Episode -21

அறைக்குள் வந்தவளுக்கு தலையே சுற்றியது. என்ன செய்வேன்? எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். அய்யோ என தலையில் அடித்துக் கொண்டாள். கண்களை மூடினால் நிவா வருகிறான். கண் விழித்தால் ருத்ரன் தெரிகிறான். என்னோட தீரா! என இதயம் சொல்லவில்லை உதடுகள் மட்டுமே சொன்னது. மனம் முழுவதும் நிவாஸ் இருக்கிறான். ஆனால் தீரா! உன்னோட தீரா டி! என உள்ளுக்குள் ஒரு அசரிரி.. 

தலை தலையாக அடித்துக்கொண்டாள் கண்மணி. தீரா? நிவா?  என உள்ளுக்குள் போர்கலம் வெடித்தது. எப்போ அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பியது ? என்ன தான் நடந்தது? 

நான் கண்மணி இல்ல மீனாட்சி என் தீராவோட கோல்ட் ஃபிஷ் தங்க மீனாட்சி என படுக்கையில் விழுந்தாள். 

ஒரு பக்கம் நிவாஸ் அவளை இரண்டு வருடங்களாக காத்து அவளின் மனதில் ஒரு இடத்தை பிடித்து காதலை கனிய வைத்திருக்கிறான். 

ஆனால் ருத்ரன்? 10 வருட காதல்!.  சும்மாவா? பத்து வருடங்கள் தீரா என்னையும் என் காதலையும் நெஞ்சில் சுமந்திருக்கிறார். 

நான் கண்மணியா இருக்கணுமா? மீனாட்சியா இருக்கணுமா? என இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போல ஒரு உணர்வு. 

கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்: 

ருத்ரன் அவனது அம்மச்சி வீட்டுக்கு செல்லும்போது இரண்டு மூன்று முறை மீனாட்சியை பேருந்தில் பார்த்திருக்கிறான். கோ இன்சிடன்ஸ் அடிக்கடி நடக்க… வலையோசை கலகலவென கவிதைகள் படிக்குது என அவன் பாட..  அவள் அனுபூர் பிராமண பெண்ணாக அவனை எட்ட நிறுத்திவிட்டு சென்றாள். 

அதாவது காதல் கைகூடவில்லை. காதலன் படத்தில் எப்படி பிரபுதேவா ஹீரோயினுக்காக பரதநாட்டியம் கற்று கொண்டானோ அதே போல அவளை நினைத்து ருத்ரன் தன் அன்னை விவேகா அரங்கேற்றம் செய்தவள். தன் அன்னையிடம் கற்றுகொண்டான். 

வீட்டில் மகன் நாட்டியம் ஆட மகள் ரிதம் IPS ஆக வந்து நின்றாள். ஒரு அரங்கேற்றத்தில் மீண்டும் மீனாட்சியை சந்தித்தான். இந்த முறை ருத்ரன் தன் காதலை நேரடியாக கூறிவிட மீனாட்சி உருகி போனாள். 

Twist:1 ஒரு சின்ன திருத்தம் ருத்ரன் முதன் முதலில் பார்த்து விரும்பியது தங்க மீனாட்சி. ஆனால் ருத்ரன்  அரங்கேற்றத்தில் பார்த்த பெண் முத்து மீனாட்சி. (இருவரும் ஒரே தோற்றம் கொண்ட இரட்டை பெண்கள்) 

காதலுக்காக இந்த அளவுக்கு உருகி இருக்கிறான்? என பார்த்த கணமே முத்து மீனாட்சிக்கு ருத்ரன் மேல் காதல் ஒட்டிக்கொண்டது. 

ஆனால் ஆண்டாள் வேடத்தில் இருந்த பெண்ணை பார்த்து தான் அது மீனாட்சி என நினைத்து மீண்டும் காதலை புதுபித்தான் ருத்ரன். 

Twist: 2 ஆனால் அந்த ஆண்டாள் மீனாட்சி இல்லை ( சிவனின்) ருத்ரனின் தலையில் சூடி இருக்கும் நிலவு மகள் இது எப்போ தெரியும். அந்த ருத்ரன் – முத்து மீனாட்சி கலந்துகொண்ட திருவையாறு விழாவில் நிலாவும் கலந்து கொண்டாள்.  அவழும் ஆண்டாள் போல வேடமிட்டு அரங்கேற்றம் செய்தாள். கொஞ்ச நாள் போகட்டுமே! ஹி ஹி ஹி.. 

அன்றில் இருந்து கங்கா தன்னை சந்திரமுகியா நினைத்துக் கொண்டாள் என்பதை போல முத்து மீனாட்சி ருத்ரனின் காதலுக்காக பத்து வருடங்கள் தன்னை தங்க மீனாட்சியாக காட்டிக் கொண்டு வளம் வந்தாள். 

இருவரும் எப்படி பிரிந்தார்கள்? ருத்ரன் மீனாட்சியை தன் அன்னை விவேகா மற்றும் தன் மாமன் சத்ய தேவ் இருவருக்கும் வீடியோ கால் செய்து அவர்கள் முன்னிலையில் அவளுக்கு மோதிரம் அணிவித்து ஊருக்கு போயிட்டு வாடி என ட்ரெயினில் அனுப்பி வைத்தான் நான்கு வருடங்களுக்கு முன். 

மீனாட்சியின் வீட்டில் அவளை ராமேஸ்வரம் ஒரு பூஜைக்காக அழைத்திருந்தார்கள். அங்கு தான் அவள் வசமாக மாட்டிக்கொண்டாள். மீனாட்சியின் மாமன் மகன் அரிச்சந்திரா எனப்படும் பிளாக் ஈகில். மற்றும்  இரண்டு மீனாட்சிகளுக்கும் கட்டாய திருமணம் செய்து கடத்த திட்டம் தீட்டியிருந்தான். ஒரு மாப்பிள்ளை பிளாக் ஈகில் இன்னொரு மாப்பிள்ளை துட்ச்சாதனன். 

எதற்கு இந்த கட்டாய கல்யாணம்? பிளாக் ஈகில்  ஒரு மாபியா கும்பலில் கைக்கூலி பெண்களை கடத்தி அவர்களை ரோமான்ட்டிக் ஸ்கேம் செய்யவும். பெரிய பணக்காரர்களுக்கு பெண்களை விலை மாதுவாக அனுப்பும் மிகேபெரிய நெட்வொர்க்கில் இருந்தான். அவனது கும்பலுக்கு பரம எதிரி போலீஸ் குடும்பம் இன்பராகவன் தான். 

இன்ப ராகவனை பழி வாங்க அவரது மகன் ருத்ரனின் காதலியை கடத்தி விலை மாதுவாக அனுப்ப திட்டிமிட்டபடி நடந்தது. ஆனால் இந்த ருத்ரனை காதலித்த மீனாட்சி ருத்ரனின் மேல் இருக்கும் அதீத காதலில் இந்த உயிரும் உடலும் ருத்ரணுக்கு தான் என கடலில் குதித்து விட தன் தங்கையை காப்பாற்ற இன்னொரு மீனாட்சியும் கடலில் குதித்தாள். 

பிளாக் ஈகில் கூட்டம் இதில் தோல்வி அடைந்ததை வெற்றி பெறும் நோக்கில் இன்ப ராகவனின் மகள் ரிதம் மேல் அடுத்த திட்டத்தை செய்யல் படுத்த ஆரம்பித்தார்கள். சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் அவர்களது மணவாழ்க்கையில் இருக்க.. ரிதம் கருவாகி இருந்தாள். போலீஸ் வேலையில் சத்ய தேவ் பிஸியாக இருக்க அவன் அசரும் வேலையில் ரிதமை தூக்கி வந்து விலை மாதிவாக அனுப்ப திட்டமிட்டார்கள். அந்த நேரம் அவள் கருவுற்று இருக்க திட்டம் தோல்வி அடைந்தது. 

பிளாக் ஈகிலின் தலைவன் கார்கோடன் இரண்டு வருடங்களாக ரிதமை ஆழ்நிலை தூக்கத்தில் வைத்து அவளின் நினைவுகள் மொத்தத்தையும் அழித்து சைலஜா என்னும் புதிய பெண்ணாக மாற்றி விட..  சைலஜா தான் யார் என்பதை மறந்து தன் கணவனை பார்த்து நடுங்கி துடித்தாள். இது ரிதம் சைலஜாவாக மாறிய கதை 

மீனாட்சி எப்படி நிவாஸ் கைகளில்? 

