Home Uncategorizedகண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

கண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

by Pradhanya kuzhali

அத்தியாயம் -19

மான்வி இரு புருவம் தூக்கிய படி அவனை பார்க்க, கண்ணன் அவளின் கையிலிருக்கும் கைக்குட்டையை வாங்கி கொண்டவன். நெற்றியை தேய்த்த படி “நீ டீச்சர்ல்ல அதனால் நியாபாகம் வந்திடுச்சு.” 

“அய்யோ அது அப்படி சொல்ல கூடாது கருவா. நான் சமாளிக்கிறேன் பாரு.” என்ற மான்வி அவனை போல நெஞ்சை நிமிர்த்தி கொண்டு “நான் போலீஸ் அதனாலே எல்லாமே நியாபகம் வச்சுப்பேன்” என கண்ணனை போல பேசி காட்டினாள் மான்வி. 

கண்ணன் வேறு வழியில்லாமல் ஹான் அது தான் என்றவன் அவளின் முகத்தை பார்க்காமல் மலர்! அம்மா வாங்க நேரமாகுது. நான் எனக்கு வேலை இருக்கு என அவசர படுத்தினான். 

மான்வி சிரித்துக் கொண்டே தன் அப்பாவுடன் கிளம்பினாள். இன்னிக்கி இங்கேயே இருந்திட்டு போ! என மகேஸ்வரி அழைக்க, நேரத்தை பார்த்தான். 

கண்ணா வாடா! என வேட்டியை மடித்து கட்டிய படி அழைத்தான் முகில். 

நான் மார்னிங் வரேன் சார் என முத்து கிளம்பி விட்டான். டேய் முகில் இங்கே பாரு இது தான் மான்விக்கு வாங்கின தாலி கொடி இது கொலுசு, அப்புறம் மலருக்கு கூட தோடு வாங்கினேன். என மகனை அமர வைத்து அனைத்தையும் காட்டினார். 

கண்ணன் உடை மாற்ற சென்றவன் மான்வி துடைத்த கர்சீப்பை முகர்ந்து பார்த்த படி அப்படியே நின்றவன் வெடுக்கென முழித்தான். “எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு அவளுக்கு தெரியுமா? என அப்படியே சாயிந்தான் சுவற்றில். ஒண்ணுமே புரியல இவளை புரிஞ்சுக்கவே முடியலையே! ஒரு பக்கம் பிடிக்காத மாதிரி மனசை வேதனை படுத்துறா இன்னொரு பக்கம் இன்ப அவஸ்தை பண்றா ராட்சஸி மாதிரி என அவளின் வாசனையை தேடினான். எப்டி இவள் பக்கத்தில் இருக்கும் போது நான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருப்பேன்? ஒரு வேளை பிடுக்கும்ன்னு சொல்லிருந்தா?”

டேய் என்ன டா பண்ற? ட்ரெஸ் உருவாக்க போயிட்டியா என முகில் வெளியில் இருந்து கத்த, ஹான் வரேன் என கண்ணன் வந்தான். 

முகில் அவனிடம் கிராஸ் கொஸ்டின் ஏக போகமாக கேட்டான். “டேய் உன் பொண்டாட்டிக்கு என்ன நகை போட்டு உன் மாமனார் அனுப்புறாரோ அதை விட ஒரு கிராம் நம்ம பாப்பாவுக்கு அதிகமா போடணும். புரியுதா? நானும் நிறைய வாட்டி எடுத்து சொல்லிட்டேன் பாப்பா என் பேச்சை கேட்க மாட்டிக்கிது அந்த மோகன் நமக்கு தெரியாம பாப்பாவை சந்திச்சு மனசை மாத்திருப்பான் திருட்டு பைய! எனக்கு வேற ஒரே கவலையா இருக்கு”  என புலம்பி தள்ளினான். 

“இப்போ எதுக்கு இத்தனை யோசனை குழப்பத்தில் இருக்க? மான்வி கூட இங்கே புதுசா தான் வர போறா!” என கண்ணன் கூற, “அட நீ வேற எனக்கு உன்னை நினைச்சு தான் கவலை அந்த செவுத்து நக்கி கிட்ட நீ தான் மாட்டிக்கிட்ட. அவளுக்கு என்ன டா! அம்மா ஒரு வெள்ளந்தி அவளை இன்னும் தலையில் தூக்கி வச்சு கொண்டாடும். ஆனால் பாப்பாவை அந்த மல்லிகா அப்படி பார்த்துக்குமா? அதை விட மோகன் வேலைக்கு போயிடுவான். உன்னோட மாமனார் வேலைக்கு போயிடுவார். வீட்ல மல்லிகா இருக்கும் கூடவே இன்னொரு ஆட்டகாரி மைதிலி வந்துட்டா நம்ம பாப்பாவை நினைச்சு பாரு? இன்னும் காலேஜ் முடிய எட்டு மாசம் இருக்கு.”

அந்த அளவுக்கு நீ யோசிக்க வேணாம். மோகன் ஒர்க் ஃப்ரம் ஹோம் அதனாலே பிரச்னை இல்ல. என்றான் கண்ணன். 

