அத்தியாயம் -29

ப்ச் பேசு டி” என கையை பிடித்தான் கண்ணன். வெடுக்கென கையை உதறியவள்.

அவன் பக்கம் திரும்பி “பளார்!..” என விட்டாள் ஒரு அரை..

கண்ணன் இதை துளி கூட எதிர்பார்க்கவில்லை.  ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியுடன் பார்க்க, “என்ன நீ பாட்டுக்கு என் கைய பிடிக்கிற? இந்த தொட்டு பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத!” என்றவள். வேகமாக கதவை தாழ் போட்டுவிட்டு அவன் முன் வந்து நின்றாள். 

அடித்த கன்னத்தை தேய்த்தவன். ஆவேசமாக அருகில் நெருங்கி அவளின் இடையை அழுத்தி பிடித்து மோவாய் இழுத்து உதட்டில் முத்தமிட்டான் ஆவேசமாக.. “நான் தொடாமல் வேற யார் தொட போறா! மான்வி” என சொல்லிய படி கட்டிலில் தள்ளி அவளை மூச்சு முட்ட துகில் உரித்து முத்தங்களால் வதைக்க தோன்றியது. இதையெல்லாம் செய்யடா என மூளை கட்டளையிட்டு வெகு நேரம் ஆகிறது. ஆனால் பாழாய் போன மனசு அவளின் வார்த்தையையும், அடியையும் சேர்த்து வாங்கிக் கொண்டு  மானம் கெட்டு மான்வியின் முன் நிற்கிறான். ஒரு வேளை மூளை சொன்ன சொரணை உணர்வுகளை கேட்டிருந்தால் அவளின் வயிற்றில் குட்டி கண்ணனோ மான்வியையோ இப்போதே விதைத்திருப்பான். ஆனால் இந்த மனசுக்கு தைரியம் இல்ல.. 

ஹே!! என சொடக்கு போட்டு அழைத்தாள். 

சட்டென சுயநினைவுக்கு வந்தவன் கன்னத்தில் அரையின் சுவடுகள் மறைந்து போய் மிகவும் அவமானமாக உணர்ந்தான். உள்ளுக்குள் இதயம் கூறு போடுவது போல இருந்தது. கண்கள் சிவக்க அவளை பார்த்தான். “என்ன சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்க டிமாண்ட் நினைப்பிருக்கா? என்னை நீ MBA படிக்க வைக்கிறதா சொல்லி தான் கல்யாணம் பண்ணிருக்க. இது என்னோட டிமாண்ட். அண்ட் உனக்கு உன்னோட அம்மா, அண்ட் உன்னோட தங்கைக்காக தான் இந்த கல்யாணம். நல்ல படியா கல்யாணம் முடிஞ்சுடுச்சு. ஈரோட்டில் நந்தா அண்ட் கொங்கு என்ஜினியரிங் காலேஜ்ல போட்டிருக்கேன். எனக்கு கண்டிப்பா கிடைக்கும் சோ ஃபீஸ் கட்ட ஏற்ப்பாடு பண்ணிடு.” 

“இப்படியே உன்னால இருக்க முடியாதில்ல. உனக்கு உடல் தேவைகள் இருக்கும். அண்ட் சார்க்கு போட்டி போட்டுட்டு ஆள் வருவாங்க.  சோ ரெண்டு வருசத்துக்கு மேலே உன் அம்மாவை சமாதானம் பண்ணி நீ இன்னொரு பொண்ணை கட்டிக்கிட்டாலும் சரி, இல்லன்னா நான் வெளியேறனும்னு நினைச்சாலும் சரி போக நான் ரெடி. இந்த ரெண்டு வருஷத்துல உனக்கு அந்த மாதிரி எதுவும் நடந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்ல நான் எப்படியும் இங்கே இருக்க போறதில்லை. நீ என்ன வேணாலும் பண்ணிக்க.” என்று சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 

கண்ணன் பெரு மூச்சை விட்டபடி பேச வர, வெடுக்கென திரும்பியவள். “முத்தம் கொடுத்தது போட்டோவுக்காக.. அண்ட் உன் கூட ஒட்டிக்கிட்டு இருந்தது ஜஸ்ட் என் டாடிக்கும், உன்னோட மம்மிக்கும் சந்தேகம் வர கூடாதுங்கரதுக்காக. சும்மா சொல்லக்கூடாது. என்னை பிடிக்காட்டியும் நீயும் நல்லாவே நடிச்ச! ஆனால் உன்னோட நடிப்பை பெட் ரூமில் கண்டினியூ பண்ண வேணாம். உன்னோட வாழ்க்கை உன்னோட இஷ்டம். நான் மாத்த பொண்ணுங்க மாதிரி இல்ல. உனக்கு எவளை பிடிச்சிருக்கோ அவள் கூட தாராளமா போ!” என்று விட்டு குளிக்க சென்றாள். 

கண்ணன் அதே இடத்தில் நின்றான். நம்பமுடியவில்லை. ‘எப்படி நடிப்புக்காக முத்தம் கொடுக்க முடியும்? என அப்படியே அமர்ந்தான். சுத்தமாக நம்ப முடியவில்லை. அவ்ளோ தானா?’ என தோன்றியது. ‘மான்விக்கு நான் வேணாமா? எனக்கு மான்வி வேணுமே! நடிக்கிறேனா? எனக்கு பிடிக்கலயா? என தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான். வேற ஒருத்தி கிட்ட போன்னு சொல்றா! கம்முன்னு போன என்னோட வாழ்க்கையில் இவள் எனக்கு பொண்டாட்டியா வந்திருக்காள்ன்னா! இது விதி தான்! எந்த கையாள அடிச்சாலோ அதே கையாள அணைக்க வைக்கணும். வைப்பேன்’ என மீசையை முறுக்கி கொண்டான். 

வெளியே போ என சொல்லிக் கொண்டே வந்தாள். கண்ணன் எந்த சலனமும் இல்லாமல் சென்றுவிட்டான். அவன் சென்ற அடுத்த நொடி உடையை மாற்றிக்கொண்டு இலகுவான புடவைக்கு மாறினாள். மது போனில் அழைத்திருந்தாள். 

நானே கூப்பிடனும்னு நினைச்சேன். டார்லிங் என்ன பண்றான்? எனக்கு வீடியோ கால் பண்ணு! என மான்வி கேட்க.. “ஹே உன்னோட டார்லிங் தான் பக்கத்தில்..”

*** மூடிட்டு வீடியோ கால் பண்ணு நான் அவனை பார்க்கணும். என மான்வி எரிந்து விழுந்தாள். 

“என்னாச்சு மான்வி ஏன் இப்படி நடந்துக்குற? ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டயே டி! இப்போ என்னாச்சு?” என மது கேட்க..  அந்த நந்திதா! என உதட்டை கடித்தாள் மான்வி. 

“எந்த நந்திதா?” என மது யோசிக்க, விக்ரம் போனை வாங்கி “சீனியர் சீன் பார்ட்டி நந்திதாவா? அவளா? ஹான் நான் கூட பார்த்தேனே? நீ எப்படி அவளை இன்வைட் பண்ணன்னு யோசிச்சேன். எப்படி வந்தா?” 

மது அதிர்ச்சியுடன் “டேய் போனை ஸ்பீக்கரில்  போடு மான்வி என்ன டி சொல்ற? நந்திதாவா?  என்ன டி சொல்ற? காலேஜ்லயே ஒவ்வொரு தடவையும் உனக்கும் அவளுக்கும் முட்டிக்கும் ஃபர்ஸ்ட் டே ஈவ்டீசிங்ல ஸ்டார்ட் பண்ணி அவள் படிச்சு முடிச்சு போற வரைக்கும் பிரின்சிப்பல் வரைக்கும் பிரச்னை போயிருக்கே! அவள் என்ன பண்ணா?” 

சப் கலெக்டர் மேடத்துக்கு IPS என நிறுத்தினாள் மான்வி. மது மற்றும் விக்ரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன டா எல்லாமே நல்லா போகுதுன்னு நினைச்சேன். மான்வி பைத்தியம் மாதிரி எதையும் பண்ணி வைக்காத. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. IPS உனக்கு தான் சொந்தம். அவர் அப்படியெல்லாம் பண்ற ஆள் இல்லை. என மது எடுத்துக் கூறினாள். மது சொல்றது சரி தான் என விக்ரம் வர.. 

“ஜஸ்ட் சட் அப்! எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும். அவனுக்கு அந்த நந்தி லேட்டா லவ்வ சொல்லிருக்கா ஒருவேளை முன்னாடியே  அந்த நந்தி இவன் கிட்ட சொல்லிருந்தா என்னை வேணாம்னு சொல்லிருப்பான்ல! இப்போ கூட அவனுக்கு என்னை பிடிக்கல. உங்களுக்கு புரியல எல்லாமே அவனோட அம்மாவுக்காக இப்படி பண்றான்.” 

“ஹே இல்ல மான்வி லூசு மாதிரி பேசாத” என விக்ரம் கிட்ட தட்ட அவளை பார்க்க கிளம்பினான். 

மதுவுக்கு இன்னும் சங்கடமாக போனது. “இல்ல விக்கி. அவள் சப் கலெக்டர் நான் சாதாரண ஸ்கூல் டீச்சர். அவனுக்கு அவளா நானான்னு நிக்கும் போது என்னை விடு இந்த உலகமே அவனுக்கு பொருத்தம் அவள் தான்னு சொல்லும். நான் தான் பைத்தியக்காரி மாதிரி..” என்ற மான்வியின் கண்களில் நீர் கோர்க்க அதை உள் இழுத்து கொண்டாள். 

ஹே நான் வரேன் என விக்கி சொல்ல, வர வேணாம். நான் நாளைக்கு ஈரோடு போறேன். 

எதுக்கு? 

என்னாச்சு? என மது அருகில் வந்தாள். ஈரோடு போராலாம். என விக்ரம் கூறினான். 

MBA ஜாயின் பண்ண போறேன். அங்கேயே ஸ்டே பண்றேன். அவன் பக்கத்தில் நான் இருக்க கூடாது. சரி பை என மான்வி போனை வைக்க..  “ஹே இரு மான்வி உன் கிட்ட முக்கியமான விசயம்.”

“என்ன? அவனை பத்தி சொல்றதா இருந்தால் பிளீஸ் சொல்லாத”

“சொல்றத முதலில் கேளு. உங்க மாமியார் எனக்கு கால் பண்ணாங்க” என மது கொஞ்சம் எட்ட வந்தாள். 

“என்ன விசயம்?” என மான்வி எழுந்தாள். 

“இன்னிக்கி 10.00 to 11.00 நேரம் குறிச்சி கொடுத்திருக்காங்க.”

என்ன நேரம் என மான்வி புரியாமல் கேட்க.. ஹே அது தான்.. “கல்யாணத்துக்கு அடுத்து என்ன நடக்கும்?”

மான்வி விரக்தியாக சிரித்து விட்டு  “எனக்கு ஃபர்ஸ்ட் நைட் ஒரு கேடா?”

“ஹே மான்வி ஏன் டி இப்படி பேசுற? நீ நினைக்கிற மாதிரி கண்ணன் இல்ல டி! அவர் நல்ல டைப் அந்த நந்திதாவை பத்தி நீ விடு”

மான்வி ஒரு பெரு மூச்சை விட்டபடி, நான் பார்த்துக்கிறேன் விடு என போனை வைத்தவள். பெயருக்கு அலங்காரம் செய்து கொண்டாள். நடிக்க வேண்டும். புதிய புடவையை கட்டிக் கொண்டவள் தலை நிறைய பூக்களை சூடி கொண்டாள் ஒவ்வொரு நொடியும் நரகமாக இருந்தது. சிம்பிளாக ஒப்பனை செய்து கொண்டாள். 

மகேஸ்வரி தயக்கத்துடன் மான்வி என கதவை தட்ட.. இதோ வரேன் அத்தை என கதவை திறந்தாள். 

“அது அந்த மது பொண்ணு போன் பண்ணுச்சா?”

“ம்ம் தெரியும் அத்தை அதான் ரெடியாகிட்டு இருந்தேன்.”

“ரொம்ப சோர்வாக இருக்க மாதிரி இருக்கு. நாளைக்கு வச்சுக்களாமா?”

நாளைக்கு உங்க பையன் பிஸியாகிடுவார். என வெகு இயல்பாக பேசினாள். “சும்மா தான் தங்கம். இன்னிக்கி தனியா வைக்கணும்னு சொல்லிருக்காங்க.” என்றார் மகேஸ்வரி. 

சரி வா தங்கம் வீட்டுக்கு விளக்கு  போட்டுட்டு பால் காய்ச்சி வச்சிருக்கேன் எடுத்திட்டு போ! என்றவர். “ஹான் நீ மேலே இருக்க ரூமுக்கு போயிடு மானு”

சரிங்க அத்தை என விளக்கு ஏற்றினாள். பால் காய்ச்சி எடுத்து வந்தவள். ஒவ்வொரு படிகளாக தாண்டும் போது உள்ளம் சுக்கு நூறாக உடைவது போல ஒரு உணர்வு. கண்ணன் அறையில் இல்லை. அவள் உள்ளே வந்ததும் கட்டிலை பார்த்தாள். பூக்கள் சிதறி இருந்தது. நாளைக்கு போய் காலேஜில் ஜாயின் பண்ணிட்டு மூச்சு முட்ட குடிக்கணும். இதுக்கு மேலே இதெல்லாம் தாங்கினால் நான் பலவீனமாகிடுவேன் என சொல்லி கொண்டாள். கதவு மூடும் சத்தம் கேட்டது. 

கண்ணன் தான் அவளின் அருகில் நெருங்கினான். மான்வி பெரு மூச்சை எடுத்து திரும்பி பேச வாயெடுக்க.. அருகில் வந்து முத்தமிட ஆரம்பித்தான். ஆவேசமாக..  

மான்வி அதிர்ச்சியுடன் நிற்க சுவற்றில் சாய்த்து உதடுகளை இழுத்து கொண்டான் உதட்டுக்குள் பூட்டி கொண்டான். ச்சீ என வேகமாக தள்ளி விட்டாள். 

“இது ஃபர்ஸ்ட் நைட்..  முத்தம் கூட இல்லன்னா எப்டி? எனக்கு முத்தம் கொடுக்க பிடிச்சிருக்கு. என மீண்டும் முத்தமிட்டான்.” மான்வி கைகளை இறுக்கி மூடிக் கொண்டு நிற்க.. இறுக்கி அணைத்தவன். “எனக்கு தொட உரிமை இல்லன்னு சொல்ல உனக்கே உரிமை இல்ல. என் பொண்டாட்டி நீ தான்!” என சொல்லி விட்டு படுக்கையில் விழுந்தான் கண்ணன். 

அவள் கிட்ட நான் தோற்க்க மாட்டேன். கண்ணன் எனக்கு தான் என நந்திதா சொல்லிக் கொண்டாள். 

மாதிரி தேர்வு நடந்து முடிந்திருக்க விடை தாள்களை திருத்தி கொண்டிருந்தான் கார் முகிலன். நடுவில் இடை நிற்றல் ஏற்பட்டது. 22MCH1073 யார் என அட்டனன்ஸ் எடுத்து பார்த்தான். “தேன் தமிழ்”.. 

பேப்பரையே வெறித்து பார்த்தான். திமிர் இல்ல அகங்காரம் கொழுப்பு எல்லாமே அதிகம். இவள் எப்படி போனால் எனக்கென்ன. என்னோட வேலைய பார்க்கிறேன் என முகிலன் சொல்லிக் கொண்டான்.

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.