Episode -11
சத்ய தேவ் அதிர்ச்சியுடன் மருத்துவரை பார்த்தான். என்ன சொல்வதென தெரியவில்லை.
அவருக்கு டிரக் எடுத்துக்க தோணும். அவரோட மொத்த கண்ட்ரோலும் இப்போ அதுல தான் இருக்கு. காரணம் ஹை ரேஞ்ச் டோபமைன் புரோட்யூசானது தான் காரணம். இனி அவர்க்கு அது வேணும்னு தோணும். அவருக்கு அப்சர்வேசன் தேவைப்படும். எக்காரணம் கொண்டும் அவர் போதைய எடுத்துக்க கூடாது. இல்லன்னா அடிமை தான் ஆல்ரெடி அவர் அந்த கண்டிசன்ல தான் இருக்கார். கவுன்சிலிங் தேவை.. கைகள் நடுங்கும் வியர்த்து கொட்டும் இன்னும் நிறைய சைட் எஃபெக்ட் இருக்கு. ஆனால் தப்பி தவறி கூட அவர் ட்ரக் எடுத்துக்க கூடாது இப்போதைக்கு அவருக்கு ஸ்லீபிங் பில்ஸ் கொடுத்திருக்கோம் என கூறினார்.
ஓகே டாக்டர் நான் பார்த்துக்கிறேன். என சத்ய தேவ் எழுந்தான்.
எங்கே டா போற? என ருத்ரனை இழுத்து பிடித்தார் இன்பா.
விடுங்க டாடி நான் போகனும். வீட்டுக்கு போகனும். எனக்கு என தவித்தான் ருத்ரன்.
எங்கே போற? நான் வரதுக்குள்ள அப்படி எங்கே வேகமா கிளம்புற? ருத்ரன் என பற்களை கடித்த படி வந்து நின்றான் சத்ய தேவ்.
“நான் வீட்டுக்கு போறேன் மாமா!” என ருத்ரன் நிற்க.. வா போலாம் நான் வரேன். என சத்ய தேவ் தோல் மேல் கைகளை போட்ட படு அழைத்து சென்றான்.
விடுங்க மாமா நான் போகனும்! என வியர்க்க விறுவிறுக்க கைகளை விலக்கி விட்டான் ருத்ரன். ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தது முதல் உடலெல்லாம் இப்படி தான் நடுக்கத்தில் அவனை திணற செய்கிறது பைத்தியம் பிடிப்பது போல ஆகிறது. அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளவே இப்படி சத்ய தேவ்வை பார்க்க வந்தான்.
சரி வரேன் என கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றவன். தன்னை கட்டுபடுத்திக் கொண்டு சத்ய தேவ்வுடன் கிளம்பினான்.
நான் புடிச்சதுக்கு தட்டி விட்ட? இப்போ போற! என கேட்ட படி இன்பா தன் மகனிடம் கேட்டுக் கொண்டே வந்தார்.
பதில் சொல்லும் நிலையில் தான் ருத்ரன் இல்லையே. அதை விட சத்ய தேவ் இன்னும் துக்கத்திலும் குழப்பத்திலும் இருக்கிறான். “சத்ய தேவ் எங்களை வீட்ல விட்டுடு”
“இல்ல மாமா நான் இவனை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். கொஞ்ச நாள் இவன் அங்கே இருக்கட்டுமே!”
அங்கேயா எதுக்கு? வேணாம் டா! ஆல்ரெடி வீட்ல.. என இன்பா அமைதி காக்க..
உங்க பொண்ணை கட்டு படுத்துறது உங்களுக்கு கஷ்டமா இருந்தாலும் எனக்கு ஈஸி தான்! என்ன தான் ஆடினாலும் நான் அடக்கிடுவேன் என்றவன் வண்டியை நேராக சாந்தி நகர் அப்பார்ட்மெண்டுக்கு விட்டான்.
“சரி நான் அப்படியே கிளம்புறேன்.” என இன்பா அவரது ஜீப்புக்கு செல்ல ருத்ரன் உறங்கியிருந்தான்.
டாக்டர் என்ன சொன்னாங்க? என இன்பா கேட்க.. அதை பத்தி தான் மாமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். இருங்க.. என சொல்லி விட்டு காரை பார்கிங்கில் நிறுத்தினான்.
“என்ன விசயம்? அவனுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே? எதுக்கு இப்படி தூங்குறான்?”
“இவன் எப்போ வந்தான்? இந்த ஆறு மாசமும் எங்கே அவன் இருந்தான்? என்னாச்சு? இவனோட முதுகில் காயம் இருக்கு? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான் சத்ய தேவ்.
“எனக்கு அதை பத்தி தெரியல.. டெரரிஸ்ட் அட்டாக்ல ஆகி இருக்குன்னு சொன்னாங்க. ராஞ்சி ஹாஸ்பிடலில் இருந்தான். டாக்டர் தான் கூட்டிட்டு போக சொன்னாரு. மெடிக்கல் டெஸ்ட் முடிச்சிட்டு ரிஜாயின் பண்ணிக்க சொன்னாங்க” என்றார் இன்பா.
“வேற எதுவும் சொல்லலயா?”
வேற என்ன? என இன்பா தன் மருமகனிடம் கேட்க.. .
சத்ய தேவ் அமைதியாக ஒன்னும் இல்லை என்பது போல திரும்பினான்.
“என்னன்னு சொல்லு சத்ய தேவ் சொன்னால் தானே தெரியும். நான் வரும் போது இவனோட ரிப்போர்ட்ஸ் கொடுத்தாங்க. வேற எதுவும் சொல்லலயே!”
சத்ய தேவ் பெரு மூச்சை விட்ட படி, “இவனோட பிளட் சாம்பிலில் ட்ரக் டிரேஸஸ் இருக்குன்னு சொன்னாங்களா?”
“ஆமா சொன்னாங்க!” என்றவர் சட்டென சத்ய தேவ்விடம் “என்னாச்சு டா? எதுவும் பிரச்சனையா? அதிக நாள் இல்லன்னு சொன்னாங்க! அவனை நான் பார்க்கும் போது குத்துயுறா இருந்தான். அவன் அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்ல டா” என பதட்டத்துடன் பேசினார் இன்பா.
“ஒன்னும் இல்ல மாமா ட்ரீட் பண்ணா சரி ஆகிடும் எனக்கு அந்த ரிப்போர்ட் வேணும் தர முடியுமா?”
அவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்க்கணுமா டா! இதெல்லாம் அவனோட அம்மாவுக்கு தெரிஞ்சா தாங்க மாட்டாள் டா நான் என்ன பண்ணுவேன் என இன்பா துக்கத்துடன் கூறினார்.
நீங்க கவலை படற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் இருக்கேன். அந்த ரிப்போர்ட்ட டாக்டர் கிட்ட கொடுத்து கன்சல்ட் பண்ணி பார்ப்போம். மாத்து வழி இருக்கான்னு கேட்கலாம். என ஆறுதல் படுத்தினான்.
சரி நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு ரிப்போர்ட் ட ஸ்கேன் பண்ணி அனுப்பி விடுறென். என இன்பா ருத்ரனை பார்க்க..
மாமா ஒன்னும் இல்ல கவலை பட வேணாம் சரி வாங்க அப்படியே உங்க பொண்ணை பார்த்திட்டு போலாம்.இன்பாவின் முகம் இன்னும் வாடி போனது இதை கேட்டதும்..
மாமா என்னாச்சு வாங்க? என சக்தி மீண்டும் அழைக்க, வேணாம் டா நீ பார்த்துக்க என உடனே கிளம்பினார்.
அனைத்து பிரச்னைகளும் சத்ய தேவ்வின் தலையில் வரிசை கட்டி நின்றது. ஒரு பக்கம் ருத்ரன் இன்னொரு பக்கம் நிலா பத்தாதற்கு கட்டியவள் குரங்கு போல குதிக்கிராள் டைவர்ஸ் கொடு என்று..
ஆயாசமாக உள்ளே உறங்கி கொண்டிருப்பவனை பார்த்தான் சத்ய தேவ். கடவுளே அஜித்தே என இருந்தது. அவனை வீட்டுக்கு கொண்டு செல்வதற்குள் அரும்பாடு பட்டு விட்டான்.
என்னாச்சு இவனுக்கு? எதுக்கு டா வீட்டை பூட்டிட்டு போன? என ரிதம் வந்து நின்றாள். லைட்டா ஃபீவர் வந்துச்சு மயங்கிட்டான். அதான் உன்னை பூட்டு போட்டுட்டு போனேன். என்றான் சத்ய தேவ்.
அவனுக்கு ஃபீவர் என்றதும் இங்கே ஒரு ஜீவனுக்கு நிலை கொள்ள வில்லை துடித்தது. அவரை நினைக்க கூட எனக்கு அருகதை இல்லை. இந்த உடலும் அழகும் என்னோட தீராவுக்கு சொந்தமாகி இருக்கணும். அப்படி இல்லன்னா மண்ணோடு மண்ணாகி இருக்கணும். ஆனால் எவனோ ஒருவன்? எவனோ ஒருவன் என்னை என நினைத்தவளுக்கு இதயம் வெட்டபடுவதை போல உணர்ந்தாள். இனி தீராவை பார்க்க கூட உரிமை இல்லை. நான் அழுக்கு என உடைந்து அழுதாள் நிலா.
இதுக்கு ஏன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன? வீட்லயே நிலா இருக்காளே! என ரிதம் கேட்க.. சத்ய தேவ் முறைத்து பார்த்தான்.
“டேய் நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பார்க்கிற? இவனுக்கு என்ன கேடு வந்தது? இன்னும் மயங்கி இருக்கான்”
“ஹே அவன் மேலே உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா டி! இவன் உன் கூட பிறந்த தம்பி டி! கடையில வாங்கின பொம்மை மாதிரி ட்ரீட் பண்ற?”
“இவனாள தான் எனக்கு முழுசா கிடைக்க வேண்டிய என் அம்மாவோட பாசம் ரெண்டா பிரிஞ்சது. இவன் மட்டும் இல்லன்னா என் அம்மா என் மேலே இன்னும் நிறைய பாசத்தோட இருப்பா! என் பாசத்தை பங்கு போட வந்துட்டான். இவன் என்றாள் ரிதம்.
உன் கிட்ட கேட்டது என் தப்பு தான் என சத்ய தேவ் அவனை தூக்கி கொண்டு இன்னொரு படுக்கை அறைக்கு செல்ல.. சத்ய தேவ்வின் புடைத்து கொண்டு வெளியே தெரியும் புஜங்களை இமை வெட்டாமல் பார்த்தாள் ரிதம்.
ஹப்பா என பெரு மூச்சை விட்டுக் கொண்டே சத்ய தேவ் வந்து அமர காலிங் பெல் அடித்தது.
ஹே நான் பார்க்கிறேன் என ரிதம் ஓட.. நீ உக்காரு என சத்ய தேவ் பெரு மூச்சுடன் கதவை திறந்தான். அங்கே நிதின், நிவாஸ் இருவரும் நின்றார்கள்.
சத்ய தேவ்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels