
Episode -1
- 27 Oct 2026
- 255 reads
- ★ 4.8 (28)
- 7 min read
அங்கிருக்கும் அனைவரும் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆம் அது பிரம்மாண்டமான PKP என்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியம் அது.. ஆல் ஆஃப் யூ வெல்கம் காய்ஸ்..B.tech ஸ்டுடென்ஸ் கேர்ள் அண்ட் பாய்ஸ் நீங்க கேன்டீன் ஆப்போசிட் ப்ளாக்.. கிளம்பலாம்.. என்று சத்தமாக கத்தி கொண்டிருந்தார் சீனியர் ஸ்டாப் ஒருவர்.
எப்போ ECE சொல்லுவாங்க என்னும் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. அவள் நினைத்த மாத்திரத்தில்.. ECE ஸ்டுடெண்ட்ஸ் நீங்க மெயின் ப்ளாக் செகண்ட் ஃபிளோர் என வரிசையாக அறிவிப்புகளை வழங்க, மொத்தமாக ECE மாணவர்கள் எழுந்தார்கள். அந்த கூட்ட நெரிசலில், கையில் பைலை இறுகப் பிடித்தபடி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தாள் கீர்த்தி. பெருமாளே!! என தனக்குள் சொல்லியபடி வந்தாள். அப்போது கூட்டத்தின் தள்ளுமுள்ளில் நிலைதடுமாறி அவளது பைல் நழுவி கீழே விழப் பார்த்தது.
“ஹே… பார்த்து!” என்றபடி அவளது கையைப் பிடித்து பைலைத் தாங்கினாள் ஒரு பெண். சுறுசுறுப்பான விழிகளும், குறும்புப் புன்னகையுமாக நின்றிருந்தாள் மதுமிதா.
“தேங்… தேங்க்ஸ்ங்க… கூட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, அதான் கால் இடறிடுத்து,” என கீர்த்தி எப்பொழுதும் போல பேசி விட..
“அட, நீ மாமியா?” என்று அவள் சிரிக்க..
நாக்கை கடித்து கொண்டே பார்த்த கீர்த்தி அசடு வழிந்து கொண்டு அதை விடுங்க நீங்க ECE யா? என கேட்டாள்.
எஸ் என்று புன்னகைத்தவள். என் பேரு மதுமிதா என்று கையை நீட்டினாள்.
நான் கீர்த்தி என்று கணக்குழி தெரிய புன்னகைத்தாள்.அவளது பேரழகு அத்தனை கூட்டத்திலும் ஒரு தாமரை மலரைப் போலத் தனித்துத் தெரிந்தது. பால் போன்ற மேனி, மருண்ட பெரிய கண்கள், அடர் பச்சை நிற காட்டன் சுடிதார், நேர்த்தியாகப் பின்னப்பட்டு முன்னால் சரிந்த ஒற்றைச் சடை, நெற்றியில் இட்டிருந்த சின்னஞ்சிறு சந்தனப் பொட்டுடன் மிகவும் அடக்கமாய் அவள் நடந்து வந்தாள்.
அப்போது அவர்களுக்குப் பின்னால் இருந்து நீல நிற ஜீன்ஸும் குர்தாவும் அணிந்திருந்த இன்னொரு பெண் எட்டிப்பார்த்தாள். துறுதுறுவென வெட்டப்பட்ட பாப் கட்டிங் முடி, கழுத்தில் ஒரு சிறிய சிலுவை டாலர் அணிந்திருந்தாள்.
“ஹாய்! நானும் ECE தான்… என் பேரு மெர்சி.”
ஹே நாங்களும் என கீர்த்தி மெர்சி ஒரே நேரத்தில் கூற, அப்போ வாங்க காய்ஸ் ஒண்ணா போலாம். என்று தோழமையோடு இருவரின் கரங்களையும் பற்றிக் கொண்டாள் மெர்சி.
மதுமிதாவின் உற்சாகமும், மெர்சியின் வெளிப்படையான பேச்சும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த கீர்த்தியின் மனதிற்குப் பெரும் ஆறுதலைக் கொடுத்தன. ஆடிட்டோரியத்தின் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கடந்து, மெயின் பிளாக்கின் இரண்டாம் தளத்திலிருந்த ECE முதலாம் ஆண்டு வகுப்பறைக்குள் மூவரும் ஒன்றாக நுழைந்தார்கள். அங்கே மாணவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு இப்போதே ஒரு குழுவாக நட்பு பாராட்டினார்கள் என்றே சொல்லலாம்.
