Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
424
யாரது புது நம்பர்ல இருந்து? எடுக்கலாமா? வேண்டாமா? என யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அழைப்பு முழு ரிங் ஆனது. சகுந்தலா போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டாள். நேற்று இரவு நடந்த காரியம் மிகவும் பெரிது. சத்தியமாக அவளுக்கும் நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

அடுத்த நாள் மாலை தான் ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினாள். அவள் வெளியே வந்தவள் நேராக பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றாள். மிகவும் களைப்பாக உணர்ந்தாள். வீட்டுக்கு சென்றதும் உறங்க வேண்டும். அதை விட நேற்று நடந்த விபரீதத்தில் கரு? என நினைக்கவே தூக்கி வாரி போட்டது. இப்படி பலவாறு சிந்தனையில் உழன்று கொண்டே அங்கு சென்று நின்று காத்திருந்தாள் பேருந்துக்காக..

ஆனால் அவளுக்கு எதிரில் சர்வா நின்றிருந்தான். இதயம் பட படவென அடித்து கொள்ள.. வியர்த்து கொட்டியது.

மீண்டும் அழைப்பு வந்தது.

அவள் போனை எடுத்து பார்க்க இங்கே சர்வா காதில் வைத்தபடி நின்றிருந்தான். அப்போ காலையில போன் பண்ணது இவர் தானா? இவரு யாரு? என மலங்க மலங்க விழித்தாள்.

ஹே போனை எட்ரி!! என சர்வாவின் உதடுகள் கோபத்தில் அசைய..

அழைப்பை ஏற்றவள். சார் என சகுந்தலா பேச வர...

"ஒழுங்கா கார்ல வந்து இப்போ ஏறுர? இல்லன்னா கைய காலை கட்டி தூக்கிட்டு போவேன்."

"சார் பிளீஸ் சார் அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்க.. சத்தியமா நேத்து நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல சார்!"

"நான் உன்னை வர சொன்னேன்!" என சர்வா பல்லை கடிக்க..

வேறு வழி இல்லாமல் அமைதியாக கார் பக்கம் வந்தாள்.

உள்ளே ஏறு!! ம்ம் என அதட்டல் குரல்..

வேறு வழி இல்லாமல் காரில் ஏறி கொண்டாள்.

"இந்த வேலை பண்ண உன்னோட ஹாஸ்பிடல் டீன் ஹர்ஷவர்த்தன் தான சொன்னான்! எவ்ளோ காசு வாங்கிட்டு இந்த மாதிரி கேவலமான வேலை பண்ண? சொல்லு டி!"

சகுவின் கண்களில் நீர் வழிய, சார் சத்தியமா நான் இது வரை ஹர்ஷா சாரை பார்த்ததே இல்ல. அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. பிளீஸ் என்னை நம்புங்க.

"உனக்கு அசிங்கமா இல்லையா டி!" என சர்வா கேட்க..

சார் பிளீஸ் நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல. வாய்க்கு வந்த படி பேசாதீங்க! எனக்கு இதை எப்படி சரி பண்றதுன்னு தெரியல என்றாள் உருக்கமாக..

சர்வா அவளின் முகத்தை பார்த்தான். பாவமாக தான் இருக்கிறது. ஆனால் அனுஷா, மற்றும் தன் அன்னை ராஜம், தந்தை ஈஸ்வரன் கிட்ட என்ன பதில் சொல்வான்? தெரியாமல் தவறு நடந்து விட்டது என்றா சொல்ல முடியும் என மனதில் தோன்றியது.

சகுந்தலா தேம்பி தேம்பி அழுத கொண்டிருக்க..

உன்னோட பேர் சகுந்தலா ரைட்?

"சகுந்தலா தேவி!"

"ஓகே சகுந்தலா தேவி! நேத்து நடந்த விசயத்த வச்சு உன்னை மேரேஜ் பண்ண முடியாது என்னால!"

