அத்தியாயம் -3

நரேந்திரனின் தட்டில் புதிதாக கற்று சமைத்த அனைத்து உணவையும் வரிசை கட்டி வைத்தாள் ஹீர்த்தி. ஆசையுடன் தனது கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைத்தது. 

“இதுல உப்பு இல்ல. அண்ட் வென் பொங்கலில் பெருங்காயம் ஸ்மெல் ஹெவியா அடிக்குது. சட்னில கடுகு அதிகம் அண்ட் முக்கியமா கடுகு பொரியவே இல்ல. நீ செஞ்ச மெது வடையில எண்ணெய் கிணறு உருவாகும் போல.. என அனைத்தையும் குற்ற பத்திரிகையாக வாசித்தவன் அவ்விடத்தை விட்டு எழுந்து எனக்காக நீ மெனக்கெட்டு எதுவும் செய்ய வேணாம்.” என கையை கழுவி விட்டு நகர்ந்தான்.

“அய்யோ பசியோட எங்கே கிளம்பிட்டீங்க! பிளீஸ் இந்த மோர் குடிங்க இப்போ நம்ம ரெண்டு பேரும் மறு வீட்டுக்கு போகனும். அப்போ தான் அங்கிருந்து இங்கே மாதவி அண்ணியும் என் அண்ணனும் வருவாங்க! பிளீஸ் நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் இருக்க இந்த பிரிவு பிளவு எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப வருத்தபடுவாங்க பிளீஸ் இங்கேயே இருங்க மகி” என கெஞ்சினாள் ஹீர்த்தி. 

அவளை முறைத்து பார்த்தான் நரேந்திரன். 

என்னாச்சு என கேட்டு கொண்டே அவ்விடத்துக்கு வந்தார் அன்பரசி. 

ஒண்ணுமில்ல அத்தை என ஹீர்த்தி புன்னகையுடன் கூற.. 

இப்போ எங்கே கிளம்பிட்ட தம்பி! மாதவி வீட்டுக்கு வர போறா! நீங்க ஹீர்த்தி வீட்டுக்கு விருந்துக்கு போகனும். உன்னோட வேலையை அப்புறம் முடிச்சுக்கோ! இங்கேயே இரு! என அன்பரசி எவ்வளவோ எடுத்து சொன்னார். 

ஹான் எனக்கு புரியுது நான் மாது வீட்டுக்கு வரதுக்குள்ள நான் வந்துடுவேன். என்று விட்டு விருட்டென வாசல் வரை சென்றவன். 

ஹீர்த்தனா நீ ரெடியா இரு! நான் வந்ததும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என நகர்ந்தான் நரேந்திரன். 

என்ன பண்ணலாம்? இந்த கடுவன் பூனைய மாத்த நம்ம வீடு தான் சரியா இருக்கும் என தனக்கு தானே சொல்லி கொண்டவள். புறப்பட ஆரம்பித்தாள் ஹீர்த்தி. 

மாதவி கிட்ட தட்ட பத்து மணி வரை காத்திருந்தாள். ஆனால் ஆதவன் வரவேயில்லை. 

சீனிவாசன் கோபத்துடன் போன் செய்ய.. மாமா பிளீஸ் நீங்க டென்ஷன் ஆக வேணாம். நான் அவரை பிக் அப் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு போறேன். அங்கே ஹீர்த்தி அன்ட் அண்ணா எங்களுக்காக காத்திருப்பாங்க என புறப்பட்டாள் மாதவி. 

லதா என்ன செய்வது என புரியாமல் பார்க்க, எவ்ளோ கொழுப்பு இருந்தால் அந்த ராஸ்கல் திமிரா இருப்பான். சொல்லி வை லதா! இல்லன்னா நடக்கிறதே வேற! அந்த மாயா பின்னாடி மட்டும் இவன் திருஞ்சான்னு மகேந்திரன் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சது? அப்புறம் நம்ம பொண்ணு வாழ்க்கையும் போயிடும் நம்ம வீட்டு மகாலட்சுமி மாதவிய நம்ம இழந்திடுவோம் இந்த கல்யாணம் தான் நம்ம கவுரவத்தை காப்பாத்தி இருக்கு என்று விட்டு கோபமாக சென்றார் சீனிவாசன். 

