Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
நான் என்ன செய்தேன்? எதற்கு முகத்தை இப்படி வைத்து கொண்டு இருக்கிறான்? என நினைத்தபடி பார்த்தவளுக்கு வியர்வை துளிகள் முத்து முத்தாக வியர்த்தது. அவளின் பக்கம் படிப்படியாக காரை அருகில் கொண்டு சென்றான். சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க, சட்டென என்ன நினைத்தானோ! வேகமாக முறுக்கி கொண்டு கிளப்பி விட்டான்.

வேகமாக செல்லும் காரின் பின் பக்கத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சகுந்தலா.

"ஹே சகு!" என்று பின்னால் இருந்து ஒரு குரல்.

ஆதி தான் வந்து கொண்டிருந்தான். அவன் வருவதை சர்வேஷ் காரில் இருக்கும் போதே கண்டு கொண்டான். அதனால் தான் வேகமாக சென்று விட்டிருந்தான்.

டாக்டர் என அழைத்தபடி நின்றாள்.

வா உன்னை ஹாஸ்டலில் விடுறேன் என அழைத்தான்.

அவள் தயக்கத்துடன் பார்க்க, சரி ஓகே பாய் wha ஆதி நகர..

வரேன் என அவனுடன் சேர்ந்து கொண்டாள்.

ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக ஓட்டினான் காரை..

என்னாச்சு டாக்டர்க்கு? என சகுந்தலா கேட்க..

என்னை நம்பிக்கை இல்லாத பார்வை பார்த்திட்டு என்னாச்சு அப்டின்னு கேள்வி வேற கேட்கிறயா? என்றான் முகத்தை தூக்கி வைத்து கொண்டே..

சகுந்தலா அமைதியாக இருக்க...

பதில் சொல்லு சகு? பிரெண்ட் ஷிப்க்கு முன்னாடி நம்பிக்கை வேணும் என ஆதி கூற..

சகுந்தலா அவனை பார்த்தபடி "நீங்க என்னை பிக் அப் பண்ண இடம் நம்ம ஹாஸ்பிடல் பக்கத்தில் தான். அப்படி இருக்கும் போது அங்கே உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு யாரும் பார்த்து பிரச்னை ஆகிட்டா என்ன பண்றது? நம்ம ஃபிரெண்ட்ஸ் தான். நான் நூறு சதவீதம் உங்க மேலே நம்பிக்கை வச்சிருக்கேன். ஆனால் என் கூட பழகுறதால உங்களுக்கு எந்த பிரச்னையும் வர கூடாதுனு நினைச்சேன். ஏன்னா நீங்க டாக்டர் நான் நர்ஸ். ரெண்டு டாக்டர் சேர்ந்து போகும் போது தப்பா பார்க்க மாட்டாங்க. ஆனால் நர்ஸ ஒரு டாக்டர் பிக் அப் பண்ணா தப்பா பேசுவாங்க" என்றாள்.

ஆதி சிரித்து கொண்டே என்னோட நல்லதை பத்தி யோசிக்கற உங்களை நான் நிஜமாவே பாராட்டுறேன். நம்ம ரெண்டு பேர் மனசுல எதுவுமே இலல்லங்கும் போது யாரு எது பேசினால் நமக்கு என்ன சகு. நீ இதையெல்லாம் நினைச்சு ஓவரா திங்க் பண்ண வேணாம். ஜஸ்ட் ரிலாக்ஸ் என்றான்.

சகுந்தலா அதற்கு மேல் எதுவும் பேச விரும்ப வில்லை அமைதியாக வர, சரி நாளைக்கு வீக் என்டு வேற! மேடம் என்ன பிளான் வச்சு இருக்கீங்க? என கேட்டான் ஆதி.

பிளானா? என வாய் மொழியாக கூறியவள் சிந்தையில் சர்வேசுடனான ஒப்பந்தம் நினைவுக்கு வர, அய்யோ இதை எப்படி மறந்தேன்? என தலையில் கை வைத்தவள். அதனால தான் என் மேலே வண்டிய மோதுற போல வந்தாரா? என யோசித்தாள்.

ஹலோ மேடம் உங்களை தான்!! எந்த உலகத்துல இருக்கீங்க? என கேட்ட படி ஹாஸ்டல் முன் வந்து நிறுத்தினான் ஆதி.

அது வந்து.. அது ஹாஸ்டல் வந்துடுச்சா? என சுற்றிலும் பார்த்தாள்.

வந்தாச்சு! என ஆதி புன்னகையுடன் கூற..

தேங்க்ஸ் ஆதி என அவள் இறங்க செல்ல..

"சகு உன்கிட்ட முக்கியமான விடயம்."

சொல்லுங்க! என அவனை பார்த்தாள்.

நெக்ஸ்ட் வீக் என்னோட தங்கச்சி இளமதிக்கு வீடு வாசல் பார்க்க வராங்க. அதனால நீயும் வீட்டுக்கு வரணும். எங்க வீட்ல பங்ஷன். இளமதி கூட நீ இருக்கணும் என்றான்.

நானா? என சகுந்தலா திகைப்புடன் கேட்க..

நீ தான்! ஆல்ரெடி உன்னை பத்தி வீட்ல சொல்லி இருக்கேன். என்றான் ஆதி.

என்னன்னு? என சகுந்தலா கேட்க..

ஆதி அவளை முறைத்தான்.

ச.. சாரி ஆதி! என முடியை காதுக்கு ஒதுக்கினாள்.

