Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
425
தனக்கு எதிரில் நின்றிருப்பவனை சோர்வுடன் பார்த்தாள். கதவை சாத்திவிட்டு அவளின் அருகில் வந்து சென்றவன். "இனி உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றான்.

சீதா புருவத்தை சுருக்கி பார்க்க... அது... நான் என்ன பண்ணட்டும்? நீ எனக்கு எப்பவும் வேணும்னு தோனிட்டே இருக்கு. அதனால தான் உன்கிட்ட கொஞ்சம்... என்னோட வரம்ப மீறி நடந்துக்கிட்டேன். இனிமேல் அப்படி நடக்காது.

சீதா இருபுறுவம் தூக்கி அவனை பார்க்க.., ஆனா டெய்லியும் நீ வேணும். ஆனால் காலையில பத்து மணி வரைக்கும் நீ சோர்ந்து கிடக்கிற மாதிரி இனிமேல் உன் மேல நான் பாய மாட்டேன். அதே சமயம் சனி ஞாயிறு உனக்கு லீவுன்னா நீ என்னோட விருப்பம் போல தான். என்னோட இஷ்டம். நான் எப்ப வேணாலும்.. என்று சொல்லி விட்டு அவளை பார்த்தான்.

சத்தியமாக இவன் மனசு ஜென்மம் கிடையாது. மிருகம் கூட அதோட இனப்பெருக்க காலத்துல மட்டும்தான் இணைக் கூட சேரும். ஆனால் இந்த மனுஷங்களுக்கு ஏன் அவங்களோட உணர்வுகள் இப்படி இருக்கு? என்று ரகுவரனை மிகவும் கீழ்த்தரமாக நினைத்தாள் சீதா.

அவளின் கன்னத்தை வருடி விட்டவன். நேரா நேரத்துக்கு சாப்பிடு! என்னை தாங்குற அளவுக்கு உனக்கு சக்தி இருக்கணும். அதே போல இந்த வீட்ல யாரும் உன்னை எந்த கேள்வி கேட்க மாட்டாங்க.

என்ன பண்ணீங்க? போய் அவங்களை கேட்டு வச்சீங்களா?;என்று சீதா சொல்ல வர...

யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க எங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் விவறிச்சிட்டேன்.

எத போய் சொல்லி வச்சிருக்கீங்க? ஐயோ என்று நெற்றியை பிடித்து கொண்டு பார்த்தாள்.

சீதா நீ கவலைப்படாதே இனி சுபா டெய்லியும் உன்கூட இருப்பா! நான் இல்லாத நேரம் அவள் உனக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுப்பா! உனக்கு என்ன தேவையா இருந்தாலும் சுபா கிட்ட கேட்கலாம். மத்தபடி உனக்கு எந்த குறையும் இல்லை. அதனால என் முன்னாடி புலம்பிட்டு இருக்காத!!

சீதா அவனை வெற்று பார்வை பார்க்க..

ஹே முக்கியமா அழுகாத! எனக்கு அழற பொண்ணுங்கள சுத்தமா பிடிக்காது என்று சொல்லிவிட்டு அருகில் நெருங்கினான்.

இப்போ என்ன?

ம்ம் இப்போ எப்படி இருக்கு? எதுக்கு ரெண்டு நேரம் சாப்பிடாமல் இருந்த? முகம் எல்லாம் வாடி போச்சு என்று கூறி அவளின் முகத்தை பிடித்துப் பார்த்தான்.

சீதாவுக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. அதை கட்டுப்படுத்திக் கொண்டவள் இப்போ பரவால்ல. என கைகளை விலக்கி விட்டு எனக்கு தூக்கம் வருது விடுவீங்களா என்று கேட்டாள்.‌

தூங்கு என்று விட்டு அவளுடன் சேர்ந்து படுத்துக் கொண்டான்.

என்ன பண்றீங்க நீங்க? என திகைத்து விழித்தவள். நீங்க எதுக்கு என்கிட்ட படுக்கிறீங்க? ஐ மீன் என் கூட என சீதா பொங்க..

நீதான தூங்கணும்னு சொன்ன! அதான் இல்ல எனக்கு உன் கூட சேர்ந்து தூங்கணும். உன்கூட நேரம் செலவழிக்க தான் நான் இங்க வந்தேன். நீ இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறம்.. சரி கம்முனு கண்ண மூடிட்டு தூங்கு என்று அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

சீதாவுக்கு எப்படி தூக்கம் வரும்? மாமிச மலைக்குள் அடங்கி இருக்கிறாள் ஆனால் ரகுவரன் தூங்கி விட்டான்.

இப்படியே நேரம் செல்ல.. மாலை இருவரும் எழுந்தார்கள். "இப்படியே வீட்டுக்குள்ள எவ்வளவு நேரம் அடைஞ்சிருப்ப? வெளியே போலாமே என்று ரகுவரன் கேட்க..