எங்கே உட்காரலாம்? என மூவரும் பார்க்க, லாஸ்ட் பெஞ்ச்ல ஆல்ரெடி பில் ஆகியாச்சு. என்று மெர்சி பார்த்தபடி கூற, ஃபர்ஸ்ட் பெஞ்ச் நமக்கு செட் ஆகாது என மது கூறிட.. அப்போ நம்ம மிடில்ல உட்காரலாமா? என கீர்த்தி கூற..
உட்கார்ந்திட்டா போச்சு!! என கீர்த்தி நடுவில் மது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மெர்சி என அமர்ந்து கொண்டார்கள்.
அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்பு ஆசிரியர்கள் சென்றார்கள் ECE துறையில் இரண்டு வகுப்புகள். எதிர் ப்ளாக்கில் B.Tech வகுப்புகளிலும் அந்தந்த கிளாஸ் இன்சார்ஜ் சென்று கொண்டிருக்க, ECE முதலாம் ஆண்டு வகுப்புக்கு இன்னும் இன்சார்ஜ் வரவில்லை.
என்னாச்சு என கீர்த்தி மெர்சியை பார்த்து கேட்க, first period முடிய இன்னும் 15 minutes தான் இருக்கு. இன்னும் ஸ்டாப் வரல என கூற.. அப்படியா? என்னவா இருக்கும்? என கீர்த்தி யோசிக்க..
வரலனா என்ன அது வரை நம்ம பேசுவோம். என மெர்சி அவளது சிகையை கோதி கொண்டே திரும்பியவள். “கீர்த்தி, உன் கண்ணு ரொம்ப அழகா இருக்குடி… உன்னைப் பார்த்தா அப்படியே கிளாசிக்கல் டான்சர் மாதிரி இருக்க!” என்று கூற அதை மதுமிதாவும் ஆமோதித்து, ” கொழு பொம்மை போல இருக்க” என்றாள்.
மெர்சி கீர்த்தியின் மேல் கைகளை போட்டு கொண்டு, நான் மட்டும் பையனா இருந்தால் இந்நேரம் ப்ரொபோஸ் பண்ணியிருப்பேன் உன்னையும் லவ் பண்ண வச்சிருப்பேன் என்றாள் விளையாட்டாக..
மெர்சி!! என சிணுங்கிய கீர்த்தி வெட்கத்தில் சிணுங்கியபடி நீங்க பஸ் நம்பர் என்ன? என கேட்க..
இல்ல நான் hostel.. என்று மெர்சி கூற.. நானும் ஹாஸ்டல் என உடனே கூறினாள் மது இருவரும் இன்னும் நெருங்கி போனார்கள்.
மெர்சி சிரித்தபடி மாமி நோக்கு?
நேக்கு மயிலாப்பூர் என்றாள் கீர்த்தி. மூவரும் ஒன்றாக சிரித்தார்கள். நீங்க எந்த ஸ்கூல்? இப்போ செல்ஃப் இன்றோ கொடுக்க சொல்லுவாங்க அதுக்கு prepare பண்ணலாம் என்று அவரவர்கள் பேசி கொண்டிருக்க.. அதே நேரம் அவ்விடத்தில் அத்தனை கூச்சல் சத்தங்கள் நிறைந்திருந்தது.
ஆனால், வகுப்பறை வாசலின் வராண்டாவில் ஒரு கனத்த லெதர் பூட்ஸின் சத்தம் கேட்டது.
டக்… டக்… டக்… என சத்தத்தைக் கேட்டதும் வகுப்பில் அரட்டையடித்துக் கொண்டிருந்த அத்தனை பேரின் பேச்சும் சட்டென்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒட்டுமொத்த வகுப்பரையிலும் ஒருவித அமைதி குடி கொண்டது. மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள..
அங்கே வாசலில் நின்றிருந்தான் அவன்! எவன் அவன்?
விக்டர் பாண்டியன்! ECE முதலாம் ஆண்டு என A பிரிவின் கிளாஸ் இன்சார்ஜ். முதல் பாடவேளை முடிந்து பெல் சத்தம் கேட்டுவிட்டது. ஆனால் அப்பொழுது தான் அவன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
காலேஜ் ரூல்ஸ், டிசிப்ளின் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அவனது அகராதியில் இடமில்லை. கருப்பு நிற முழுக்கை சட்டை, அதை முழங்கை வரை அலட்சியமாகக் கசக்கி மடித்துவிட்டிருந்தான். சட்டையை டக்கின் செய்யவே இல்லை; பேண்ட்டின் மேல் சட்டை காற்றில் பறக்க, காலர் பட்டன்கள் இரண்டும் அவிழ்ந்து அவனது பரந்த நெஞ்சை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தது. அவனது வலது கையில் தடித்த வெள்ளி பிரேஸ்லெட் செயின் ஒன்றைக் கழற்றி விரல்களிலேயே நளினமாகவும் முரட்டுத்தனமாகவும் சுழற்றிக் கொண்டிருந்தான்.
