இப்படியெல்லாம் செஞ்சா இவனை நான் கொண்டாடுவேன்னு நினைச்சிட்டு இருக்கானா? என்னைக்கும் இவன் என்னோட மனசை மாத்த முடியாது. என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சீதா.
(அன்று) சீதா கல்லூரியில் இருந்து நேராக ஜுஸ் சாப் சென்றாள். கிஷோர் அவளை பார்த்ததும் வந்துட்டியா சீதா! ரொம்ப தேங்க்ஸ் என்னோட உயிரை காப்பாத்தி இருக்க! வா என உள்ளே லாஸ்ட் டேபிள் பக்கம் பார்வையை செலுத்தினான்.
யார் என்னை கூப்பிட்டாங்க? எதுக்கு என்னை கூப்பிட்ட? நீ தான கூப்பிட்ட? வாங்கினது பத்தலயா என பற்களை கடித்தாள் சீதா.
வந்தாச்சா? என மிடுக்குடன் ஒரு குரல் கேட்க.. சட்டென திரும்பி பார்த்தாள் சீதா.
சார் நீங்க கொடுத்த பேப்பரை சீதா கிட்ட கொடுத்துட்டேன். அதே போல அவங்களும் வந்துட்டாங்க. நான் கிளம்புறேன் என்று விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டான் கிஷோர்.
சீதா தனக்கு எதிரில் இருக்கும் ரகுவரனை பார்த்து என்ன அண்ணா? எதுக்கு வர சொன்னீங்க? என கேட்டாள்.
"உன்னை பார்க்கணும்னு தோணுச்சு! அதான் வர சொன்னேன். உன்னோட போன் கொடு!" என ரகு ஆர்ப்பாட்டமே இல்லாமல் கேட்க..
"நீங்க எதுக்கு என்னை பார்க்கணும்? என்கிட்ட போன் இல்ல" என முகத்தை சுழித்து கொண்டு அவ்விடத்தை விட்டு அவள் நகர..
அவளுக்கு முன்னால் தடிதாண்டவராயன் போல நான்கு குண்டான்கள் வந்து நின்றார்கள்.
சீதா அவர்களை மிரட்சியுடன் பார்க்க, அண்ணா இன்னும் பேசி முடிக்கல அண்ணி! நீங்க அண்ணனை பார்த்து பேசிட்டு போங்க என்றான் கிரி.
அண்ணியா? யாருக்கு நான் அண்ணி? புல்ஷிட்ஸ் என மூக்கு நுனி சிவக்க கோபமாக திரும்பி ரகுவரனை பார்த்தாள்.
இரண்டு கண்களையும் சிமட்டியபடி "ம்ம் உனக்காக மாதுளை ஜுஸ்" என கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் ரகு.
கைகளை இறுக்கி மடக்கியவள் வேகமாக அவன் பக்கம் சென்று, "இவங்க எல்லாரும் என்ன சொல்லிட்டு இருக்காங்க!"
"சரியா தானே சொல்லிருக்காங்க!! வா வந்து ஜுஸ் குடி!"
"உங்களுக்கு என்ன பைத்தியமா? எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணீங்கன்னு சிரிச்சு பேசினேன் பாரு என்னை எதால அடிக்கிறதுன்னு தெரியல"
ரகு எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்தான்.
"நான் எந்த பிரச்னைக்காக உங்க கிட்ட வந்தேனோ அந்த பிரச்சனையை இப்போ நீங்க கொடுத்திட்டு இருக்கீங்க? இது உங்களுக்கே நல்லா இருக்கா அண்ணா!"
நான் அண்ணா இல்ல உன்னோட வருங்கால புருசன்! நீ இனி ஃபிக்ஸ் ஆகிக்கோ! இனி உன்னை யாரும் ஃபாலோ பண்ண மாட்டாங்க. யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்க. ஏன்னா நீ ரகுவரன் ஆளு! என்று விட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்தான்.
"உங்களை பத்தி நான் போலீசில் கம்ப்லைன்ட் பண்ண போறேன். தேவையில்லாத வேலை பண்ணாதீங்க! இனி என் பக்கத்தில் வந்து தலையிட வேணாம்." என்றாள் சீற்றத்துடன்..
ரகுவரன் சிரித்து கொண்டே யாருக்கோ போன் செய்தான்.
எதிரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ் குமார் என்ன மச்சி? என்ன விசயம்? எதுக்கு டா வர சொன்ன? என கேட்டபடி வந்தான்.
சீதா அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க, ரகுவரனின் பார்வை சீதாவின் மீது தான் இருந்தது.
