அத்தியாயம் -28
கண்ணனை கோட் ஷூட்டில் பார்த்ததும் நந்திதாவின் உள்ளம் பறப்பது போல ஆனது. ‘எம்புட்டு அழகா இருக்கான்’ நானே என் கண்ணன் மேலே கண்ணு வைக்கிறேனே என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள். அவனது முகத்தை பார்க்க..
முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். “எதுக்கு முறைக்கிற? என்னாச்சு?” என நந்திதா கேட்க, “நீ ஏன் கல்யாணத்துக்கு வரல? எத்தனை மெசேஜ் பண்ணிருப்பேன்? எத்தனை கால்ஸ்? எதுவும் அட்டன் பண்ணல. நீ என் பக்கத்தில் இருக்கணும்னு நினைச்சேன். ஏன் வரல” என கண்ணன் கேள்விகளாக தொடுத்து கொண்டிருந்தான்.
அவனது ஒவ்வொரு பேச்சுகளும் உள்ளுக்குள் சிலிர்ப்பயையும் அவன் மீதான எண்ணங்களை இன்னும் அதிக படுத்த, சற்றும் தாமத்திக்காமல் அருகில் சென்றவள். நெஞ்சு கூடு ஏறி இறங்க, “கண்ணா இத்தனை நாள் நான் என்னை நானே கஷ்டபடுத்தி கட்டு படுத்திக்கிட்டு இருந்தேன். இதுக்கும் மேலே என்னால முடியாது.”
“என்னாச்சு?” என கண்ணன் பேச வர.. “இரு நான் பேசி முடிக்கணும்” என்றவள். “நான் மலர் கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணேன். இனி எந்த தயக்கமும் இல்ல. ந.. நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாது”
“நந்திதா!” என கண்ணன் அதிர்ச்சியுடன் பார்க்க, லவ் யூ! என வேகமாக பாய்ந்து அணைத்துக் கொண்டாள். “நந்திதா! என்ன பண்ற நீ?” என மாலையை அருகில் போட்டவன். ஹே நந்திதா என அவன் அடுத்த வார்த்தையை சொல்லி முடிக்க வில்லை. தாவிக் கொண்டு முத்தமிட பாயிந்தாள்.
அவளின் வாயை பொத்தியவன். கோபத்துடன் அவளை விலக்கினான். “கண்ணா! என்ன நீ?” என நந்திதா பேச வர, “ஹே ஜஸ்ட் ஸ்டாப் இட் யூ புல்ஷிட்! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!” என கூறி முடித்தான் கண்ணன்.
என்ன விளையாட்டா? எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? நீ கருப்பா இருக்கேன்னு என்னை வேணாம்னு சொல்றயா? உன்னோட IPS தகுதிக்கும் உன்னோட குணத்துக்கும் என நந்திதா பேச வந்தாள்.
“ஹே லூசு பிராங்க் பண்றதா இருந்தால் நிருத்திக்க எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு பத்திரிக்கை கல்யாண போட்டோ எல்லாமே செண்ட் பண்ணேனே நீ பார்க்கலயா?” விளையாட்டு பண்ணாத நந்திதா. இங்கே பாரு என வேகமாக போனை எடுத்து காட்டினான்.
“பாரு என் மாமா பொண்ணு மான்விக்கும் எனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு. நேத்து தான் ஆச்சு.” என நீட்டினான்.
நந்திதாவின் கண்களில் சடசடவென கண்ணீர் சரிய.. மூச்சு விட சிரமபட்டாள்.
அதற்குள் ரெஸ்ட் ரூம் கதவு திறந்தது. மான்வி வெளியே வந்தாள்.
