Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
353
கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க.. 'இவனை யார் என்னை கொண்டு வந்து விட சொன்னது?' என நெருப்பாய் தகித்து கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தாள் சீதாலட்சுமி.

"ஈவ்னிங் உன்னை பிக் அப் பண்ணிக்க நான் வருவேன். இன் கேஸ் நான் வரலைன்னா என்னோட தங்கச்சி சுபா கூட காரில் வந்திடு." என கல்லூரி வருவதற்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன் கூறினான் ரகுவரன்.

"இத்தனை நாள் நான் தனியா தானே போனேன். இப்போ மட்டும்" என மூக்கு விடைக்க சீதா சொல்லி முடிப்பதற்குள் அவளின் தொடையின் இரும்பு போன்ற கையை பதித்தவன். "அப்போ நீ சீதா லட்சுமி சுந்தர மூர்த்தி.. ஆனால் இப்போ?" என ஈர்ப்பான பார்வையை அவளின் மீது வீசியவன். "உன்னோட கழுத்தில் நான் தாலி கட்டியிருக்கென். அதுவும்" என கர்வ புன்னகையை வீசி மீசையை முறுக்கி விட்டவன்.

"ஆம் ஏநீ என்னோட பொண்டாட்டி சீதாலட்சுமி! இப்போ சிங்கிள் இல்லையே! என்னோட புரோபர்ட்டிய பொண்டாட்டிய நான் தானே பார்த்துக்கணும். எவனாவது புஸ்பக விமானத்தில் வந்து தூக்கிட்டு போயிட்டா என்ன பண்றது?" என குறும்புடன் கிண்டலாக புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான் ரகுவரன்.

19 வயசு சூடான இரத்தம். அதை விட பரபரக்கும் மனது. சுட்டி பெண்ணாக அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் கொள்ளை கொள்பவள் தான் சீதாலட்சுமி. அவள் எங்கு இருந்தாலும் அவளை சுற்றி ஒரு தனித்துவம் இருக்கும். குண்டு கன்னங்கள் இரண்டு, பால் வண்ண தோல், சுந்தர மூர்த்தி கருப்பாக இருப்பார். அவளின் அன்னை விஜயா நல்ல கலர். அதனால் சீதா நல்ல எடுப்பான தோன்றும். மொத்தத்தில் சொல்ல போனால் நின்று பார்க்கலாம். அனைவரையும் கொள்ளை கொள்ள இன்னொரு காரணமே! சீதாவின் மயக்கும் கண்களுக்கு மேல் ஒரு பர்த் மார்க் இருக்கும். தம்பி சாரதி அப்படியே அவளின் தந்தையை உரித்து வைத்து பிறந்திருப்பான்.

அப்போ அவளோட வர்ணனை இவ்வளவு தானா என கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்வேன்.

இதை கேட்டதும் இன்னும் வெறுப்பாய் பார்த்தாள் சீதா. அந்த சீதைக்கு 14 வருசம் வனவாசம். ஆனால் எனக்கு இங்கே இராவணன் கூட காலம் முழுக்க சிறை வாசம். என கண்களில் நீர் முட்டி கொள்ள அமர்ந்திருந்தாள்.

காலேஜ் வந்திடுச்சு என ரகுவரனின் குரலில் உயிர் பெற்றவள் இறங்க போக.. க்கும் என உருமலுடன் தொண்டையை கணைத்தான்.

கூப்பிட்டிங்களா என சீதா திரும்ப.. கூப்பிடல என அவளின் கையை பிடித்து இழுத்தவன் சீதாவின் உதட்டை கவ்வி கொண்டான்.

முகத்தை சுளிக்க கூடாது என உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டாள். ஆனால் கைகளை இறுக்கி மடக்கிய படி வெட்கத்தில் நெஞ்சுகூடு ஏறி இறங்க வில்லை. ஆனால் கோபத்தில் ஏறி இறங்கியது. அவளுக்கு மூக்கு வியர்த்து போனது கோபத்தில்..

ஒரு நொடி விட்டவன் கீழ் உதட்டை கவ்விய படி அவனது கைகள் அவளின் கண்ணம் தோள்பட்டை என வருடி ஊறியது. "இனி உனக்கு பிடிச்சாலும் சரி.. என்னோட நெருக்கம் பிடிக்கலன்னா கூட... இதை நீ... இந்த அவஸ்தையை நீ அனுபவிச்சுதான் ஆகணும். ஏன்னா நீ என் பொண்டாட்டி!" என்று விலகினான்.

