Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
430
ஏன் தூங்க முடியாது? ஏன் இங்கே இருக்க முடியாது? என அவளின் பார்வை நேராக இருக்க..

ஏன்னா என பெரு மூச்சை விட்டான் அவளை பார்த்து.. பார்வையே பாதி சங்கதி சொன்னது. அதை விட அவனது கட்டு மஸ்த்தான தேகம் மீதி கதை சொல்ல..

சீதாவின் முகம் சிலிர்த்து போனது. அவனை பார்க்க தயக்கம் கொண்டவள் வேறு புறம் திரும்பி கொள்ள..

ரகுவரன் கதவின் பக்கம் செல்ல.. இருங்க.. என சீதா கூறினாள்.

"ப்ச் வேற எதுவும் விபரீதம் ஆகிடும். அப்புறம் நீ என்னை சொல்ல கூடாது."

சீதா படுக்கை விரிப்பை சரி செய்த படி நீங்க போக கூடாது அவ்ளோ தான் சொல்லிட்டேன். வந்து படுங்க என அதட்டினாள்.

ரகுவரன் அதற்கு மேல் பேச முடியாமல் தயங்கினான்.

சொல்றது புரியலயா!!

அவளின் அருகில் வந்து படுத்து கொண்டான் எதுவும் பேசாமல். அவன் பக்கம் திரும்பியவள். கையை மெதுவாக அவன் மேல் போட..

சீதா!! நான் உனக்கு என்னோட நிலமை!! என தடுமாறினான்.

என்னாச்சு என சீதா கேட்க.. அவளின் புறம் திரும்பியவன் ஆளுமையுடன் முத்தமிட ஆரம்பித்தான் வேகமாக..

சீதா அவனது கழுத்தை பற்றி கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாக அவனது உதடுகள் ஒட்டி கொண்டது அவள் உதட்டில் முகத்தை அவனை பார்க்குமாறு செய்து முத்தமிட்டான். முத்தமிட்டு கொண்டே அவளை அவனுக்கு கை பாவையாக்கினான். முத்தத்தில் வேகம் எக்க சக்கமாக இருக்க.. இன்று மோகம் கரை புரண்டு ஓடியது. அதற்கு காரணம் அவள் தான். இதற்கு முன்னால் இதே விசயத்தை செய்யும் போது கல் போல இருந்தவள் இன்று உணர்வு வந்த பெண்ணாக மாறி போயிருந்தாள். அதுவே அவனது வேகத்துக்கு காரணம்.

சீதா என கொண்டாடி தீர்த்தான். உயரமான மலைகளை கடப்பது கூட சுலபம் ஆனால் இந்த குட்டையான மலைகளை கடக்க முடியவில்லை அவனால்.

அவனது தலையை கோதி விட்டு படியாற்றினாள் பைங்கிளி. இந்த சீதா புதிது.

தேகம் இரண்டும் தேவைக்கு அதிகமாகவே தொடர்பு கொண்டு சோர்ந்து விழ... தாங்கி பிடித்தான்.

ரகுவரன் உதட்டில் நிம்மதி புன்னகையுடன் கூடிய ஆத்ம திருப்தி. இதோ வேகமாக அவளின் கழுத்தில் முத்தமிட்டான் பச்சக் பச்சக் என்று..

கூச்சத்தில் நெளிந்தாள்.

அவளை கட்டி கொண்டான் ஆசையுடன்..

"உங்க கிட்ட ஒரு விசயம்!!"

என்ன வேணாலும் சொல்லு! எது வேணும்னாலும் கேளு!! உனக்காக எல்லாமே செய்வேன் டி! என காதை கடித்தான்.

நீங்க படிக்கலன்னு எனக்கு தெரியும்.

ரகுவரன் அவளின் முகத்தை திடுக்கிட்டு பார்க்க..

எனக்கு படிப்பு ஒன்னும் பிரச்னை இல்லை. ஆனால் எனக்குண்ணு சில expectations இருக்கு.

என்ன அது?

நீங்க குடிக்க கூடாது, ஸ்மோக் பண்ண கூடாது, பாக்கு ஹான்ஸ் இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் அறவே எடுத்துக்க கூடாது. எடுத்துக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க.

ரகுவரன் அவளை சோர்வுடன் பார்க்க.. என்ன அப்படி பார்கூறீங்க? என்னாச்சு? என அதட்டினாள்.

சரி நீ சொல்றத மட்டும் தான் செய்வேன் போதுமா!!

ம்ம் பேச்சு மாற மாட்டீங்களே! என சீதா கேட்க..

கண்டிப்பா!! என்றான் புன்னகைத்து கொண்டே..

இதோ அடுத்த கூடல் ஆசையுடன் நடந்து முடிந்தது.

சீதா அசந்து தூங்கி கொண்டிருந்தாள். காலை எட்டு மணிக்கு அவளை எழுப்பினான் ரகுவரன்.

