ரகுவரன் இப்போ வரமாட்டான் சீதா. என சதாசிவம் கூறி விட..
என்னாச்சு அவருக்கு? அவரை போயி கூட்டிட்டு வாங்க!! என சீதா தேம்பி அழ..
சுபா வந்து அவளை பிடித்து கொண்டாள். சுமதி கோபத்துடன் என்ன டி உனக்கு மட்டும் தான் என் பிள்ளை மேலே அக்கறை இருக்க மாதிரி பண்ணிட்டு இருக்க? உன்னோட நடிப்பைய எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்க. என் புருஷனுக்கு எப்போ என்ன பண்ணனும்னு தெரியும். பெத்தவ என்னை விட உனக்கு அக்கறை இருக்குன்னு காட்டிக்கறயா? என அவர் எகிறி கொண்டு பேச வர..
சுமதிஇஇஇ!! என சத்தமாக அழைத்தார் சதாசிவம்.
சிந்து, பரத், சந்துரு, உஷா, சுமதி, சுபா என அனைவரின் பார்வையும் திடுக்கிட்டு பார்த்தது.
யாரும் சீதாவை எதுவும் சொல்ல கூடாது. சுமதி நீ வாயை அடக்கிக்கோ! அவ்ளோ தான் சொல்லிட்டேன். சுபா!! நீ உன்னோட பெரிய அண்ணி கூடவே இரு. நான் சீக்கிரமே ரகுவரன கூட்டிட்டு வருவேன் மா சீதா. என்று விட்டு வெளியே சென்றார்.
சுமதி அழுகையும் முறைப்புமாக நின்றிருக்க.. அழுது கொண்டிருக்கும் சீதாவை மேலே அழைத்து சென்று விட்டிருந்தாள் சுபா.
சந்துரு என ஆளுமையுடன் அழைத்தார் சதாசிவம்.
அப்பா என பதட்டத்துடன் சென்றான்.
பரத் இங்கே இப்போ வரணும்! என வேஷ்டியை மடித்து கட்டினார். சதாசிவம்.
சந்துரு எட்சிழை கூட்டி விழுங்கியவன். வேறு வழி இல்லாமல் தன் அண்ணனை அழைத்து வந்தான்.
அப்பா!! என பரத் பேச வர.. ஓங்கி விட்டார் ஒரு அரை. கிருட்டு கிறுட்டு என சுத்தி கீழே விழுந்தான் பரத்.
சந்துரு எதுவும் பேசாமல் அமைதியுடன் இருக்க..
ப்பா என நடுக்கத்துடன் எழுந்தான் பரத்.
உன்னை வெட்டி போட்டுடுவேன் நாயே!! என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நீ? அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டியா? நீ அந்த ஆளை அடிச்சது ரெக்கார்ட் பண்ணி மிரட்டினால் நீ என்ன டா பண்ணுவ?
அப்பா அது வந்து என பரத் தயங்க..
இன்னொரு கன்னத்தில் அறைந்தவர். குடிக்கிற? ஹான் குடிச்சிட்டு இருக்க? உன் கிட்ட தொழில் சுத்தம் இருக்கா?
ப்பா பிளீஸ் பா நான் எதோ தெரியாம..
ச்சீ வாய மூடு ராஸ்கல். உன்னால டா!! உன்னை காப்பாத்த ரகு உள்ளே போயிட்டான். அந்த பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? என சதாசிவம் பரத்தின் சட்டையை பிடித்து உழுக்கினார்.
ப்பா நான் வந்து!!
டேய் வாய மூடு!! இனி நீ எதையும் பண்ண கூடாது. நீ புறப்படு!! நம்ம உரம் மில்லுக்கு போயிடு. உன் பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு போ! இனி அந்த வேலைய பார்த்துக்கோ!
அப்பா! எதுக்கு பா! அப்பா பிளீஸ் பா!! என அவன் கெஞ்ச..
முடியாது பரதா!! உன்கிட்ட பொறுப்பு சுத்தமா இல்ல. நீ கிளம்பு இனி உன்னோட வேலையை சந்துரு செய்யட்டும் என்று சதாசிவம் சொன்னதும். சந்துருவுக்கு சந்தோஷம் பொங்கி கொண்டு வந்தது. ஆனால் வழிகாட்டி கொள்ளாமல் நின்றிருந்தான். அவன் மனதில் அப்போ அடுத்த சதாசிவத்தொட இடம் எனக்கு தான்.. என்றவன் நினைவில் சட்டென ரகுவரன் வர.. எதுவும் பண்ணனும். இங்கே நான் தான் எல்லாமாக இருக்க வேணும் என யோசனையில் மூழ்கினான் சந்துரு.
