Episode -10
“பாப்பா அந்த பிஸ்ஸாகாரனை அப்படியே திருப்பி அனுப்பிடு.” என சத்ய தேவ் ஒரு பக்கமிருந்து கத்த, “நிலா நான் பாவம் பாப்பா பாவம் என் நாக்கு கூட பாவம் இந்த நாய் சொல்றத கேட்காத பேபி” என ரிதம் இன்னொரு பக்கம் ராகமாக கத்தினாள்.
நிலா சிரித்தபடி கதவை திறக்க, அங்கே ருத்ரன் நின்றிருந்தான். இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்தவள் முகம் அவனை பார்த்ததும் மாறி போனது. டேய் போடா என ரிதம் மெல்ல வெளியே வர அவளுக்கு முன் சத்ய தேவ் வேகமாக வந்தான்.
“நீ சாப்பிட்ட உன்னை கட்டிபோட்டு கக்க வைப்பேன் டி!” என்றவன். வாசர்கதவை பார்க்க, நிலா ரிதமின் பக்கம் வந்தாள்.
“பிஸ்ஸா இல்லையா? நீயா?” என ரிதம் உதட்டை பிதுக்க..
ருத்ரன் நிலாவை பார்வையில் எரித்த படி உள்ளே வந்தான். “டேய் தீரா என்ன திடீர்னு வந்திருக்க?” என சத்ய தேவ் கேட்க, ஏன் நான் வரது உங்களுக்கு தொந்தரவா இருக்கா? உங்க ஜாலி டைம நான் ஸ்பாயில் பண்ணிட்டேன் போல. எனக்கு தான் இங்கே வர உரிமை இல்ல போல நான் கிளம்புறேன். என வாங்கி வந்த பழங்களை டீப்பாயின் மீது வைத்து விட்டு திரும்பினான்.
தீரா என்ன பேச்சு இது? நான் எப்போ டா சொன்னேன்? தேவையில்லாம பேசின அவ்ளோ தான். என சத்ய தேவ் கேட்டுக் கொண்டிருக்க, வாசலில் டெலிவரி பாய் நின்று கொண்டிருந்தான்.
நிலா பேபி போய் வாங்கிட்டு வா என ரிதம் கூற, வேணாம் பாப்பா என சத்ய தேவ் கூறினான்.
என்ன நடக்குது இங்கே? என ருத்ரன் கேட்க, உங்க அக்கா அடங்க மாட்டிக்கிறா பிஸ்ஸா வேணுமாம். ஒழுங்கா தண்ணி குடிக்க மாட்டின்றா. பிஸ்ஸா சாப்பிட்டு பின்னாடி அடைச்சுக்கிட்டா என்ன பண்றது? கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் வேணாம். கன்சீவா இருக்கும் போது குடிக்க கூடாது. என சத்ய தேவ் சொல்லி கொண்டிருந்தான்.
வா நிலா நீயும் நானும் சாப்பிடலாம். என ரிதம் அவளுடன் ஒட்டிக் கொண்டாள்.
அண்ணா விடு ஒரு நாள் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது. மண்ணி நீங்க சாப்பிடுங்க. வாங்க பட் கார்பனேட்டட் டிரங்ஸ் வேணாம். என ஓபன் செய்தாள்.
ரிதம் ஏன் இப்படி பண்ற? பாப்பா நீ அவளுக்கு சப்போட் பண்ணாத! என சத்ய தேவ் நிற்க.. சத்ய தேவ் டார்லிங்! சத்ய தேவ் செல்லம் ஓடி வாங்க என கொஞ்சம் ராகமாக அழைத்தாள் ரிதம்.
அழகான நாய்க்குட்டி பால்கனியில் இருந்து ஓடி வந்தது. அதற்கு ஒரு துண்டை வைத்து விட்டு நிலாவுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.
“மண்ணி எதுக்கு இப்படி பண்றீங்க? அண்ணாவோட பேரை போய் நாய்க்கு? இது சரி இல்ல” என நிலா கூறினாள்.
நான் கேட்டதை உன் அண்ணனை கொடுக்க சொல்லு. அப்புறம் தொந்தரவு பண்ண மாட்டேன். என ரிதம் கூற, சத்ய தேவ் ரிதமின் அருகில் அமர்ந்து கொண்டு அவளின் கையில் இருப்பதை பிடுங்கி சாப்பிட்டவன். நீ கேட்டத என்னைக்கும் கொடுக்க மாட்டேன் போடி.. என்றவன். தீரா எடுத்துக்க வா! என நீட்டினான்.
ரிதம் எழுந்து நிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். எனக்கு வேணாம் என ருத்ரன் சக்தியின் அருகில் அமர்ந்தான். இப்படியே நேரம் சென்றது. அனைவருடனும் இருந்தவள். மெல்ல அறைக்குள் சென்று விட்டாள் நிலா.
ரிதம் தண்ணீருக்கு தவிக்க பாட்டிலை நீட்டி குடிக்க வைத்தான் சத்ய தேவ்.
எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன் என ரிதம் நகர, இழுத்து பிடித்து அருகில் அமர வைத்தான். “விட்ரா!”
இப்போ தானே சாப்பிட்ட? உடனே படுக்க வேணாம் உட்காரு என தோலில் சாய்த்து கொண்டான்.
ருத்ரன் தன் மாமனின் அக்கறையை பார்த்து நெகிழ்ந்து போனான். அப்புறம் உன்னோட டாடி வரலையா? என சக்தி கேட்க, ரிதம் நிமிர்ந்து பார்த்தாள்.
“வரலன்னு சொல்லிட்டாரு. எனக்கே ஆச்சரியம் தான்” என்றான் ருத்ரன். ரிதமின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, டாடிக்கு என்னை விட இந்த சத்ய தேவ் மேலே தான் பிரியம். என உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள் அவ்விடத்தை விட்டு சென்றாள்.
உடனே படுக்காத ரிதம். பாப்பா அவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு என கூறி விட்டு சத்ய தேவ் ருத்ரனை பார்த்தான். “அப்புறம் எவ்ளோ நாள் லீவு? எப்டி இருக்க?” என விசாரித்தான் சக்தி.
“மாமா ஏன் என் கிட்ட ரிதம் கன்சிவா இருக்க விசயத்தை சொல்லல?”
“கொஞ்சம் வேலையா இருந்துட்டென் தீரா அதான்”
“ஆமா உங்களோட வேலையில் என்னை மறப்பீங்க. ஆனால் அந்த மினிஸ்டர் தங்கச்சி மட்டும் நியாபகம் இருக்காங்க. நான் சாதாரண ஆள் அப்படி தானே மாமா!” என்றான் ருத்ரன்.
“பிளீஸ் தீரா சின்ன பையன் மாதிரி சண்டை போடாத”
“சரி அவள் எதுக்கு இங்கே இருக்கா? அவங்க வீட்டுக்கு போகளையா?”
“அவள் இருந்தால் உனக்கென்ன டா! எதுக்கு என் தங்கச்சி மேலே இத்தனை வெறுப்பு? இது சரி இல்ல தீரா”
“என்ன மாமா எதுவுமே தெரியாத மாதிரி பேசுறீங்க? உங்க நிலா தங்கச்சி மட்டும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ரிதம் கன்சீவ் ஆன விசயத்தை உங்க கிட்ட சொல்லிருந்தால் ரிதம் தொலைஞ்சிருக்க மாட்டாள். இந்நேரம் உங்க பாப்பாவுக்கு மூணு வயசு ஆகி இருக்கும். எல்லாம் உங்க மினிஸ்டர் தங்கச்சி மரைச்சதால வந்த பிரச்னை. அவளை முதலில் வீட்டை விட்டு அனுப்புங்க. ரிதம்க்கு அவள் உபத்திரம் தான் பண்ணுவா. உங்களோட தங்கச்சி இதழ் தான் இவள் இல்ல மாமா நீங்க இவளை வீட்ல வச்சிருக்க வேணாம் அது தான் உங்களுக்கு நல்லது” என நிலாவின் மீது இன்னும் பழி சுமத்தினான் ருத்ரன்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி, “நீயா இருக்கிறதால நான் உன்னை சும்மா விடுரேன். இந்த இடத்தில வேற யாரும் இருந்தால் நடக்கிறது வேற. எங்க குழந்தைய இழந்ததுக்கு நிலா காரணம் இல்ல. உங்க அக்காவோட அவசர குடுக்கை தனம் தான் காரணம். அது நடக்கணும்ன்னு இருந்திருக்கு. நடந்து போச்சு. அண்ட் தேவையே இல்லாம நிலாவை பிளேம் பண்ணாத. எனக்கு எல்லாரும் ஒன்னு தான். நிலாவும் இதழும் ஒரே போல தான். நீ என்னை பார்க்க தானே வந்த! அதை மட்டும் பேசு. அவள் இருந்தால் உனக்கென்ன பிரச்னை? அவள் இனி இங்கே தான் இருப்பா! போதும் ருத்ரன் இத்தோட அவளை பத்தி பேசுறத நிறுத்திக்க” என்றான்.
சரி இதுக்கும் மேலே நான் இங்கே நிக்கல. நான் போறேன் என எழுந்தான் ருத்ரன். அவனது முகம் சிவந்திருந்தது. கண்கள் நன்றாக சிவந்து மடிந்திருந்தது.
சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். இரண்டு எட்டுக்குள் வைத்த ருத்ரனின் தலை சுற்றியது. கையெல்லாம் நடுங்கியது. தலையை உலுக்கி கொண்டு மெல்ல நடந்தான். நிலவு காலில் தடுமாறி விழ போனவனை பதட்டத்துடன் பிடித்தான் சத்ய தேவ்.
“விடுங்க மாமா! பிளீஸ் நான் போறேன்”
“டேய் உனக்கு என்னாச்சு? மயங்கி போற? வாடா கையெல்லாம் நடுங்குது? வாடா தீரா”
“விடுங்க மாமா” என கைகளை விடுவித்துக் கொள்ள போராடினான் ருத்ரன்.
அடம் பண்ணாத! வா என இழுத்து இன்னொரு படுக்கை அறை அழைத்து சென்றான். தண்ணீர் கொடுத்து பதட்டத்துடன் பார்த்தான் சத்ய தேவ்.
என்னாச்சு உனக்கு?
ஒன்னும் இல்ல என ருத்ரன் சொல்ல, அவனது கைகள் நன்றாகவே நடுங்கியது.
இரு சரி இல்ல நீ! வா நம்ம இப்போவே டாக்டர் கிட்ட போலாம். என சத்ய தேவ் உடனே புறப்பட்டான்.
ருத்ரனின் எண்ணங்கள் முழுவதும் இப்பொழுது பெண்ணின் மேல் இருந்தது. ஏன் இப்படி தோணுது? அப்போ அந்த பிளாக் ஈகில் எனக்கு டிரக் கொடுத்துட்டானா? அதுக்கு ஏன் நான் பொண்ணை தேடனும்? அய்யோ என இதயம் வேகமாக துடித்தது. கஷ்ட பட்டு தன் உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டான். பெண் வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது.
“வாடா தீரா! என்னாச்சு இறங்கு”
“இல்ல மாமா நான் வீட்டுக்கு போறேன். எனக்கு ஒன்னும் இல்ல” என ருத்ரன் இறங்கி செல்ல முயன்றான்.
இல்ல நீ சரி இல்ல வா என கையை பிடித்து இழுத்து சென்றான். டாக்டரை பார்க்கணும் என சத்ய தேவ் சொல்ல, உடனே அழைக்க பட்டார்கள்.
ருத்ரன் கைகளை கட்டு படுத்திக் கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தான். அவனது உடல்கள் வியர்த்து வடிந்தது. உள்ளுக்குள் பதட்டம் பன்மடங்கு கூடியது.
“டாக்டர் இவரு திடீர்னு மயக்கம் போட்டுட்டார். என்னன்னு கொஞ்சம் செக் பண்ணுங்க.” என சத்ய தேவ் கூற…
என்னாச்சு இத்தனை ஸ்வெட்டிங் ஆகுது. என டாக்டர் அருகில் வந்தார். ருத்ரன் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டான். நெர்ஸ் எமர்ஜென்சி கேஸ் வாங்க என அவனை அழைத்து சென்றார்கள்.
சத்ய தேவ் உடனே தன் மாமனார் இன்பாவுக்கு அழைத்தான். “மாமா எமர்ஜென்சி”
என் பொண்ணுக்கு என்ன டா ஆச்சு? என இன்பாவின் குரலில் பதட்டம் தெரிந்தது.
பொண்ணு இல்ல உங்க பையன். உடனே ஹாஸ்பிடல் வாங்க அத்தை கிட்ட சொல்ல வேணாம் என கூறிவிட்டு வைத்தான்.
சத்ய தேவ் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, அரக்க பறக்க வந்து சேர்ந்தார் இன்பா.
“என்னாச்சு சத்ய தேவ்? அவன் இப்போ எப்படி இருக்கான்?”
அது தான் எனக்கும் தெரியல மாமா என சொல்லி கொண்டிருக்க, “சார் உங்களை டாக்டர் கூப்பிடராங்க! பேசன்ட் இப்போ நார்மல்” என நர்ஸ் கூறினார்.
மாமா நீங்க தீரா கிட்ட போங்க. நான் போய் பார்த்திட்டு வரேன் என சத்ய தேவ் சென்றான்.
“நீங்க பேசன்ட்டுக்கு என்ன வேணும்?”
நான் அவனோட பிரதர் இன் லா சொல்லுங்க சார் என்ன விசயம்.
அவரு என்ன வேலை பார்க்கிறார்?
“ஆர்மி மேன் சார்!”
டாக்டர் தீவிரமாக யோசிக்க, சொல்லுங்க சார் என்ன விசயம்? எதுவும் பிரச்னை இல்லையே!
அவரு ஹை ரேஞ்ச் பவர்ல டிரக் எடுத்துக்கிட்டு இருந்திருக்கார். அது தான் கை நடுங்குது. இப்போ அடிக்ட் ஸ்டேஜ்ல இருக்காரு. அது தான் கை நடுங்குது. என கூறி முடித்தார் டாக்டர்.
சத்ய தேவ்…?
வருவான்..
do like and share pradhanyakuzhalinovels