🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
3. கலியுக ராவணா!!
கலியுக ராவணா
📖 கலியுக ராவணா · Chapter 3 of 42

கலியுக ராவணா!!

  • 19 Nov 2025
  • 1,404 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

Episode -2 

உன்னிடம் அவர் பேசணுமாம்? யசோதா நீட்டிய போனைப் பார்த்தாள் பார்வதி, கண்களைத் துடைத்தபடி.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

மறுமுனையில், அமர்நீதி தன் முதலாளி நாற்காலியில் அதிகாரத் தோரணையில் அமர்ந்தபடி, தன் புருவம் சுருங்க, போனை காதில் வைத்திருந்தான்.

“வாங்கி பேசு!” என்று அதட்டி, அவள் கையில் திணித்தாள் யசோதா.

வெறுப்புடன் போனை வாங்கி காதில் வைத்தாள் பார்வதி.

“போனை வாங்க இத்தனை நேரமா? மேடம்க்கு?” அமரின் குரலில் அப்பட்டமான எள்ளலும், தூள் பறக்கும் அதிகாரமும் கலந்திருந்தது.

“அது… அது வந்து…” தயங்கிப் பேசினாள் பார்வதி.

“இத்தனை அதிகாரம் இருக்கவ பணத்தை எடுத்து வச்சிட்டு கிளம்பலாம்ல. நான் ஒரு வார்த்தை கேட்க மாட்டேன்.”

“இல்… இல்ல…” என மறுத்தாள் அந்தப் பெண்.

“இனி யசோதா வந்து உன்னை கூப்பிட்ற மாதிரி வச்சுக்காத, புரியுதா?”

யசோதாவை ஏறிட்டுப் பார்த்தாள் பார்வதி. பொண்டாட்டி மேலே அவ்ளோ அக்கறை இருந்தால், எதுக்கு டா என்னை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருக்க வெட்கம் கெட்டவனே! – மனதில் முனகிக் கொள்ளத்தான் முடிந்தது.

“போய் சாப்பிடு! அண்ட் இன்னிக்கி ஈவினிங் ரெடியா இரு, நம்ம வெளியே போறோம்” என்று முடித்துவிட்டு போனை வைத்தான் அமர்.

யசோதாவின் முகத்தைப் பார்க்காமல், போனை அவளிடம் நீட்டினாள் பார்வதி.

“ஒரு நிமிஷம் பேசலாமா?”

“சொல்லுங்க,” என நிமிர்ந்து பார்த்தாள்.

“வீட்டை சுத்தி கேமரா இருக்கு. நீங்க என்ன பண்றீங்கன்னு அவரு பார்த்திட்டு இருப்பார். சோ, அவரோட கட்டளைகளை மதிச்சு நடங்க,” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் யசோதா.

இது வேறயா? கடுப்புடன் வீட்டைச் சுற்றிப் பார்த்த பார்வதியின் கண்களில் நீர் முட்டிக் கொண்டது. தும்பைப் பூ போலச் சாதம் இருந்தாலும், அது தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

மாலை, கம்பீரமாக அமர்நீதி வந்து சேர்ந்தான். யசோதாவும் மகன் அஜய்யுடன் தயாராக இருந்தாள். காரைத் திறந்து விட்டு அவர்களை அழைத்துச் சென்றான். ஒரு மணி நேரத்தில் இருவரும் திரும்பி வந்தார்கள்.

“ரெடியா?” என்று கேட்டபடி அமர் அறைக்குள் நுழைய…

அதே உடையுடன் நின்று கொண்டிருந்தாள் பார்வதி. சட்டென முகம் இருண்டது அமருக்கு. பற்களைக் கடித்தபடி முறைத்துப் பார்த்தான்.

“சாரி! எனக்குத் தெரியாது, நீங்க என்னைக் கூட்டிட்டுப் போவீங்கன்னு? அதான் இப்போ உங்க மனைவி கூட போயிட்டு வந்தீங்களே! என்னையும் மறந்திருப்பீங்கண்ணு நான்…” எனத் திக்கினாள்.

