Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளின் இடையை கட்டி கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சர்வா!

"ரூம் சர்வீஸ்" என அறையின் கதவு தட்டபட அதனுடன் லேண்ட் லைன் போன் விடாமல் அலறி கொண்டிருக்க.. ப்ச் என உச்சி கொட்டிய படி கண்களை மெதுவாக திறந்தான்.

தனக்கு எதிரில் இருந்த பெண்ணை பார்த்ததும் திரும்பி கொண்டவன். சட்டென எழுந்து அமர்ந்தான். அப்படியே தன்னையும் பார்த்து கொண்டான். ஒட்டு துணி கூட இல்லை.. அதை விட அந்த படுக்கையில் இரத்த கசிவு ஒட்டி கொண்டிருக்க.. எதிரில் இருக்கும் பெண்ணை பார்த்தான்.

அவளிடமிருந்து எழும் சமயத்தில் முனகல் சத்தம்.. சிணுங்கல் சத்தம். போதும் கூசுது.. தள்ளி போ!! நான் எங்கே இருக்கேன்!! விட்ரா!! அய்யோ தொடாதே!! என பிதற்றிய படி உளறினாள் அந்த பெண். முக்கிய குறிப்பு அவளின் உடலிலும் ஒட்டு துணி இல்லை. ஆனால் அவளை பார்க்கும் போது உள்ளுக்குள் எதுவோ செய்ய வேகமாக பாத் ரூம் சென்று விட்டிருந்தான் சர்வா.

குளிர்ந்த நீர் தலையில் கொட்டி கொண்டிருக்க.. How it is possible? என தன்னை தானே கேட்டு கொண்டது. ஆஸ்திரேலிய நெருப்பு கோழி!! ம்ம் அப்படி தான் இருப்பான் சர்வா!! ஆறடி காற்று. இரவு கான்ஃப்ரன்சில் உணவை சாப்பிட்டு விட்டு புறப்பட்டான். ஆனால் எப்படி இந்த அறைக்கு வந்தோம் என துளி கூட யோசனை இல்லை. நினைவும் இல்லை. சட்டென பொறி தட்ட இவள் யாரு? நம்ம ரூம்ல இவள் எப்படி? என ஆயிரம் கேள்விகள் தோன்ற.. குளிப்பதில் கவனம் செலுத்தினான்.

இரவில் நடந்த விசயங்களை கஷ்ட பட்டு நிலை படுத்தி குளிப்பதில் கவனம் செலுத்தினான். ஆனால் எண்ணம் முழுவதும் அவள் மேல்!! கண்களை மூடினால் மங்கலாக தோன்றியது காட்சிகள். சர்வா அவனது கை விரல்களை பார்த்தான்.

இங்கே படுக்கையில் கிடப்பவள் நிலை. தான் ஒருத்தனிடம் கற்பை இழந்த விட்டோம் என தெரியாமல் உறக்கம்.

உறக்கமா? அது உறக்கம் அல்ல சோர்வு. இரவு நடந்த காட்சிகளின் விளைவு. முரட்டு உதடுகள் அவளின் மென் உதட்டை கவ்வி கொண்டு விடிய விடிய சிறையிட்டு வைத்திருந்தது. பாவம் பெண்ணவளுக்கு தெரியவில்லை.

மீண்டும் ரூம் சர்வீஸ் கதவை தட்ட.. சட்டென விழித்தாள் சகுந்தலா தேவி.

நான் எங்கே இருக்கேன்? இது என்னோட ரூம் போல தெரியலயே? உடம்பு ஏன் இப்படி அடிச்சு போட்ட மாதிரி வலிக்குது என சுற்றிலும் பார்த்தாள். அப்படியே தன் கழுத்துக்கு கீழ் பார்த்தவள் அரண்டு விட்டாள். கைகள் கிடு கிடுவென நடுங்கியது. என்னாச்சு எனக்கு? உடலில் ஏகப்பட்ட வலி. கண்ணாடியை பார்த்தாள். எந்த வித தழும்பும் இல்லை ஒவ்வாமை தொற்றும் வரவில்லை. ஆனால் ஆனால் நான் நான் எனது என கண்களில் நீர் வழிந்தது. உடல்கள் ஒரு நிமிடம் உதிரி எடுத்தது. வேகமாக அங்கு சிதறி கிடக்கும் உடையை பொறுக்கி போட்டு கொண்டாள். அவள் அறையில் இருந்து வெளியேற முயற்சி செய்யவும் சர்வா பாத்ரூமிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

ஹே நில்லு டிஈஈஈ! என உயிரை உறைய வைக்கும் குரல்!!

எட்ச்சிலை கூட்டி விழுங்கியவள் ஒரு வித பயத்துடன் திரும்பி பார்த்தாள். தலையில் இருந்து நீர் சொட்டி கொண்டிருக்க.. கண்கள் இரண்டும் சிவந்தபடி அவனது பார்வை கூறு போடும் நோக்கில் அவளை பார்த்து கொண்டிருக்க.. சகுவின் உள்ளே ஒரு வித பயம் பரவிட..

இது ஒரு ஆக்சிடன்ட் நான் வேணும்னு பண்ணல என்றவள் சட்டென கதவை திறந்து கொண்டு ஓடி விட்டாள்.

யூ ப்ளடி இடியட்!! ஓடாத நில்லு என கத்தியபடி கதவை திறந்த சர்வா அப்பொழுது தான் தனது உடையை பார்த்தான்.

ப்ச்ச பிடிக்கிறேன் டி!! கையில் மாட்டு!! என வாய்க்குள் முனகியவன் உடனே தனது நண்பனுக்கு அழைத்தான்.

ஹலோ சொல்லு டா கான்பரன்ஸ் எப்படி போச்சு? என ஆதி சோர்வுடன் கேட்க..

"மண்ணாங்கட்டி!! இங்கே ஒரு பிரச்னை ஆகி போச்சு!"

என்ன சொல்ற? என்னடா பிரச்னை? என சர்வா கேட்க..

"ஒருத்தி என் கிட்ட அத்து மீறி நடந்துட்டு போயிட்டா?"

"என்ன டா சொல்ற? உன்னை அடிச்சிட்டாளா?"

"ஜஸ்ட் ஷட் அப் அண்ட் லிசன் என நெற்றியை தேய்த்தபடி விவரத்தை கூறினான் சர்வா"

டேய் சாதிச்சிட்ட மச்சான்!! நீ சாதிச்சுட்ட? அனுஷா மேலே வராத இந்த மேட்டர். வேற ஒரு பொண்ணு மேல வந்து எல்லாமே முடிஞ்சிடுச்சு. அப்போ நீ இம்பொடன்ட் இல்ல டா என உற்சாகமாக கூறினான் ஆதி.

நேர்ல வந்து உன்னை பார்த்துக்கிறேன் என சொல்லிய படி போனை கட் செய்தான் சர்வா.

சகு இன்னும் நீ வீட்டுக்கே வரல? எங்கே இருக்க நீ? என தாய் மாமன் பிரகாஷ் அழைத்தார்.

மாமா அது வந்து!! என குரல் கமறியது.

என்னாச்சு சகு? பதில் சொல்லு உன்னோட குரல் சரி இல்லையே நீ எங்கே இருக்க பொண்ணு? என பிரகாஷ் மீண்டும் கேட்க..

இல் இல்ல மாமா நான் நல்லாருக்கேன். கான்பரன்ஸ் போனேன். அதான் வர முடியல. நைட்டு ரொம்ப லேட் ஆகிடுச்சு அப்படியே டூட்டிக்கி வந்துட்டேன். நான் சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன். நீங்க எதையும் நினைக்காம ஆபிஸ் போங்க.

சாமி சாப்பாடு கண்ணு? நான் வேணும்னா சாந்தினி கிட்ட கொடுத்து அனுப்பவா? என கேட்டார்.

வேணாம் மாமா!! நான் இங்கே கேன்டீன்ல சாப்பிட்டேன். என்றாள் சகுந்தலா.