மச்சி சீதா மேலே ஒரு கண்ணு வச்சுக்கோ! யாராவது பின்னாடி என ரகு சொல்ல வர, மச்சான் நீ இதை சொல்லனுமா என்ன? நான் பார்த்துக்கிறேன் டா! வணக்கம் தங்கச்சி மா! என் பேரு சதீஸ் குமார். நானும் மச்சானும் சின்னவயசுல இருந்து நட்பு! நான், கிரி, ரகு மச்சான் மூணு பேரும் அவ்ளோ நெருக்கம். நீ ரொம்ப கொடுத்து வச்ச பொண்ணு தெரியுமா? என் மச்சான் இத்தனை வருஷம் என தொடர்ந்து பேச.. வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டாள் சீதாலட்சுமி.
எங்கு சென்றாலும் அண்ணி! அண்ணி என ஒரு ரவுடி படையே சீதாவை பார்த்து தலை வணங்கியது. அவளுக்கு கோபமும் ஆத்திரமும் ஒன்று சேர.. வேகமாக சுபாவிடம் சென்று அனைத்தையும் கூறினாள்.
சாரி அண்ணி! என சுபா பதில் கூற..
ஹே நீயுமா? உங்க எல்லார் மனசுலயும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க அண்ணனுக்கு அறிவு இருக்கா இல்லையா? என்னோட வயசு என்ன? உன் அண்ணன் வயசு என்ன? என்னோட வேவ் லெந்த்ல இருக்க ஒரு வெல் எடுகேட்டட் பெர்சன் எல்லா விதத்திலும் எனக்கு பொருத்தமான ஒரு ஆள கல்யாணம் பண்ணிக்க தான் எந்த பொன்னும் நினைப்பா? உங்க அண்ணனுக்கும் எனக்கும் கிட்ட தட்ட பத்து வயசு வித்தியாசம்? மனசாட்சியே இல்லாம என்னை கட்டிக்கறேன்னு சொல்றாரு! என உச்சஸ்தானியில் கத்தினாள்.
சுபாவின் கண்களில் நீர் வழிந்தது. ஒழுங்கா உங்க அண்ணன் கிட்ட சொல்லி புரிய வை! என்று விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சீதா.
அன்றில் இருந்து சீதாவின் பின்னால் யாரும் சுற்றவில்லை. புதிதாக எந்த ஆடவனும் அவளை வட்டம் போடவில்லை அதே போல ரகுவும் அவளை நெறுங்கவில்லை. இப்படியே ஒரு வாரம் சென்றது.
கிரி ரகுவிடம் என்ன மச்சி இப்பல்லாம் பாப்பாவை பார்க்க போறதே இல்ல! என்னாச்சு? சுபா பொண்ணு எல்லாத்தையும் சொல்லுச்சு டா! இப்போ என்ன பண்றது?
"எதுவும் பண்ண வேணாம். அப்படியே விடுங்க"
விட்டுடுங்கன்னு சொன்னா? அதுக்கு அர்த்தம் என்ன? நீ சீதாவை விட்டு கொடுக்க போறியா..
ரகுவரன் புன்னகைத்தபடி சீதா எனக்கு தான். இப்போதைக்கு தள்ளி நிக்கிறேன். அவளை சேர எல்லா வேலையும் பண்ணிட்டேன். என மீசையை முறுக்கினான்.
அடுத்த மூன்று நாட்களில் பெரிய சிக்கலில் மாட்டி கொண்டார் சுந்தர மூர்த்தி.
டாடி என்ன பிரச்னை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? என சீதா கேட்க ஒண்ணுமில்ல தங்கம் என மலுப்பி விட்டார்.
விஜயாவுக்கு மனதே கேட்கவில்லை. என்னங்க ஆச்சு! சீட்டு பணம் என்னோட அக்கவன்ட்ல இல்லையே! பேங்க்குக்கு நீங்க மாத்தலயா? என கேட்டார்.
அது வந்து விஜயா! ஒரு சின்ன பிரச்னை ஆகி போச்சு.
என்ன ஆச்சு?
பணத்தையெல்லாம் சங்கரு டிரேடிங்ல போட்டு ரெண்டு மடங்கு பண்ணி தரேன்னு வாங்கினான் டி! அதுல எல்லா பணமும் திவால் ஆகி போச்சு. இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. என கைகளை பிசைந்தார்.
என்னங்க சொல்றீங்க? என தலை தலையாக அடித்து கொண்டார் விஜயா. ஒரு காசா ரெண்டு காசா! கிட்ட தட்ட ஒரு கோடிக்கு மேல் இருக்கும்.
இல்ல எதுவும் பண்ணி எல்லாத்தையும் சரி கட்டிடுவேன் என கூறியவர் அதற்கான வேலையில் இறங்கினார்.
ஏற்கனவே லோன் போட்டு வீடு கட்டியதால் அது லோனில் இருக்கிறது. சுந்தர மூர்த்தியின் கார் மற்றும் விஜயா, சீதா லட்சுமி இருவருக்கும் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய அனைத்து நகையையும் அடகு வைத்து 15 லட்சம் தான் புரட்ட முடிந்தது.
விஜயா வருத்தத்துடன் சீதாவுக்கு பொண்ணு கேட்டு வந்தாங்கன்னு சொன்னீங்களே! இது மாப்பிள்ளைக்கும் அவங்க குடும்பத்துக்கும் தெரிஞ்சா என்ன ஆகிறது? நம்ம பொண்ணை கட்டிப்பாங்களா? என வருத்தத்துடன் கேட்டார்.
சுந்தர மூர்த்தி உறுதியுடன் நான் பேராசை பட்டது உண்மை தான். ஆனால் அடுத்தவங்க குடியை கெடுக்கனுன்னு நினைச்சதில்லை. ஒன்னும் பிரச்னை இல்ல நான் போய் ஊரில் இருக்க ரெண்டு ஏக்கர் நிலத்தையும் வித்திட்டு வந்துடரேன் என புறப்பட்டார்.
ஒரு வாரமாகியும் சுந்தர மூர்த்தியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .
இதோ கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்க ஆரம்பித்தது வீட்டுக்கு வந்தார்கள் வாடிக்கையாளர் அனைவரும். சுந்தர மூர்த்தி 15 லட்சத்தை புரட்டி மிகவும் அவசர தேவையில் இருந்தவர்களுக்கு கொடுக்க.. அந்த விசயத்தை கேள்விபட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்ய ஆரம்பித்தார்கள் அனைவரும்.
விஜயா! எங்கே உன் புருசன்? வர சொல்லு? வீட்ல ஒளிஞ்சிட்டு இருக்கானா? வெட்கமே இல்லாம உன்னை பதில் சொல்ல சொல்லி அனுப்புறான். எங்க பணத்துக்கு என்ன பதில் சொல்ல போற! எங்களுக்கு பணம் வேணும் என ஆள் ஆளுக்கு கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
மா அப்பா எங்கே? என்னாச்சு அப்பாவுக்கு? மத்தவங்க பணத்தை அப்பா எடுத்திட்டு ஓடிட்டதா சொல்றாங்க? என்ன நடக்குது? அம்மா சொல்லுங்க என சீதா மற்றும் அவளின் தம்பி கௌதம் இருவரும் சரமாரியாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள்.
அப்பா பணத்தோட வரேன்னு சொல்லிருக்கார். நீங்க கவலை படாமல் இருங்க என சமாளித்த விஜயா தன் கணவன் சுந்தர மூர்த்திக்கு போன் செய்து கொண்டே இருந்தார்.
இங்கே நிலம் கொஞ்சம் பிரச்னையில் இருக்கு பாதி இடத்தை பக்கத்து காட்டு காரங்க சேர்த்து ஓட்டிகிட்டாங்க! நான் எல்லார் கிட்டயும் பணம் கேட்டு பார்த்துட்டேன். எல்லாரும் கைய விரிச்சிட்டாங்க விஜயா என கூறினார் சுந்தரமூர்த்தி.
இருக்கிறத வித்திட்டு வாங்கங்க! இங்கே எல்லாரும் வந்து அசிங்கமா பேசுறாங்க! எனக்கு சாகறாப்ல இருக்கு என கரைந்தார் விஜயா.
நான் சீக்கிரமே பிரச்னைக்கு தேவையான பணத்தை ரெடி பண்ணிட்டு வந்துடுவேன் விஜயா! எல்லாத்துக்கும் காரணம் நான் தான் டி! என்னை மன்னிச்சிடு என உருக்கமான குரலில் கூறியவர் போனை வைத்தார் சுந்தர மூர்த்தி.
சீட்டு போட்டு பணம் ஏமார்ந்த பாதி பேர் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்லைன்ட் கொடுக்க.. இன்னும் பாதி பேர் கட்ட பஞ்சாயத்து செய்யும் சதாசுவத்தை நாடினார்கள்.
அடுத்த நாள் காலை சீதாவின் வீட்டின் முன் சதாசிவம் அவரது ஆட்களுடன் வந்து நின்றார்.
நிகழ்காலத்தில்
நீ ரெடியா? என பின் கழுத்தில் முத்தமிட்டான் ரகுவரன்.
தொடரும்..