நந்திதாவின் கண்கள் மான்வியை பார்த்தது பொறாமையிலும் இயலாமையிலும் உள்ளுக்குள் வேதனையுடன் துடித்தாள். நல்ல வேளை லேட்டா வந்திட்டா இல்லன்னா நந்திதா பேசினது எல்லாமே கேட்டிருந்தால் என்ன செய்வேன் நான்? என கண்ணனுக்கு பயமும் பதற்றமும் உண்டாக, மான்வி! வா டைம் ஆச்சு இந்தா உன்னோட மாலை.. ம்ம் சொல்ல மறந்துட்டேன். இது என்னோட பிரென்ட் நந்திதா! சப் கலெக்டர் என கூறினான்.
மான்வி அவளை பார்த்தாள். நந்திதா மான்வி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. “நீங்க மேரேஜ் வந்திருக்கலாம்!” என்றாள் மான்வி.
அது தான் மிஸ் பண்டெனே? என துக்கத்தை அடக்கி கொண்டு பேசினாள் நந்திதா. மான்வி மெலிதான புன்னகையை உதிர்த்து விட்டு “அதனாலே என்ன? இப்போ வந்திட்டீங்களே!” என்றாள் மான்வி.
‘என்ன பேசுறா இவள்? அய்யோ நந்திதா இவளை முறைக்கிரா?’ என மண்டை உருண்டது கண்ணனுக்கு.
மான் குட்டி இன்னும் என்ன பண்ற மா? என கேட்ட படி மகேஸ்வரி உள்ளே வந்தார். இதோ அத்தை வரேன் என அந்த மாலையில் இருந்து ஒன்றை எடுத்துக் கொண்டவள் போட்ட படி கண்ணனை ஒரு பொருட்டாக மதிக்காமல் மகேஸ்வரியின் பின்னால் சென்றாள்.
நந்திதா வேகமாக அவ்விடத்தை விட்டு செல்ல போக, கண்ணன் அவளின் கையை பிடித்தான். “ஏன் டா? இப்படி பண்ண? அன்னிக்கு பேசும் போது நீ சீக்கிரம் சொல்லு வெயிட் பண்றேன்னு சொன்னியே? அதெல்லாம் பொய்யா? எதுக்கு என்னை ஏமாத்தின?” என வேக மூச்சுடன் நெஞ்சில் குத்தி தள்ளி விட்டாள்.
“சரவணன் உன்னை அக்கடமியில் ஜாயின் பண்ணதிலிருந்து லவ் பண்ணிட்டு இருக்கான். சோ என்னைக்குமே உன்னை நான் என்னோட பிரென்ட்டா தான் பார்த்தேன். நீ வந்ததும் சரவணன் ப்ரொபோஸ் பண்றேன்னு சொன்னான். அப்போ இன்னும் அவன் பண்ணலயா? நீ அவனை லவ் பண்றேன்னு நினைச்சேன் நந்திதா. ஆனால் நீ!.. உன்னை நான் எந்த இடத்தில் சஞ்சல பட வச்சேன்னு தெரியல. எனக்கு உன் மேலே அப்படி ஒரு எண்ணம் இல்ல.” என்றான் தீர்க்கமாக..
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அதனுடன் சேர்ந்து கோபமும் ஏமாற்றமும் அதிகமானது. எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு சென்று விட்டாள்.
டேய் இன்னும் என்ன டா பண்ற? என முகிலன் வந்து பார்த்தான். இதோ வரேன் என மாலையை போட்டுக் கொண்டு பின்னால் சென்றான் கண்ணன். மைதிலியின் கணவன் சுபாஷ் வந்திருந்தான். தந்தையை பார்த்ததும் யாத்ரா தாவிக் கொண்டு சென்றான். மான்வி அவனை பார்த்து கையசைக்க.. மாமனாரிடம் பேசி விட்டு மான்வியின் முன் வந்தான்.
“அவள் வரலயா?” என மான்வி கேட்க.. அத்தை கூட இருக்காள் சொன்னா கேட்க மாட்டிக்கிறா? என்றவன். “நகைய செக் பண்ணீங்களா?” என கேட்டான் சுபாஷ்.
“அம்மா வந்து குடுத்துட்டாங்க மாம்ஸ்” என மான்வி சொல்ல, எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. நீ மாமா கிட்ட சொல்லி நகைய ஒரு தரம் செக் பண்ண சொல்லு மான்வி. எங்க அப்பாவும் அந்த சுரேஷ் நாயும் ஒன்னு. எங்க அம்மா அதுக்கு மேலே என தீவிரமாக கூறினான் சுபாஷ்.
அதை விடுங்க மாம்ஸ் என மான்வி பேச வர, கண்ணன் மேடையில் ஏறினான். “மாப்பிள்ளை வரார்.” என சுபாஷ் கண்ணனை பார்த்தான்.
“மாம்ஸ் சாப்பிட்டு போய் அவள் கிட்ட சொல்லு. என்னோட கல்யாணம் எப்டி இருந்ததன்னு” என மான்வி கூற அவளை சிரித்துக் கொண்டே பார்த்தான் சுபாஷ்.
கண்ணன் அவளுடன் ஒட்டி நின்றான். காங்கிராட்ஸ் என கையை நீட்டினான் சுபாஷ். தேங்க்ஸ் மாம்ஸ் என கையை பிடித்தாள் மான்வி.
மாம்ஸ்! என்ற வார்த்தை கண்ணனுக்கு பிடிக்க வில்லை. ‘நான் கருவா இவன் மாம்ஸ்!’ என மனதுக்குள் ஓடியது.
உங்களுக்கும் என சுபாஷ் கை நீட்ட.. கைகளை குலுக்கினான் கண்ணன். சுபாஷ் அவளிடம் முனுமுனுத்துக் கொண்டே பேசியவன் சிரித்து விட்டு கிளம்பினான்.
மான்வியின் கல்லூரி பட்டாளங்கள் அனைத்தும் வந்தது. சிரித்த முகத்துடன் ஒரே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினாள். கண்ணனுக்கு மனதில் எதோ நெருடலாகவே இருந்தது. ஆயிரம் முறை அருகில் இருப்பவளை பார்த்து விட்டான். இயல்பிலும் இயல்பு வெகு இயல்பாக இருக்கிறாள். ஆனால் தன்னிடம் பேச்சு குறைந்து விட்டது போல ஒரு உணர்வு திட்டுவதற்காக, சீண்டி பார்க்க, சேட்டை செய்ய என தொந்தரவு செய்பவள் இப்பொழுது தன்னை தவிர்ப்பது பச்சையாக தெரிகிறது. அவள் அனைவரையும் அறிமுக படுத்தினால் கண்ணன் அவர்களிடம் பேசுகிறான். கண்ணன் அவனது வட்டங்களை அறிமுக படுத்தினால் பேசுகிறாள். அவ்வளவே!..
இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் அவங்க சாப்பிடல. பொண்ணு மாப்பிள்ளை சாப்பிடட்டும் கால் வலிக்கும். என மகேஸ்வரி 10.00 மணிக்கு.
மது, விக்ரம், பிரபு ,கீர்த்தனா என நால்வரும் மான்விக்காக காத்திருக்க, கூட்டமும் ஓரளவு குறைந்திருந்தது. மோகன், பொன்மலர், கண்ணன் அதன் பிறகு மான்வி என அமர்ந்திருக்க அவளை தொடர்ந்து நட்பு வட்டங்கள். ஒரே கும்மாளம் தான் கிண்டல் கேலியுடன் மான்வி அவளது குழுவில் ஐக்கியம் ஆகி விட்டாள்.
சாப்பிட்ட படி அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன். ஃபோட்டோ கிராபர் வந்து தம்பதிகளை ஊட்டி விட சொல்லி படங்களை எடுக்க, அவளது நுனி விரல் கூட படாமல் நேர்த்தியாக ஊட்டி விட்டாள் மான்வி.
மோகன் பொன்மலரை பொறுத்த வரையில் வரவேற்பு நல்ல படியாக முடிந்தது. சார் ரெடியா என போட்டோகாரர் அவனது குழுக்களுடன் வந்து நிற்க, “மோகா என்னால முடியாது ரொம்ப டையர்டா இருக்கு.” என மான்வி எழுந்தாள்.
மலரும் சோர்வுடன் பார்க்க, வேணாம் இன்னொரு நாள் பார்க்கலாம். என தட்டி கழித்தார்கள்.
அப்போ ஃபேமிலி போட்டோ மட்டும் ஒன்னு எடுத்துக்கலாம். அப்புறம் வீட்டுக்கு கிளம்பலாமா கா? என கோபி வந்தார்.
மான்வி நேராக விக்ரமிடம் வந்தவள். என்ன பண்ணுவியோ தெரியாது. நீ தான் உன்னோட காரில் ட்ராப் பண்ணனும். என கூறி விட்டு மது பக்கம் திரும்பியவள் ஏற்ப்பாடு பண்ண சொல்லு என தன் அப்பா இருக்கும் திசைக்கு வந்தாள்.
என்னாச்சு? அவள் முகம் சரி இல்லையே என விக்ரம் கேட்க.. “எனக்கும் ஒன்னும் புரியல டா! சரி காரை டெக்கர் பண்ணி எடுத்திட்டு வா!” என அனுப்பினாள் மது.
கண்ணன் முத்துவுக்கு அழைத்தவன் ஜீப் ரெடியா நாங்க வர போறோம். என்றான். ஓகே சார் ரெடி என மறு முனையில் இருந்து பதில் வந்தது.
மொத்த குடும்பத்துடன் இரண்டு போட்டோ, மற்றும் ஜோடிகள் மட்டும் போட்டோ என எடுத்து முடித்தார்கள்.
மான்வி குட்டி கண்ணனை கொஞ்சி கொண்டே வந்தாள். கீழே விக்ரமின் கார் தயாராக இருக்க, கோபி சிரித்துக் கொண்டே மாப்பிள்ளை உங்களை அழைச்சிட்டு போக விக்ரம் தம்பி கார் கொண்டு வந்திடுச்சு என்றார்.
யார் விக்ரம்? என கண்ணன் கேட்க.. அண்ணா என்னோட ஹஸ்பண்ட் என்றாள் மது. “நான் ஜீப்ப வர சொன்னேனே!”
நான் விக்ரம் காரில் தான் வருவேன். என மான்வி போய் ஏறி கொண்டாள்.
உங்க ரெண்டு பேருக்காக தான ரெடி பண்ணி எடுத்திட்டு வந்திருக்காங்க போடா! என மகேஸ்வரி சொல்ல, கண்ணன் பெரு மூச்சுடன் முத்துவிடம் வேண்டாம் என வைத்தான்.
மகேஸ்வரி மற்றும் கார்முகிலன் இருவரும் முன்னால் கிளம்பி வீட்டுக்கு வந்திருந்தார்கள். மான்வியை விட்டு வழியனுப்பி விட்டு கிளம்பினார்கள். ஆரத்தி எடுக்க பட்டது.
“அத்தை எந்த ரூம் எனக்கு?”
மகேஸ்வரி சிரித்தபடி கண்ணன் ரூம் தான் இந்த பக்கம் இருக்கு பொண்ணு வா! என அழைத்து சென்றவர். காட்டிட.. சரிங்க அத்தை என நகைகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தாள்.
“ட்ரெஸ் எல்லாம் அடுக்க வேணாம் மான்வி. எனக்கு கொடுத்த வீட்டுக்கு நாளைக்கு கிளம்பிடுவோம்.”என கூறி கொண்டே வந்தான் கண்ணன்.
அவள் நகைகளை கலட்டுவதில் கவனம் செலுத்தினாள். “கோபமா இருக்க போல நான் வேணும்னு முத்தம் கொடுக்கல” என்றான் கண்ணன். அவளின் முகத்தை தவிப்புடன் பார்த்த படி..
வேகமாக எழுந்தவள் அவ்விடத்தை விட்டு நகர.. ப்ச் பேசு டி என கைகளை பிடித்தான்.
பளார் என்று ஒரு அரை..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