இப்பொழுதாவது விட்டானே என வேகமாக காரில் இருந்து இறங்கியவள். அவன் சொன்ன விசயத்தை கேட்டு விதிர்விதித்து நின்றாள் சீதா.

மீசையை முறுக்கி விட்டபடி அவளை பார்த்தவன். இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் சோ ரெடியா வந்திடு! என சொல்லி விட்டு அவளை சுற்றி காரில் வட்டம் போட்டு புளுதியுடன் கிளம்பியிருந்தது அந்த மகேந்திரா 4×4 தார் வாகனம். புழுதி படிந்த அவள் மனம் இரவு நடக்க போகும் புயலில் சிக்குமா இல்லை தப்பிக்குமா?

"ஹே யாரு டி அது? அதுவும் ஜீப் ல விட்டு போறது? ஏன் டி நீ காலேஜ் வரல நேத்து? உங்க அப்பாவை பத்தி எதோ பேசிக்கிறாங்கமே! அதெல்லாம் உண்மையா?" என வகுப்பு தோழிகள் அனைவரும் கேட்க..

இன்னொரு பக்கம் மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குள் "டேய் அந்த செகண்ட் யியர் மேக்ஸ் dpt சீதா லட்சுமிய அந்த கட்ட பஞ்சாயத்து பண்ணுவாரே சதாசிவம் அந்த ஆளோட பையன் அதான் அந்த ரகுவரன் சீதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். இனிமே அவள் ரகுவரன் ஆளு. அவள் பக்கம் சைட் கியிட்டுன்னு போனோம். அந்த ரகுவரன் கையில தான் சாகனும். இனி அவள் பக்கமே போக கூடாது டா!" என சீனியர் மாணவர்கள் பேசி கொண்டார்கள்.

"ம்ம் அந்த ரகுவரன் காட்டில் மழை தான்." ஸ்பா ஒருவன் கூற... "ஏன் டா அப்படி சொல்ற?" என இன்னொருவன் கேட்டான்.

சீதா லட்சுமி தன் நண்பிகள் அனைவரையும் பார்த்து என்னோட டாடி யாரையும் ஏமாத்தல. நீங்க யார் கிட்ட வேணாலும் கேட்டு பாருங்க. அண்ட் என்னோட டாடி பத்தி ராங் இன்பர்மேசன ஸ்ப்ரெட் பண்ணாதீங்க என்று உதடு துடிக்க கூறி விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

ரகுவரன் தான் தன் கணவன் என சொல்லிக்கொள்ள விரும்பவில்லை அவள். கைகளை பிசைந்தபடி அவளது இடத்துக்கு சென்று அமர்ந்தாள்.

எப்படி இந்த திருமணம்? யார் இந்த ரகுவரன்? இது விருப்பமில்லா திருமணமா? இல்லை கட்டாய திருமணமா?

சீதா அவளது இடத்தில் வந்து அமர்ந்ததும் திடீரென ஹலோ அண்ணி அண்ணி எதுவும் பிரச்னை இருந்தால் என் கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன் என ஃபைனல் இயர் கிஷோர் அவளை ஒரு வித பயத்துடன் பார்த்து சொல்லி விட்டு வகுப்பில் இருந்து சென்றான்.

கோபமாக சென்ற சீதாவை பின் தொடர்ந்து சென்றார்கள் அவளின் நண்பிகள். அதற்குள் வகுப்பு ஆரம்பித்து விட அனைவரின் கவனமும் பாடத்தில் இருக்க.. சீதாவின் நினைவுகள் நெஞ்சில் தொங்கி கொண்டிருக்கும் அந்த தாலி உருத்தி கொண்டிருந்தது. இப்படி எனக்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒருத்தனை போய் கல்யாணம் பண்ணி கிட்டேனே! என நெஞ்சு குழியில் எதோ இனம் புரியா வழி வேதனை பரவியது.

அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து கிஷோர் என்பவன் சீதாவின் பின்னாலேயே சுற்றி கொண்டிருந்தான்.

"ஹே உன் பின்னாடி அந்த சீனியர் பையன் கிஷோர் சுத்திக்கிட்டே இருக்கான். நீ எங்கே இருக்கியோ அங்கே எல்லா இடத்திலும் அவன் இருக்கான்?" என சீதாவின் தோழி அகல்யா கேட்க.. சட்டென திரும்பி பார்த்தாள் சீதா.

"ஹே பயமில்லையா? சீதா உனக்கு? அவன் எல்லார் முன்னாடியும் உன்கிட்ட வந்து எதுவும் சொல்லிட்டா? என்ன பண்ணுவ?" என ரேணுகா கேட்க..