"சரி பொண்ணு ஒன்னும் பிரச்னை இல்லல்ல"

இல்ல மாமா என கூறியவள். இரண்டு வார்த்தை பேசி விட்டு போனை வைத்தாள். பிரகாஷ் குடும்பம் தான் அவளை வளர்த்து கொண்டிருக்கிறது. பிரகாஷின் மனைவி உமாவுக்கு சுத்தமாக இவளை பிடிக்காது. அதற்கு காரணம் இவளுக்கு இருக்கும் ஒவ்வாமை நோய். அதனால் ஒன்றும் சும்மா விட்டு விடவில்லை. சகுந்தலாவின் சம்பள பணம் ஏறும் ATM கார்ட் உமாவிடம் தான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சகுந்தலாவின் தந்தை தேவநாதன் வருடத்துக்கு ஒரு முறை பணம் அனுப்பி வைப்பார். அவளை தீண்ட தகாத ஜந்து போல ஒதுக்கி வைத்திருக்கிறார். அதை விட பிரகாஷ் தன் மகன் சரவணனுக்கு அவளை மனம் முடித்து வைத்தால் மகனின் நிலை என்ன? என நினைத்தவர் அவனை ஹாஸ்டலில் தங்க வைத்திருக்கிறார்.

சகுந்தலா இங்கு இருக்க காரணம் என்ன? அவளின் அன்னை லட்சுமி மிகப்பெரிய மருத்துவர். தந்தை தேவநாதன் பெட்ரோல் பங்க் உரிமையாளராக இருந்தார். சகுந்தலா பிறந்ததும் நன்றாக தான் இருந்தாள். நான்கு வயதுக்கு மேல் அவளுக்கு ஒவ்வாமை கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான செலவில் தேவநாதன் பெட்ரோல் பங்கை இழந்து விட்டார்.

லட்சுமி எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பயனில்லை. தேவ நாதனுக்கு சகுந்தளாவின் மீது உள்ள பிடிப்பு போய்விட.. வீட்டில் சண்டை முற்றி போனது. இது இப்படியே போனால் சரி வராது என லட்சுமியின் அம்மா தாயம்மாள் குழந்தையை தூக்கி கொண்டு தன் மகன் பிரகாஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.

தேவனாதனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சகுந்தலா லட்சுமியின் அருகில் இருந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் சொல்லி விட... இலட்சுமியை மொத்தமாக சகுந்தலாவிடம் இருந்து பிரித்து விட்டார். சங்குந்தலாவுக்கு சூரியா என தம்பி இருக்கிறான். அவனை இது வரை அவள் போட்டோவில் தான் பார்த்திருக்கிறாள். தாயம்மாள் இருந்த வரை அனைத்தும் நின்றாக தான் போனது. 7ம் வகுப்பு அவள் பெரிய மனுஷி ஆவி ஒரு மாதத்தில் தாயம்மாள் இயற்கை எயித சகுந்தலா தீண்ட தகாத பெண்ணாகி போனாள்.

இது அனைத்தையும் பிரகாசுக்கு தெரியாமல் இது வரை செய்து கொண்டிருக்கிறாள் உமா. பிரகாஷ் மற்றும் உமா தம்பதிக்கு சரவணன், சாந்தினி என இரண்டு பிள்ளைகள். சரவணன் பொறியியல் முடித்து விட்டு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். சாந்தினி பயிற்சி மருத்துவராக ஹர்ஷவர்த்தன் ஹாஸ்பிடலில் பணி புரிகிறாள். அதே ஹாஸ்பிடலில் தான் சகுந்தலா செவிலி பெண்ணாக இருக்கிறாள்.

சகுந்தலா ட்ரெசிங் ரூமில் ஒரு மூலையில் தலை சாய்த்து தன் வாழ்க்கையை எண்ணி நொந்து கொண்டிருக்க.. அந்த நேரம் பார்த்து அவளின் போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அவள் ஏன் செவிலியாக இருக்கிறாள்?

போன் செய்தது யார்?

தொடரும்..
 
Top