"நானும் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. இட்ஸ் ஆக்சிடன்ட்."

அப்போ பணம் எவ்ளோ எதிர்பார்க்கிற? ஏன்னா எனக்கு இதை இத்தோட கட் பண்ணனும் என்றான் சர்வா.

நான் பணத்துக்காக உங்க கூட இருக்கல! இது விபத்து அவ்ளோ தான். பிளீஸ் நீங்களும் மறந்திடுங்க நானும் இதை மறந்திடுறேன் என்றாள் சகுந்தலா.

கார் ஓரிடத்தில் நிறுத்த பட்டது. சர்வா இறங்கி கொள்ள.. அதே போல சகுந்தலாவும் இறங்கினாள்.

கையை கட்டியபடி அவளையே வெறித்துப் பார்த்தான்.

சகுந்தலா தலையை தாழ்த்தி கொண்டு நின்றாள்.

நீ இனி பிரச்னை பண்ண மாட்டேன்னு நம்புறேன். எக்காரணத்தை கொண்டும் என்னை தேடி வர வேணாம். அதே போல நான் ஒரு டாக்டர் எனக்குன்னு சில மதிப்பு மரியாதை இந்த சொசைட்டில இருக்கு. நீ என்னோட பேச்சுக்கு ஒத்து போகலன்னா என்ன வேணும்னாலும் என்னால பண்ண முடியும். என்றான் சர்வா.

சகுந்தலா நிமிர்ந்து அவனை பார்க்க..

அன்னிக்கு நைட் நீ எதுக்கு அந்த ஹோட்டல்க்கு வந்த?

கான்பரன்ஸ்காக வந்தேன்.

"பொய் சொல்லாத!"

சத்தியமா சார்!! என சங்கு கழுத்தை பிடித்து கொண்டு கூறியவள்.‌ PPT presentation documents விவரங்களை போனில் காட்டினாள்.

"சரி அங்கே நீ எதுவும் சாப்பிட்டயா?" என சர்வா கேட்க..

ஆமா சார் எல்லாரும் போல தான் சாப்பிட்டேன்.

எதுவும் ஜுஸ் குடிச்சியா?

இல்ல சார் தண்ணி தான் குடிச்சேன். ஸ்வீட் கூட சாப்பிடல என்றாள் சகுந்தலா.

"ஓகே எப்படி அந்த ரூமுக்கு வந்த?"

எங்க ஹாஸ்பிடல்க்காக ரூம் புக் பண்ணிருந்தாங்க அங்கே என்னோட பேக் இருந்தது அதை எடுக்க வந்தேன். லிஃப்ட் வேலை செய்யல ஸ்டெப்ல தான் ஏறி வந்தேன் அப்போவே எனக்கு மயக்கமா இருந்தது பேக் எடுத்திட்டு கிளம்பிடனுன்னு வந்தேன்.

"அப்புறம் எப்படி என்னோட ரூம் உள்ளே வந்த?"

சரியான ரூம் நம்பர் பார்த்து தான் உள்ளே வந்தேன். என்னோட பேக் கூட ரூம்ல இருந்தது. நான் பேக் எடுத்திட்டு கிளம்பும் போது என நிறுத்தியவள் அவனை பார்த்தாள்.

சொல்லு!! என்னாச்சு?

நீங்க ரூமுக்குள்ள வந்துட்டீங்க!!

அப்புறம்? என சர்வா கேட்க..

உங்களுக்கு நியாபகம் இல்லையா? என சகுந்தலா கேட்க..

ஹே என்னைய கேள்வி கேட்கிறயா? என மிரட்டினான்.

"சார் அது அப்படி இல்ல" என தயங்கினாள் சகுந்தலா.

என்ன? அப்படி பார்க்கிற? எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அப்படி பார்க்கிற பொண்ணு மேலே பாயிற ஆள் நான் இல்ல. நீயும் நல்ல பொண்ணு மாதிரி தான் தெரிகிற.

சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

இது தான் நம்ம கடைசி சந்திப்பா இருக்கணும் புரிஞ்சுதா. இனி நான் இருக்குற திசை பக்கமே நீ வர கூடாது.

ஓகே சார் வர மாட்டேன் என ஆட்டு குட்டி போல தலை ஆட்டினாள்.

ஓகே வெல் செட் இனி எந்த பிரச்னையும் இல்ல. என புறப்பட்டான் சர்வா.

ஒரு பெரு மூச்சை விட்டபடி அவன் செல்வதை பார்த்தாள். ஏனோ அவள் கண்களுக்கு மிகவும் அழகாக தெரிந்தான் சர்வா. காரணம் இது வரை எந்த ஆண் மகனையும் அவள் நிமிர்ந்து பார்த்ததில்லை. சரவணனுக்கு ஒரு முறை காய்ச்சல் ஏற்பட்டு உணவு கொடுக்க உள்ளே சென்றாள். அவன் கைகளை பிடித்து காய்ச்சலை பார்த்ததில் உடலெல்லாம் சிவந்து தடித்து எழுந்து கொண்டது.

ஆனால் சர்வா? என்னோட விதி இது தான் போலயே? இவனால என்னை தொட முடியுது. ஆனால் அவன் கூட என்னால சேர்ந்து வாழ முடியாது என மனம் அடித்து கொண்டது.

சிறு வயதில் இருந்து படித்த பள்ளிகள் அனைத்தும் மகளீர் மட்டும். மேற்படிப்பு என்ன படிக்கலாம்? என வரும் போது அவளுக்கு பிடித்தது மருத்துவம் தான். பிரகாஷ் மகள் சாந்தினி மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தவள். நீ டாக்டர்க்கு படிக்க போறியா? யோசிச்சு தான் பேசுறயா? ட்ரெயினி டாக்டரா எல்லாருக்கும் மருத்துவம் பார்க்கணும். அதுக்கு தயாரா இருக்கியா? அங்கே வந்து நீ படுத்துக்கிட்டா என்ன பண்றது என கொடுக்கு போல கொட்டினாள் சாந்தினி.

அவள் அப்படி பேச காரணம். சகுந்தலா சாந்தினியை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.

பாப்பா சகு அவளோட ஆசைய சொன்னா! நீ தேவையில்லாம பேசிட்டு இருக்காத என பிரகாஷ் சப்போட்டுக்கு வர..

மாமா விடுங்க நான் நர்சிங் ஜாயின் பண்ணுகிறேன். மகப்பேறு மருத்துவ மனையில தானே வேலை இருக்கும். அங்கே என்னை சுத்தி பொண்ணுங்க தான் இருப்பாங்க. வேலையிலும் அப்படி தான். அதனாலே நான் அதிக ஜாயின் பண்றேன் பிளீஸ் என்று சொல்லி சென்று விட்டாள்.

இப்படி தான் சகுந்தலா நர்சிங் சேர்ந்தாள். படித்து முடித்து அவள் நினைத்ததை போலவே நர்ஸ் ஆகி வந்தாள். சாந்தினி டாக்டராக பணிபுரியும் அதே ஹாஸ்பிடலில் நர்சாக சேர்ந்து கொண்டாள் சகுந்தலா.

ஓ காட் ஒரு தொல்லை முடிஞ்சது. இனி அவள் நம்ம வழியில் வர மாட்டாள். என சர்வா நேராக ஹாஸ்பிடல் சென்றான்.

சகுந்தலா அவன் வழிக்கு வர போவதில்லை. சர்வா தான் சகுந்தலாவின் வழிக்கு வர போகிறான்.

பார்ப்போம்.

தொடரும்..
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
92
Avanala epdi apdi ellam pesa mudiyudhu? Thappum pannitu avala blame pannurane... Complete crack
 
Top