எங்க வீட்ல பெருசா சொந்தம் ஒட்டுதல் இல்ல. யார் கூடவும் டச் கிடையாது. To be frank நாங்க கஷ்ட படுற காலத்துல எங்களை வேடிக்கை பார்த்த உறவு எனக்கு வேணாம்னு தோணுச்சு. இப்போ நான் டாக்டர் ஆகி, இளமதி handloom technology படிச்சி முடிச்சு மூணு மாசம் தான் ஆகுது. அவளோட dptலயே மாப்பிள்ளை செட் ஆகி இருக்கு. வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம். இப்போ வீடு வாசல் பார்க்கும் போது எங்க பக்கத்தில் பெருசா உறவுகாரங்க இல்ல அதான் உன்னை வர சொன்னேன் என்றான் ஆதி.

மறுயோசனை இல்லாமல் சட்டென ஓகே சொன்னாள் சகுந்தலா.

ஆதி பெரு மூச்சுடன் அவளை பார்க்க, சாரி டாக்டரே! என்னை தப்பா நினைச்சுக்க வேணாம். என அவள் அசடு வழிந்த படி பார்க்க.

எத்தனை நாள் ஸ்டே பண்ணுவ? என ஆதி கேட்க..

இளமதி கல்யாணம் முடிஞ்சு நீங்களே என்னை வீட்டை விட்டு துரத்துற வரைக்கும் இருப்பேன் என்றாள் சகுந்தலா.

ஆதி சிரித்தபடி பார்க்க, ஓகே டாக்டர் அப்போ நான் உத்தரவு வாங்கிக்கவா என புன்னகையுடன் கேட்டாள்.

ஓகே மேடம் என ஆதியும் அவளை விட்டுவிட்டு புறப்பட்டான்.

சகுந்தலா புன்னகையுடன் ஹாஸ்டல் பக்கம் திரும்பியவழுக்கு சர்வேஷ் நினைவுகள் வந்து செல்ல.. நாளைக்கு தானே சண்டே இன்னிக்கி இங்கேயே இருப்போம் என உள்ளே சென்று விட்டிருந்தாள்.

மச்சான் என ஆதியின் குரல்..

உனக்கு நான் நினைப்பு இருக்கேனா? என சர்வேஷ் கிண்டலாக கேட்க..

டேய் என்ன டா இப்படி பேசுற? உனக்கே தெரியும் ஹாஸ்பிடலில் எவ்ளோ வேலை இருக்குன்னு என ஆதி கூற..

இப்போ எதுக்கு போன் பண்ண? என பிடிப்பு இல்லாமல் பேசினான் சர்வேஷ் மது கோப்பையை பிடித்து கொண்டு.

இளமதிக்கு மாப்பிள்ளை செட் ஆகிடுச்சு, நெக்ஸ்ட் வீக் வீடு வாசல் பார்க்க வராங்க. நீயும் வரணும். அதுக்கு தான் போன் பண்ணேன்.

நானா? என சர்வேஷ் மதுவை சரித்து கொண்டு கேட்க..

இளமதி எனக்கு மட்டும் தான் தங்கையா? உனக்கு இல்லையா? நீ அவளை தங்கச்சியா பார்க்கலயா? என்றான் ஆதி.

ஒரு நிமிட இடைவெளிக்கு பின் வரேன் என்றான் சர்வேஷ்.

உனக்கு டைட் ஸ்கெட்யுள் இருக்குன்னு எனக்கு தெரியும். அதனால தான் நான் சனி, ஞாயிறு பார்த்து வச்சேன். நீ ரெண்டு நாளும் வரணும். வந்துட்டு போனால் கூட ஓகே அனுஷா கிட்டயும் பேச போறேன் என்றான் ஆதி.

ம்ம் என ஒற்றை பதிலில் முடித்து கொண்டான்.

மச்சான் நீ ஓகே தானே! உன்னோட குரல் சரி இல்லையே டல்லா ஆன்சர் பண்ற? என்னாச்சு? என ஆதி அக்கறையுடன் கேட்க..

ஆல் குட்! கொஞ்சம் டயர்ட் சரி நீ பாரு என போனை வைத்தான் சர்வேஷ். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சகுந்தலா தேவியை தேடிட.. அவள் தென் படவில்லையே!

விடிய விடிய குடித்து கொண்டே காத்திருந்தான். வருவாளா? வருவாளா? என்று.

அதிகாலை எட்டு மணிக்கு அவளின் எண்ணுக்கு போன் சென்றது.

தலையை சொரிந்தபடி தூக்கத்தில் எழுந்து அமர்ந்தவள் வேக வேகமாக அடுத்த அரை மணி நேரத்தில் நின்றிருந்தாள் சர்வேசின் வீட்டின் முன்.

காலிங் பெல்லை அடித்து ஓய்ந்து போனாள். ஒன்பது மணியில் இருந்து அழுத்தி பத்து மணிக்கு கதவை திறந்தான் சர்வேஷ்.

வியர்க்க விறுவிறுக்க அவனை பார்த்தாள் சகுந்தலா.

அவன் முன்னால் நடக்க பதட்டத்துடன் வெளியில் நின்றாள்.

அவளை திரும்பி ஒற்றை பார்வை பார்த்தான்.

எச்சில் கூட்டி விழுங்கியவள் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தினாள்.

சர்வேஷ் அவளுக்கு எதிரில் சினம் கொண்ட சிங்கமாக அமர்ந்திருந்தான்.

டாக்டர் நான் என சகுந்தலா ஆரம்பிக்க..

சர்வேஷ்..?

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -17
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeni Shiva

Active member
Joined
Oct 29, 2024
Messages
102
Ivan enna dhaan nenachuttu irukkan? Ivanukku courage irundha bold ah avn sagu ah hook up pannuran nu sollalame... Aprum Avakita yaaru pesauvanga... Ivanoda kovam kooda kirukku thanama irukku
 
Top