Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
430
எப்படி சமாளிக்க போகிறோம் என உள்ளே நுழைந்தான் ரகு.

வெறும் தரையில் உடலை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள் சீதா.

ரகுவரன் தனது நிலையை பார்த்தான். இப்படியே போனால் சரிவாரது என தோன்ற உள்ளே சென்று அவசர அவசரமாக குளித்தான்.

சீதா!! என மெல்ல அருகில் நெருங்கினான்.

அவனது குரலை கேட்டதும் எழுந்து அமர்ந்தாள். முகத்தை பார்த்ததும் மொத்தமாக நொடிந்து போனாள். என்னாச்சு கண்ணம் வீங்கி இருக்கு? கண்ணு வீங்கி இருக்கு? ஏன் என்னை விட்டு போனீங்க? ஏன் பொய் சொன்னீங்க? ஏன் இப்போ வந்தீங்க? என சரமாரியாக கேள்வியை கேட்பாள் என பார்த்தால் அவனை வெற்று பார்வை மட்டுமே பார்த்தாள்.

சீதா!! எதுவும் பேசுடி!! என ரகு அவளை குலுக்க..

எதுவும் பேசாமல் எழுந்து பாத்ரூம் சென்று கதவை அடைத்து கொண்டாள். அவள் சென்ற இடைவெளியில் ரகுவரன் சீதாவின் பெற்றோருக்கு அழைத்து பேசினான். தினமும் பேசுவான் ஆனால் இந்த இரண்டு நாட்கள் பேசவில்லை. அவர்களின் அழைப்பும் போனில் வந்திருந்தது.

ஒரு மணி நேரமானது சீதா இன்னும் வெளியே வரவே இல்லை. என்னாச்சு இவளுக்கு? என நினைத்தவன் கதவை தட்டினான்.

சீதா கதவை திற? சின்ன குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்காத!! என அழைத்தான்.

கதவை திறந்து கொண்டு வந்தவள் படுக்கையில் அமர்ந்தாள்.

ரகுவரன் அவளின் அருகில் வந்து அமர முகத்தை திருப்பி கொண்டாள்.

ஒரு பெரு மூச்சை விட்டவன். சாரி எனக்கு புரியுது உன்னோட நிலமை இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன். பேசு டி!! ரெண்டு நாளும் எனக்கு உன்னோட நினைப்பு தான் சீதா உன்னை பார்க்க தான் ஓடோடி வந்தேன்.

உங்க விளக்கம் எனக்கு தேவையில்லை பிளீஸ் நகருங்க..

சீதா என அவளை அணைத்து கொண்டான் இறுக்கமாக...

விசும்பியபடி அப்படியே அமர்ந்திருக்க.. சீதா குட்டி பிளீஸ் டி!! இந்த தடவை இப்படி ஆகி போச்சு. இனி இப்படி நடக்காத மாதிரி நான் பார்த்துக்கிறேன். என ரகுவரன் எவ்வளவோ சமாதானம் செய்ய.. அவள் பிடி கொடுக்கவில்லை.

சீதா பிளீஸ் டி!! என்ன பண்ணனும் சொல்லு! உன் காலில் விழவா?

நீங்க என்ன தப்பு பண்ணீங்க? போலீஸ் எதுக்கு உங்களை பிடிச்சிட்டு போனாங்க?

அது வந்து நான்!! என ரகுவரன் ஆரம்பிக்க.. அவனது கையை எடுத்து சீதா தன் தலை மேல் வைத்து கொண்டாள். இப்போ சொல்லுங்க? நீங்க என்ன பண்ணீங்க? எதுக்கு உங்களை போலீஸ் பிடிச்சிட்டு போனாங்க!! பொய் சொன்னா நான் செ..

ப்ச் அடி வாங்க போற நீ!!

"அப்போ சொல்லுங்க" என திட்டமாக பார்த்தாள்.

ரகுவரன் கையை எடுக்க முயற்சி செய்ய.. எடுக்க கூடாது. கைய எடுக்க கூடாது. சொல்லுங்க!! என்று அதட்டினாள்.