முகம் முழுவதும் சில நாட்களாக சவரம் செய்யப்படாத அடர்த்தியான ரக்கட் தாடி. காற்றில் ஒழுங்கற்றுக் கலைந்த சுருள் முடி. எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியாகத் தரம் உயர்ந்த சிகரெட்டுகளைப் புகைத்துப் புகைத்து, அவனது கீழ் உதடு அடர் கருமை நிறமாக மாறியிருந்தது. அப்போ காதல் தோல்வியா? அதெல்லாம் இல்லை..
விக்டர் இடது கையால் தன் சட்டை காலரை சற்றே பிடித்து இழுத்து சரிசெய்தபடி, வாயில் மென்றுகொண்டிருந்த சுவிங்கத்தை அங்கே வகுப்பறை வாசலிலே ஓரமாக வைக்கப்பட்டிருந்த டஸ்ட் பின்னில் ஸ்டைலாக துப்பிவிட்டு, ஒரு ரவுடி கூட்டத்தின் தலைவன் தன் சொந்த ஏரியாவுக்குள் நுழைவது போல திமிரோடு வகுப்பறைக்குள் காலடி எடுத்து வைத்தான்.
அங்கிருக்கும் அனைவரும் யார் இவன் என்ற பாவனையுடன் பார்த்து கொண்டிருக்க,
அவனைப் பார்த்த மாத்திரத்தில் கீர்த்தியின் நெஞ்சு சுக்குநூறாக உடைந்து சிதறியது போல அதிர்ந்தது. தொண்டைக்குள் எச்சில் கூட இறங்காமல் ரத்தம் உறைந்து போனது.
‘ஹே… பெருமாளே இ… இவன்… இவன் இங்கேயா?!’ என அவளது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. பயத்தில் கை கால்கள் நடுநடுங்கத் தொடங்கின. அவனது முகமும், அவனது முரட்டு ஆளுமையும் அவளது நினைவுகளில் மின்னல் போல வந்து அறைந்தது.
பாண்டியன் பைனான்ஸ் முதலாளி சண்முக பாண்டியனின் பேரன். விக்டர் பாண்டியன். ஆஸ்திரேலிய நெருப்பு கோழி போல அவனது தோற்றம்.
விக்டர் நேர்த்தியாக டேபிளின் மேல் அமர்ந்து, கையில் இருந்த அந்த தடித்த வெள்ளி பிரேஸ்லெட்டை மேஜையில் ‘டங்’ என்று தட்டியபடி, முழு வகுப்பறையையும் தன் கர்ஜனை கலந்த பார்வையில் உலுக்கிக் கொண்டிருந்தான் விக்டர் பாண்டியன்!
உறைந்து போய் அமர்ந்திருந்த கீர்த்தியின் கையை பற்றி சுய நினைவுக்கு கொண்டு வந்தாள் மது. அந்த நினைவுகள் சட்டென்று கலைய தன்னை ஆசுவாச படுத்திகொண்டு எதிரில் இருப்பவனை மிரட்சியுடன் பார்த்தாள் கீர்த்தி.
வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் அவனை நோக்கிட, “என் பேரு விக்டர் பாண்டியன். உங்களோட கிளாஸ் இன்சார்ஜ். காலேஜ் ரூல்ஸ், அட்டெண்டன்ஸ்… இதெல்லாம் மத்த புரொபசர்கிட்ட வச்சுக்கோங்க. என்கிட்ட வராதீங்க,” என்று அவனது கரகரத்த, அடர்ந்த குரல் வகுப்பறையின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.
பக்கத்திலிருந்த மதுமிதாவும் மெர்சியும் கூட அவனது அந்த அலட்சிய பேச்சை பார்த்து மிரண்டுபோய் அமைதியாக அமர்ந்திருக்க, கீர்த்தி தன் துப்பட்டாவை மார்போடு இறுகப் பிடித்தபடி, தலையைக் குனிந்து உடலைச் சுருக்கிக் கொண்டாள். அவளது இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடித்தது.
“பெருமாளே… ஏற்கனவே இவன் கிட்ட எங்க மொத்த ஆத்து சொத்தும் அடமானத்தில் கிடக்கு? இவன் தான் அந்த ரவுடி வட்டித் தொழில்காரனா? இவன் மட்டும் என்னைய அடையாளம் கண்டுண்டா… காலேஜ்ல என் நிலைமை என்னாகும்?!’ என்று எண்ணியவளின் சிவந்த இதழ்கள் நடுங்கி, பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன.
தொடரும்..










💬 Be the first to comment