கெட்டதிலும் நல்லது என்பது போல அந்த கயவர்களின் கையில் இருந்து தப்பித்து ஒரு மீனாட்சி நீருடன் எங்கே சென்றாள்? உயிரோடு இருக்கிறாளா? என எதுவும் தெரியவில்லை. ருத்ரணை விரும்பிய மீனாட்சி நேராக அவன் கைகளில் கிடைத்தாள் கண்மணியாக.. 

எவன் கைகளில்? 

நிவாஸ் பிரகாஷ்! இவனுக்கும் ருத்ரனுக்கும் பகை குடும்பம் குடும்பமாக.. அதற்கு காரணம் இன்பா ஆரம்பித்ததிலயே நிவாசின் தந்தை spr மற்றும் சித்தப்பா  குரு பிரகாஷ் இருவரையும் கைது செய்திருக்கிறான். பெரிய குடும்பம் என்பதால் குற்றங்கள் இருக்க சட்டம் தன் கடமையை செய்யும் என்பது போல சரியாக செயல்ப்பட்டார். 

எப்படி நினைவுகள் அழிந்து கோமாவுக்கு சென்றாள்? 

இந்த பிளாக் ஈகில் குஜராத் வழியாக போதை பொருட்களை கடத்துவது தான் பிரதான வேலை. அதனால் இரண்டு மீனாட்சியை யும் கடத்துவதற்கு முன் டெம்பர்வரி அல்சைமர் ஏற்படுத்தும் மூளையை பாதிக்கும் ஒரு மருந்தை இரு பெண்களில் உடலிலும் இஞ்ஜக்ட் செய்தார்கள். 

இது தான் குட்டி ஃப்ளாஷ்பேக். கண்மணி கண்மணி என காதலை உருகி உருகி கண்ணிய பார்வையில் தன்னை சிலிர்க்க வைத்த நிவாஸை ஏற்று கொள்வாலா? இல்லை தீரா பக்கம் செல்வாளா? மீனாட்சி?

அழுது ஒயிந்த மீனாட்சி உடனே சத்ய தேவுக்கு அழைத்தாள். நிவாஸ் ஹாலில் அனைவரின் முன்னும் ருத்ரன் பெயரை சொன்னதும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் வர தொடங்கியது. 

ஒரு சில நொடிகள் கழித்து அழைப்பை ஏற்றான் சத்ய தேவ். 

அண்..  அண்ணா! ந.. நான் கண்மணி பேசுறேன் என அழுதபடி கூறினாள். 

என்னை அண்ணான்னு முத்து மீனாட்சி தான் கூப்பிடுவா! நீங்க? என சத்ய தேவ் கூற.. 

முத்து முத்தாக கண்மணியின் முகத்தில் வியர்வை துளிகள். திகிலடைந்தவள் போல அமைதியாக இருந்தாள். 

சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் உன்னை மாதிரியே என் பொண்டாட்டி ரிதம கடத்த திட்டம் போட்டாங்க அதுல இருந்து அவளை நான் மீட்கும் போது அந்த வீட்ல உன்னோட படங்கள் இருக்கிறத பார்த்தேன். விசாரிச்சதில் எல்லா உண்மையும் தெரிஞ்சது. 

திருச்சியில் இருக்கிறது தான் தங்க மீனாட்சி ருத்ரன் அனுப்பூரில் பார்த்தது முத்து மீனாட்சி. நான் மறுபடியும் அனுப்பூர் போய் உன்னை பத்தி விசாரிச்சென். ஆனால் நான் எக்ஸ்பக்ட் பண்ணாத விசயம் நீ உயிரோட.. அது சந்தோஷம் ஆனால் நிவாஸ் கூட.. எப்படி? 

அண்ணா தி.. தீரா…? என கண்மணி திக்கி திணறி கேட்க. 

கண்மணி என அறைக்குள் நுழைந்தான் நிவாஸ். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.