Episode-14
கொஞ்ச நேரில் வர முடியுமா சத்ய தேவ்? என டாக்டர் கேட்க.. ஹான் டாக்டர் இப்போ உடனே வரேன் என சொல்லிய படி ரிதமிடம் வந்தவன் அவளின் முகத்தை பார்த்தான்.
நெற்றியை தேய்த்தவள் பிளீஸ் என்னை எதுக்கு இப்படி பார்த்திட்டு இருக்க? உன்னோட தங்கச்சி தூங்கிட்டு இருக்கா! வெளியே அந்த சின்ன நாய் (ருத்ரன்) இருக்கான். நல்ல வேளை நான் தப்பிச்சென். இவங்க இருக்க வரைக்கும் நீ பக்கத்தில் வர மாட்ட..எனக்கு நிம்மதி என வாய்க்குள் முனகினாள்.
கிச்சன்ல செய்வேன் டி! சோபாவில செய்வேன். அவங்க ரூம பூட்டிட்டு செய்வேன். என அவளின் உதட்டில் முத்தமிட்டு விட்டு சரி உனக்கு எதுவும் வேணும்னா சொல்லு நான் வாங்கிட்டு வரேன் என கிளம்பினான்.
இவனை…? என முனகிக்கொண்டே அமர்ந்திருந்தவழுக்கு அதிகமாக பசியெடுக்க அய்யோ பாப்பா பசிக்குதே வேகமாக கிச்சன் சென்றாள்.
கொக்கைன் ட்ரேசஸ் இருக்கு. அண்ட் ஹார்மோன் ஸ்டமுலேசன்.. அதாவது உடலுறவுக்கு மாத்திரை பயன்படுத்திருக்காங்க போல.. ரெண்டுலயும் மிக்ஸ் ஆகிருக்கு. என்றார் டாக்டர்.
ரெண்டா? என்ன டாக்டர் சொல்றீங்க? என சத்ய தேவ் திடுக்கிட்டு பார்க்க..
“ஆமா மிஸ்டர்! ரெண்டு ரிப்போர்ட் கொடுத்தீங்களே!”
சத்ய தேவ் தீவிரமாக யோசித்தபடி, “டாக்டர் நிலாவோட சாம்பில அண்ட் நான் இன்னிக்கி செண்ட் பண்ணதையும் சேர்த்து சொல்றீங்களா?”
எஸ் மிஸ்டர் சத்ய தேவ் என டாக்டர் இரண்டு ரிபோட்டையும் விவரித்து கூறினார். அதை கேட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக அவனது முகம் வெளுக்க தொடங்கியது. டாக்டர் ஒரு நிமிசம் என குறுக்கிட்டவன். அப்போ இது ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே ஆளால.. ஐ மின் நிலாவோட இந்த நிலைமைக்கு காரணம்… என சொல்ல வர..
No மிஸ்டர் சத்ய தேவ் அதை நம்ம அப்படி சொல்ல முடியாது. அது சம்மந்தபட்டவங்க கிட்ட தான் கேட்கணும். அண்ட் ரெண்டு பேருக்கும் ட்ரக் கொடுத்திருக்காங்கன்னு சொன்னேன். கொக்கைன் female sample ல இல்ல.. male bloodல தான் ட்ரேசஸ் இருக்கு. அந்த பொண்ணுக்கு may be தூக்க மாத்திரை கொடுத்திருக்கனும். Female கு எந்த stimulation drugம் கொடுக்கல.. என்றார்.
இப்போ இதுக்கு என்ன டாக்டர் தீர்வு? என்னோட சிஸ்டர்க்கு எதுவுமே நியாபகம் இல்ல. அண்ட் ருத்ரனுக்கு இதுல இருந்து எப்படி cure ஆகிறது? என சத்ய தேவ் பெரு மூச்சுடன் கேட்டான்.
ரெண்டு பேரும் கவுன்சிலிங் அட்டன் பண்ணனும். அவங்களோட மனதிடத்தை சுயகட்டுப்பாட்டை பொறுத்து தான் இது சொல்ல முடியும் நேரம் எடுத்துக்கும் நாள் மாதம் எவ்ளோ வேணும்னாலும் ஆகும். என்றார்.
கவுன்சிலிங்க வீட்டுக்கு வந்து கொடுக்க முடியுமா சார்! நான் அதுக்கு எவ்ளோ வேணாலும் பே பண்ணிடுறேன்.
டாக்டர் புன்னகையுடன் ஒன்னும் பிரச்னை இல்ல. வீட்டுக்கே வருவாங்க என்றார்.
ரெண்டு பேருக்கும் தனித்தனியா வேணும் சார் என சொல்லிவிட்டு சத்ய தேவ் புறப்பட்டான்.
பல்வேறு யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தான். ருத்ரன் அறையில் இருக்க, ரிதம் காலை குறுகிய படி ஸோபாவில் படுத்திருந்தாள்.
