Home Uncategorizedகண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

கண்கள் உன்னை தேடுது மானே (தேனே)

by Pradhanya kuzhali

அத்தியாயம் -27

மான்வி மிகவும் சாதாரணமாக ஒவ்வொரு போசையும் இயல்பாக கொடுக்க, ஒவ்வொரு க்ளிக்குகளுக்கும் தடுமாறியது என்னவோ கார்வண்ணன் தான். 

அவ்ளோ தானா? எப்போ முடியும் என போட்டோ கிராபரிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இருங்க சார் முக்கியமான ஷாட் இருக்கு அதை முடிச்சிட்டு போங்க என லொக்கேஷன் பார்த்து லைட்டிங் செட் செய்து கொண்டிருந்தார்கள். 

“ரொம்ப சாதாரணமா இருக்க?” என கண்ணன் கேட்க, என்ன பண்ணனும்? என இரு புருவம் தூக்கினாள் மான்வி. 

ஒன்னும் இல்ல என்று உஃப் உஃப என பெரு மூச்சை எடுத்து விட்டான். உடல்களின் உள்ளே என்னென்னவோ செய்கிறது. மான்வியின் உதட்டில் புன்னகை படர்ந்தது. அதை மறைத்துக் கொண்டு அவனை பாவமாக பார்த்தாள். 

“ஓகே ரெடி வாங்க மேம் இது தான் போஸ்” என  போட்டோ கிராபர் காட்ட, இதுவா? இது! அது! முடியாது கஷ்டம். என குதித்தான் கண்ணன். 

என்ன சார் நீங்க? அங்கே பாருங்க மோகன் சாரும் அவங்க மிசஸ்சும் எப்டி போஸ் கொடுக்குறாங்க. நீங்க எந்த பிக் காட்டினாலும் டிரை பண்ண மாட்டிகிறீங்க? Outing ஷூட்டும்  வேணாம்னு சொல்லிட்டீங்க. அவங்க 50 போஸ் டிரை பண்டாங்க. உங்களுக்கு கப்பில் பிக் கம்மியா இருக்கு. இது தான் சார் நாளைக்கு ஆல்பம் வீடியோ எடுத்து பார்க்கும் போது குட் மெமரியா இருக்கும் என விளக்கி நொந்து போனான் அந்த பாவப்பட்ட போட்டோகார தம்பி. 

மிஸ்டர் நீங்க போங்க சார் பண்ணுவாரு. என கண்ணனை பார்த்தாள் மான்வி. கண்ணன் அமைதியாக இருக்க, என் மானத்தை வாங்காத டா! வா போலாம் என அழைக்க, “உன்.. உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே?”

“ஏன் உனக்கு பிரச்சனையா? என்ன?” என மான்வி கேட்க, கண்ணன் வேகமாக, வா வா நமக்காக வெயிட் பன்றாரு போவோம் என சமாளித்து சென்றான். உதடுகளை ஈர படுத்திக் கொண்டு கைகள் நடுங்க அவளை பார்த்தான். 

ஒரு முத்தம் கன்னத்தில கொடு டி வெள்ளச்சி அப்டின்னு சின்ன வயசில கேட்டால் மாட்டேன்னு ஓடுவா! சரி நான் கொடுக்கிறேன் வாடி என கண்ணன் அழைத்தால் முகில், பொன்மலர், அம்மாச்சி, அப்பா என அனைவருக்கும் கொடுப்பாள். தனக்கு கொடுக்க மாட்டாள். அது 5 வயது நினைவுகள். இப்பொழுது இருவரும் பெரியவர்களாகி இப்பொழுது கன்ன முத்தத்தில் இருந்து அடுத்த கட்டமாக உதட்டு முத்தம். ம்ம் என உள்ளுக்குள் பரவசம் கொட்டி கிடந்தது. 

சொதப்ப கூடாது என தோன்றியது. சார் மேடம் இடுப்பில் புடிங்க, கண்ணன் அதிர்ச்சியுடன் பார்க்க, கைய வை டா கருவா! எனக்கு பசிக்குது சாப்பிட போகலாம். கால் வலிக்குது. 

“உனக்கு ஓகேவா?”

“ஃபோட்டோவுக்காக மட்டும் ஓகே!” என மான்வி கூற, மெல்ல இடையை பிடித்தவன். மெல்லின இடையை… 

கேசுவலா கிஸ் பண்ணுங்க, என உத்தரவு வந்தது. 

இதழும் இதழும் இணைந்து விட ஒரு இன்ச் இடைவெளி, இதயம் பன்மடங்கு துடித்தது. சிறுத்த இடையில் கொஞ்சம் அழுத்தம் பரவ, அவளின் இமை குடைகள் தானாக மூடிக் கொள்ள, கண்ணா கொடுத்திடு என உள்ளுக்குள் பட்சி பரபரக்க, அவனது தம்பியும் கூறினான். 

உதட்டை உரசிவிட்டு சட்டென நகர்ந்தான் கண்ணன். 

“சார் என்ன பண்றீங்க? கொடுங்க சார் அவங்களை அக்யூஸ்ட் மாதிரியும் ஹாஸ்பிடல் டாக்டர் மாதிரி பிகேவ் பண்றீங்க”

கார்வண்ணன் கண்களில் கோபம் தெறிக்க திரும்பி பார்க்க, “டேய் அவரு போலீஸ் டா கொஞ்சம் அடக்கி வாசி!” என லைட்டிங் காரன் சிக்னல் கொடுத்தான். 

மான்வி அவனை முறைத்து பார்த்தாள். “ஹே பயமா இருக்கு டி!”.

“எனக்கு தான் உன்னை பக்கத்தில் வச்சுட்டு அவமானமா இருக்கு. வெட்கமா இருக்கு. ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுக்க தெரியல. நீ எல்லாம் எப்டி திருடன புடிப்ப? படத்தில் வர மாதிரி எல்லாமே முடிஞ்சு கடைசியாக தான் போலீஸ் வருவாங்க போல. நீ கழுத்தை கொஞ்சம் சாய்த்து பக்கத்தில் வா கிஸ் பண்ற மாதிரி இருக்கும். இந்த angle ல லிப் டச் ஆகுற போல இருக்கும். வா பண்ணலாம்” என அழைத்தாள் மான்வி. 

ஓகே ரெடியா சார்! நீங்க பண்ணுங்க நாங்க மேனேஜ் பண்ணி எடுத்துக்கிறோம் என அவன் கூற, முகில் அழைத்தான். டேய் என்ன பண்ற அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க நீங்க என்ன டா பண்றீங்க? என போன் கால் வர, ஜஸ்ட் அஞ்சு நிமிசம் வரேன் வை என கட் செய்து விட்டு பொசிசனில் நின்றான். 

மான்வி அவனை அலட்சியமாக பார்த்து கொண்டு ஒட்டியும் உரசாமல் நின்று கொண்டிருக்க, ஹக் என மெல்ல துள்ளினாள். அழுத்தமாக இடையை பிடித்திருந்தன கண்ணனின் கைகள், மான்வி பதட்டத்தில் பார்க்க, கண்ணன் ஆளுமையான பார்வையில் மெல்ல நெருங்கி உதட்டில் குனிந்து கீழ் உதட்டை கவ்வி பிடித்தான். 

மான்வி சொக்கி போய் ஒரு நொடி கண்ணை மூடினாள். உதடுகள் இரண்டும் ஒரு சில நொடிகள் ஒட்டிக் கொண்டிருக்க, சூப்பர் அப்படியே இருங்க, மேம் நீங்க சாரோட தலைக்கு பின்னால் கை கொடுங்க என சத்தம் வருவதற்கு முன்னால் அவளின் கை தானாகவே சென்று விட கண்ணன் அவளின் கண்ணையும் வனப்பையும் மொத்தமாக பார்வையில் பருகிய படி கவ்வ ஆரம்பித்தான். மேல் உதடு கீழ் உதடு என மெல்ல சுற்றம் மறந்து கொடுக்க ஆரம்பித்தான். அவழும் கழுத்தை பிடித்து ஒத்துழைக்க அவளின் மார்பு அவன் மேல் உரசிய படி நின்றது. 

ஹே போதும் டா என லைட் மேன் கூற வர, ப்கச் கம்முன்னு இரு டா! காதல் ஜோடி மாதிரி இருக்காங்க பிரிக்க வேணாம். அதை கவர் பண்ணு. இதுல ஆபாசம் இல்ல தன்னையே மறந்து இருக்காங்க ரொமான்டிக்கா இருக்கு வீடியோ எடு என்றவன் வேகமாக போனை எடுத்து இதை வீடியோ லே இன்க்லுட் பண்ண போறேன். என அவர்களின் ஏகாந்த நிலையை அழகாக எடுத்தான். 

ஹா என லைட் மேன் கண்ணனை பார்த்து அந்த விரப்பு ஆபிசர் கருப்பு இல்ல டா! அதெல்லாம் மச்சம் போல. அது தான் அவருக்கு இப்படி ஒரு பொண்ணு. எனக்கு எப்போ கல்யாணம் ஆக? என பெரு மூச்சுடன் பார்த்தான். 

மூச்சு வாங்க அவனை தள்ளி விட்டாள் மான்வி. கண்ணனுக்கு தன்னிலைக்கு வரவே சிறிது நேரம் பிடித்தது. அய்யயோ முத்தம் கொடுத்துட்டேன். போச்சு டா இதுக்கு தான் அந்த நாயிங்க கிட்ட இப்படி எல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். என திரும்பி பார்த்தான். அங்கு யாரும் இல்லை. எங்கே போயிட்டாங்க! அய்யோ இவள் வேற பார்க்கிறா? என உள்ளம் நடுங்கியது காவல் துறைக்கு. கடவுளே என்னை காப்பாத்தி விடு என சொல்லிக் கொண்டவன் அருகில் வந்து மான்வி அது வந்து ந.. நான்..  என தயங்கினான். 

கண்ணாஆஆ! என உரத்த குரல், முகில் தான் நின்று கொண்டிருந்தான். மான்வி அவனை முறைத்து விட்டு நடக்க, வாங்க டா எல்லாரும் உன்னை கேட்கிறாங்க என கூறிய படி பார்த்தான். 

கண்ணன் தவிப்புடன் மான்வியின் பின்னால் சென்றான். “ஹே சாரி டி! எதோ ஒரு வேகத்தில் கொடுத்துட்டேன்.” என நாய் குட்டி போல சென்றான். 

மான்வி எதுவும் பேசாமல் மேலே ஏறினாள். சரி  பொறுமையா சமாதானம் பண்ணிப்போம். எப்படி கிஸ் பண்ணோம்? என யோசித்தான். 

மகேஸ்வரி சத்தமாக “முகில் இவங்க ரெண்டு பேருக்கு மாலை கொண்டு வாடா!” என கத்தினார். 

இதோ போறேன் என முகில் நகர அதற்குள் பந்தியில் இருந்து அழைப்பு வந்தது. கோபி தான் அழைத்திருந்தார். 

“மாமா சொல்லுங்க”

“நேம் போர்ட் வேணாம் பேனர் வைங்கன்னு சொன்னேனே? மான்வி – மாப்ளை இருக்க பேனர கட்ட சொன்னேனே? அந்த ரெண்டு பேனரும் கட்டி இருக்கா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க மாப்ளை” என கூறினார். 

இப்பொழுது தான் நேம் போர்ட் தள்ளி வைத்து விட்டு பேனர் கட்டிக் கொண்டிருந்தார்கள். 

டேய் மாலை ரூம் உள்ளே இருக்கு பாரு போயி எடுத்து போட்டுகிட்டு நில்லு என போனில் சொல்லி விட்டு சென்றான். 

சார் சார் குட் ஈவ்னிங் சார் என மாணவ படை வந்து சேர்ந்தது. முகில் அவர்களை அழைத்து கரோக்கிய பிளே பண்ணுங்க டா! எல்லாரும் பேச்சு சத்தம் தான் கேட்குது என வேலையை கொடுத்து விட்டு சென்றான். 

டேய் சாரோட அண்ணன் போலீஸ் அப்போ சாமி படத்துல இருந்து போட்டு விடு என ஒருவன் கூற, டேய் விஜய் பாட்டு போடு டேய் அஜித் பாட்டு போடு என சண்டை அதிகமாக டேய் போங்க டா நான் போடுறேன் என ஒருவள் வந்து போட்டு விட்டாள். கண்ணழகா என 3 படத்தில் இருந்து போட்டு விட்டாள். 

இதழும் இதழும் இணையட்டுமே வரிகளில் இருவரும் நிதர்சனம் மறந்து இறந்த காலம் சென்று வந்தார்கள். முத்தமிட்ட நேரம் அப்படி இருந்தது. 

கண்ணா மாலை போடணும் டா! என மகேஷ் கூற, அவனுடன் அவளும் கீழே இறங்கினாள்.

முகிலன் வெளியே நின்று ஈவன்ட்டிடம் பேசி கொண்டு பேனர் லொக்கேஷன் சொல்லி கொண்டிருக்க, சரவணன் மற்றும் நந்திதா இருவரும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களிடம் தலையசைத்து விட்டு திரும்ப வரவேற்பு கார்வண்ணன் – மான்வி என பேனரில் இருந்தது. 

பாவம் இதை நந்திதா பார்க்க வில்லை. 

ஹே அவன் உன் மேலே கோபமா இருக்கான். நீ கல்யாணத்துக்கு வரல. போய் திட்டு வாங்கு. என சரவணன் கூற, நான் எவ்வளவு முயற்சி பண்ணேன் தெரியுமா கல்யாணத்துக்கு வர? அவன் கூட கல்யாணத்தில் இருக்கணும்னு ரொம்ப ஆசை பட்டேன். என்னோட ஹேன்ட் பேக் மொத்தமா காணாம போச்சு. வந்ததும் ஆபிஸில் ரிப்போர்ட் பண்ணிட்டு கேசை முடிச்சிட்டு வந்தேன். என்னோட கஷ்டம் உனக்கு எங்க தெரியும். என அவள் உள்ளே நுழைந்தாள். 

சரி சரி எங்கே ஆளை காணோம்? என சரவணன் நேராக மகேஸ்வரி பக்கம் சென்று பேசினான். அவரை பார்த்ததும் நந்திதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். 

கண்ணன் மாலையை எடுத்து கொண்டு அவளுக்காக காத்திருக்க, அதற்குள் மான்வி ரெஸ்ட் ரூம் சென்று விட்டாள். சொல்ல போனால் நான் தான் ரெஸ்ட் ரூம் போகனும். முறைக்கிறா என்னை..  என மாலையை பிடித்துக் கொண்டு நின்றான். 

“ஹே இன்னும் என்ன டி பண்ற?” என இங்கே கண்ணன் கதவை தட்ட நினைத்தான் ஆனால் எதுவும் கேட்க வில்லை. எதுக்கு வம்பு. 

கல்யானத்துக்கு உன்னை எதிர் பார்த்தேன் மா? நீ வரவே இல்ல எங்களுக்கு வருத்தம். 

அதான் இப்போ வந்துட்டேன்ல ஆண்ட்டி அவன் எங்கே? என நந்திதா கேட்க, மாலை எடுக்க போனான் ரூம்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன் இரு மா பார்த்திட்டு வரேன்.  என மகேஷ் நகர, நானே பார்த்துக்கிறேன் ஆன்ட்டி உங்களுக்கு வேலை இருக்குமே என சொல்ல அதற்குள் அவர் உறவினர்களை உபசரிக்க சென்று விட்டார். 

நந்திதா அறையை நோக்கி நடந்தாள். அவனை எப்டி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும். என மேடையை பார்த்தாள். அங்கே மோகன் மற்றும் பொன்மலர் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.  கண்ணா என அழைத்த படி  உள்ளே நுழைந்தாள். 

“மேடம் கிட்ட நான் பேசுறதா இல்ல கல்யாணத்துக்கு ஏன் வரல? உன்னை மிஸ் பண்ணேன்.” 

நந்திதா சற்றும் தாமதிக்காமல் அவனருகில் நெருங்கி இதுக்கு மேலே என்னால காத்திருக்க முடியாது. உன் சிஸ்டர் கல்யாணம் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணேன் டா! I Love You.. என இறுக்கி அணைத்துக் கொண்டவள் எக்கி உதட்டில் முத்தமிட பாயிந்தாள். 

அந்த நேரம் ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தாள் மான்வி. 

கண்ணன்..? 

நந்திதா…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.