அத்தியாயம் -2

அதிகாலை ஆறு மணிக்கு எழுந்திருந்தாள் மாதவி. தலைக்கு குளித்து முடித்து காட்டன் புடவையில் நேராக கிச்சன் சென்றாள். ஆதவன்க்காக காலை உணவுகளை செய்தவள். அவனுக்கு டி போட்டபடி திரும்ப.. 

” இஞ்சி ஏலக்காய் வாசனை மூக்கை துளைக்கிதே” என பின்னால் சத்தம் கேட்க மெதுவாக திரும்பினாள் மாதவி. 

லதா புன்னகையுடன் நின்றிருந்தார். “அத்தை வாங்க உங்களுக்கு டீ அண்ட் இது மாமாவுக்கு” என நீட்டினாள் மாதவி. 

“டீ அப்புறம் குடிக்கலாம் மாதவி. நீ வந்து பூஜையறையில் விளக்கு போட்டுட்டு ஆரத்திய எல்லா ரூமுக்கு ம் காட்டு டா கண்ணு. நான் மாமாவுக்கு கொடுத்திக்குறேன்” என்றவர் அவளை அனுப்ப..

“சரிங்க அத்தை” என நேராக பூஜயறை சென்றாள் மாதவி. 

அதற்குள் லதா நேராக அவர்களின் அறைக்கு தன் மகனை பார்க்க சென்றார். “ஆதவா!” என கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். 

ஆதவன் தன் அன்னையை எரிக்கும் அளவுக்கு முறைத்தான். 

லதா நேராக தன் மகனுக்கு அருகில் சென்றவர். “உனக்கு தங்கமான பொண்டாட்டி அமைஞ்சிருக்கா! இப்போ நம்ம நிம்மதியா இந்த வீட்ல இருக்க காரணம் மாதவி தான் அதை என்னைக்கும் மறந்திடாத! அவள் கிட்ட குணமா நடந்துக்க! எரிஞ்சு விழ வேணாம். அப்புறம் அந்த கடங்காரி மாயாவை பத்தி நினைச்சிட்டு இருக்காத!”

ஆதவன் கோபமாக தன் அன்னையை முறைத்து பார்த்தவன் மனதில் ‘நீங்க  கல்யாணம் பண்ணி வச்சுட்டா மட்டும் நான் மாயாவை மறந்திடுவெனா? எனக்கு எப்போவுமே மாயா தான் பொண்டாட்டி அவளை நான் யாருக்காகவும் விட்டு தர மாட்டேன். இன்னும் பத்து மாசம். சரியா பத்து நாசம். இந்த இரிட்டேடிங் பெல்லோ மாதவிக்கு குழந்தை பிறந்ததும் அப்புறம் எனக்கு விடுதலை’ என்று நினைத்து கொண்டான். 

“டேய் ஆதவா! உன்னை தான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்” என அதட்டினார் லதா. 

அதில் தன் அன்னையை பார்த்தவன். எதுவும் பேசாமல் பாத்ரூம் சென்றான். 

லதாவுக்கு எதோ ஒரு மூலையில் நம்பிக்கை பிறந்தது. இருந்தாலும் பாத் ரூம் பக்கம் வந்தவர் “டேய் ஆதவா  நீ மாதவிய சந்தோசமா வச்சுக்கிட்டா தான் மாப்பிள்ளை அங்கே நம்ம ஹீர்த்துவை சந்தோசமா வச்சுப்பார். சோ நான் சொல்றத காதுல போட்டுக்கோ” என்று விட்டு ஒரு பெரு மூச்சுடன் அந்த அறையை பார்த்தார். 

‘இப்போ எதுவுமே நடக்கலன்னா என்ன? கூடிய சீக்கிரத்தில் எல்லாமே நடக்கும். அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்து ஒரு குழந்தை மட்டும் பொறந்திடுச்சுன்னா அப்புறம் ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சமா இணக்கம் ஆகிடுவாங்க.’ என அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் லதா. 

இங்கே பாத்ருமில் தண்ணீரில் நின்றிருந்தவனுக்கு உடலெல்லாம் பற்றி கொண்டு வருவது போல இருந்தது. அந்த நேரம் பார்த்து மாதவியின் குரல் வெளியே கேட்டது. 

“என்னங்க…. என்னங்க உங்களுக்கு டீ ரெடி!” என மாதவி அழைத்தபடி படுக்கை விரிப்பை சரி செய்தபடி தலையணை சரிசெய்ய.. .  

பாத் ரூம் கதவை படாரென திறந்து கொண்டு வெளியே வந்தான் ஆதவன். 

என்னங்க உங்களுக்கு டி! என புன்னகை முகமாக நின்றவளை பார்த்து உள்ளமெல்லாம் பற்றி கொண்டு வந்தது. 

மாதவி அவனது சிவந்த கண்களை பார்த்து ரசனையுடன் என்னாச்சு அய்யோ தலையில் இருந்து தண்ணி சொட்டுது பாருங்களேன் என அருகில் நெருங்கியவள் தனது காட்டன் புடவையில் துடைத்து விட போக.. 

ப்ச் என கையை தட்டி விட்டவன். ஆவேசமாக அவளை கட்டிலில் தள்ளினான். 

என்னாச்சு? என்ன பண்றீங்க? என அவள் கேட்பதற்குள் அவளின் வாழை தண்டு கால்கள் இரண்டும் அவன் வசமானது. 

ஆதவன்! பிளீஸ் இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன். எனக்கு கொஞ்சம் டைம் என அவள் பேசி முடிக்கும் முன் அவன் ஆரம்பித்திருந்தான். மிகவும் மூர்க்க தனமாக.. 

மாதவி கட்டிலை இறுக்கி பிடித்து கொண்டவள் தினரியபடி கிடந்தாள். 

ஹேய் மாதவி*  நீ சீக்கிரம் கன்சிவ் ஆகணும். அப்போ தான் நீ என்னை விட்டு போக முடியும். நான் என்னோட மாயா கூட சந்தோசமா வாழ்வேன். இனி டெய்லி மார்னிங் பண்ணனும். புரியுதா? என அவன் சொல்ல சொல்ல.. கண்ணாடி வளையல் குலுங்கி ஒன்றுடன் ஒன்று மோதி உரச கால் கொலுசு ஜதி பாட அவள் வேதனையிலும் இன்பத்திலும் தத்தலித்தாள்.

ஆதவன் அவளின் கஷ்டத்தை கண்டு கொள்ளவில்லை சொல்ல போனால் ரசித்தான். அவனுக்கு இப்போதைக்கு ஒரே ஒரு எண்ணம். இந்த ஒண்ட வந்த பிடாரி மாதவி அவனை விட்டு சீக்கிரமே போய் விட வேண்டும். அதற்கு குழந்தை பிறக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இது தான். இதனுடன் சேர்த்து அவளை அணு அணுவாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவனது மொத்த கோபத்தையும் கபடமாக்கி கலவியில் காட்டி அவளை விட்டு நகர்ந்தவன். சட்டையை போட்டு கொண்டு அவளை கண்டு கொள்ளாமல் கீழே சென்றான். 

மாதவியின் எண்ணங்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தது. 

அன்று மாதவியிடம் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்த ஆதவனின் வாழ்க்கை கடலில் தத்தளிக்கும் ஓட்டை படகு போல ஆனது. 

ஹீரா ஹோட்டல்ஸ் பெரிய நஸ்டத்தை சந்தித்தது. அதற்கு காரணம் ஹீரா ஹோட்டல் பங்குதாரர்கள் பின்வாங்கி வேறு நபருக்கு சேர்சை விற்க…  அதற்கு முன்னால் ஹோட்டல் ரினவேட் செய்ததில் மொத்த பணத்தையும் சீனிவாசன் அவரது பெயரிலேயே செலவழித்து  பொருட்செலவாகி  வீட்டின் பெயரில் வாங்கியிருந்த கடன் அனைத்தும் மூழ்கி போக, மொத்தமாக சீனிவாசன் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். 