அவளை லேசர் விழிகளால் பார்த்தவன், தாடியைத் தேய்த்துக் கொண்டே கேட்டான், “இன்னிக்கு உனக்கு நார்மல் டேஸ் தான். நீ பீரியட்ஸ் இல்ல, சரி தானே?” – மொத்தமாக உடைத்தான் அவளது ‘திட்டத்தை’.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

பார்வதியின் முகத்தில் வியர்வை முத்து முத்தாகத் துளிர்த்தது.

“நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல!!” – ஒவ்வொரு அடியாக முன்வைத்து அவள் பக்கம் நெருங்கினான் அமர். ஆறடி உயரக் காற்று போலக் கம்பீரமாய் நிற்கும் அவனது உருவம், பார்வதிக்கு உள்ளுக்குள் உதறலைத் தந்தது, பயப்பந்து உருண்டது.

நான்கு அடிகள்… இன்னும் இரண்டு அடிகள்… இதோ வந்துவிட்டான் அருகில்.

“ஆமா,” என உதடுகள் தந்தியடிக்கக் கூறி முடித்தாள் பார்வதி.

அவளின் மோவாயை அழுத்தமாகப் பற்றினான். இதயம் படபடக்க வேகமாக கண்களை மூடினாள், கண்களில் நீர் கசிந்தது.

“எதுக்கு பொய் சொன்ன?” அமரின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

“அது… அது வந்து…” பார்வதி தயங்க,

“ஓ… என்கிட்டயிருந்து தப்பிக்கணும்னு மேடம் திட்டம் போட்டு வச்சிருக்கீங்களா என்ன?” அவனது கருநீல நிற விழிகள் சுருங்கி விரிந்தது.

“அய்யோ! சத்யமா இல்ல… அது… அது வந்து எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. என்… என்னோட வாழ்க்கை…” ஏதோ சொல்ல வந்த பார்வதி, அவனைப் பார்த்துப் பயந்து அமைதியாகி விட்டாள்.

“அப்டியா? மூணு நாள் டைம் வேணுமா? அப்போ நாலாவது நாள் நீயே ரெடியா இருப்ப அப்படித்தானே?” என்று சொல்லி கொண்டே அவளது மூக்குடன் மூக்கை உரசினான்.

கடவுளே!! நொந்து கொண்டே நின்றாள் பார்வதி.

உதட்டுடன் உதட்டை உரசியவன், அவளைப் பார்த்து மர்மப் புன்னகை செய்தபடி, “உனக்கு அஞ்சு நிமிஷம் டைம், வெளியே வர அதுக்குள்ள… இல்லன்னா…!” அமர் திரும்பிப் பார்க்க…

“இல்… இல்ல நான் வந்துடுவேன்!” என்று மூச்சு வாங்கினாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அவனுடன் காரில் இருந்தாள் பார்வதி.

எங்கே போகிறோம் எனக் கேட்கவா முடியும்? அப்படியே கேட்டாலும் அவன் தன்னிடம் சொல்லி விடுவானா என்ன? – என்னும் ரீதியில் அமைந்திருந்தாள்.

அமரும் பார்வதியும் சென்றது ஒரு பெரிய துணிக்கடைக்கு.

“இங்கே எதுக்கு வந்திருக்கோம்?” பார்வதி கேட்க…

“சாந்தி முகூர்த்தத்துக்கு துணி எடுக்க,” என்றான் அமர்.

அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்டாள். “தப்பா சொல்லிட்டேன். இது வேற விஷயத்துக்கு,” என்று அவன் சொன்ன வார்த்தையை, தன் சென்சாருக்கேற்ப திருத்தி முடித்தான்.

ஏனடா கேட்டோம் என்னும் நிலையில் இருந்தாள் பார்வதி. அவன் முன்னால் நடக்க, அவளோ பின்னால் வந்தாள் பவ்யமாக.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“சின்னவர் வந்திருக்கார்! சின்ன முதலாளி வந்திருக்கார்,” என்று அங்கே பணியாளர்கள் கிசுகிசுத்த வார்த்தைகள் பார்வதியின் காதில் விழத்தான் செய்தது. சின்ன முதலாளியா? என மனதுக்குள் முணுமுணுத்தாள்.

நேராகப் பெண்கள் உடைகள் பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றவன், மேலாடை முதல் உள்ளாடை வரை எடுத்து வைத்தான்.

பார்வதிக்கு இந்த இடத்தில் இருந்து எங்காவது ஓடி விடலாமா என்று திட்டம் போட்டது. அதை விடத் தன்னையே மிகவும் கேவலமாக உணர்ந்தாள்.

“என்னை விட்டு எதுக்கு தள்ளி நிக்கிற?” என்று அவளின் கையைப் பிடித்து அருகில் நிற்க வைத்துக்கொண்டான். அவன் பார்வை குறுகுறுவென மொய்த்தது. பார்வதியின் தலை நன்றாகக் குனிந்திருந்தது. காரணம், அவன் எடுத்துக்கொண்டிருப்பது உள்ளாடைகள்.

“எந்த கலர் சார்?” என்று பணிப்பெண் கேட்க,

“கருப்பு,” என்றான் அமர்.

“மேடம் என்ன அளவு?” எனப் பணிப்பெண் கேட்க,

முன்னால் இருக்கும் அளவுகளில் ஒரு அளவைப் பணிப்பெண் பக்கம் நகர்த்தி வைத்தவன், “இது சரியா இருக்கும். இதே அளவுல எல்லாமே எடுத்து வச்சிடுங்க,” என்றுவிட்டு முன்னால் நடந்தான்.

பணிப்பெண்ணுக்கே கன்னம் சிவந்து போனது. ஆனால், பார்வதிக்குக் கன்னத்துக்குப் பதில் கண்கள் சிவந்தது. இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறான் என உள்ளுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது. உடை அத்தனையும் வாங்கியாகி விட்டது.

இருவரும் காரில் ஏறினார்கள். சீராகச் சென்று கொண்டிருந்தது பயணம்.

“இதை எதிர்பார்த்திருக்க மாட்ட, சரி தானே?” என்று பிடரி முடியை வருடிவிட்டபடி அருகில் இருப்பவளைப் பார்த்தான் அமர்.

பார்வதியிடம் மௌனம் மட்டுமே!

அன்று ஒரு நாள், ஊட்டியில் நல்ல மழை. அனைத்து இடங்களிலும் சேறும் சகதியுமாக இருக்க, பிங்க் சுடிதாரில் துணிக்கடைக்குச் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு வளைவில் எதிர்பாராதவிதமாக அமரின் கார் திரும்பும்போது, பார்வதியின் மேல் சேறு சகதி அடித்து மொத்த பிங்க் சுடிதாரும் நாசமானது. அருகில் இருக்கும் ஒரு கல்லை எடுத்தவள், கோபத்துடன் கார் மேல் வீசினாள்.

அந்த விரிசல் ஓட்டையை இன்னும் அமர் சரிசெய்யவே இல்லை. அதே காரில்தான் இருவரும் கடைக்குச் சென்றார்கள். இப்போழ்துதான் அந்த விரிசலைப் பார்க்கிறாள். எதிரில் கார் ஓட்டிக் கொண்டிருப்பவனையும் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற?” அமர் கேட்க…

எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே தலையைக் குனிந்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். பார்வதி வேகமாக அறைக்கு விரைந்தாள்.

அமர் அவளுக்குப் பின் நுழைந்தவன், கையைப் பிடித்துச் சுவற்றில் ஒட்ட வைத்து, அவளின் உதட்டைக் கவ்வினான்.

“பார்வதி…?”

தொடரும்…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 2 comments

  1. Parvathiya valu kattayama kuttidu vanthurukan .aana amar virumpithan avala kuttidu vanthurukan .. Avan natanthukuratha parthale theriyuthu. Parvathiya love pannitha ipdi kuttidu vanthurukan confirm 👍😍😍❤️❤️
    Story super sis..pls daily update pannitinga ok 👍.

Share your thoughts

error: Content is protected !!