Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
425
நாளைக்கு சனிக்கிழமை உனக்கு காலேஜே லீவு விட்டுடுச்சு என ரகுவரன் சீதாவின் காதில் கிசுகிசுத்தபடி அவனது வேலையை ஆரம்பித்தான்.




சீதாவின் உதடு பிதுங்கி போனது. கொஞ்சம் கூட அவளுக்கு இது பற்றி நினைப்பே வரவில்லை. இப்படி ஆகி போச்சே!! என அவள் நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக முனக தொடங்கியது. அவனது கைப்பாவையாக இருந்தாலும் சீதாவின் உணர்வுகள் அவனுக்கு அடிமையாகி போனது.




கொஞ்சம் மெதுவா!! என திக்கியபடி அவள் சொல்ல..




நானும்... முயற்சி பண்றேன் ஆனால் முடியல!! என சொல்லி அவனது வேகத்தை கொஞ்சம் கட்டு படுத்தி கொண்டான்.




சீதா கண்களை இறுக்கி மூடி கொண்டாள். விடிய விடிய வேட்டை தொடர்ந்தது. அது தானே உண்மையும் கூட..




வழக்கம் போல பத்து மணிக்கு எழுந்தாள்.




மணி பதினொன்று தாண்டியும் சீதா அறையில் இருந்து வெளிவர வில்லை.




மதியம் இரண்டு மணி போல வீட்டுக்கு வந்தான் ரகுவரன்.




ஸ்படிக மாலையை கையில் வைத்து அமர்ந்திருந்த பாக்கியம் ரகுவரனிடம் ராமா! மதிய சாப்பாடு சாப்பிடுற நேரமா இது? என அதட்டினார்.




இல்ல ஆத்தா! கொஞ்சம் வேலை நான் போயே ஆக வேண்டிய கட்டாயம் அதான் என்றவன். அவனது அறையின் பக்கம் பார்த்தான்.




பாக்கியம் மீண்டும் பூஜை அறை பக்கம் திரும்பியவர் சட்டென நினைவு வந்தவராக.. காலைல நீ சாப்பிடலயா ராமா?




அது வேலை ஆத்தா! இன்னும் சாப்பிடல இப்போ சாப்பிடுறேன். என்றான் ரகு.




அப்போ சீதா எப்போ வந்து சாப்பிட்டது? நான் பார்க்கலயா? காலையில இருந்து இங்கேயே தானே இருக்கேன். எப்படி தெரியாம போகும்! என யோசித்து கொண்டிருந்தார்.




க்கும் அத்தை! காலையில் இருந்து உங்க செல்ல பேத்தி கீழே வரவே இல்ல என உணவை தன் மகனுக்கு எடுத்து வைத்தாள் சுமதி.




ரகுவரன் சட்டென எழுந்தான்.




என்ன டா ரகு! உட்காரு; அம்மா உனக்கு பிடிச்ச அத்தனையும் செஞ்சு வச்சிருக்கேன். என சுமதி பேசி கொண்டே செல்ல.




மா வரேன் இருங்க! என எதையும் கண்டு கொள்ளாமல் மேலே அவன் அறைக்கு சென்றான்.




ரகுவரா! என சுமதி சத்தமாக அழைக்க..




சுமதி எதுக்கு இப்போ அவனை கூப்பிடுற? என அதட்டினார் பாக்கியம்.




அத்தை அது வந்து! சாப்பிட உட்கார்ந்துட்டு எழுந்து போய்ட்டான் அதான் என தயங்கினார் சுமதி. பாக்கியத்தின் மேல் அவருக்கு மிகவும் பயம்.




"ராமன் வருவான் நீ போ!" என சுமதி அதட்ட.. எதுவும் பேசாமல் கிச்சன் சென்று விட்டார் சுமதி.




கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ரகுவரன்.




படுக்கையில் கிடந்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.




ரகுவரன் தாடியை நீவிய படி "காலையில் இருந்து நீ இன்னும் சாப்பிடலயா?"




"அது தூங்கிட்டேன்"




அதுக்கு இவ்வளவு நேரமா தூங்குவ? நீ பசி தாங்க மாட்டன்னு எனக்கு தெரியும். உனக்கும் சாப்பிடலன்னா தூக்கம் வராதுன்னு கூட எனக்கு தெரியும். தேவையில்லாம பொய் சொல்லாத! வா சாப்பிட போலாம் என ரகு அழைக்க..




என்னால வர முடியாது. என மறுத்து விட்டாள் சீதா.




என்ன வர முடியாதா? விளையாட்டு பண்ணிட்டு இருக்காத வா!!




முடியாது என உதடுகள் துடிக்க அவனை பார்த்தாள்.




ரகு அவளை பார்த்து முறைக்க.. எப்படி வர சொல்றீங்க? எனக்கு வெட்கமா இருக்கு என அழுதபடி முகத்தை மூடி கொண்டாள்.




ரகு ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தவன் அருகில் வந்து சீதா நான் என்ன பண்ணேன்? இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்க? எனக்கு அழற பொண்ணுங்களை சுத்தமா பிடிக்காது முதல்ல கண்ணை துடை வா சாப்பிடலாம் என அவளின் கையை பிடித்தான்.




என்னால கீழே வர முடியாது. எல்லாரும் முன்னாடியும் கேலி பொருளா நான் நிக்க விரும்பல என கண்களை வேகமாக துடைத்தாள்.




என்ன? கேலி பொருளா? உன்னை யாராவது இங்கே எதுவும் சொன்னாங்களா? என கோபமாக பார்த்தான் ரகுவரன்.