எனக்கு பிடிக்கல என்று ஒரே வார்த்தைகள் முடித்துக் கொண்டாள் சீதா.

அதற்குள் சதாசிவத்திடமிருந்து ரகுவரனுக்கு அழைப்பு வர.. சரி சீதா உனக்கு எதுவும் வேணும்னா சுபா கிட்ட கேளு எனக்கு வேலை வந்திடுச்சு என அவன் வேலை விஷயமாக கிளம்பி விட்டான்.

சனி ஞாயிறு இரண்டு நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தது. ரகுவரன் சீதாவிடம் சொன்னது போலவே நடந்து கொண்டான்.

சீதாவிற்கு அவன் மேல் நல்ல அபிப்பிராயம் வந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மை இல்லை. ஆனால் திங்கட்கிழமை காலை புயலென வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள் மாளவிகா.

"அத்த நான் வந்துட்டேன்! மாமா நான் வந்துட்டேன்! சின்ன மாமா! குட்டி மாமா பெரிய மாமா எல்லாருக்கும் நான் வந்துட்டேன்" என்று அலப்பறையுடன் வந்து சேர்ந்தாள்

வீட்டில் இருக்கும் அனைவரும் யார் என எட்டிப் பார்த்தார்கள் உஷா மற்றும் சிந்து இருவருக்குமே இவளா இவள் ஓவரா ஆடுவாளே! இது எல்லாம் சீன் போடுறத நம்ம பார்த்து தான் ஆகணும் வேற வழி இல்ல என்ற நினைத்தார்கள்.

பாக்கியம் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருக்க.. பாட்டி எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று மாளவிகா முன்னாள் வர..

உனக்கு இந்த வீட்ல என்னடி வேலை என்று சட்டென கேட்டுவிட்டார் பாக்கியம்.

இதை கேட்டதும் சுமதிக்கு கோபம் தலைக்கு எரிது ஏறியது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அத்தை என்னோட அண்ணன் பொண்ணு இங்கே வரக்கூடாதா என்ன? அவளுக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா? நான் அவளோட அத்தை அப்போ என்ன நீங்க வெளியே போக சொல்ற மாதிரி இருக்கே என்று சுமதி கேட்க..

சுமதி! உனக்கு கூறு இல்ல! ஒரு கல்யாணமாகாத வயசு பொண்ணு இந்த வீட்ல வந்து தங்குறது சரி இல்லை! நாளைக்கு வேற வீட்டுக்கு வாக்கபடுற பொண்ணு இதோ இத்தனை பெரிய பையை தூக்கிட்டு வந்திருக்கா! என்ன வேலைன்னு கேட்டேன் இதுல என்ன தப்பு சதா என்று பாக்கியம் கேட்டார்.

சதாசிவத்தின் பார்வை சுமதியின் மீது சென்றது.

என்னங்க சுபா கூட மாளவிகா இருந்துக்குவா! அவ காலேஜ் ப்ராஜெக்ட்ன்னு சொன்னா அதனாலதான் நான் வர சொன்னேன். நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? தப்பா இருந்தா சொல்லிருங்க! நானும் மாளவிகா கூடவே சேர்ந்து எங்க அண்ணா வீட்டுக்கு போறேன். என்று சுமதி கூற..

ஹே படுபாவி! நான் என்ன சொல்லிட்டேன்னு உங்க அண்ணன் வீட்டுக்கு கிளம்பி போறேன்னு சொல்ற? எதுக்கு வந்தான்னு தானே கேட்டேன்! என் தப்பு தான் நேரம் வரட்டும் என பாக்கியம் அமைதியாகி விட்டார்.

அத்தை அதுக்கு இல்ல எங்க வீட்டு சனத்தை பத்தி பேசினா நான் எப்படி கேட்டுட்டு சும்மா இருக்க முடியும்? என்று சுமதி கூறினார்.

மாளவிகா பாக்கியத்தை பார்த்து அப்போ நான் வந்தது உங்களுக்கு புடிக்கலையா? உங்களை கழுத்தை நெரிக்க வர...

அட போடி போக்கத்தவளே என்று தள்ளிவிட்டு பாக்கியம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

மாளவிகா சிரிப்புடன் தன் அத்தையை பார்க்க.. அந்த கிழவியை கொன்னுடு அதுதான் எனக்கு இந்த வீட்டிலேயே இருக்க பெரிய பிரச்சனை என்று மனதிற்குள் நினைத்தார்.

ஆனால் சீதாவுக்கு மாளவிகா வீட்டுக்கு வந்தது எதுவும் தெரியாது சொல்லப்போனால் மாளவிகா யார் என்பதும் தெரியாது.

