Episode- 23

சீதா அவனது அருகில் வந்து அமர்ந்தவள் மெல்ல திரும்பி ஒரு பார்வை பார்த்தான். 

சீதாவின் உதடுகள் தந்தியடிக்க.. “என்ன நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க? அந்த மாளவிகா என்னை அத்தைன்னு சொல்றா!”

சரி அப்போ இதுக்கும் சேர்த்து போலீஸ்ல கம்ப்லைன்ட் கொடுக்க போறியா என்ன? என ரகுவரன் கேட்க.. 

போலீஸ் கம்ப்லைன்ட்டா? யாரு மேலே? எதுக்கு கொடுக்கணும்? என சீதா பாவமாக முகத்தை வைத்து கொள்ள.. 

ரகுவரன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். ஒரு பெரு மூச்சை விட்ட சீதா இப்போ என்ன? உங்க கிட்ட சாரி கேட்கணுமா? சொல்லுங்க! அதையும் கேட்கிறேன். என்ன காலில் விழுகனுமா? என்று கண்ணம் உப்பி போக கேட்டாள். 

எப்படி இப்படி அந்தர் பல்டி அடிக்கிற? அந்த பக்கம் பார்த்தால் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு அப்டின்ற ரேஞ்சுக்கு பெர்ஃபார்ம் பண்ற!! இந்த பக்கம் பார்த்தால் அப்படியே!! என ரகுவரன் அவளை பார்த்தான். 

கண்களில் நீர் கோர்த்து கொள்ள வேறு புறம் திரும்பி கொண்டாள் சீதாலட்சுமி. 

ரகுவரன் ஒரு பெருமூச்சை விட்டபடி, என்ன எதுன்னு கேட்காம அப்படியே வேகமா புறப்பட்டு போயிட்ட? அப்போ என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? 

சீதா அழுதபடி நம்பிக்கை இல்ல கண்மூடிதனமா உங்களை நம்பி இருக்கேன். என்றாள். 

என்ன மாதிரியான வார்த்தை இது!! கேட்கவே ஆண்மகனின் முகத்தில் காதலை சொல்லும் போது வரும் பெருமையை இது இன்னும் பெரிய கர்வத்தையும் பெருமையையும் முக்கியமாக உரிமையையும் கொடுத்தது. 

நம்பி இருக்கியா? என ரகு கேட்க.. 

ம்ம் ஆமா!! அதான் என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியல என அழுதாள் சீதா லட்சுமி. 

ரகுவரன் அவள் தோலின் மேல் கைகளை போட்டு கொண்டு இங்கே பாரு! சீதா இங்கே பாரேன். இந்த ஒரு விசயத்தில் மட்டும் நீ என்னை சந்தேக பட வேணாம். உன்னோட கண்மூடி தனமான நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். ஏன்னா எனக்கு என்னைக்கும் நீ மட்டும் தான்!! என்னோட ஆண்மைக்கு நீ போதும். உன்னை தான் என்னோட மனம் எப்போவும் தேடும். என்று அழகாக விவரித்தவன் அத்தோடு நில்லாமல் கண்களை துடைத்து விட்டான். 

சீதா அவனை பார்க்க, இது வெறும் இன்டிமேட் மட்டும் கிடையாது. எல்லாமே தான் எல்லா உணர்வுகளும் உன் கிட்ட தான். எனக்கு பசிச்சா உன்னை தேடுவேன், தூக்கம் வந்தாலும் நீ தான், கவலையா இருந்தாலும் உன்னை தான் தேடுவேன். என்னோட ஆறுதல் உன்னோட மடி தான்.. இந்த அளவுக்கு நான் பேசினதே இல்ல. எனக்கே புதுசா இருக்கு. அதனாலே இனி இப்படி எல்லாம் நடக்கவும் நடக்காது. நீ யோசிக்கவும் வேணாம் என்றான். 

ம்ம் என இடம் பொருள் அறியாமல் அவனது உதட்டில் முத்தமிட்டாள் சீதா. 

ஹே என்ன பண்ற நீ? என அப்பட்ட அதிர்ச்சியுடன் ரகுவரன் நகர முயற்சி செய்ய.. அவனை இறுக்கி அணைத்து கொண்டு முத்தத்தை தொடர்ந்தாள் சீதா. 

மாளவிகா காபி தட்டுடன் வெளியே வந்தவள் வேகமாக ரிவர்ஸ் சென்றாள். 

என்னாச்சு பாப்பு! என கிரி கேட்க.. 

மாமு அங்கே போகாத!! என வாய் பொத்தி இழுத்து வந்தாள் கிச்சனுக்கு. 

என்ன பண்ற நீ? என கத்தினான் கிரி. 

மாளவிகா சிரித்து கொண்டே மாமாவும் சீதாவும் வேற மோட்ல இருக்காங்க. சோ இப்போ நம்ம போக வேணாம் டா!! மாமா!! என கையை மெதுவாக விலக்கினாள். 

நான் தான் இங்கே புது மாப்பிள்ளை. ஆனால் பொண்ணு என்னை கவனிக்க மாட்டிக்கிது என கிரி முகத்தை தூக்கி வைத்து கொள்ள.. 

மாளவிகா அவனது சட்டை பட்டனை போட்டு விடுவது போல இழுத்தவள். மீசையை எட்சில் படுத்தினாள். 

என்ன டி பண்ற? என கிரி அவளின் கண்களை பார்த்து கேட்க.. புடிக்கும் இதை முறுக்கு மாதிரி கடிச்சு திங்கனும் என மாளவிகா கட்டி கொள்ள.. அவன் பாசத்துடன் அவளை அணைத்து கொண்டான். 

மாமு விடு மாமு ரொம்ப இறுக்கமா இருக்கு என அவள் சினுங்க.. 

என்னோட சந்தோஷம் மொத்தமும் நீ தான் பாப்பு!! எனக்கு இன்னிக்கி மறுஜென்மம் கிடைச்சிருக்கு! நான் ரொம்ப கொடுத்து வச்சவன். இதுக்கு எல்லாமே காரணம் ரகு தான். அவன் மட்டும் இல்லன்னா எனக்கு நீ கிடைச்சிருக்க மாட்ட என்றான் கிரி. 

போதும் போதும் இது ரொமான்டிக் மோட் ஆனால் நீ சென்டிமென்ட் மோடா மாத்திட்ட.. என்றவள். அவனை விட்டு பிரிந்தாள். 

என்ன டி எட்சி பண்ணிட்ட? என கிரி கேட்க.. 

மாமாவும் சீதாவும் கிளம்பட்டும் எல்லாமே பண்ணுவேன் என்றாள் மாளவிகா. 

போதும் வீட்டுக்கு போய் பார்த்துப்போம் தள்ளு சீதா!! ஆல்ரெடி மாளவிகா நம்மள பார்த்திட்டு உள்ளே போயிட்டா!! எனக்கு ஆக்வெடா இருக்கு என்றான் ரகு. 

சீதா சட்டென திரும்பி பார்த்தவள். இப்போ என்ன சொன்னீங்க? என கேட்க.. 

மாமா நான் காபி கொண்டு வரேன் என சத்தமிட்ட படி வந்து நின்றாள் மாளவிகா. 

வா பாப்பு என ரகுவரன் கூற.. காபியை எடுத்து கொண்டார்கள் இருவரும். 

ரகுவரன் கிரியை பார்த்து, இனி யார் கிட்டயும் பேச்சு வச்சுக்காத. எந்த சச்சரவுக்கும் போக வேணாம்.

நீ வேற!! இனி லாக் பண்ணிடுவா!! என்னை எங்கேயும் அனுப்ப மாட்டாள். என சிரித்து கொண்டே பார்த்தான் கிரி. 

பாப்பு உனக்கு எப்போ படிப்பு முடியுது? என கேட்டான் 

இன்னும் ரெண்டு மாசம் மாமா! நீங்க ஒன்னும் கவலை படாதீங்க நான் பார்த்துப்பேன். கிரி என்னை மீறி எதுவும் பண்ண மாட்டான் என்றாள் மாளவிகா. 

சரி ஓகே மேடம் என கிரி சொல்ல.. 

சரி அண்ணா நாங்க புறபடுறோம் என சீதா சொல்ல.. 

ரகுவரன் எழுந்தான். மாளவிகா தன் மாமனை பார்க்க.. பாப்பு எது வேணும்னாலும் எனக்கு போன் பண்ணு. எதை பத்தியும் பயம் வேணாம். இவன் வம்பு பண்ணா எனக்கு சொல்லு! நான் இருக்கேன். 

அதுக்கு நீ வர தேவையில்லா அவளே என்னை விட்டால் சேர் முட்டி போட வைப்பா என கிரி கூற.. 

சீதா நேராக மாளவிகாவிடம் நான் போயிட்டு வரேன். ஹேப்பி மேரிட் லைஃப் எதுவும் இருந்தாலும் எப்போ வேணும்னாலும் போன் பண்ணுங்க என்றாள். 

ரொம்ப தேங்க்ஸ் அத்தை என மாளவிகா கூற.. 

ரகுவரன் மவுனமாக சிரித்தான். 

முகத்தை சுளித்த சீதா, பிளீஸ் நான் இன்னும் காலேஜ் கூட முடிக்கல. என்னை விட நீங்க பெறியவங்க. என்னை அத்தைன்னு சொல்லாதீங்க. என்றவள் கிரி அண்ணா! உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க! என்றாள் சிணுங்கி கொண்டே.. 

இல்ல அத்தை எங்க மாமாவுக்கு கொடுக்குற மரியாதை தான் உங்களுக்கும் என மாளவிகா கூற.. 

அய்யோ பிளீஸ் முடியல இனி பேசவே மாட்டேன் என சீதா முகத்தை திருப்பி கொள்ள.. 

ஹே பாப்பாவை பேர் சொல்லி கூப்பிடு! என அதட்டினான் கிரி. 

டிரை பண்றேன் அத்தை என கையை ஆட்டினாள். முறைத்தபடி சீதா காரில் ஏறி கொள்ள.. மாமா போயிட்டு வாங்க என கையை அசைத்தாள் சீதா. 

மாளவிகா மற்றும் கிரி இருவரும் புன்னகையுடன் வீட்டுக்குள் செல்ல அதே போல சீதா மற்றும் ரகுவரன் இருவரும் 

சந்தோசமாக காரில் சென்றார்கள். 

என்னாச்சு அத்தை உங்களுக்கு? இப்போ நம்ம எங்கே போகனும் அத்தை என சிரிப்பை அடக்கிய படி கேட்டான் ரகு. 

சீதா…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.