யாரும் எதுவும் சொல்லல! ஆனால் நான் போனால் சொல்லுவாங்க! பிளீஸ் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க என அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.




ப்ச் சீதா என்னாச்சின்னு சொல்லு! நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல என ரகுவரன் தவித்து போனான்.




சீதா அவனை கோபமாக பார்த்தவள். நாலு பேர் கைய காலை உடைச்சு வீச தெரியுறவருக்கு இது எப்டி தெரியும்? என கிண்டலாக கூறினாள்.




சீதா நிஜமாவே நீ சொல்றது எனக்கு புரியல. நீ முதல்ல எழுந்து வா! காலையில் இருந்து நீ சாப்பிடவே இல்ல. வா போலாம் என ரகுவரன் அவளின் முன் அமர்ந்தான்.




இன்னுமா நான் சொல்வது இந்த மனிதனுக்கு புரியவில்லை என கோபத்தில் சீதாவின் மூக்கு விடைக்க..




எப்படி இப்படி உங்களால் இருக்க முடியுது! விடிய விடிய.. ச்சீ சொல்லவே நாக்கு கூசுது நீங்க என்னை விட்டது காலைல பத்து மணிக்கு. அந்த நேரத்துல நான் வெளியே போனால் உங்க தம்பிகளோட மனைவிகள் உங்க அம்மா உங்க குடும்பம் மொத்தமும் என்னை பாத்து என முகத்தை மூடி கொண்டு அழுதாள் சீதா.




ரகுவரன் அழும் அவளை பார்த்து விட்டு வேகமாக வெளியே சென்றான்.




தேம்பி தேம்பி அழுதவள் அவன் சென்றதை பார்த்ததும் பசியில் வயிற்றை பிடித்து கொண்டு அப்படியே படுத்து கொண்டாள்.




ஒரு சில நொடிகளிலேயே கதவு திறந்தது. ரகுவரன் கைகளில் உணவு தட்டுடன் வந்திருந்தான்.




சீதா அயர்ச்சியுடன் பார்த்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள்.




ரகுவரன் அவளின் முன்னால் அமர்ந்து உணவை அள்ளி அவளின் வாய்க்கு கொண்டு வந்தான்.




சீதா கோபத்துடன் முகத்தை திருப்பி கொள்ள.. சரி வா எனக்கு தோணுது தட்டை எதிரில் வைத்தான்.




இதற்கு மேல் வாழை தண்டு வளைய கூட வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு சோர்வு பசி உடல் வலி என இருந்தவள் வேகமாக உணவு தட்டை எடுக்க..




ரகுவரன் சட்டென அந்த தட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட வந்தான்.




நானே சாப்பிட்டுக்குவேன்!




என்னோட இஷ்டம் நீ! என அவளின் வாய்க்கு அருகில் உணவை வைத்தான். வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டாள்.




ஒவ்வொரு சோற்று கவலங்களையும் வேக வேகமாக வாங்கி கொண்டாள். அவ்வளவு பசி சீதாவுக்கு.




சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.




விக்கல் வேறு வர.. தண்ணீரை அவளின் முன் நீட்டினான். இப்பொழுது தான் சீதாவின் கண்கள் பளிச்சென தெரிந்தது.




ரகுவரன் கொண்டு வந்த அனைத்து தட்டிகளையும் கீழே எடுத்துகொண்டு போயி சிங்கில் போட்டான்.




சுமதி, உஷா இருவரும் வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தார்கள்.




இதுக்கு தான் அந்த நாடககாரி மேலேயே இருந்துட்டா போல! இந்த வித்தையெல்லாம் எனக்கு தெரியலையே! என் பையனை எப்டி வளைக்கரா என்று சுமதி மனம் தகித்து கொண்டிருந்தது.




அத்தை பெரிய மாமா இன்னும் சாப்பிடல போல அந்த சாப்பிட்ட தட்டு உங்க பெரிய மருமகளுது போல என்றாள் உஷா.




சுமதி உஷாவை முறைத்து விட்டு ரகுவரா அம்மா சாப்பாடு ஊட்டி விடவா தங்கம் என அருகில் வந்தார்.




மா!! என அழைத்தான்.




சொல்லு தங்கம் நான் சாப்பாடு எடுத்திட்டு வரவா!!




மா சீதா மேலே படிக்கறா அதானால சுபாவை அவள் கூட மேலே சாப்பிட சொல்லுங்க. நான் இல்லாத நேரம் மட்டும் என்று விட்டு புறப்பட்டு விட்டான்.




உஷா வன்மத்துடன் நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டே, அத்தை அவள் உங்களை அடக்கி ஆள நினைச்சிட்டு இருக்கா போல. சாப்பாடு மேலே
போகனுமாம்! இன்னும் என்னென்ன கூத்து எல்லாம் நடக்குமோ தெரியல என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.




சுமதி ஒரு கணக்கை போட்டு கொண்டு நேராக தன் அண்ணனுக்கு அழைத்தவர். தன் அண்ணன் மகள்

மாளவிகாவை வீட்டுக்கு வர ஏற்பாடு செய்தார்.




இங்கே ரகுவரன் நேராக சீதாவின் முன் சென்றான்.




சீதா..?




தொடரும்...
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
76
Superrrrrrrrrr 👌👌👌👌 சிஸ் என்ன ஆச்சி டெய்லி போடுங்க கதை 🥺
 

Jeni Shiva

Member
Joined
Oct 29, 2024
Messages
93
Always super... You can't show your hatred until you understand the other party's situation... Sumathi needs to understand Seetha...can you please make that for me?
 
Top