இல்ல டா கண்ணா எனக்கு மனசு கேட்கல. நம்ம பாப்பாவுக்கு தனியா வீடு போற மாதிரி எல்லாமே வாங்கி கொடுக்கணும். 

டேய் என்ன பேசுற என கண்ணன் பொங்க, இல்ல கண்ணா அந்த மேல் மாடி வீடு அழகா சிம்பிளா இருக்கு. அங்கே பாப்பாவுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி போட்டுடலாம் என்றான் முகில்.

கண்ணனுக்கு சரியென பட்டது. சரி நீ பார்த்து வை என கண்ணன் கூற, ஆளுக்கு பாதி பாதி பணம் என்றான் முகில். ஏன் டா? என இருவரும் அடித்துக் கொண்டார்கள் தங்கைக்கு சீர் செய்ய.. 

அடுத்து எப்போ வருவ? என சுரேஷ் மயங்கிய படி அவளின் மேல் விழ, நீ எங்கே கூப்பிட்டாலும் வருவேன். என்றாள் அந்த அழகி. 

பைத்தியம் பிடிக்க வைக்கிற டி! ஆனால் நீ என்னோட மான்வி அளவுக்கு இல்ல என சொல்லி கொண்டே வட்ட வட்டமாக புகை விட்டவன். அங்கிருந்து நண்பனுடன் கிளம்பினான் சுரேஷ். 

அடுத்த நாள் சுரேஷ் சொன்னதை போலவே அனைத்து கிருஷ்ணன் மற்றும் தீணா இருவரும் ஏற்பாடு செய்தார்கள். 

கல்யாணம் யாரு டா சாயங்காலம் பண்ணுவா? என தீணா கேட்க, சுரேஷ் சிரித்த படி அது தான் சரியான நேரம் எல்லாத்துக்கும் என்றான் சுரேஷ். 

என்ன சுரேசு பயபடுறயா? என கிருஷ்ணா கேட்க, அய்யோ எனக்கென்ன டா பயம். என் மாமன் தான் அவளை ஸ்கூலில் கொண்டு வந்து விடுறான். அதான் பள்ளி கூடத்தில் இருந்து அவ்ளோ ஈசியா தூக்க முடியாது இயல்பா நடக்கற மாதிரி இருக்கணும் அதுக்கு தான் சாயங்காலம் பண்ணிட்டு அவளை தூக்கிட்டு நேராக கொடைக்கானல் போயி ஹனி மூன் முடிச்சிட்டு தான் வருவேன். என்றான் சுரேஷ். 

சரி டா அப்போ நான் அய்யர் கிட்ட சொல்லிடுறேன் என நண்பர்கள் மூவரும் தயாரானார்கள். 

வழக்கம் போல மான்வி பள்ளியை முடித்து விட்டு வெளியே வந்தாள். 

மானு என காரில் இருந்து இறங்கினான் சுரேஷ். 

இந்த நாயா? இந்த மொன்ன நாய் எதுக்கு இங்கே வந்திருக்கு என நினைத்தவள். ஹே ஹாய் சுரேஷ்? என கையை ஆட்டினாள். 

நான் உன் மேலே கோபமாக இருக்கேன். 

என்னாச்சு? சுரஷுக்கு? என மான்வி அவனை பார்த்தாள். 

“அந்த கருவாயன கட்டிக்க போறயாமே! உனக்கு அவன் கொஞ்சம் கூட பொருத்தமே இல்ல. அப்பா உன் மேலே ரொம்ப வருத்தத்தில் இருக்கார். அத்தையும் கூட தான். நீ என்னை மறந்துட்டல்ல” என்றான் சுரேஷ். 

நான் என்ன பண்ண முடியும்? அந்த மோகன் விடாப்பிடியாக கருவா தங்கச்சிய தான் கட்டிப்பேன்னு ஒத்த காலில் நிக்கிறான். கருவா பைய ஒன்னும் வெட்டி கிடையாதே! DSP இந்த மாவட்டமே அவன் கண்ட்ரோல். அதான் கருவாயனா இருந்தாலும் சரின்னு ஒத்துக்கிட்டேன். என்றாள் பவ்யாமாக கண்களை சிமட்டி கொண்டே.. 

DSP என்னும் வார்த்தைகள் மண்டையில் ஓடியது சுரேஷ்க்கு. 

சரி சரி சுரேஷ் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடு. அப்பா பத்திரிக்கை வைப்பாங்க. என்றாள் மான்வி. 

வந்துட்டா போச்சு. சரி வா இங்கேயே நிக்கிற உன்னை வீட்ல விடுறேன் என அவன் அழைக்க, இல்ல சுரேசு!.. என மான்வி தட்டி கழித்தாள். 

அட வா மானு நீயும் நானும் அப்படியா பழகினோம்? சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தோம். உன்னை பப்பி சேமா நான் பார்த்திருக்கேன். என்றான் சுரேஷ். 

மான்வி அவனை உற்று பார்க்க, அது சின்ன வயசுல என கூறினான் சுரேஷ். 

சரி சுரேஷ் இதோ பேக் வாங்கிக்க நான் வரேன் என லஞ்ச் பேக் நீட்டினாள். 

ம்ம் வா என அவன் அவளை பார்க்க மெல்ல நடந்தவள் உள்ளே காரில் அமர போக பிரண்ட் சீட்டில் தீனா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்க, கிருஷ்ணா அவனுக்கு அருகில் இருந்தான். ஹாய் சிஸ்டர் என இருவரும் கை ஆட்டினார்கள். 

ஹாய் அண்ணாஸ் என்றவள். ஹச்.. ஹக் என தும்பி கொண்டே ஹச் ஒரு நிமிசம் சுரேஷ் என பையை சீட்டில் வைத்தவள். சுரேஷ் உன்னோட கர்சீப் கொடு என கேட்க.. இந்தா மான்வி என புன்னகையுடன் கொடுத்தான். 

ஹச் ஹச் என தும்பி கொண்டே பின்னால் சென்றவள் ஒரு சில நொடியில் திரும்பி வந்தாள். டேய் அவளே வந்துட்டா விசயம் தெரியுமா? சொல்லிட்டியா? என தீனா கேட்க, வாய மூடுங்க டா கேட்ற போகுது அங்கே கோவிலுக்கு போயி தான் சொல்லணும். கீழே பின்னாடி பக்கம் பிள்ளையார் சன்னதி கிட்ட தான் கட்டிக்கணும் இவளை நம்ப முடியாது கத்தி கூச்சல் கூட போடுவா என்றான் சுரேஷ். 

நீ கவலையே படாத! இன்னிக்கி கோவிலில் அவ்ளோ கூட்டம் இருக்காது. என கூறியவர்கள். என்ன டா பண்றா என கேட்டார்கள். 

மான்வி என சுரேஷ் வண்டியை விட்டு இறங்க முயற்சி செய்ய, இதோ வந்துட்டேன் என காரில் ஏறினாள். 

“கர்சீப் எங்கே?”

அதுவா சுரேசு சளி சிந்திட்டு தூக்கி போட்டுட்டேன் டா! ஏன் டா உனக்கு வேணுமா? அய்யோ என உதட்டை பிதுக்கினாள் மான்வி. 

தீனா மற்றும் கிருஷ்ணன் இருவரும் சிரித்தார்கள். இந்த புள்ளை சரியான லூசு போல. பரவாயில்லை கல்யாணத்தில் எந்த பிரச்னையும் வராது என நினைத்துக் கொண்டு காரை நேராக கோவிலுக்கு விட்டார்கள். 

என்ன சுரேஷ் வீட்டில் விடுறேன்னு சொன்ன? வண்டி வேற பக்கம் போகுது? எங்கே போறோம்? என மான்வி கேட்க, அதுவா இன்னிக்கி ரொம்ப நல்ல நாள் அதனால் சாமி கும்பிட்டுட்டு போலாம். உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே? என கேட்டான்.

அப்படியா பொங்கல் கிடைக்கும் தான? 

ம்ம் கிடைக்கும் என தன் நண்பர்களை பார்த்தான். அவர்கள் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார்கள். 

ம்ம் இறங்கு மான்வி. 

ஹான் என மான்வி காரில் இருந்து இறங்கி கொண்டு பையை மாட்டினாள். 

“ப்ச் அதை காருக்குள்ள வச்சிட்டு வா மானு!”

“இல்ல பேக்ல டிஷ்யூ இருக்கு தும்மல் வரும். என்னன்னு தெரியல இன்னிக்கி நிறைய வருது தும்மல்.”

அப்படியா என்றவன் நண்பர்களை பார்க்க, வண்டியில் இருந்து கல்யாண மாலை இரண்டையும் எடுத்துக் கொண்டு வந்தான் கிருஷ்ணா. 

மான்வி எதுவும் பேசாமல் நிற்க, சுரேஸ் அவளின் அருகில் வந்தவன். உன் கிட்ட விசயம் மான்வி. 

என்ன சுரேஷ்? 

எனக்கு பொண்டாட்டி நீ தான்னு சின்ன வயசில இருந்து அப்பா அம்மா அத்தை எல்லாரும் சொல்லி உன் மேலே எனக்கு அவ்ளோ ஆசை. அதனாலே உன்னை என்னால அந்த கருவாயனுக்கு விட்டு கொடுத்திட்டு விரல் சூப்ப முடியாது. நீ அழகு சிலை அவனுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்ல. எனக்கும் தெரியும் உனக்கு அவனை பிடிக்காதுன்னு. அதனாலே பிடிக்காத கல்யாணம் எதுக்கு? அதான் உன்னை கட்டிக்க போறேன். உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி இல்லைன்னாலும் என கண்கள் க்ரூரமாக பதிந்தது. 

சுரேஷ் தும்மல் வந்திடுச்சு? என்றாள் மான்வி புன்னகையுடன்.. 

சுரேஷ்…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.