லதா மூன்று நான்கு முறை புலன்பியபடி போன் செய்தார். 

“ஹலோ! மா”

ஆதவா அம்மாவை நீ உயிரோட பார்க்கணுமா வேணாமா? 

இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கீங்க? 

டேய் எங்கே இருக்க? என கோபமாக லதா கேட்க.. 

நான் மாதவி கூட வண்டியில் இருக்கேன் என்னாச்சு? என சாணக்யா பதில் கூறியதும். லதாவின் வாய் திடீரென அமைதியானது. நிஜமாவே வா! ஆதவா உண்மைய தான் சொல்றயா? என லதா கேட்க.. 

ஏன்? இதுல என்ன சந்தேகம்?  போனை உன்னோட மருமகள் கிட்ட கொடுக்கணுமா? என அவன் கேட்கவும்..

லதா புன்னகையுடன் சரி சரி நீ பத்திரமா போயிட்டு வா! எனக்கு இது போதும் நான் அப்பா கிட்ட சொல்லிக்கிறேன் என போனை நிம்மதியுடன் வைத்தார். 

இங்கே ஆதவன் மாயாவின் எதிரில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் மாயாவை பார்த்தான். 

கிளம்புங்க ஆதவன்! அப்புறம் ஆன்டிக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்னை ஆகிடும். என கண்களில் நீர் கோர்த்து கொண்டது மாயாவுக்கு. 

ஆதவன் அவளுக்கு அருகில் வந்து என் மேலே கோபம் இல்லையே! எனக்காக ஒரு வருசம் வெயிட் பண்ணுவியா மாயா! ஒரே ஒரு வருசம் பேபி! அந்த மாதவி என்னை விட்டு போயிடுவா! அப்புறம் நீயும் நானும் சந்தோசமா வாழலாம். பிராப்பரா டைவர்ஸ் பண்ண சம்மதம் சொல்லிட்டா! நான் வேற வழியே இல்லாம கட்டாயத்தில் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டென். அவளை டைவர்ஸ் பண்ண அடுத்த செக்கண்ட் நீயும் நானும் நியூசிலாந்து போறோம். அங்கே ஒரு ஹோட்டல் பார்த்திருக்கேன். பிஸ்னஸ் பண்ண எல்லா பிளானும் ரெடி! டாக்ஸ்க்கு கூட பணம் ரெடியா இருக்கு மாயா! என உருக்கமாக பேசினான். 

மாயா ஒரு பெரு மூச்சை விட்டவள். பிஸ்னஸ் எல்லாம் ஓகே! ஆனால் இந்த ஒரு வருசத்துல உங்க மனசு அவள் பக்கம் சாயாமல் இருக்குமா ஆதவன்? எனக்கு பயமா இருக்கு. என அவளின் முகம் மாறியது. 

ஆதவன் உணர்ச்சி பெருக்குடன் கர்வத்துடன் எனக்கு இந்த உலகத்திலேயே பிடிச்ச ஒரே பொண்ணு நீ மட்டும் தான். என்னோட எல்லா உணர்வுகளும் உன்னை பார்த்து மட்டும் தான் மாயா ஆர்ப்பரிக்கும். ஆதவன் என்னைக்கும் மாயாவுக்கு தான் என அவனது கழுத்தில் இருக்கும் A டாலர் பொறிக்கப்பட்ட தங்க பெண்டன்ட்டை மாயாவின் கழுத்துக்குக்கு போட்டு விட்டவன். ஊருக்கு வேணும்னா அந்த மாதவி பொண்டாட்டியா இருக்கலாம். ஆனால் என்னோட உணர்வுகளுக்கும் என்னோட உயிருக்கும் தெரியும். என்னோட மனசுல யார் இருக்கான்னு. இது உனக்கு நான் கட்ற தாலி! என அதை வருடி விட்டான். 