ந.. நான் எதுவும் பண்ணல பரத் தான்..

அவர்?

பரத் மேலே பொய் கேஸ் போட்டு அப்பாவை அசிங்கமா பேசிட்டாங்க! அப்பாவை பிடிச்சிட்டு போறேன்னு வந்தாங்க! அதான் அதுக்கு பதில் நான்!! நான்!! என இழுத்தான் ரகுவரன்.

சீதா கோபத்துடன் அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணீங்க? இதுக்கு நாங்க அவமான பட்டு செத்திருப்போம்.

ஹே என்ன டி இப்படி எல்லாம் பேசுற?

வேற என்ன சொல்ல சொல்றீங்க? இன்னிக்கி தம்பிக்காகவும் உங்க அப்ப்பாவுக்காகவும் நீங்க போறீங்க? அப்போ எனக்காக யார் இருப்பா? எல்லார் குடும்பமும் நல்லா தான் இருக்கு. ஆனால் நீங்க தான் இப்படி இருக்கீங்க? எனக்கு இந்த போராட்டமான வாழ்க்கை வேணாம். உழைச்சு சாப்பிடணும்.

"எங்க அப்பா கெட்டது செய்யல சீதா"

அவரு நல்லதே செஞ்சாலும் நீங்க அதை செய்ய வேணாம். எனக்கு என்னோட புருசன் வேணும். உங்களால வேலைக்கு போக முடியலன்னா நான் வேலைக்கு போறேன். என் கிட்ட படிப்பு இருக்கு. நம்ம இந்த வீட்ல இருக்க வேண்டாம். என்னை எங்கேயாவது கூட்டிட்டு போங்க. சின்ன வீடா இருந்தாலும் சரி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா அது சொர்க்கம் தான். என்றாள் சீதா.

ரகுவரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

நான் உங்க அப்பா கிட்டறுந்து பிரிச்சு கூட்டிட்டு வரல. ஒன்னு இந்த கட்ட பஞ்சாயத்தை நிறுத்தி உங்க அம்மா அப்பாவை நம்ம கூட கூட்டிட்டு வாங்க எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.

"எங்க அப்பா அம்மா வர மாட்டாங்க. நேத்து வந்த நீ என்னை பிரிச்சு கூட்டிட்டு போறதாக நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க" என்றான் ரகுவரன்.

பேசிட்டு போகட்டும் எனக்கு அந்த நாலு பேர் பத்தி கவலை இல்லை. எனக்கு என் புருசன் தான் முக்கியம். என் கூட யாரு வந்தாலும் நான் அக்சப்ட் பண்ணிப்பேன். சீக்கிரம் முடிவை சொல்லுங்க.. என கையை எடுத்து விட்டாள் சீதா.

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.

ரகுவரன் அமைதியாக இருக்க..

சீதா தலையை பிடித்தபடி மயங்கி சரிந்தாள்.

சீதா!! ஹே சீதா என இதயம் படபடக்க கன்னத்தை தட்டியவன். வேகமாக தண்ணீர் தெளித்தான். சீதா என மீண்டும் மீண்டும் அழைத்தபடி உதட்டில் முத்தமிட்டான். அவள் அனத்தியபடி இரும்பிக் கொண்டே எழுந்தாள்.

சீதா என்ன டி ஆச்சு?

மீண்டும் இரும்பிக் கொண்டே என்ன முடிவு எடுத்திருக்கீங்க? என கேட்டாள் சீதா.

"நான் பண்றேன்!"

"எப்போ?"

அதுக்கு கொஞ்சம் டைம் கொடு! எல்லாத்தையும் சட்டுன்னு விட்டுட்டு வர முடியாது.

எவ்ளோ நாள் டைம் வேணும்?

உனக்கு படிப்பு முடியுற வரைக்கும் நம்ம இங்கே இருக்கலாம்.

"வேணாம்" என சீதா வெடுக்கென கூறி விட..

நான் சொல்றத கேளு சீதா. இப்போவே நான் வெளியே போகனும்னு நினைச்சா அவ்ளோ சீக்கிரம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திட முடியாது. கொஞ்சம் பொறு. அதுக்கு பிறகு நம்ம தனியா போயிடலாம். நீ சொன்ன மாதிரி நான் வேற வேலை செய்ய போறேன். நீ வேலைக்கு போக வேணாம்.

"படிப்பு முடிய இன்னும் ஒரு வருசம் இருக்கே!"

பிளீஸ் சீதா!! இந்த ஒரு வருடத்துக்குள் சுபாவுக்கு கல்யாணம் பண்ணிடுவேன்னு அப்பா சொன்னார். இப்போ போய் நான் இது பத்தி சொன்னால் அம்மாவும் அப்பாவும் கொஞ்சம்.. நீ புரிஞ்சுக்கோ பிளீஸ்!! நீ சொல்றது சரி தான். நான் உன் கூட வரேன். அதுல எந்த மாற்றமும் இல்ல. நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன்." என அவன் பார்க்க..

சீதா ஒரு பெரு மூச்சை விட்டவள். சரி ஓகே ஆனால் ஒரு கண்டிசன்.

என்ன? என முத்தமிட அருகில் நெருங்கினான்.

இருங்க என அவனை தடுத்தவள். இனி நீங்க போலீஸ் படி ஏற கூடாது. இந்த கட்ட பஞ்சாயத்து பண்ண போக கூடாது. வேற வேலை பண்ணுங்க! ஆமா நீங்க என்ன படிச்சிருக்கீங்க?

உனக்கு என்ன தோணுது?

பள்ளி கூட வாசல் பக்கமே நீங்க போனதில்லைன்னு தோணுது. என்றாள் சீதா.

அப்படியா? நீ சொல்றதும் சரி தான்!

இல்ல இல்ல அன்னிக்கு உங்க போலீஸ் பிரென்ட் நீங்க ஸ்கூல் படிச்சதா சொன்னாரு. அப்படி பார்த்தால் நீங்க 10 th fail அப்படி தான..

எப்படி கரெக்டா கண்டு புடிச்சிட்ட? என புருவம் தூக்கினான் ரகுவரன்.

ம்ம் என வேகமாக அவனை அணைத்து கொண்டாள்.

அதனுடன் கண்களில் நீர் கொட்டியது. முகமெல்லாம் சிவந்து போனது.

"நான் எனக்கு ஒண்ணுமில்ல டி!"

"நீங்க என்னை பத்தி யோசிக்கவே இல்லல்ல!!"

உன்னை பத்தி யோசிச்சதால தான் நான் அமைதியா இருக்கேன். எந்த வம்புக்கும் போறதில்லை.

"இதென்ன? சிவப்பா வீங்கி இருக்கு? உங்களை அடிச்சாங்களா?"

இல்ல என ரகு அவளை சமாதானம் செய்ய முன் வர..

அவனை நடுக்கத்துடன் இறுக்கி அணைத்து கொண்டாள்.

சாப்பிட போலாம் வா!

கீழயா!! நான் வரல உங்க அம்மா என்னை திட்டுவாங்க.

எதுக்கு திட்டுவாங்க?

உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கல! என முகத்தை திருப்பி கொண்டாள் சீதா.

எனக்கு புடிச்சா போதும் வா போலாம் என அழைத்து சென்றான் உணவுக்கு.

மாளவிகா வந்துட்டாளே பிரச்னைக்கு.. கூடவே வயிற்றை நிரப்பிக் கொண்டு.

தொடரும்..
 

Usha

Member
Joined
Oct 8, 2024
Messages
79
சூப்பர் இந்த மாளவிகா ஏதும் பண்ணுங்க
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
140
Achooo Raghu and Seetha va mattum pirichidatheenga Sister please😖😖😖😔.Intha Malavika yeppadiyavathu thurathi viddunga Sis😒.
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
96
Vayitha nirappittu na saptu dhaane vandha?
 
Top