"நான் யாரை பார்த்து பயப்படனும்? இப்போவே நான் என்ன பண்றேன் பாருங்க" என சீதா நேராக கிஷோர் பக்கம் சென்றவள். "எதுக்கு என்னை ஃபாலோ பண்றீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்றாள் அவனிடம் தைரியமாக..

டேய் தைரியம் தான் டா இவளுக்கு? மச்சி நீ கொடுத்து வச்சவன் என கிஷோரின் தோழர்கள் கௌதம், ரோஹன், மற்றும் ஹரி அனைவரும் கிண்டலுடன் சிரிக்க.. பெரிய டான் போல முகத்தை வைத்து கொண்ட கிஷோர் தலையை கோதிய படி நான் உன்னை லவ் பண்றேன். நீ ஜாயின் பண்ணதுல இருந்து.. இந்த ஜென்மத்தில நீ தான் என்னோட பொண்டாட்டி. சோ நாளைக்கு ரெடியா இரு நம்ம படத்துக்கு போக போறோம். உன்னை என்னோட ப்ரெண்ட்ஸ் முன்னாடி ப்ரொபோஸ் பண்ண போறேன் பாய் சீதா டார்லிங் என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அவளை பார்த்து கண்ணடித்தபடி..

நீயும் அவனை லவ் பண்றயா சீதா! என தேவிகா கேட்க.. ச்சீ என்பது போல முகத்தை சுளித்த சீதாவின் முகத்தில் கோபம் வெறுப்பு அதை விட கிஷோரை சுட்டு பொசுக்கும் வெறி தோன்றியது.

இப்போ என்னடி பண்ண போற? என ரேணுகா கேட்க.. இவனை கை கால் முட்டிக்கு முட்டி தட்டி என் பின்னாடி வராத அளவுக்கு பண்ணனும். என சீதா சொல்ல.. அதுக்கு என் கிட்ட ஒரு வழி இருக்கு என அகல்யா மண்டையில் பளிச் லைட் எரிய பார்த்தாள்.

என்ன என சீதா கேட்க.. "என்னோட ஸ்கூல் பிரென்ட் சுபா நம்ம காலேஜ் தான் கெமிஸ்ட்ரி dpt படிக்கிறா!"

ஹே உருப்படியா சொல்லு டி! இல்லன்னா நான் என்னோட டாடி கிட்டயே சொல்லி இவனை எதுவும் பண்றேன். இன்னும் ஒன் வீக்ல என்னோட டாடி வந்துடுவாங்க என சீதா வகுப்பில் சென்று அமர்ந்தாள்.

அய்யோ சீதா சொல்றத கேளு! என்னோட பிரென்ட் சுபாவோட அண்ணன் பெரிய டானு அவரை பார்த்தாலே எல்லாரும் பயப்படுவாங்க. அந்த மாதிரி ஒருத்தர். சோ இந்த கிஷோர் பையல அவரை விட்டு மிரட்ட வச்சோம்ன்னு வை! இவன் இல்லை இனி எவனும் உன் பக்கம் திரும்பவே மாட்டானுங்க! எனக்கு என்னோட பிரென்ட் சுபாவுக்கு ஸ்கூலில் பிரச்னை இருந்தாலும் அந்த அண்ணா தான் வருவாரு. என கூறினாள் அகல்யா.

அப்படியா! சரி அந்த ரவுடிக்கு பணம் கொடுத்திடறேன். நீ அந்த பொண்ணு சுபா கிட்ட விவரத்தை சொல்லு. நாளைக்கு இந்த கிஷோர்க்கு இருக்கு. புல் ஷிட் அந்த பெல்லோ என்னை படத்துக்கு கூப்பிடுறான். என பற்களை கடித்தபடி அமர்ந்திருந்தாள் சீதா.

இதோ நிகழ்காலத்தில் கல்லூரி மணி அடிக்க.. அனைவரும் வீட்டுக்கு கிளம்ப சீதாவுக்காக அதே ஜீப்பில் வெளியே கெத்தாக காத்து கொண்டிருந்தான் ரகுவரன்.

சீதா வகுப்பில் இருந்து கடைசி ஆளாக வெளியே வர அதற்குள் அவளின் வகுப்புக்கு முன் வந்திருந்தான் ரகுவரன்.

ப்ச் என்ன பண்ணிட்டு இருந்த? என அவளின் கையை பிடித்த படி அழைத்து சென்றான். ஆனால் சீதாவின் பார்வையில் ஆட்டு குட்டியை பிரியாணிக்கு அறுக்க இழுத்து சென்றான்.

இதோ அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். ஹே சீதா என சுபா கை அசைத்தவள். தன் அண்ணனின் பார்வையில் மிரண்டு போய் அண்ணி என மாற்றி கொண்டாள்.

வீட்டை சுற்றி நிறைய தடி தாண்டவராயன் போல ஆட்கள் நடந்த வண்ணமாக இருந்தார்கள். இந்த இடத்தில் இருந்து ஓடி விட வேண்டும் என தோன்றியது சீதாவுக்கு. இவர்கள் அனைவரும் மனிதர்களா? இல்லை மனித உருவில் இருக்கும் மிருகங்களா? என வந்த 24 மணி நேரத்தில் 2 லட்சம் முறை யோசித்து விட்டாள் சீதா.

வாங்க அண்ணி என சுபா அவளின் அறைக்கு அழைத்து சென்றாள்.

ரகுவரனின் தம்பிக்கள் பரத், சந்துரு இருவரின் மனைவிகள் உஷா, மற்றும் சிந்து தான் ரகுவரணின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள். இந்த வீட்டு மூத்த மருமகளா தன்னை விட சின்ன பொண்ணு, அதுவும் நல்லா வசதியா வளந்தவளாக வந்துட்டாளே! என உஷாவுக்கு வயிறு வாயெல்லாம் பற்றி கொண்டு எறிய... தன்னை விட படிச்சவளா பேரழகியா வந்துட்டா சந்துருவின் மனைவி சிந்துவுக்கு இன்னொரு பக்கம் சீதாவை பார்க்க பார்க்க பொறாமையாக இருந்தது.

எல்லாம் ரெடியா என கேட்டபடி அறைக்குள் நுழைந்தார் சுமதி. அதாவது ராகுவரனின் அம்மா.

எல்லாம் ரெடி அத்தை என இருவரும் அந்த கட்டில் படுக்கையை பார்த்தபடி வந்தார்கள். எந்த வீட்ல இப்படி நடக்கும் ச்சீ! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம முதலிரவுக்கு மொத்த வீடும் தயார் செய்யுது என ஒவ்வொருவரின் மன நிலையும் கூறியது.

ஆம் சுமதிக்கு கூட சுத்தமாக விருப்பம் இல்லை. தனது அண்ணன் மகள் மாளவிகாவை ரகுவரனுக்கு கட்டி வைக்கும் முனைப்பில் சுற்றி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. சுமதிக்கு மற்ற மகன்களை விட ரகுவரன் என்றால் உயிர். ஆனால் இப்பொழுது? தன்னை மீறி தன்னிடம் தெரிவிக்காமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்து விட்டான். என உள்ளுக்குள் சீற்றம் பொங்கி கொண்டிருக்கிறது.

சுமதிஇஇஇ!.. என சதாசிவத்தின் குரல் கேட்க.. அவ்விடத்தை விட்டு மாமியார் மருமகள் என அனைவரும் கீழே வந்தார்கள்.

சீதாவை அலங்காரம் செய்து அறையின் பக்கம் அழைத்து சென்ற சுபாவை பாதியில் அனுப்பி விட்டு உள்ளே அவளின் முன்னால் சீதாவை கையில் தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்தான் ரகுவரன்.

சீதாவின் மேல் ஆளுக்கு ஒரு பக்கம் வஞ்சக பார்வையை வீச.. ரகுவரன் அவளை மோக பார்வையில் இழுக்க.. சுழலுக்கு நடுவில் மாட்டி கொண்டவளாக சீதாவின் நிலை இனி என்னவாகும்?

இதோ படுக்கையில் கிடத்தி அவளை துகில் உரிக்க ஆரம்பித்திருந்தான். சீதாவின் இராவணன் ரகுவரன்

அடுத்து என்ன நடக்கும்?

தொடரும்..
 

vedha

Member
Joined
Oct 7, 2024
Messages
56
ரகுவரன் vs இராவணன் சூப்பர் காம்பினேஷன் 💞💞.அப்புறம் சீதா 🔥🔥🔥🔥🔥
 

Magi

Active member
Joined
Oct 6, 2024
Messages
121
🤔 seetha ivlo kovam aah irukka enna kaaranam 🤷🏼‍♀️ ivan antha ponna soft ah deal panra maari therla, etho nadanthu irukku❤️ super next ud ku waiting 🔥
 
Top