன? என அஸ்வத்தாமன் படுக்கையில் இருந்து எழுந்தான்.
தொல்காப்பியம் பேசுறான்? பெரிய கவிஞன் கல்ட்டி! கதையில் தான் அந்த பொண்ணு கிடைப்பா! என உடைகளை அணிந்து கொண்டு கிளம்பினாள் விதர்சனா.
அஸ்வத்தாமன் – சக்தி மீட்டிங் வைப்போமா?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