அப்பா!! இல்ல பா இனி நான் சரியா இருக்கேன் பா! உங்களை மீறி இனி நான் எதுவுமே செய்ய மாட்டேன். என்னை நம்புங்க பா பிளீஸ் பா என கெஞ்சினான் பரத்.
சதாசிவம் எதுவும் பேசாமல் நின்றிருக்க..
அப்பா!! என அழுதே விட்டான் பரத்.
வெளியே போயிடு பரதா டேய் அவனை வெளியே போக சொல்லு என சதா சிவம் பொங்கினார்.
பரத்து வா வந்திடு!! அப்புறம் பேசிக்கலாம் வா என தன் அண்ணனை அழைத்து சென்று விட்டான்.
இப்படி காலையில் இருந்து எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் என்ன அர்த்தம் சீதா? நீ கவலை படாத!! கண்டிப்பா அண்ணன் வந்திடும். சாப்பிடு. என சுபா எவ்வளவோ கெஞ்சி பார்த்தாள். ஆனால் சீதா அசையவே இல்லை. சுபா முயன்று தோற்று போனவள். தனது பாட்டிக்கு அழைத்தாள். அனைத்து விவரங்களையும் கூறி முடிக்க..
என்ன கண்ணு சொல்ற? நான் உடனே புறப்பட்டு வரேன். அதெல்லாம் ஒன்னும் என்னோட ராமனை பண்ணிட முடியாது நீ சீதாவுக்கு தைரியம் சொல்லு. நான் தரிசனத்தை முடிச்சிட்டு வரேன் என போனை வைத்தார் பாக்கியம். அவர் காசி, பூரி, கோவில் யாத்திரை சாமி தரிசனம் ஒரு ஏஜென்சி மூலமாக தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்.
அடுத்த நாள் அரசு விடுமுறை ரகுவரனை வெளியே எடுக்க வெங்கடாஜளபதி எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. ரகுவரனை பார்க்க கூட அந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் அனுமதி கொடுக்க வில்லை. இனி என்ன செய்வது என தெரியாமல் அந்த நாள் ஓடியது.
சீதா ஒரு வாய் பச்சை தண்ணீர் கூட இறங்காமல் வீட்டில் கிடந்தாள். வீடு அவ்வளவு அமைதியாக இருந்தது.
பரத் வேதனையுடன் சாலை வீட்டின் பக்கம் சென்றான். என்ன பரத் ரகு எப்போ வெளியே வருவான். எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல என கிரி உருக்கமாக பேச..
நடந்த அனைத்து விவரங்களையும் கூறினான் பரத். அவன் முகம் கவலையுடன் இருக்க.. நீ கவலை படாத இது திட்டம் போட்டு பண்ண மாதிரி இருக்கு. அப்படி எல்லாம் ரகு உன்னை விட்டுட மாட்டான். முதல்ல அவன் வெளியே வரட்டும் அப்புறம் பார்க்கலாம். இந்த நாள் எப்போ முடியும்னு இருக்கு என கிரி ஆறுதல் கூறினான்.
அந்த நாள் மொத்தமும் அறையில் ஆமை போல கீழே கிடந்தவள் எழுந்து கொள்ளவே இல்லை. படுத்து விட்டாள். சுமதியும் ஒரு புறம் சோகமாக இருக்க.. மாளவிகா தான் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. நண்பகல் பத்து மணிக்கு விடுவிக்க பட்டான் ரகுவரன். முருகேசன் எதிரில் அமர்ந்து கால் மேல் கால் போட்ட படி பார்த்தார்.
என்ன பார்க்கிற? கேஸ் போடவா? என மிரட்டினான் முருகேசன்.
ரகுவரன் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றான்.
சதாசிவம் தன் மகனை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து விட்டார். முகமெல்லாம் வீங்கி கண்ணம் கடுகடுவென இருந்தது.
ரகு என்னாச்சு டா? உன் மேலே கைய வச்சாங்களா? என பொங்கி கொண்டு வந்தார்.
வேணாம் பா வீட்டுக்கு போலாம் வாங்க என அழைக்க.. வெங்கடாஜளபதி அனைத்து வேலையையும் முடித்து விட்டு வந்தார்.