எனக்கு போதும் பிளீஸ் என சிணுங்கினாள்.

சாப்பிடலாம் சீதா எழுந்து உட்காரு போய் ப்ரஷ் பண்ணிட்டு வா!! என அவளை தாட்டினான்.

தல்லாட்டத்துடன் சென்றவள் பல் தேய்த்து முகம் கழுவி வந்தாள்.

அடுத்ததாக என்ன? இருவரும் சேர்ந்து உணவு சாப்பிட்டார்கள்.

ஊட்டி விடேன்!!

ம்ம் வாங்க என அவனுக்கு ஆசையுடன் ஊட்டி விட்டாள். இத்தனை நாள் அந்நியமாக தெரிந்தவன் இன்று சூப்பர் மேன் ஆகி விட்டான். சூப்பர் மேன் இல்லை. சூப்பர் ஹீரோ. அவன் அவளின் மனம் கவர்ந்த மன்னவன். காதல் கணவன். என எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு சீதா ஒரே நாளில் மாறிப்போனாள்.

முன்பு ரகுவரன் இன்சியேட் செய்வான். முதல் படி எப்போதும் அவனாக இருப்பான். இப்பொழுது அப்படி இல்லை சீதாவின் பார்வையே அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும்.

இப்படியே ஒரு மாதம் விறுவிறுவென ஓடி போனது.

சீதா வீட்டிலேயே படிப்பு, கணவன், கல்லூரி என இருக்க..

நம்ம ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா?

எங்கே ஏற்காடா?

இல்ல ஊட்டி!! நீயும் நானும் மட்டும். உனக்கு ஓகேவா!! அங்கே போயிட்டு வந்ததும் நான் உன்னோட எக்சாம் லீவுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பி வுடுரென். என்றான் ரகு.

அப்போ நான் இல்லாம சாரு தனியா இருந்திடுவீங்களா? மிஸ்டர் ரவுடி ரகுவரன்?

ரகுவின் முகம் உணர்வு இல்லாமல் பிடிக்கல தான்! உன்னை உங்க வீட்டுக்கு அனுப்ப எனக்கு விருப்பம் இல்ல தான். ஆனால் என்ன பண்றது? உனக்கு அங்கே போனால் என்னை விட என் கூட இருக்கிறத விட ரொம்ப சந்தோசமா இருப்ப? எனக்கு எல்லாத்தையும் விட.. என் சந்தோசத்தை விட உன்னோட சந்தோஷம் ரொம்ப முக்கியம் என்றான்.

அவனது பேச்சில் ஒரு நொடி உலகம் மறந்து போனாள். உள்ளத்தில் நுரைஈரல் காற்று குமில்களில் காற்றுக்கு பதிலாக ரகுவரன் தான் நிறைந்து இருக்கிறான். அந்த அளவுக்கு அவளின் மனதை வென்று விட்டான் ரகுவரன்.

என்ன அமைதியாகவே இருக்க? எதுவும் பேசு என ரகுவரன் கேட்க..

என்னை ஏன் உங்களுக்கு இந்த அளவுக்கு பிடிக்குது? என்றாள் சீதா அவனது முகத்தை பார்த்து.

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது.

"ஹலோ ரவுடி உங்களை தான்!! சத்தியமா நான் என்ன பண்ணனு எனக்கே தெரியல. என்கிட்ட எது உங்களை இம்ப்ரஸ் பண்ணுச்சு? சத்தியமா புரியல. என்னை ஏன் உங்களுக்கு பிடிச்சிருக்கு? இந்த கேள்விதான் என்னோட மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு" என அவனது முகத்தை பார்த்தாள் சீதா.

இதுவரை ரகுவரன் சிரித்தவர் சீதா பார்த்ததே இல்லை. அந்த முரட்டு இதழ்களில் மெல்லிய இதமான சிரிப்பு வெளிப்பட்டது. அதுவும் கொஞ்சம் தான். சீதா கண்களை அகல விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. ஒரு சில நொடிகள் கழித்து "எனக்கு உன்ன மொத தடவை பாத்ததும் பிடிச்சது. அவ்வளவுதான்... இது எதனால் பிடிச்சது? ஏன் பிடிச்சது? தெரியாது. எனக்கு நீ வேணும்னு தோணுச்சு thats it." என அவனது கன்னத்துக்குள் நாக்கை அடக்கிக் கொண்டான். அது அவ்வளவு அழகாக இருந்தது.

சீதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க...

சரி நம்ம போலாமா நீ ஃப்ரீயா? சாட்டர்டே சண்டே என்று அவன் கேட்க...

போலாமே என சீதா உற்சாகமாக கூறினாள். அப்போ நீ உங்க வீட்டுக்கு எக்ஸாம் முடிஞ்சதும் போயிடுவியா? என அவனது கண்களில் தவிப்பு நன்றாகவே தெரிய..

சீதா சிரித்துவிட்டு அதை எக்ஸாம் முடிச்சிட்டு பாத்துக்கலாம். இப்போ என்ன அவசரம்?

ம்ம் என விரக்தியாக பதில் கூறி விட்டு நகர்ந்தான்.

எல்லாமே நன்றாக தான் சென்றது சீதா மற்றும் ரகுவரன் இருவரும் ஊட்டி புறப்பட்டார்கள்.

ரகுவரன் அவனது தார் வாகனத்தை எடுத்துக் கொண்டு திருச்சியில் இருந்து நேராக்கு கோயம்புத்தூர் புறப்பட்டான்.

சுமதிக்கு தான் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. "எப்படி என்னோட பையனை இப்படி மாத்தி வச்சுருக்கா? இந்த மாளவிகா என்னதான் பண்ணிட்டு இருக்காளோ? மனதுக்குள் திட்டினாள்.

மா போயிட்டு வரென். என ரகு கூற..

ரொம்ப சந்தோசம் பத்திரமா போயிட்டு வாங்க என வாய் தான் கூறியது. ஆனால் அவரின் மனதில் நான் பிரிப்பேன் பிரிச்சு காட்டுவேன் என்று மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்படியே நேராக மாளவிகாவின் பக்கம் சென்று "நீ என்ன பண்ணிட்டு இருக்க? ரகு அந்த ஒண்ட வந்த கழுதைய கூட்டிட்டு ஊட்டி போறான்? இத்தனை நாள் நீ என்ன பண்ண? வஅவனோட மனச மாத்திரத்துக்கு முயற்சி பண்ணவே இல்லையா" என்று சுமதி சரமாரியாக கேள்விகளை கேட்க..

மாளவிகா மவுனமாக இருக்க..

மாலு என அதட்டினார்.

அத்தை நான் இந்த முறை பாருங்க!! எல்லாமே சரியா நடக்கும். அவங்க போயிட்டு வரட்டும். என வாய் மொழியாக கூறினாள்.

மாளவிகாவின் முகத்தில் இருந்த தெளிவான வார்த்தையை கேட்டதும் சுமதிக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

"ஏதாவது பண்ணு எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சே ஆகணும். இந்த வீட்டுக்கு நீ தான் மருமகளா வரணும்." என்று சுமதி திட்டமாக கூற ...

மாளவிகா தெளிவான முகத்துடன் "கண்டிப்பாக என்னைக்குமே நான்தான் உங்களுக்கு மருமக அத்தை இது எப்பவும் மாறாது. இனி நான் செய்ய வேண்டிய விஷயத்தை சீக்கிரமா செய்றேன் நீங்க கவலைப்படாதீங்க" என்றாள் மாளவிகா.

சீதா ரகுவரனுடன் பிளாக் தண்டர் ரிசார்ட் டிஎஸ்டேட் , பொட்டானிக்கல் கார்டன் மங்கி ஃபால்ஸ் என ஊட்டி மட்டுமில்லாமல் அதனுடன் கோயம்புத்தூர், மற்றும் மருதமலை, ஆலப்புழா என மூன்று நாட்கள் மொத்தமாக சுற்றித்திரிந்து காதலின் திளைத்து கூடலில் கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

இரண்டு நாட்கள் திட்டமிட்டு நான்கு நாட்களாகிப் போனது திங்கள் இரவு மிகவும் சோர்வுடன் அறைக்கு வந்தார்கள்.

தூங்கிட்டு நாளைக்கு காலைல கிளம்பிடலாம் என ரகுவரன் கூற..

சரி என்று அவனைக் கட்டிக் கொண்டு உறங்கினாள்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவசர அவசரமாக புறப்பட்டான் ரகுவரன் என்னாச்சுங்க என்று கண்களை தேய்த்த படி எழுந்தாள் சீதா.

சாரி சீதா இப்போவே கிளம்ப வேணும். ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை. என அவளிடம் கூறி சமாதானம் செய்து ஒரு வழியாக புறப்பட்டான். திருச்சியை நோக்கி.

சீதா வீட்டு வாசலில் இறங்கியதும் போலீஸ் ஜீப் தயாராக இருந்தது.

என்ன நடக்கும்?

தொடரும்.
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
140
Nalla fast ah poitu irukum pothu sudden break potta maathiri irukunga Sister Yennacho theriyalaiyeh Raghu and Seetha ku😔.Omg😯😖😖😖🤭.Yellam intha Sumathi and Malavika oda evil eye 👀 ah thaan irukum pola Sis😒. Raghu ku yethuvum aaga koodathu Sister please save him😔.
 
Last edited:

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
79
என்ன ஆச்சி 🤔🤔🤔🤔
 
Top