அத்தியாயம் -4

“உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என ஆதவன் அவளை பார்க்க.. 

“உங்களுக்கே வெட்கம் இல்லாத போது நான் எதுக்கு வெட்க படனும் ஆதவன்?” என கூலாக பதில் கூறினாள் மாதவி.

“ஹே!!” என கோபத்துடன் ஆதவன் குரலை உயர்த்த..

 ஒரு பெரு மூச்சை விட்ட மாதவி “ஜஸ்ட் லிசன் ஆதவன் நான் உங்களை சின்சியரா லவ் பண்றேன். எனக்கு உங்களை அவ்ளோ புடிக்கும். ஆனால் உங்களுக்கு மாயாவை பிடிச்சிருக்கு. நான் கண்டிப்பா தடுக்க மாட்டேன். தாராளமா அவங்க கூட நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணலாம். இந்த ஒரு வருசம்..” என யோசனையுடன் முகம் சுளித்தவள்.

“இல்லல்ல ஜஸ்ட் ஒன்பது மாசம். என்னோட வளைகாப்பு முடியும் போது உங்க வாழ்க்கையை விட்டு நான் போயிருப்பேன். நீங்க கவலை பட வேணாம். நீங்க மாயா கூட சுத்தினாலும் நான் ஏன்னு கேட்க மாட்டேன். ஆனால் உங்க ஃபேமிலி அண்ட் எங்க அண்ணன் கண்ணில் மட்டும் படாமல் இருந்துக்கோங்க அவ்ளோ தான்” என சொல்லி விட்டு ஓட்டுவதில் கவனம் செலுத்தினாள் மாதவி. 

ஆதவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியவில்லை அமைதியாகி விட்டான். அவனது நினைவுகள் கொஞ்சம் பின்னால் சென்றது. 

அன்பரசி அழுதபடி ஆதவனை மனம் மாறி மாதவியை திருமணம் செய்து கொள்ள சொல்ல.. அந்த நேரம் பார்த்து ஆதவனுக்கு போன் வந்தது. 

சீனிவாசன் கோபத்துடன் “உன்னால என் பொண்ணு வாழ்க்கை எதுவும் ஆச்சு? ராஸ்கல் உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன் என சிவந்த முகத்துடன் அடுத்து என்ன செய்வது?” என்று தெரியாமல் ஸ்தம்பித்து அமர்ந்தார். 

ஆதவன் போனை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் ஹலோ என அட்டன் செய்தான். 

“நான் மாதவி பேசுறேன்”

ஆதவனுக்கு இன்னும் கோபம் தலைக்கு ஏறியது. “எல்லாம் உன்னால” என அவன் ஆரம்பிக்க.. 

“ஒரு நிமிசம்? உங்களுக்கு இந்த கடன் பிரச்னை தீரணும் அது கூடவே உங்க தங்கச்சி கல்யாணம் நடக்கணும் அன்ட் மாயாவையும் நீங்க இழக்க கூடாது. இது மூனும் நடக்க எங்கிட்ட ஒரு வழி இருக்கு நேரில் வர முடியுமா?” என கேட்டாள் மாதவி. 

“எங்கே வரணும்?”

“ஹோட்டல் taste of queen வந்துடுங்க” என்று விட்டு போனை வைத்தாள் மாதவி. 

“என்ன வழி? எப்படி?” என எடுத்ததும் அவனுக்கு தேவையான இடத்தில் வந்து நின்றான் ஆதவன். 

“சிட் டவுன்” என இருக்கையை காட்டினாள். 

“சீக்கிரம் சொல்லுங்க” என ஆதவன் கேட்க.. 

“நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் அது தான் ஒரே வழி” என மாதவி சொல்ல.. ஆதவனின் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. 

“ஆமா ஆதவன் உங்களை பார்த்த மாத்திரத்திலயே அவ்ளோ பிடிச்சு போச்சு. சொல்ல போனால் உங்களோட பெயரை கூட நான் உயிருக்கு உயிரா விரும்ப ஆரம்பிச்சுட்டேன்” என கூறினாள் மாதவி புன்னகையுடன்.. 

கோபத்துடன் இருக்கையை விட்டு எழுந்தான் ஆதவன். 

“அய்யோ ஆதவன் கொஞ்சம் உட்காருங்க நான் சொல்றத கொஞ்சம் முழுசா கேளுங்க” என மாதவி மீண்டும் ஆரம்பிக்க..

“என்ன டி கேட்க சொல்ற? நான் தான் என்னோட மனசுல மாயா இருக்காள்ன்னு சொன்னேனே. உன்னை கல்யாணம் பண்ணிக்க கூப்பிடுற? இதுக்கு தான் வர சொன்னியா இடியட்” என பற்களை கடித்தான் ஆதவன். 

மாதவி அவனை பார்த்து “நான் இன்னும் பேசி முடிக்கல ஆதவன். நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க அப்புறம் நான் சொல்றது உங்களுக்கு புரியும் நீங்க ஒத்துப்பீங்க” என கூறினாள். 

“அப்படி என்ன சொல்ல போகிறாள்?” என கோபத்தில் பார்த்தான். 

அவன் முன் சில பத்திரங்களை நீட்டியவள். “இது உங்களுக்கும் எனக்கும் இருக்க ஒரு வருஷ மேரேஜ் காண்ட்ரா்ட் பேப்பர்.” என்றாள் மாதவி. 

ஆதவன் புரியாமல் அவளை பார்க்க, “இதுல கூடவே இன்னொரு விசயம் இருக்கு. இது கூடவே உங்களோட குழந்தை என்னோட வயிற்றில் வளரனும்.”

“நெவர்”

“உங்களோட கடன் பிரச்னை அண்ட் உங்க மொத்த பிரச்னையும் சரியாகி உங்களோட தங்கச்சி கல்யாணம் நல்ல படியாக எங்க அண்ணன் கூட நடந்து அவங்க சந்தோசமா இருக்கிறது எல்லாமே நீங்க சைன் போடுற விசயத்தில் தான் இருக்கு.” 

அண்ட் என நிறுத்தியவள். இந்த கல்யாணம் அத்தோடு நிக்காது. இதை விட எனக்கு குழந்தை தான் முக்கியம். இந்த ஒரு வருஷ காலத்தில் உங்க குழந்தைய நான் சுமக்கணும்.” என மாதவி கூறியதும் ஆவேசமாக எழுந்து நின்றான் ஆதவன். 

“இப்படி எழுந்து நின்னுட்டா என்ன பண்றது. நான் உங்களை உயிருக்கு உயிரா நேசிச்சேன் ஆனால் என்னோட காதல் வாழ்க்கை கை கூடாதுன்னு தெரிஞ்சு போச்சு. அதனாலே தான் இந்த ஒரு வருஷ அக்ரிமென்ட் பீரியட். அது கூடவே எனக்கான உலகம் ஒன்னு நீங்க என் கூட இருக்கணும் இல்லன்னா உங்க குழந்தை என்னோட உலகமா இருக்கணும். ஆனால் சத்தியமா சொல்றேன். இந்த ஒரு வருசம் முடிஞ்சதும் நான் உங்க நடுவில் வர மாட்டேன். உங்க வாழ்க்கையில் எங்கேயும் நான் வர மாட்டேன். நீங்க மாயா கூட சந்தோசமா வாழலாம்.” என்றாள் மாதவி. 

ஆதவன் அவளை கொன்று விடும் கோபத்தில் பார்க்க, “நீங்க டைம் எடுத்துக்கோங்க! தாராளமா! எனக்கு தெரியும். நீங்க நல்ல முடிவா எடுப்பீங்கன்னு.” என சொல்லி விட்டு அவள் அவனை பார்க்க.

 ஆதவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். “ஒரு நிமிசம் இங்கே பாருங்க உங்க முன்னாடியே இந்த பத்திரத்தில் நான் சைன் போடுறேன். நீங்க இதை எடுத்திட்டு போய் உங்க லவ்வர் மாயா கூட டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு முடிவெடுக்கலாம். ஏன்னா இது நம்ம மூணு பேர் சம்மந்தப்பட்ட விசயம். முக்கியமா நான் மூணாவது ஆள் தான் இதுல மாயா தான் முடிவெடுக்கனும்” என பத்திரத்தை நீட்டினாள். 

ஆதவன் ஒரு சில நொடிகள் யோசித்து விட்டு வேறு வழி இல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். 

இதோ நிகழ்காலத்தில் இருவரும் இளங்கோவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

அண்ணா என உற்சாகத்துடன் ஹீர்த்தி அழைத்து கொண்டு வந்தாள். 

ஆதவன் தன் தங்கை வாழும் வீட்டை அதாவது மாதவியின் பிறந்த வீட்டை பார்த்ததும் மலைத்து போய் விட்டான். மாதவி இறங்கியதும் உடனே அவளுக்கு ஹோட்டலில் இருந்து போன் வந்தது. ஆளுமையுடன் போனில் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தாள். 

இவ்வளவு பெரிய இடமா மாதவி என ஒரு நொடி திகைத்தவன் அப்படியே நிற்க, வாங்க மாப்பிள்ளை என அன்பரசி ஆதவனை உள்ளே அழைத்தார். 

அத்தை அண்ணி என ஹீர்த்தி கேட்க..அவள் இப்போதைக்கு வர மாட்டாள். அதான் போன் வந்திடுச்சே! அவளுக்கு எல்லாத்தையும் விட பிஸ்னஸ் ஹோட்டல் தான் முக்கியம். கொஞ்சம் தப்பா இருந்தாலும் மாதவிக்கு பிடிக்காது. என சொல்லி கொண்டே உள்ளே வர.. நான் வந்துட்டேன் மா என மாதவி போனில் மெஸேஜ் செய்து கொண்டே வந்தாள். 

ஆதவன் அவர்கள் பேசுவதை காதுக்களால் உள்வாங்கி கொண்டான் ஆனால் மற்ற படிக்கு அவளை பார்க்கவில்லை. 

வாங்க மாப்பிள்ளை என இளங்கோவன் இரு கை கூப்பி வணங்கினார். 

டாடி என மாதவி தன் தந்தையின் வீல் சேர் பக்கம் சென்றாள். 

நான் நல்லாருக்கேன் மாது! என்ன டா மா! என இளங்கோவன் வாஞ்சையுடன் தன் மகளை பார்த்தார். 

ஹீர்த்தி ஆதவனுடன் சோபாவில் அமர்ந்து கொண்டாள். 

எப்டி இருக்க ஹீர்த்தி? என ஆதவன் எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான். 

எனக்கென்ன அண்ணா! இங்கே அண்ணிய எப்படி பார்த்துக்கிறாங்களோ அதை போல என்னை பார்த்துக்கிறாங்க என்றாள். 

அண்ணா எங்கே டாடி? என கேட்ட படி மாதவி பார்க்க.. ஆதவனின் பார்வை தன் தங்கையின் மீது படிந்தது. 

அண்ணா அவர் முக்கிய வேலையா வெளியே போயிருக்கார். இப்போ வந்திடுவார் என ஹீர்த்தி சொல்லும் போதே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் நரேன். 

அண்ணா எங்கே போன? என மாதவி புருவம் சுருக்கினாள். 

நம்ம ஹோட்டல் தான் போயிட்டு வந்தேன் என சொன்னபடி ஆதவனை பார்த்தான் நரேன். 

ஹீர்த்தி மிகவும் வருத்தத்துடன் நரேந்திரனை பார்த்தாள். “இந்த அளவுக்கு பிடிவாதம் ஆகாது. அப்படி கேவலமா இருக்கா என்னோட சாப்பாடு” என மனதில் நினைத்தாள். 

சரி ஹீர்த்தி நீங்களும் அண்ணாவும் கிளம்புங்க! அத்தையும் மாமாவும் வெயிட்டிங் என மாதவி கூற.. 

ஹான் சரி அண்ணி! என ஹீர்த்தி புறப்பட்டாள். 

அவர்கள் இருவரும் கிளம்பியதும் ஆதவன் மாதவி இருவருக்கும் உணவுகளை பரிமாறினார் அன்பரசி. 

மாதவி சாப்பிடும் போதும் கூட.. போனில் தான் அவள் கவனம் இருந்தது. 

என்ன டி சாப்பிடும் போது கூட வேலை செய்யணுமா? முதல்ல போனை கொடு என அன்பரசி போனை பிடுங்கி வைத்தாள். 

மா என கோபத்தில் பார்த்தவள். உணவில் கவனம் செலுத்தினாள். 

இருவரும் சாப்பிட்டு முடித்து சோபாவுக்கு வர.. அன்பரசி மாதவியிடம் கவரை நீட்டினாள். 

“என்ன மா இது?”

“இது மாப்பிள்ளைக்கும் உனக்கும் ஹனிமூன் டிக்கெட்!”

மா என மாதவி கொந்தளிக்க.. 

“மாப்பிள்ளை இவள் இங்கே இருந்தால் எப்படியும் இந்த போனை வச்சுட்டு வரவே மாட்டாள்.எப்போ பாரு வேலை வேலை வேலை. அதனாலே நீங்க அவளை கூட்டிட்டு மூணு நாள் போயிட்டு வாங்க.” 

மாதவி – ஆதவன்..? 

அதே போல இங்கே ஹீர்த்தி மற்றும் நரேன் இருவருக்கும் ஹனி மூன் டிக்கெட் கொடுக்க பட்டது. 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.