இல்ல ரகு நான் அவனை சும்மா விட மாட்டேன் என சதாசிவத்தின் முதுமை கோபம் இப்பொழுது துளிர் விட்டு இளமையாக மாற.. வேணாம் பா வாங்க என மீண்டும் கட்டு படுத்தினான் ரகு.அதற்குள் அங்கு வந்த வெங்கடாஜளபதி வேணாம் சதா சொல்றத கேளு! இப்போதைக்கு இறங்க வேணாம். நானும் இவனை சும்மா விட மாட்டேன். நம்ம வேகம் காட்ட வேணாம் விவேகம் காட்டலாம் என கட்டு படுத்தி அழைத்து சென்றார்.
ரகு என தன் மகனை இறுக்கி அணைத்து கொண்டார் சதா சிவம். அவருக்கு எல்லாமே ரகுதான். இவன் பிறந்ததும் தான் சதாசிவம் இழந்த சொந்த வீடு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் முதல் வாரிசு. சொல்லவா வேண்டும். அதிகமான பாசம் அனைத்தும் மகன் மேல்.
ரகுவரனின் நினைப்பு முழுவதும் சீதாவை சுற்றி கொண்டிருக்க... .
இதோ வீட்டுக்கு வந்ததும் வேகமாக மாடி படியை நோக்கினான். அதற்குள் பரத் முன்னால் வந்தான். அண்ணா என உருக்கமாக அழைத்து காலில் விழ சென்று விட்டான்.
பரத் என்ன பண்ற நீ? என தன் தம்பியை அணைத்து கொண்டான்.
ரகு அவனை விடு! அந்த உதவாக்கரை நாயால தான் எல்லாமே!! என பாய்ந்து கொண்டு தடுத்தார் சதா சிவம்.
பரத் வேதனையுடன் எல்லாமே நான் தான். என்னால தான் அண்ணா எல்லாத்துக்கும் காரணம் என்றான்.
ரகு என சுமதி தவிப்புடன் ஓடி வந்தார். சிந்து, உஷா, என அனைவரும் வந்தார்கள்.
ரகு தன் தந்தையின் பக்கம் திரும்பியவன் அப்பா பரத்தை எதுவும் சொல்லாதீங்க. அந்த போலீஸ்காரன் பிளான் பண்ணி பண்ணிருக்கான். அந்த ஆள் நம்ம கிட்ட அவன் பெரிய ஆளுன்னு காட்ட இப்படி பன்னிருக்கான். எனக்கு என்னோட தம்பி தான் முக்கியம். நீங்க பரத்தை எதுவும் சொல்லாதீங்க என்று தடுத்தான்.
என்ன டா ரகு முகமெல்லாம் கன்னி போயி வீங்கி கடக்குது. கையில் இரத்த கட்டு!! அய்யோ என் பெத்த வயிறு பத்தி எரியுது என குமுறினார்.
ஒன்னுமில்லை மா நான் நல்லாருக்கென். ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? அம்மா எனக்கு பசிக்குது. நீங்க சமைச்சு வைங்க! அப்பா நம்ம சேர்ந்து சாப்பிடலாம் பரத் நீ போ உள்ளே. நான் குளிச்சிட்டு வரேன் என மேலே சென்று விட்டான்.
சுமதி சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்து கொண்டு என் பையன் பசிக்குதுன்னு கேட்கிற அளவுக்கு வந்துட்டான். அய்யோ இந்த ரெண்டு நாளும் சாப்பிடாம எலும்பும் தோலுமாக ஆகிட்டானே! ஹே வாங்கடி வந்து ஆளுக்கி ஒரு வேலை செய்யுங்க. இன்னும் பத்து நிமிசத்தில எல்லாத்தையும் டைனிங் டேபிளில் ரெடியா இருக்கணும் என வேகமாக சென்றார்.
ரகுவரன் அறை கதவை திறக்க.. சுபா வெளியே வந்தவள் அண்ணா வந்துட்டீங்களா? என்ன அண்ணா முகத்துல என பதட்டத்துடன் கேட்டாள்.
ஒண்ணுமில்ல என ரகு சமாதான படுத்த
சீதா அத் அது அண்ணி ரெண்டு நாளாக சாப்பிடாம தண்ணி கூட குடிக்காம அழுதிட்டு இருக்கா போயி பாருங்க என்று விட்டு கீழே சென்றாள்.
ரகு..?
சீதா திட்டமாக இருந்தாள் ஒரு முடிவில். அது என்ன முடிவாக இருக்கும்?
தொடரும்..