ஆதவன் அங்கும் இங்கும் பணத்துக்காக அல்லாடி கொண்டிருந்தான். 

இளங்கோவன் நேராக வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் மாதவி வந்திருந்தாள்.

என்ன சம்மந்தி திடீர்னு வீட்டுக்கு வந்திருக்கீங்க? நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க சம்மந்தி எல்லா பிரச்னையும் நான் சரி பண்ணிடுவேன் என சீனிவாசன் கூற.. 

இளங்கோவன் புரியாமல் தன் மகளை பார்த்தார். 

சாரி அங்கிள் எங்களுக்கு உங்க நிலமை எதுவும் ஐ மின் டாடிக்கி தெரியாது. ஆனால் இந்த கல்யாணம் வேணாம் என்றாள். 

என்னாச்சு? என்ன மா இப்படி சொல்றீங்க? என லதா பதட்டத்துடன் முன்னால் வர, சாரி சம்மந்தி உங்க பொண்ணை என் வீட்டு மருமகளாக்க எனக்கு முழு சம்மந்தம். ஆனால் உங்க பையன் என தயங்கினார் இளங்கோவன். 

என்ன சொல்றீங்க? என சீனிவாசன் மற்றும் லதா இருவரும் புரியாமல் பார்த்தார்கள். 

மாதவி அவர்களிடம்ஆதவாவுக்கு என்னை பிடிக்கல போல! அவர் மாயான்னு ஒரு பொண்ணை லவ் பண்றதா என்னோட ஹொட்டேல்க்கு வந்து என்கிட்ட சொல்லிட்டு போயிட்டார். 

சீனிவாசன் கோபத்துடன் லதாவை பார்க்க.. மாதவி தீவிரமான முகத்துடன் எனக்கு ஹீர்த்திய ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்ல போனால் இந்த கல்யாணத்துக்கு எங்க அண்ணா ஒத்துக்கிட்டதே என்னோட கல்யாணம் நடக்கணும்ன்ற காரணத்துக்காக.. ஆனால் இப்போ என தயங்கினாள். 

சீனிவாசனின் மொத்த கோபமும் தன் மகன் ஆதவனின் மீது திரும்பியது. 

மாதவி நேராக பிளாங்க் செக்கை சீனிவாசனிடம் நீட்டியவள். நீங்க கவலைபடாதீங்க அங்கில் இதுல பிளாங்க் செக் இருக்கு. உங்க ஹீரா ஹோட்டல்ல பார்ட்னரா “மாதவி ஹோட்டல்ஸ்” வர எங்களுக்கு சம்மதம் பிரச்சனைய சரி செஞ்சிடலாம். நீங்க கவலை பட வேணாம். அண்ட் ஹீர்த்தி கிட்ட சொல்லிடுங்க என்று விட்டு இளங்கோவனுடன் வெளியே சென்றாள். 

மாதவி சென்ற அடுத்த நொடி சீனிவாசன் கோபத்துடன் ஆதவாவை வர சொன்னார் வீட்டிற்கு. 

ப்பா! இப்போதைக்கு ஒரு கோடி ரெடி பண்ணிட்டேன் இதை வச்சு மேனேஜ் பண்ணுவோம். மீதிய பிஸ்னஸ் டெவலப் பண்ணதும் பண்ணிடலாம் என ஆதவன் வந்து கூற.. 

இந்த ஒரு கோடிய வச்சு வீட்டை திருப்புவ ஓகே! ஹீரா ஹோட்டல எப்டி மீட்டெடுப்ப? சொல்லு ஆதவன்? எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. இனி என்னால தலை நிமிர்ந்து நடக்க முடியாது. என்றார் சீனிவாசன். 

டாடி இதுக்கு இத்தனை கவலை தேவையில்லாத விசயமா எனக்கு தோணுது. பிஸ்னஸ்ல லாபம் நஸ்டம் வரது சகஜம் தான் ஆனால் அதுக்குன்னு இந்த அளவுக்கு கவலை… இட்ஸ் ஒகே டாடி நீங்க கவலை படாதீங்க கொஞ்சம் டைம் எடுக்கும் ஆனால் நான் சரி செஞ்சிடுவேன் என ஆதவன் ஆருதலுடன் கூற.. 

நீ என்ன பண்ணாலும் இது சரி ஆகாது ஆதவன் என கத்தியபடி முன்னால் வந்தார் லதா. 

என்ன மா சொல்றீங்க? என்னால சரி பண்ண முடியும் என உறுதியாக கூறினான். 

பிஸ்னஸ்சை சரி பண்ணுவ! ம்ம் சரி பண்ணு ஒரு பிரச்னையும் இல்ல. ஆனால் உன்னோட தங்கச்சிக்கு மாப்பிள்ளை? என கேள்வியுடன் நின்றார் லதா. 

கல்யாணமா அதை இனி நினைச்சு பார்க்க முடியுமா? இந்த ஒரு கோடி கடன் தான்! இன்னும் நாலு கோடி தேவைப்படுது அதை எப்படி ரெடி பண்ணுவ? எப்படி ஹீர்த்து கல்யாணத்தை பண்ணுவ? அதுக்குள்ள இந்த வீட்டு மேலே கடன் வாங்குற மாதிரி வந்திடுமே இதையெல்லாம் நீ எப்படி பண்ணுவ? என சீனிவாசன் மற்றும் லதா இருவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க..

நான் எல்லாத்தையும் பண்ணுவேன். என்னால முடியும்? இப்போ மாப்பிள்ளை வீட்டில் என்ன பிரச்னை? ஏன் அவங்க நம்ம நிலைமைய பார்த்திட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்களா என கேட்டான் ஆதவன்

லதா அழுகையுடன் இதுக்கு எல்லாம் காரணம் அந்த பொய்யாபோனவ மாயா தான். அவளால் தான் என்னோட ரெண்டு பசங்க வாழ்க்கையும் போச்சு! அவளோட ஓட்டுதல் உனக்கு தங்கச்சி வாழ்க்கைய விட முக்கியமா போச்சு அப்படி தானே என பொங்கினார். 

அம்மாஆஆஆ! என ஆதவன் கோபத்துடன் கத்திட.. 

நிறுத்து டா! லதா சொல்றதுல எந்த தப்பும் இல்ல. உன் தங்கச்சி வாழ்க்கை போக நீ தான் டா காரணம். என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்க தான் நீ பிறந்திருக்க.. 

அய்யோ நிறுத்துங்க இப்போ என்ன நடந்ததுதுன்னு சொல்லுங்க என ஆதவன்  உச்ச ஸ்தானியில் கத்திட.. 

நீ மாப்பிள்ளையோட தங்கச்சிய வேணாம்னு சொல்லிட்டல்ல அதனால் மாப்பிள்ளை இந்த கல்யாணத்தை வேணாம்னு சொல்லிட்டார். என் பொண்ணு கிட்ட இதை நான் எப்டி சொல்லுவேன். இப்போ தான் சம்மந்தியுமம் அவரோட பொண்ணு மாதவியும் வந்து விவரத்தை சொல்லிட்டு போனாங்க என்றார் லதா.

அந்த நேரம் பார்த்து ஆதவாவுக்கு போன் வந்தது.

இப்போ என்ன முடிவு எடுக்க போற? அவங்க நம்ம கடனை மீட்க பிளாங்க் செக் கொடுத்திருக்காங்க. அது கூடவே  மாதவி ஹோட்டல்ஸ் நம்ம கூட கை கோர்க்க போறதாக சொன்னாங்க அப்படி மட்டும் நடந்திட்டா நம்ம எல்லா பிரச்னையும் தீர்ந்திடும். இதுக்கு எல்லாம் தீர்வு உன்கிட்ட தான் இருக்கு. என சீனிவாசன் தன் மகனை பார்க்க..

போனில் மாதவி…!! 

இங்கே நரேந்திரனுக்கு  பார்த்து பார்த்து உணவுகளை பரிமாறினாள் ஹீர்த்தி. 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.