மாயா ஆதவனின் முகத்தை நிமிர்த்தி உதட்டை கவ்வி கொண்டாள் உணர்ச்சியுடன்.. 

இருவரும் முத்தத்தில் லயத்திருக்க.. அவர்கள் அமர்ந்திருக்கும் ரெஸ்டாரன்ட் பிரைவேட் கேபினின் கதவு தட்டப்பட்டது. மாயா முத்தத்தில் தன்னையே மறந்து கிடந்தாள். ஆதவனின் கைகள் அவளின் உடலில் எல்லை தாண்டி சென்றது. 

சார் எக்ஸ்கியூஸ்மி என திரும்பவும் கதவு தட்டபட.. இருவரும் பிரிய மனமின்றி பிரிந்தார்கள். 

மாயாவின் முகம் வாடியிருக்க.. கதவை கோபத்துடன் திறந்தவன். என்ன வேணும்? என ஆக்ரோஷமாக கத்தினான். 

சார் மேடம் வெயிட் பண்றாங்க சாரி சார் என மாதவியை திரும்பி பார்த்தபடி பணியாள் நகர்ந்தான். 

ஆதவன் அவளை கண்டு கொள்ளாமல் மீண்டும் அறைக்குள் சென்றவன். மாயா! நீ ஃபீல் பண்ணாத டியர்! என்னைக்கும் என்னோட மனசுல உனக்கு மட்டும் தான் இடம் என உறுதியாக கூறிவிட்டு அவளின் கீழ் உதட்டை கவ்வி முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தினான். 

ஆதவன் நான் நாளைக்கு நைட்டு பாரின் போறேன். என்னை ஏர் போட்டில் சென்ட் ஆஃப் பண்ண வர முடியுமா? 

கண்டிப்பா! நான் வரேன் மாயா! சரி நான் கிளம்பட்டுமா? என ஆதவன் கேட்க.. 

மாயா அவனது கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள். 

மாயா நீ ஃபீல் பண்ணாத! அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். என அவளை இருக்கி அணைத்து கழுத்தில் முத்தமிட்டான். 

பிரிய மனமே இல்லாமல் இருவரும் பிரிந்தார்கள். 

மாதவி ஓரிடத்தில் போனை நோண்டியபடி நின்றிருந்தாள். இருவரும் ஒட்டி உரசியபடி வந்து சேர்ந்தார்கள். 

போலாமா ஆதவன் என அவள் புன்னகை மாறாத குரலில் கேட்க.. 

மாயாவுக்கு அவளை பார்க்க வேற்று கிரகவாசி போல இருந்தது. இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? அவளது கணவன் இன்னொரு பெண்ணுடன் ஒட்டி உரசிக்கொண்டு நிற்பதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மிகவும் சாதாரணமாக நடந்து கொள்கிறாளே என தோன்றியது. 

ஐ மிஸ் யூ பேட்லி மாயா!! என கூறி கட்டியணைத்து பிரிந்தான் ஆதவன். 

ம்ம் ஆதவன்! என மாயா விலகி நின்றாள். 

மாதவி எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நேராக காரில் ஏறினாள். 

ஆதவன் தன் காதல் மாயாவை திரும்பி திரும்பி பார்த்தபடி நின்றவழுக்கு. மனமெல்லாம் ரணமாக மாறியது. காரணம் மாதவியின் தடுமாற்றம் இல்லாத சலனமில்லாத பார்வை.. அதனுடன் மாதவியின் அழகை நினைத்து கொஞ்சம் பயம் உள்ளுக்குள் தொற்றிக் கொண்டது. No no Way!! நான் ஆதவனை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். ஆதவன் எனக்கு தான் என ஆதவன் அணிவித்த தங்க செயினை தனது தாலியாக பார்த்தாள் மாயா. 

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. உனக்கு கொஞ்சம்

கூட கூச்சமோ வெட்கமோ இல்லையா? என ஆற்றாமையில் கேட்டுவிட்டான் ஆதவன்.

மாதவி..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.