அன்று மாலை கல்லூரியில் விட்டு வரும்பொழுது தான் சீதா மாளவிகாவை பார்த்தாள்.

ரகுவரன் சீதாவை அழைத்துச் செல்ல வராததால் சுபாவுடன் காரில் ஏறிக்கொண்டாள். பாதி தூரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வண்டி சென்றது. திடீரென ரூட் வேறு பக்கம் செல்ல..

இந்த பக்கம் என்ன இருக்கு? எதுவும் வேலையா என்று சீதா கேட்க..

இல்ல இன்னொருத்தர பிக்கப் பண்ணனும் என்று புன்னகையுடன் கூறினாள் சுபா.

யாரது என்று சீதா கேட்க வில்லை. கண்டிப்பாக அந்த ரகுவரனாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவள். ஃபோனை நோண்டிக்கொண்டு வந்தாள்.

ஹாய் சுபா என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

மாளவிகா முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். இன்னிக்கு கிளாஸ் எப்படி போச்சு என்று சுபா கேட்க..

நல்லா போச்சு என்று கூறியவள் அவளின் நட்பு வட்டம் என அனைவருக்கும் கையை காட்டி விட்டு, கண்ணாடி வழியாக பின்னால் இருக்கும் சீதாவை பார்த்தாள்.

யார் இது என்பது போல சீதா மாளவிகாவை பார்க்க..

சுபா சட்டென என நினைவு வந்தவளாய் சாரி சீதா! இவள் எங்க மாமா பொண்ணு மாளவிகா..

அண்ட் மாலு இது சீதா என்று கூற வர..

தெரியுமே என்னுடைய இடத்தில் இப்ப இவங்க இருக்காங்க என்று மாளவிகா கூற..

சீதா புருவத்தை சுருக்கியபடி என்ன சொல்றீங்க என்று கேட்க..

சுபா மாளவிகாவை அதட்டி என்ன மாலு இப்படி பேசுற? அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா! என்று கூற..

என்ன விஷயம்? எதை பத்தி? என்ன சொல்லு? சுபா? என்கிட்ட சொல்லு என்று சீதா கேட்க..

அதாவது எங்க பெரிய அண்ணாவுக்கும் மாளவிகாவுக்கும் தான் கல்யாணம் பண்றதா இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள அண்ணா உன்னை கல்யாணம்.. என்ற சுபா "நீ எதுவும் எங்க அண்ணனை தப்பா நினைச்சுக்காத! அதாவது எங்க அம்மாவுக்கு ரொம்ப பிரியம் மூத்த மருமகளா அவங்களோட சொந்தத்திலிருந்து பொண்ணு எடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. வேற ஒன்னும் இல்ல. ஹே மாலு! நீ என்றவள் சீதா பக்கம் திரும்பி மாளவிகா ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டா என சமாளித்தாள்.

மாளவிகா சுபாவின் பக்கம் திரும்பி நான் அப்படி சொல்லவே இல்லையே தேவையில்லாததை பேசி வைக்காத சுபா. என பற்களை கடித்துக் கொண்டே கூறினாள்.

சீதா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள். அதற்குள் மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள் சுபா முதலில் இறங்கிக் கொள்ள..

சீதா இன்னொரு பக்கம் இறங்கினாள்.

மாளவிகா முன்னாள் நடக்க எஸ்கியூஸ் மீ உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா என்ற சீதா மாளவிகாவிடம் கேட்டாள்.

உன்கிட்ட பேசறதுக்கு எனக்கு இஷ்டம் இல்ல என்று விட்டு உள்ளே நடந்தாள்.

மாளவிகா சீதாவுக்கு கோபமாக வந்தது இவ கிட்ட நாம எதுக்கு பேசணும் என்று நேராக அவளது அறைக்கு சென்று விட்டாள்.

ரகுவரன் 10 மணி போல் வீடு வந்து சேர்ந்திருந்தாள் சீதா இரவு உணவை சுபாவுடன் முடித்துவிட்டு படித்து முடித்தவள். வீட்டிலேயே இருப்பது கொஞ்சம் அழுத்தமாக இருக்க மாடிக்குச் சென்றிருந்தாள்.

அந்த நேரம் தான் ரகுவரனும் மாலதிக்காவும் போர்டிகோ பக்கம் பேசிக் கொண்டிருந்தது இவள மாடியில் இருந்து நன்றாகவே தெரிந்தது

சீதா..?

தொடரும்...
 
Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
93
ஒரு மனுசனுக்கு கால் வைக்குற இடமெல்லாம் கன்னிவெடியா இருந்தா எப்படி கோபி?
 
Usha

Member
Joined
Oct 8, 2024
Messages
76

Super, seetha epdi react pannuva 🤔🤔 daily epi podunga sis
 
Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
76
Superrrrrrrrrr 👌👌👌👌👌👌
 
Top