சத்ய தேவ் நேராக ருத்ரன் அறைக்கு சென்றான். “தீரா எழுந்திரு ம்ம் எழுந்திரு”
என்ன மாமா சொல்லுங்க? என தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தான். கதவை சாத்தி விட்டு வந்தவன். உன் கிட்ட ஒரு விசயம். உண்மைய மட்டும் தான் சொல்லணும்.
“என்ன மாமா கேளுங்க” என கண்களை தேய்த்த படி கேட்டான்.
நீ நாலு மாசமா எங்கே இருந்த? என்ன நடந்தது? பொய் சொல்லாம உண்மைய சொல்லு. எதையும் மறைக்க கூடாது. என சத்ய தேவ் அவனது கையை இருக்கமாக பிடித்துக் கொண்டான்.
இந்தியா – நேபால் பார்டர்ல ஒரு கும்பல் கிட்ட பணய கைதியாக நிறைய பேர் மாட்டிக்கிட்டாங்க. நான் ஆறு மாசம் அங்கேயே தரவா வாட்ச் பண்ணி நடிச்சு அவங்களோட ஆயுத கிடங்கு, எல்லாத்தையும் அழிச்சிட்டு அந்த மக்களை காப்பாத்துற மிஷின்ல இருந்தேன்.
ஆறு மாசத்துல உன் மேலே சந்தேகமே வரலையா? எப்படி? இதெல்லாம் நம்ப முடியலயே? உண்மைய சொல்லு என சத்ய தேவ் அதட்டினான்.
அவனுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ஒரு டாஸ்க் கொடுப்பான். அதை நான் செய்யணும். தண்ணிக்குள்ள இருக்க சொல்லுவான். தலை கீழா தொங்க சொல்லுவான். தடுமாடுங்க கிட்ட சண்டை போட சொல்லுவான். வேட்டைக்கு இப்படி நிறைய பண்ணேன் மாமா! என்றான் ருத்ரன்.
அந்த கூட்டத்தோட தலைவன் யாரு? நீ கேதர் பண்ண விடயத்தில் தெரிஞ்சிருக்குமே? என சத்ய தேவ் அவன் முன் அமர்ந்தான்.
“தெரியும் மாமா”
யார் அவன்? என சத்ய தேவ் கேட்க.. “பிளாக்” என்றான் ருத்ரன்.
சத்ய தேவ்வின் கண்கள் விரிய, கைகளை இறுக்கி மடக்கியவன். ஒரு கால் இருந்ததா? என எழுந்தான்.
ருத்ரன் அதிர்ச்சியுடன் “ஆமா மாமா! ஒரு கால் தான் இருந்தது. உங்களுக்கு எப்டி தெரியும்?”
சத்ய தேவ் அங்கும் இங்கும் நடந்த படி, நல்லா யோசி தீரா! வேற எதுவும் சொன்னானா? உன்னை வேற எதுவும் செய்ய சொன்னானா? அங்கே நீ என்னன்ன பண்ண? உன்னை ரொம்ப affect பண்ற மாதிரி என்னென்ன நடந்தது? என துருவி துருவி கேட்டான்.
“அதான் மாமா அவனோட நம்பிக்கைக்காக என்னை நிறைய வேலை பண்ண சொல்லுவான். இவனை உங்களுக்கு எப்படி தெரியும்? இவன் யாரு மாமா?”
“உன் அக்காவை கடத்தி நினைவுகளை அழிச்சி அவளை சைலஜாவாக மாத்தி அவன் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுங்க ஒரு க்ருப்! அண்ட் உங்க அப்பாவுக்கு எதிரி.. ரிதம் காணாம போறதுக்கு முன்னாடி லெட்டர் வந்தது. அதுல போட்டிருந்தது. அவள் முதல் டார்கெட் நெக்ஸ்ட் நீ தான் டா! என்ன நடந்தது? ஒன்னு கூட மறைக்காம என் கிட்ட சொல்லு தீரா!” என சத்ய தேவ் உளுக்கினான்.
அப்டின்னா என்னை ஏன் மாமா கொல்லல என ருத்ரன் கேட்க.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அன்னிக்கே ஒரு நாயை போடும் போது இவனையும் போட்டிருக்க வேணும். தப்பிச்சிட்டான்க சொல்லு தீரா என்ன நடந்தது?
நான் சொல்றேன் அந்த லெட்டர்ல என்ன போட்டிருந்தது? என தீரா திரும்ப கேள்வி கேட்டான்.
லுக் தீரா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு என சத்ய தேவ் உழுக்க.. ருத்ரன் தீவிரமாக யோசித்தான். அந்த முகம் தெரியாத பொண்ணு கூட நான் இருந்த விசயத்தை மாமா கிட்ட சொன்னால் என்னோட மரியாதை என் மேலே இருக்க அபிப்ராயம் போயிடும். வேணாம் அதை மட்டும் சொல்ல வேணாம் என நினைத்துக் கொண்டான்.
தீரா கேட்டத்துக்கு பதில் சொல்லு. என்ன நடந்தது? என சத்ய தேவ் உலுக்க.. அது வந்து எனக்கு ட்ரக் கொடுத்தாங்க மாமா. எனக்கு தெரியாம கொடுத்திருக்கான். மத்த படிக்கு எதுவும் இல்ல.. என ருத்ரன் உறுதியாக கூறினான்.
சரி விடு இதை வேற யார் கிட்டயும் சொல்லாத. அண்ட் நாளையில் இருந்து உனக்கு கவுன்சிலிங் கொடுக்க வர போறாங்க. அதை அட்டன் பண்ணு. உங்க வீட்டுக்கு போக வேணாம் என்று கூறியவன். ரெஸ்ட் எடு! மனகட்டுபாடை வளர்த்துக்க என்று விட்டு சத்ய தேவ் வெளியே வந்தான்.
ரிதம் கிச்சனில் உருட்டி கொண்டிருந்தாள். நிலா என்ன செய்கிறாள் என பார்க்க, சின்ன பால்கனியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நிலா மா!”
அண்ணா! என அழைத்த படி திரும்பினாள். என்ன டா மா முகம் வாடி போயிருச்சு? என சத்ய தேவ் அருகில் வந்தான்.
“ஒன்னும் இல்ல அண்ணா! சும்மா தான்” என நிலா உள்ளே வந்தாள்.
“பாப்பா உன் கிட்ட ஒரு விடயம் அண்ணா கேட்பேன். சொல்லுவியா”
“கேளுங்க அண்ணா”
“உன்னை கடத்திட்டு போனாங்களே! அது எந்த இடம்? எதுவும் நினைப்பிருக்கா? உனக்கு கஷ்டமா இருந்தால் சொல்ல வேணாம் பேபி”
அது எந்த இடம்ன்னு தெரியல அண்ணா! பட் மணிப்பூர் பக்கம். ஆனால் மணிப்பூர்ல ஸ்னோ இருக்காது. அங்கே ஸ்னோ இருந்தது. என்றாள் நிலா.
“சரி உன் கூட யார் யார் ஐ மின் பணைய கைதி மாதிரி இருந்தாகளா?” என சத்ய தேவ் கேட்க..
ஆமா அண்ணா! என்றாள் நிலா.
அடுத்த ஒரு சில நொடியில் மீண்டும் போன் கால் பேசி விட்டு அருகில் வந்த சத்ய தேவ் அவளிடம் பாப்பா இந்த இடமா பார்த்து சொல்லு! என அஸ்ஸாம், U.P பார்டர், நேபாள பார்டர் என பக்கமாக நடந்த பணைய கைதிகள் மீட்ட இடங்களை வரிசையாக காட்டினான்.
இல்ல இது இல்ல.. இது இல்ல என ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே கூறினாள் நிலா.
எல்லாத்தையும் பொறுமையா பார்த்து சொல்லு ஒரு இடத்தை நீ பார்த்த மாதிரி இருந்தால் கூட அண்ணன் கிட்ட சொல்லு ஒரு இல்ல உனக்கு ஒரு மாதிரி இருந்தால் பார்க்க வேணாம் தங்கம் விட்டுடு என கூறினான் சத்ய தேவ்.
நிலா கைகள் நடுங்க.. அண்.. அண்ணா.. என அழைக்க..
என்ன டா மா?
இந்.. இந்த இடம் மாதிரி தான் தோணுது ஆனால் சரியா தெரியல என்றாள் நிலா.
சரி டா தங்கம் கொஞ்சம் வெளியே வா மா எதுக்கு உள்ளேயே இருக்கீங்க? என அழைத்து வந்தான்.
ரிதம் வயிற்றை நீவிய படி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
என்னாச்சு மன்னி?
ரொம்ப வாமிட் வருது! ரொம்ப பசிக்குது எது சாப்பிட்டாலும் வெளியே வருது என்னால முடியல என சோர்வுடன் அமர்ந்தாள் ரிதம்.
உன்னை வீட்ல விடவா? அம்மா சமைச்சு தருவாங்க..
இல்ல அப்டின்னா டைவர்ஸ் கொடு! என சோர்வில் பேசினாள்.
அப்படியா சரி உங்க அம்மாவை இங்கே வர வைக்கிறேன் என்று விட்டு கிளம்பினான் சத்ய தேவ்.
டேய் என் அம்மாவை கூப்பிடுரது இருக்கட்டும் எனக்கு வழி சொல்லிட்டு போ! ஒழுங்கா எனக்கு எதுவும் சமைச்சு கொடு வாமிட் வர கூடாது என மசக்கையாக சுருண்டாள் ரிதம். நிலா அண்ணியின் அருகில் அமர்ந்தாள்.
சரி என உள்ளே சென்ற சத்ய தேவ் முகம் இருண்டு போனது.
என் கிட்டயே பொய் சொல்றான்? எப்படி ரெண்டு பக்கமும் tackle பண்ண போறேன்? என பெரு மூச்சுடன் சமைக்க ஆரம்பித்தான் சத்ய தேவ்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels