Episode -25
ரகுவின் காதல் இன்னும் திகட்ட திகட்ட சீதாவின் மேல் இருக்க.. அவனது ஒரு முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்த சீதாவுக்கு அவனது மறுமுகம் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ரகுவரனது ருத்ர மூர்த்தி தரிசனமும் விரைவில் கிடைத்தது.
என்னாச்சு சீதா? என மாளவிகா போனில் கேட்க..
“உங்க மாமா கிட்ட பேசினயா?”
எதை பத்தி? என மாளவிகா வினவினாள்.
ஹே என்ன எதை பத்தின்னு கேட்கிற? என சீதா கோபத்தில் கொந்தளிக்க..
சீதா அது வந்து!! என மாளவிகா தயங்க..
பிளீஸ் விடயத்தை சொல்லு! எனக்கு பிரசர் ஏறுது என கடுப்பாக பேசினாள் சீதா.
பெரிய மாமாவை விட்டு ரகு மாமா வரது கொஞ்சம் கஷ்டம் சீதா. என ஒரு வழியாக கூறி முடித்தாள் மாளவிகா.
ஏன் அப்படி? ஏன் வர கூடாது? என் கிட்ட அவரு வரேன்னு சொன்னாரு மாளவிகா. என சீதா கூற..
மாளவிகா என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருக்க..
பதில் சொல்லு!
“கல்யாணம் ஆகி உடனே வந்து மாமாவை உன்னோட வழிக்கு கொண்டு வரது எப்டி சாத்தியம்? அதுக்குன்னு நேரம் காலம் தேவை சீதா. நீ மாமாவோட நல்லத்துக்கு தான் சொல்ற! அது நல்லாவே தெரியுது. நீ சொன்னதும் உடனே எப்படி அவர் எல்லாத்தையும் செய்வாரு. சுபா கல்யாணம் முடியட்டும் அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உன் கிட்ட வரேன்னு சொல்லி இருக்கார்ல அப்போ கண்டிப்பா வருவாரு. கொஞ்சம் பொறுமையா இரு! நான் இன்னொரு முறை மாமா கிட்ட பேசி பார்க்கிறேன்.” என கூறினாள் மாளவிகா.
சீதா அமைதியாக இருக்க.. என்ன? எதுவும் பேசு சீதா என அழைத்தாள் மாளவிகா.
உன் மாமாவோட மனசை மாத்த எதுவும் விசயம் இருக்கா? உனக்கு தெரியுமா? சொல்லு! என சீதா கேட்க..
மாளவிகா கண்கள் விரிய, இத்தனை பிடிவாதமா? ரகு மாமாவுக்கு ஆபோசிட்டா இருக்க நீ!! என்றாள்.
நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்ல என சீதா கேட்க..
உங்க ரெண்டு பேருக்கும் தனிப்பட்ட விசயங்கள் இருக்குமே! நீயே யோசிச்சு பாரு! ரகு மாமா தேவைக்கு கூட பேசாது. ரொம்ப கம்மி. நான் கேட்டதை வாங்கி கொடுக்கும் பத்திரமா பார்த்துக்கும். மத்த படிக்கு உர்ருன்னு தான் இருக்கும். ஆனால் என் மேலே பாசம் அதிகம் என மாளவிகா கூறி கொண்டே போக..
இது எனக்கு தேவையில்லாத விசயம்! வேஸ்ட் என்று போனை கட் செய்தாள் சீதா.
என்ன இந்த பொண்ணு இப்படி இருக்கா? என்று மாளவிகா அங்களாய்ப்புடன் பேச, அவளின் வெற்று இடையில் கை போட்டு அவன் பக்கம் இழுத்தான் கிரி.
மாமு!! என சிணுங்கி கொண்டே அவள் திரும்ப..
பேசி முடிச்சிட்டல்ல உன் மாமன் புராணத்தை, கொஞ்சம் இந்த பக்கம் திரும்பு என அவளை ஆட்கொண்டான் கிரி.
**
எவ்வளவு யோசித்தும் சீதாவுக்கு ஒன்றுமே தெரிய வில்லை. ரகுவரன் நடு சாமத்தில் அறைக்கு வந்து சேர்ந்தான்.
சீதா படுக்கையில் கிடக்க.. ஒரு முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சீதா அவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. மண்டைக்குள் மாளவிகா சொன்னதே ஓடி கொண்டிருந்தது.
லக்ஸ் என மூக்கின் நுனியை அவளின் காதில் வருடினான் ரகுவரன்.
ப்ச் என முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டாள்.
ஹே என்ன டி ஆச்சு? என அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அவளிடம் பதில் இல்லை.
சீதா என கையை பிடித்து நிற்க வைத்தான்.
“சொல்லுங்க”
என்னாச்சு? முகமே வாட்டமா இருக்கு? சொல்லு என ரகுவரன் கேட்க..
“நிஜமாவே என்னை தனியா கூட்டிட்டு போவீங்க தானே!” என சீதா கேட்க..
“இதுல என்ன சந்தேகம்! கண்டிப்பா கூட்டிட்டு போவேன்”
“அப்போ சத்தியம் பண்ணுங்க” என அவள் கையை நீட்ட..
ரகுவரன் நெற்றியை நீவிய படி எதிரில் இருப்பவளை பார்த்தான்.
சீதா அவனை முறைத்து விட்டு முன்னால் நகர, இருடி! என அவளின் முன்னால் வந்தவன். சுபா கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்க.. என்றான்.
எத்தனை வருஷம் ஆகும் சுபா கல்யாணத்துக்கு?
அவள் சின்ன பொண்ணு டி!!
அப்போ நானு?
உனக்கு 23 வயசு! நீ மேஜர் சீதா!!
சீதா பாரபட்சம் பார்க்காமல் முறைக்க, கோபத்தில் கூட அழகா இருக்க நீ!! என அவளின் அருகில் நெருங்கி முத்தமிட வந்தான்.
இல்ல நீ வர கூடாது போடா!! என்னை தனியா கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் தான் வரணும். இதுல இருந்து நான் மாற மாட்டேன்.
அப்போ நான் வீட்டுக்கு என ரகுவரன் ஆரம்பிக்க..
நீ வீட்டுக்கு வரணும்! வரல! நான் வீட்டை விட்டு போயிடுவேன் என கையை நீட்டி எச்சரித்து விட்டு குளிக்க சென்றாள் சீதா.
ரகுவரன் எதுவும் பேசாமல் விரக்தியுடன் பார்த்தான். எப்டி? இவளை விட்டு இருக்க என்பது தான் அவனது கவலை.
**
பரத், சந்த்ரு, சதாசிவம், வெங்கடாஜலபதி, என அனைவரும் கூடி இருக்க, என்ன ப்பா என கேட்டு கொண்டே வந்தான் ரகுவரன்.
உனக்காக தான் ரகு உன்னோட அப்பா வெயிட்டிங்! என்றார் வெங்கட்.
சதாசிவம் எழுந்து ரகுவரா நம்ம தொகுதிக்கு சட்டமன்ற எலக்சன் வர போகுதுல்ல..
என்ன தயங்கி தயங்கி சொல்லிட்டு இருக்கீங்க? நேரடியாக ரகுவரன் கிட்ட சொல்லுங்க என வெங்கட் கூற..
சந்துரு மனதில் நான் இதை பத்தி பேச வந்தால் அவங்களே இதை பத்தி சொல்றாங்க! இதை விட்டுட கூடாது. நம்மளோட அடுத்த கட்டம் இது தான். கண்டிப்பா நான் தான் MLA ஆகனும் என நினைத்தான்.
சொல்லுங்க டாடி! எலக்சன் பிரச்சாரம் பத்தி MLA பேசினாரா? சிறப்பா பண்ணிடலாம் என்றான் ரகு.
இல்ல ரகு! எலக்சன்ல நீ நிக்கணும் என்றார் சதாசிவம்.
இதை கேட்டதும் சந்ருவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் நின்றான்.
ரகுவரன் புன்னகையுடன் எனக்கு எதுக்கு பா எலக்சன் பதவி? உங்க பின்னாடி நிக்க தான் எனக்கு விருப்பம் என்றான்.
இல்ல ரகு! நீ MLA ஆகியே ஆகனும். அந்த போலீஸ்காரன் முருகேசன் உன்னை இழுத்துட்டு போனதை நினைச்சா இப்போ கூட எனக்கு ஆத்திரம் தீரல! அவன் உன் முன்னாடி கை கட்டி நிக்கனும் என்றார் சதாசிவம் ஆற்றாமையுடன்.
ரகுவரன் தன் தந்தையின் அருகில் வந்து நான் அந்த பதவிக்கு சரியா வர மாட்டேன். நீங்க நில்லுங்க கண்டிப்பா பாருங்க ஜெயிப்பீங்க! என்னை விட உங்களுக்கு செல்வாக்கு அதிகம் என்றான்.
பரதனும் ஆமா பா அண்ணன் சொல்ட்டதுசரி தான் நீங்க நில்லுங்க என கூற.. வெங்கட் புன்னகையுடன் நான் தான் சொன்னேனே சதாசிவம். என்றார் வெங்கட்
சந்துரு வேண்டா வெறுப்பாக கண்டிப்பா ப்பா அண்ணா சொன்ன போல நீங்களே நில்லுங்க. உங்களுக்கு தான் எல்லா பொருத்தமும் இருக்கு. என்றான்.
இல்ல அது சரி வராது ரகு. நீயே நில்லு என அவர் மீண்டும் கூற..
இல்ல பா நீங்க நில்லுங்க என கைகளை பிடித்து உறுதியாக கூறினான் ரகுவரன்.
இவ்வளவு தூரம் ரகுவே சொல்றான்ல. அப்புறம் என்ன? நீயே நில்லு சதா என்றார் வெங்கட்.
ப்பா சரின்னு சொல்லுங்க என பரதன் முன்னால் வந்து கூற.. ரகுவரன் தன் தந்தையை பார்த்து மென்மையாக புன்னகைத்து தலையை அசைத்தான்.
சரி என சிரிப்புடன் கூறினார் சதாசிவம்.
சந்துரு எதிர்பாரா ஏமாற்றத்துடன் நின்றான்.
**
ஹே ரவுடி ரங்கா நீ அப்பாவாக போற!! என வெட்கத்துடன் நகத்தை கடித்தாள் சீதா.
அதே நேரம் ரகுவரன் இங்கே ஒருவனது விரல்களை படபடவென உடைத்து வயிற்றில் ஓங்கி உதைக்கும் வீடியோ காட்சி அனைவரின் போனிலும் வலம் வந்தது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels