Home Uncategorizedஎன் போதை தேனே

என் போதை தேனே

by Pradhanya kuzhali

Episode – 45

ஹாரிகாவோட கேஸை வாபஸ் வாங்கறது விசயமா பேச தான் வர சொல்லிருக்காரு ராமச்சந்திரன். அண்ட்  நம்ம தான் பிரஸ் அண்ட் ரங்கன ஏற்பாடு பண்ணோம்ன்னு தெரியாது தானே! என என ஜனார்த்தனன் தன் மகளை பார்த்தார். 

அமலா சிரித்த படி வாய்ப்பே இல்ல டாடி! அதை விட அந்த காட்டு வாசி வீட்டை விட்டு ஓடி போயிட்டாளாம் லோகேஷ் சொன்னாரு! சோ எல்லாமே நமக்கு சாதகமாக தான் நடக்க போகுது. ஹாரிகாவை கட்டி கொடுங்கன்னு அவங்க குடும்பம் மொத்தமும் கெஞ்சனும் என பேசிக் கொண்டே  கிளம்பினார்கள். 

ஜனார்த்தனன், ஹாரிகா, அமலாவின் கைகளில் ஜீஸ்னு என ஒரே காரில் வந்து இறங்கினார்கள். 

டாடி! அந்த மோகித்தை நீங்க வீட்டோடு மாப்பிள்ளையாக கூப்பிடுங்க என அமலா சொல்லி கொடுத்து அழைத்து வந்தாள். அவர்கள் நுழைவு வாய்யிலில் எண்டர் ஆகும் போது ரோஹன் இன்னொரு பக்கம் லாவண்யாவை அழைத்து வந்தான்.

அமலா தன் தந்தையிடம் “பா அந்த ரோஹன் என்னை!” என நடந்த விசயங்களை ஒன்று விடாமல் மறைக்காது அத்தனை விசயத்தையும் கூறினாள். 

ஜனார்த்தனன் பற்களை கடித்த படி பார்த்துக்கிறேன் பிரின்ஸஸ் என சொல்லிய படி மூவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள். 

“என்ன உங்களையும் கூப்பிட்டு இருக்காங்க?” என அமலா லாவண்யாவின் பக்கம் திரும்பி கேட்டாள். 

அப்பா தான் கூப்பிட்டார் முக்கியமான விசயம்ன்னு சொன்னாரு அதான் வந்தேன். இந்த வீட்டு வாசபடிய மிதிக்க கூடாதுன்னு ஒரு வைராக்கியத்தில் இருந்தேன். ஆனால் அப்பா கூப்டும் போது எப்படி வராம இருக்க முடியும் என பெரிய இவள் போல சொல்லிக் கொண்டே அமலாவுடன் சேர்ந்து உள்ளே சென்றாள். 

லாவன் அங்கே பாருங்க அந்த காட்டு வாசி வீட்டில் இருக்கா என அமலா அதிர்ச்சியுடன் கூற…  வெட்டி விடும் விசயமா இருக்கும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு. 

எதுக்கு டாடி கூப்பிட்டீங்க! இனி மரியாதை இல்லாத இடத்துக்கு வர மாட்டேன் நான் என விரைப்புடன் கூறியவள் பார்வை அருவியின் மீது சென்றது. அதற்குள் அங்கு மோஹித் வருவதை பார்த்ததும் அமைதியாக நின்று கொண்டாள். 

சம்மந்தி என ஜனார்த்தனன் அழைக்க, வாங்க என கையெடுத்த ராமசந்திரன் வாங்க என இருக்கையை காட்டினார். மோஹித் தன் அன்னையின் பக்கம் சென்றவன். உங்க பையன்? எங்கே? 

என்ன டா? 

அது தான் லோகேஷ் பத்தி பேசிட்டு இருக்கேன்.ரெண்டு நாளாக ஆள காணோம் வர சொல்லுங்க உடனே! அவன் கிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன் என மோஹித் சொல்ல, சுதா புரியாமல் தன் மகனை பார்த்தார். 

“என்ன பார்வை போங்க மா!” என அதட்டினான். 

அடுத்த அரை மணி நேரத்தில் லோகேஷ், அமலா, ஜனார்த்தனன், ஹாரிகா, லாவண்யா என அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வரதராஜன் வந்து விட்டார். 

ஜனார்த்தனன் மற்றும் லாவண்யா இருவரும் வெற்றி களிப்புடன் பார்த்து கொண்டார்கள். அன்று தன் கழுத்தை பிடித்து மோஹித் தூக்கியதை நினைத்தபடி அமர்ந்திருந்தான் லோகேஷ். 

தேனருவி சமையலறையில் இருந்த படி எட்டி எட்டி பார்த்தாள். 

டேய் எங்கே இருக்க எப்போ வர போற? என மோஹித் கரணுக்கு அழைத்து கேட்க… வந்துட்டேன். இதோ உள்ளே வரேன் என கரண் வந்தான் அவன் பின்னால் தீட்சி வந்து சேர்ந்தாள். 

“சார் பயமா இருக்கு!”  என தீட்சி சொல்ல, என்ன பயம் உனக்கு? நான் இருக்கேன் என மோஹித் தைரிய படுத்தினான். கரண் மற்றும் ரோஹன் இருவரும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்கள் பேசிக் கொண்டே, மோஹித் சுதாவின் அருகில் சென்று அவளை இங்கே கூட்டி வந்து இப்படி உட்கார வையுங்க என கூறினான். 

“எதுக்கு டா!”

உட்கார வையுங்கன்னு சொன்னேன்! என் கிட்ட கேள்வியெல்லாம் கேட்க கூடாது என மோஹித் சொன்னான். டேய் நான் உன்னோட அம்மா டா! 

“மாம் டென்ஷன் பண்ணாம கூட்டிட்டு வாங்க அப்படியே நீங்களும் வந்து உட்காருங்க.”

சுதா நேராக அருவியின் பக்கம் சென்று அவளிடம் கூற வரமாட்டேன் என விடாப்பிடியாக கூறினாள். 

சம்மந்தி என ஜனார்த்தனன் அழைக்க… ராமச்சந்திரன் இன்னும் எவ்ளோ நேரம் மோஹித்? டைம் ஆகுது! சீக்கிரம்… என கூற.. 

இவளை என பற்களை கடித்த மோஹித் நேராக அருவியின் பக்கம் சென்றவன். வா! இப்போ வந்தனா நான் இன்னும் ரெண்டு நாளில் உன்னை உங்க காட்டுக்கு அனுப்பி… டேய் மோஹித் என சுதா அதட்ட சாரி உன்னோட வீட்டுக்கு கூட்டி போவேன் என்றான். 

“என்னால வர முடியாது”

நீ வர! இல்லன்னா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. 

என்ன செய்வீங்க? என அவனை முறைத்து பார்த்தாள். 

உன்னை பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுக்கிறேன் டி! இப்போவே என மோஹித் கூறிக் கொண்டே போனை எடுத்தான். 

அருவி அவனை பார்த்து முறைக்க, சுதாவுக்கு அழுவதா? சிரிப்பதா? என தெரிய வில்லை. என்ன டா நடக்குது இங்கே? என அவர் கேட்க..

வாங்க அம்மா போலாம் என சுதாவுடன் சென்றவள் அவனை திரும்பி பார்த்து, பூச்சாண்டின்னு ஒன்னு இல்லவே இல்ல.. prank பண்றீங்க என சொல்லி விட்டு போய் அமர்ந்தாள். 

மோஹித் போகும் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்தவன். ஒரு பெரு மூச்சை விட்ட படி நேராக மொத்த கூட்டத்துக்கும் முன்னால் வந்தான். 

சாரி ஃபார் தி டிரபில் என சில பேப்பரை எடுத்து அனைவரிடமும் நீட்டினான். ராமசந்திரன் மற்றும் சுதா, ஜனார்த்தனன், அமலா, லோகேஷ் என மூவருக்கும் ஒன்று, லாவண்யா மற்றும் ஹாரிகா இருவருக்கும் ஒன்று. 

மோஹித் அனைவரையும் பார்த்து புன்னகை செய்ய அமலா, ஹாரிகா, ஜனார்த்தனன் மூவரின் முகத்திலும் பீதி கிளம்பியது. எட்சிளை விழுங்கிய படி லோகேஷ் பக்கம் திரும்பினார்கள். 

என்ன டா இது என ராமச்சந்திரன் அதிர்ச்சியுடன் மோஹித்தை பார்த்து கேட்டார். 

எஸ் டாடி உங்க மூத்த பையன் லோகேஷ் ஜுஸ்ன்னுவுக்கு அப்பா இல்ல பயலாஜிக்கள் அப்பா இல்ல. 

என்ன மோஹித் இது? என லோகேஷ் ஆவேசமாக எழுந்தான்..

வெயிட் வெயிட் எதுக்கு இத்தனை கோபம். என் கிட்ட இருந்த DNA ரிப்போர்ட்ட காட்டிட்டேன். ஆனால் போட்டோ proof கூட இருக்கு. என்றவன் அனைவருக்கும் அமலாவின் முன்னால் காதலன் மற்றும் ஜிஸ்னுவின் தந்தையின் படத்தை காட்டினான். 

தீட்சி அனைவரின் முன்னால் காட்டினாள். ரக்ஷன்!! ரக்ஸனா? என அனைவருக்கும் அதிர்ச்சி. 

அன்று தீட்சி அவனிடம் மாட்டி கொண்டு அறைக்குள் ஒளிய சென்ற இடத்தில் அமலா மற்றும் ரக்சன் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள் ஒன்று மற்றும் அந்த அறையில் மொத்தமும் ஜிஸ்னுவின் படங்களாக இருந்தது. 

ஜனார்த்தனன் பற்களை கடித்த படி தீட்சியை பார்த்தார். 

என்ன அமலா இது? அப்புறம் எதுக்கு என் பையன கட்டிக்கிட்ட? என சுதா பொங்கி எழுந்தார். லாவண்யாவுக்கு தன் தம்பியை நினைத்து கவலை அதிகமானது. 

லோகேஷ் அடுத்த நொடி அவ்விடத்தை விட்டு எழுந்து செல்ல வரதராஜன் தன் அத்தை மகனின் அருகில் சென்று விவரங்களை கூறினார் தெளிவாக.. 

அருவி ஒரு வித அதிர்ச்சியில் இருந்தாள். இப்படி எல்லாம் நடக்குமா? என வியப்பும் இருந்தது. 

அண்ட் இதையும் கேளுங்க என இன்னொரு வீடியோ ரங்கன் தான் தலையில் மண்டை கட்டுடன் அனைத்து விசயங்களையும் வீடியோவில் கூறும் காட்சி.  

அதை பார்த்ததும் ஜனார்த்தனன் இன்னும் பதட்டமாகி போனார். ராமசந்திரன் ஆவேசமாக எழுந்தார். அருவி இன்னும் அதிர்ந்து விழித்தாள். அப்போ அன்னிக்கு நம்ம கூட வராததுக்கு காரணம் இது தானா? என இப்பொழுது தெரிந்தது. 

அடுத்த வீடியோ என அன்று ஹாரிகா லேப் டாப் மீது காபியை தள்ளி விட்ட காட்சி ஓடியது. அருவி மயக்கத்தில் தள்ளாடும் போது ரோஹன் அவளை பிடிக்க செல்ல அதன் பின் அவள் நிலைப்படுத்தி கொண்டு சோபாவில அமர்ந்தது என அனைத்தும் ஓடியது. லாவண்யா பயத்துடன் மோஹித் மற்றும் ரோஹன் இருவரையும் பார்த்தாள். அதை விட ராமச்சந்திரன் சுதா இருவரும் தன் மகளை பார்த்தார்கள். 

அதற்கு காரணம் அன்று நடந்த வாக்குவாத வீடியோவை ஹாலில் இருக்கும் கேமராவில் இருந்து எடுத்து ஓட விட்டான் மோஹித். 

அமலா எழுந்து லோகேஷ் அருகில் செல்ல… அவன் பின்னால் நகர்ந்தான். லோகேஷ் கண்களில் விரக்தி ஏமாற்றம் என அனைத்தும் கண்ணுக்குள் இளையோடியது. 

நான் ஏன் ஹாரிகாவை வேணாம்னு சொன்னேன்? அதுக்கு காரணம் சொல்லட்டுமா? என மோஹித் பார்வை அவளின் மீது இருந்தது. 

ஹாரிகா பதட்டத்துடன் விழிக்க..  மட்டமான கதை வேணாம்னு தோணுது. இப்போ எல்லாரும் ஸ்வீட் சாப்பிட வேண்டிய நேரம். ஏன்னா என்னோட அப்பா தாத்தாவாக போரார். 

அனைவரின் பார்வையும் மோஹித் மீது இருக்க, அச்சோ மிஸ்டர் ஜனார்த்தனன் அது என்னால என்னோட பொண்டாட்டி மாசமா இருக்காங்க! என்றவன் அனைவரையும் பார்த்து இங்கே நிக்கிற லோகேஷ், லாவண்யா ல ஆரம்பிச்சு யாருக்கும் என் பொண்டாட்டிய பத்தி பேசுற உரிமையும் இல்ல அதுக்கு உங்களுக்கு தகுதியும் இல்ல.. முதல்ல உங்க வாழ்க்கையை வாழ பாருங்க.. இப்போ எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்து இதெல்லாம் போட்டு காட்டினேன் தெரியுமா? பேசுறதுக்கு அருகதை இருக்கா இல்லையான்னு காட்ட தான்.. I mean உங்களுக்கு.  என் வழியில் நீங்க யாரும் வராமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு இறங்கி தோண்டி துருவி இருக்க மாட்டேன். ஆனால் என்னைக்கு என்னோட பொண்டாட்டி பத்தி பேசி அவளை கஷ்ட படுத்தினீங்களோ அதுக்கு உங்களுக்கு திருப்பி கொடுக்கணும்ல அதுக்கு தான் இதெல்லாம். May be லோகேஷ் உங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம். அதை மறைச்சிட்டு உங்க பொண்ணு இப்படி பேசி இருக்கலாம். என்ற மோஹித் ஒரு பெரு மூச்சுடன் உங்க குடும்ப விசயத்தை பேசி தீர்த்துகோங்க ஜஸ்ட் நான் என்னோட வேலையை பண்ணேன் இனி பாருங்க என கூலாக நகர்ந்தான் மோஹித். 

இப்போ அடுத்த காட்சி என்னவா இருக்கும்? வேற என்ன மோஹித் பின்னாடி அருவி போகனும். அது தானே உலக வழக்கம். 

ஆனால் அப்படி நடக்கல அருவி எழுந்து அவளது அறைக்கு சென்றாள். 

அப்படி என்ன பா பிரச்னை? அவளுக்கு? அதை நாளைக்கு பார்ப்போம். 

அமலா மீது லோகேஷ் கொலை வெறியில் இருக்க இன்னொரு புறம் சுதா லாவண்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 

வருவாள்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.