Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
425
வண்டி நின்றதும் சோர்வுடன் எழுந்து அமர்ந்தாள் சீதா. வந்துட்டோமா? என கொட்டாவி விட்டு கொண்டே எழுந்தவள் புருவம் சுருங்கி சட்டென வெளியே பார்த்தாள். என்ன வீட்டுக்கு முன்னாடி போலீஸ் நிக்கிது? என தன் கணவனை திரும்பி பார்த்தாள்.

சீதா நீ இறங்கி உள்ளே போ!! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. என அவன் இறங்க போக..

எதுக்கு போலீஸ் வந்திருக்காங்க? என்ன ஆச்சு? இதுக்கு தான் அவசரஅவசரமாக கிளம்பி வந்தோமா? என்னங்க நடக்குது? என் கிட்ட சொல்லுங்க.

நீ பதட்ட படுற மாதிரி ஒன்னும் இல்ல டி! சும்மா விசாரணை தான் நீ உள்ளே போ!! நான் தான் சொல்றேன்ல போமா!! என பொறுமையாக கூறினான்.

சீதாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள.. அவனை பதட்டத்துடன் பார்த்தாள். ஒண்ணுமில்ல டா!! சும்மா விசாரணை தான். நான் அரை மணி நேரத்தில வந்துவிடுவேன். நீ உள்ளே போ!! பயப்பட வேணாம் என அவளின் உதட்டில் மென்மையாக ஒற்றி எடுத்தவன் நெற்றி முட்டி வழி அனுப்பினான்.

என்னங்க!! என மீண்டும் சீதா அழைக்க..

இல்ல மா ஒண்ணுமில்ல!! போயிட்டு வா!! நான் மதியத்துக்குள்ள வந்துடுவேன்.

முன்ன அரை மணி நேரம்ன்னு சொன்னீங்க? இப்ப மதியம்ன்னு சொல்றீங்க? எனக்கு பயமா இருக்குங்க என அவனது சட்டையை இழுத்து பிடித்து கொண்டாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை போல..

இல்ல சீதா நான் வந்துடுவேன். இதுக்கு முன்னாடி எப்படியோ தெரியல. ஆனால் இப்போ நீ இல்லாம எனக்கு சோறு கூட இறங்காது. நான் வந்திவேன்டி நீ கவலை படாம போயிட்டு வா! சும்மா விசாரணை தான் என்றான் ரகுவரன்.

ஆயிரம் சொன்னாலும் சீதாவுக்கு அவனது வார்த்தையை ஏற்று கொள்ள முடியவில்லை. மனதுக்குள் கவலை நன்றாகவே சூழ்ந்து கொண்டது. காரை விட்டு இறங்கியவள் தடுமாற்றத்துடன் அவனை திரும்பி பார்த்து கொண்டே உள்ளே சென்றாள்.

அவள் போகும் வரை புன்னகையுடன் கையை ஆட்டியபடி அமர்ந்திருந்தவன் சீதா உள்ளே சென்ற அடுத்த நொடி ரகுவரனின் முகம் சட்டென மாறி காரில் இருந்து இறங்கினான்.

ப்பா!! என ரகுவரன் அழைத்து கொண்டே வந்தான்.

இன்ஸ்பெக்டரின் பார்வை அவரின் மீது படிந்து மீண்டு இங்கே பாருங்க மிஸ்டர் சதாசிவம். உங்க ரெண்டாவது பையன் தான் ஆள் விட்டு அடிச்சதும் இல்லாம காரை விட்டு ஏத்தி இருக்கான். ஹாஸ்பிடலில் இருந்து பாதிக்கபட்ட ஆள் வாக்கு மூலம் கொடுத்திருக்கான். நீங்க யாரு பஞ்சாயத்து பண்றதுக்கு? உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது? கோர்ட் எதுக்கு இருக்கு? இப்போ உங்க பையன் பரத் கிளம்பி வரணும். இல்ல? அடுத்தது பெரிய பிரச்னை ஆகிடும் என்றார் முருகேசன்.

சதாசிவம் அவரிடம் என் பையன் இங்கே இல்ல வேலை விசயமா அவன் கேரளா வரைக்கும் போயிருக்கான். நீங்க சொல்ற மாதிரியான விசயம் நடக்கவே இல்ல. என்ன பிரச்னை நடந்ததோ அது எங்களுக்கு பொறுப்பு இல்ல. இருந்தாலும் நான் உதவுகிற குணம் கொண்டவன். யாருக்கு என்ன பிரச்னை ன்னு சொல்லுங்க நான் அவங்களுக்கு உதவி பண்றேன். என கூறினார்.

முருகேசன் எகத்தாளமாக சிரித்த படி, தாராளமா பண்ணலாம். ஆனால் அதுக்கு முன்னாடி நீங்க ஸ்டேசன் வாங்க அங்கே விலாவாரியாக பேசிக்கலாம்.

சந்துரு வேகமாக முன்னாள் வந்தவன். யோவ் என்ன திமிரா? யாரை பார்த்து ஸ்டேசன் வர சொல்ற? எங்க அப்பா யாருன்னு உனக்கு தெரியாது. தேவை இல்லாம வம்பு பண்ணாத. ஒழுங்கா இடத்தை காலி பண்ணு என்றான்.

ம்ம் இப்படியே சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க? அந்த ஆளை கொலை செய்ய முயற்சி பண்ணதாக உங்க மூணு பேர் மேலேயும் கேஸ் போடுறேன். கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம் பண்ணிட்டு சண்டியர் மாதிரி சுத்திட்டு இருக்கீங்க!! இனி எப்படி சுத்துவீங்கன்னு நானும் பார்க்கிறேன். நான் யாருன்னு உங்களுக்கு இப்போவே காட்டுறேன் என வேகமாக முருகேசன் சதாசிவத்தின் சட்டையை பிடிக்க..

ஏட்டு மற்றும் கான்ஸ்டபிள் என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். சதா சிவம் மேலேயே கைய

சந்துரு அடிக்க பாயிந்தான். இன்ஸ்பெக்டர் சார் கொஞ்சம் கைய எடுங்க என ரகுவரன் கையை பிரித்து எடுத்து விட்டான்.

டேய் என முருகேசன் அடிக்க கை ஓங்கினான்.

"இப்போ உங்களுக்கு என்ன வேணும்? விசாரணை பண்ணனும் அவ்ளோ தான!! நான் வரேன். வாங்க போலாம்." என்றான் ரகுவரன்.

ரகுவரா வேண்டாம் டா என சதாசிவம் தடுக்க வர, விடுங்க ப்பா நான் போயிட்டு வரேன். நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கோங்க.

ஆடு தானாக வந்து மாட்டுது!! இப்போவே fir ஃபைல் பண்றேன். உங்களை அப்படியே விட மாட்டேன். சதா சிவம் இனி கட்ட பஞ்சாயத்து பண்றத விடுறேன்னு சொல்ல வைக்கிறேன். என்ன சதா சிவம் சொல்லுவியா என முருகேசன் எகத்தாள தொனியில் கூறிய படி ரகுவரன் கைகளுக்கு விலங்கு மாட்டினான்.

டேய் எங்க அப்பாவை பேர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு வந்துட்டல்ல!! இருக்கு டா உனக்கு? என் அண்ணா கையில விலங்கு மாட்டுற உனக்கு வேலையே இல்லாம செய்வேன் டா என்றான் கோபத்துடன்..

ரகுவரா வேணாம் போகாத! நாளைக்கு ரம்ஜான். கவர்மெண்ட் லீவ் கோர்ட் இருக்காது. உன்னை வெளியே விட மாட்டாங்க. பிளான் பண்ணி கூட்டிட்டு போற மாதிரி எனக்கு தோணுது. வேணாம் டா சொன்னா கேளு என சதா சிவம் முன்னால் வர..

அண்ணா அப்பா சொல்றத கேளுங்க என இன்னொரு பக்கம் சந்துரு வந்தான்.

என்ன பண்ணிட போறாங்க நீங்க பாருங்க பா! சந்துரு நீ அப்பாவை பாரு, வக்கீல் வெங்கடாஜலபதி கிட்ட பேசு எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல என சொல்லி கொண்டே சென்றான் ரகு.

முருகேசன் உதட்டை வளைத்து சிரித்தபடி ரகுவை பிடித்து சென்று விட்டான்.

வெங்கடாஜலபதி ஒரு கேஸ் விடயமாக சென்னை சென்றிருந்தார். அவர் திருச்சி வருவதற்கு இரவு ஆகி விட.. அதற்குள் சதாசிவம் நேராக அரசு மருத்துவ மனையில் பரத்தின் மேல் கேஸ் கொடுத்த ஆளை சந்திக்க சென்றார்.

அப்பா நீங்க எதுக்கு? நானே முடிச்சிருப்பென். என சந்துரு சொல்ல..

நீ கிழிச்ச!! ரகு உள்ளே இருக்கான். என் பையன் ஜெயிலில் இருக்கான். சும்மா விட மாட்டேன் யாரையும்.. இருக்கு அந்த இன்ஸ்பெக்டர்க்கு. என கோபத்துடன் நுழைந்தார்.

அவரை பார்த்ததும் வேகமாக எழுந்த பாஸ்கரன். அய்யா என்னை வந்து மிரட்டி எழுதி வாங்கிட்டு போயிட்டார் அந்த இன்ஸ்பெக்டர். நான் சத்தியமா வேணாம்னு தான் சொன்னேன். என்னை கஞ்சா கேசுல உள்ள தள்ளிடிவேன்னு மிரட்டினார். அதான் வேற வழியே இல்லாம நான் பரத் தம்பி தான் பண்ணாருன்னு சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுக. நான் புள்ளை குட்டி காரன் என கரைந்தார் பாஸ்கர்.

அப்பா எதுக்கு பா அந்த இன்ஸ்பெக்டர் இப்படி பண்றான்? வந்து 15 நாள் கூட ஆகல நம்ம கிட்ட நேரடியாக மோதுறான். அப்பா இவனை சும்மா விட கூடாது என சந்துரு கூற..

சதாசிவம் அவனிடம் அவனுக்கு குடும்ப செலவுக்கு 25,000 கொடுத்திடு என்று விட்டு நகர்ந்தார்.

சந்துரு நேராக பாஸ்கரனின் பக்கம் வந்து 10000 கொடுத்து விட்டு உடம்பை பார்த்துக்க என்று விட்டு புறப்பட்டான். சீக்கிரம் நிறைய பணம் சேர்த்து தனியாக தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாக்க வேண்டும் என்பது தான் பரத் மற்றும் சந்த்ரு இருவரின் எண்ணமும். அதுவும் அப்பா மடையை போடுவதற்குள்.

வண்டிய நேராக ஸ்டேஷனுக்கு விடு என சதாசிவம் கூற வண்டி நேராக ஸ்டேசன் சென்றது.

வெங்கடாஜலபதி பதட்டத்துடன் அருகில் வந்தவர் வேணாம் சதா நீ வீட்டுக்கு போ! உள்ளே போனால் அந்த ஆளு நிறைய கேசு ரகு மேலே போடுவேன்னு நிக்கிறான். என்னை நிக்காத போன்னு துறத்துறான். நம்மால ஒண்ணுமே பண்ண முடியாது FIR போட்டுட்டானா என்னன்னு சொல்ல மாட்டின்றான் Footage வச்சு மிரட்டுறான் என கூறினார்.

ஒரு தடவை பார்த்துக்கிறேன் என உருக்கத்துடன் சதா கேட்க..

வேணாம் பா! சொல்றத கேளு. சந்துரு கூட்டிட்டு போ என அனுப்பினார். வலுகட்டாயபடுத்தி

சதாசிவம் சோர்வுடன் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்க..

சீதா நேராக அவரின் முன் வந்து எங்கே அங்கிள் அவர்? மதியம் வந்திடுவேன்னு சொல்லிட்டு போனார்!! எங்கே அங்கில் அவர் பின்னாடி வராரா என வெளியே சென்றாள் சீதா.

சுமதி கவலையுடன் ஒரு பக்கம் நிற்க.. பாக்கியம் கடவுள் முன் அமர்ந்து தன் பேரனை விடுவிக்க வேண்டி கொண்டிருந்தார்.

எங்கே அங்கிள் அவர்? என சீதா மீண்டும் கேட்க..

அவன் வரல மா என சதா சிவம் கலக்கத்துடன் கூறினார்.

சீதா..?

ரகுவரன்..?

தொடரும்..
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
136
Achooo Raghu va save Pannunga Sister paavam Seetha and Raghu😔. Yetho mun virothama irukum pola yaar intha Murugesan Police theriyalaiyeh ippadi plan pottu pazhi vaanga paarkaraan😌.
 
Top