🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
2. Episode -2 
My Rugged Professor & Husband
📖 My Rugged Professor & Husband · Chapter 2 of 10

Episode -2 

  • 27 Oct 2026
  • 200 reads
  • ★ 4.8 (22)
  • 9 min read

அன்று சண்முக பாண்டியனின் வீட்டின் வாசலில், கொளுத்தும் வெயிலில் சட்டை இல்லாமல், நரம்புகள் புடைக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தானே… அதே முரட்டு விக்டர் பாண்டியன்! சிகரெட் புகையோடு, ‘ரவுடி பேபி’ பாடலின் அதிரடி சத்தத்தில் இரும்பு டம்பல்ஸை விரல்களால் சுழற்றிக் கொண்டிருந்த அதே ஆளுமை!

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அன்று அவள் வீட்டின் பத்திரத்தை அடகு வைக்க அந்த நரகத்தின் வாசலில் நுழைந்தபோது கண்ட அதே மிருகம்… இன்று அவளது கல்லூரி வகுப்பறையில், அவளது வகுப்புப் பேராசிரியராக வந்து நிற்கிறான்!

அவனது தீப்பார்வை வகுப்பை ஒருமுறை மேய்ந்துவிட்டு, டெஸ்க்கின் விளிம்பில் வந்து அமர்ந்த அந்த வினாடியில், கீர்த்தியின் மனம் சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்தப் பயங்கரமான நாளுக்குச் சுழன்று சென்றது.

அதே நேரம் அடுத்த பாடம் எடுக்கப் பேராசிரியர் வந்து சேர்ந்துவிட, விக்டர் சிவந்த விழிகளுடன் வெளியே வேடிக்கை பார்த்தான். இரண்டடி பின்னால் சென்றுவிட்டார் புரபசர்; சொல்லப்போனால் தெறித்து ஓடிவிட்டார் என்றே சொல்லலாம்!

“என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? சொல்லுங்க…” எனத் தலையைக் கோதியபடி கேட்டான் விக்டர்.

‘ரவுடி மாதிரி தெரியுது!’ என கீர்த்தி மனதுக்குள் நினைத்தாள்.

மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க, மெர்சி சட்டென்று எழுந்து, “உங்களைப் பார்த்தா ரவுடி மாதிரி இருக்கு சார்!” என்றுவிட்டாள்.

விக்டர் புன்னகையுடன், “சிட் டவுன்,” என்றான்.

அவனது சிரிப்பே அத்தனை பயத்தைக் கொடுக்க… “ஒண்ணும் ரெண்டும் சேர்ந்து வரப் போல இருக்கு… எதுக்குடி வம்பை விலைகொடுத்து வாங்கிக் கட்டிக்கிறே?” என கீர்த்தி தனது தோழியின் காதைக் கடித்தாள்.

விக்டர் அனைவரையும் பார்த்து, “ஸ்கூல் வரைக்கும் தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்க டீச்சர் இருப்பாங்க… காலேஜ் வந்ததும் நீங்களே தேடித் தேடி படிச்சுக்கணும்,” என்று மிகப்பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “வாரத்துல ஒரு நாள் டவுட் கிளியர் பண்ண வருவேன். அடுத்த கிளாஸ்ல செல்ஃப் இன்ட்ரோ (Self intro) பண்ணுங்க,” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான்.

கீர்த்திக்கு அந்த நாள் எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை; எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றும் புரியவில்லை. இதோ, வீட்டுக்குள் அவள் ஓரடி எடுத்து வைக்க, மாடியிலிருந்து இறங்கி வந்தான் விக்டர்! வேகவேகமாக வீட்டுக்குள் ஓடிப் போய் ஒளிந்துகொண்டாள்.

ஆமாம், எதற்கு விக்டர் கீர்த்தியின் வீட்டில் இருக்கிறான்?

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்:

ராகவேந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். அந்த ஏழாவது மாடி முழுவதும் ஒருவித உறைந்துபோன பயமும் மரண அமைதியும் கவிழ்ந்திருந்தது. காரமான ஃபீனைல் நெடியும் மருந்துகளின் கலவை மணமும் மூக்கைத் துளைத்தன. தூரத்தில் ஐசியூவின் கதவுகள் திறக்கப்பட்டு மூடப்படும் போதெல்லாம் ஏதோ ஒரு இயந்திரத்தின் சீரான ‘பீப்… பீப்…’ ஒலியும், அவசரப் பிரிவு சக்கர நாற்காலிகளின் மெல்லிய உருளல் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இடத்தை பற்றிய விவரமே சொல்லும்—இப்பொழுது எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று.

“தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா

மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.”

என்று அந்த ரோஜா நிற உதடுகள் விடாமல் திரும்பத் திரும்ப மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தன.

மனதில் தீராத சோகமோ, வறுமையோ அல்லது ஏதோ ஒரு பெரிய ஆபத்தோ சூழ்ந்திருக்கும் போது அபிராமி பட்டரால் பாடப்பட்ட இந்த வரிகளைப் பாடினால் அனைத்துத் துன்பங்களும் விலகும் என்று அவளின் தாத்தா வெங்கட்ராமன் கூறியிருக்கிறார். எப்பொழுதுமே கீர்த்தி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, உதடுகள் தானாக இந்த மந்திரத்தை உச்சரிக்கும். இப்பொழுது அவள் பேராபத்தில் இருக்கிறாள்; அவளது வேதனையும் வலியும் அந்த அளவுக்கு இருக்கிறது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அப்படி என்ன பிரச்சனை அவளுக்கு என்று கேட்டால்… கீர்த்தியின் தந்தை முரளிதரனின் கிட்னி நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அதன் பரிசோதனை அறிக்கையைப் பார்க்க வருமாறு தலைமை மருத்துவர் வரச் சொல்லியிருக்கிறார்.

கீர்த்திக்கு உள்ளுக்குள் அத்தனை பயமும் கவலையும் வாட்டி எடுத்தன. அதற்கும் மேல், சுவர்களில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிகள் மெல்லிய சீறலுடன் உறைபனிக் காற்றைக் கக்கிக் கொண்டிருக்க, நடைபாதையின் எல்.இ.டி. விளக்குகள் துயரத்தை அப்பட்டமாய் வெளிச்சம் போட்டுக் காட்டின. அந்த நீல நிற பிளாஸ்டிக் நாற்காலியில் சுருங்கிப்போய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.

‘பெருமாளே காப்பாத்து!’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டிருந்த அதே நேரம்—

திடீரென கதவு திறந்து, ஒரு நர்ஸ் வெளியே வந்து குரல் கொடுத்தாள்: “மிஸ். கீர்த்தி முரளிதரன்… டாக்டர் ராகவ் கூப்பிடறாங்க, உள்ள வாங்க.”

அந்தப் பெயரைக் கேட்டதும் கீர்த்தியின் நெஞ்சு எகிறித் துடிக்க ஆரம்பித்தது. எழுந்து நிற்க முயன்றவளின் முழங்கால்கள் நடுங்கின. தொண்டை முற்றிலும் வறண்டு போயிருக்க, துப்பட்டாவை ஒருமுறை இழுத்துப் போர்த்திக்கொண்டு, நடுங்கும் கால்களோடு அந்த ஏசி அறையின் கதவைத் தள்ளி உள்ளே சென்றாள்.

அறையினுள் டாக்டர் ராகவ், அவளது தந்தையின் ஸ்கேன் ஃபைல்களையும் ரத்தப் பரிசோதனைத் தாள்களையும் மிகத் தீவிரமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் தெரிந்த இறுக்கம் கீர்த்தியின் இதயத் துடிப்பைப் பலமடங்கு எகிற வைத்தது.

“ப்ளீஸ் சிட் டவுன், கீர்த்தி…” என்றான் ராகவ், பார்வையை ஃபைலிலிருந்து எடுக்காமலேயே.

கீர்த்தி நாற்காலியின் விளிம்பில் அமர்ந்தாள். தன் விரல்களை மடியில் இறுகப் பிணைத்துக்கொண்டு, மருண்ட விழிகளோடு அவரைப் பார்த்தாள்.

“டாக்டர்… அப்பாக்கு… அப்பாக்கு எப்படிங்க இருக்கு? கொஞ்சம் மூச்சு விடறது செத்த சிரமமா இருக்குன்னு ராத்திரி சொன்னாரே… டெஸ்ட்ல எல்லாம் சரியா வந்துடுத்து தானே? ஆத்துக்குக் கூட்டிண்டு போய்டலாம்ல?”—அவளது குரலில் நடுக்கமும் அப்பாவியான நம்பிக்கையும் கலந்திருந்தன.

டாக்டர் ராகவ் ஃபைலை மூடி வைத்துவிட்டு, எதிரில் இருப்பவளைப் பெருமூச்சுடன் பார்த்தான்.

“பதில் பேசுங்கோ? என்னாச்சு டாக்டர்? என் தோப்பனாருக்கு ஒண்ணுமில்ல தானே?” என அவள் குருட்டு நம்பிக்கையுடன் வினவ…

“கீர்த்தி… ஐ அம் ரியலி சாரி. நான் உன்கிட்ட எதையும் மறைக்க விரும்பல. நிலைமை ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு,” என்றான் அழுத்தமான குரலில்.

கீர்த்தியின் முகத்தில் இருந்த அத்தனை ரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போலானது; கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“எ… என்ன சொல்றேள் டாக்டர்? கிரிட்டிக்கலா? நேத்திக்குக் கூட…”

“முரளிதரன் சாருக்கு ரெண்டு கிட்னியும் 96% ஃபெயிலியர் ஆகிடுச்சு. இப்போ நாம குடுக்கிற டயாலிசிஸ் எல்லாம் வெறும் தற்காலிகம்தான். அவரோட உடம்புல டாக்சின்ஸ் ரொம்ப அதிகமாயிடுச்சு. லங்ஸ்லயும் தண்ணி கோர்க்க ஆரம்பிக்குது. இம்மீடியட்டா கிட்னி டிரான்ஸ்பிளான்ட் (Kidney Transplant) பண்ணியாகணும். இதுக்கு மேல ஒரு வாரம் கூட தள்ளிப்போட முடியாது; அப்படிப் போட்டா அவரோட ஹார்ட் தாங்காது,” என்றான் கறாரான மருத்துவ மொழியில்.

ராகவ் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் கீர்த்தியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கன்னங்களில் இறங்கியது. உலகமே சுழல்வது போலிருந்தது.

“அய்யோ… பெருமாளே! டாக்டர்… என்ன டாக்டர் சொல்றேள்? கிட்னி மாத்தணுமா? அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல? நான்… நான் வேணா என் கிட்னியைக் குடுத்துடறேன்! அப்பாவுக்கு நான் குடுக்கிறேன்… என்னை என்ன வேணா பண்ணுங்கோ, அப்பாவைக் காப்பாத்திக் குடுத்துடுங்கோ டாக்டர்… என் அப்பாவோட பிராணனைக் காப்பாத்துங்கோ…” என்று நாற்காலியை விட்டு எழுந்து, கிட்டத்தட்ட கைகூப்பி மன்றாடத் தொடங்கினாள்.

“கீர்த்தி, ரிலாக்ஸ்… முதல்ல உட்காருங்க. டோனர் மேட்சிங், லீகல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் அப்புறம். அதுக்கு முன்னாடி நீங்க ஃபேஸ் பண்ண வேண்டிய முக்கியமான பிரச்சனை ஒண்ணு இருக்கு,” என ராகவ் உடனே எழுந்து அவளை அமைதிப்படுத்தினான்.

அவள் கண்ணீரைத் துடைக்கக்கூடத் திராணியற்று விம்மியபடி அவனைப் பார்த்தாள்.

“இந்த டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரி, ஸ்பெஷல் போஸ்ட்-ஆபரேட்டிவ் ஐசியூ, ஆர்கன் மேட்சிங், மெடிசின்ஸ், அப்புறம் ஹாஸ்பிட்டலோட பெண்டிங் பில்ஸ் எல்லாம் சேர்த்து… கிட்டத்தட்ட எண்பது லட்சத்துல இருந்து ஒரு கோடி வரைக்கும் செலவாகும்,” என்றவன் சற்று நிறுத்தி, “நீயும் இப்போதான் 12th முடிச்சு காலேஜுக்குப் போறேன்னு உன்னோட தோப்பனார் சொன்னார். உனக்குக் காலேஜ் ஃபீஸ், குடும்பச் செலவுன்னு தனி. இப்போ இந்த ஆபரேஷன் ஆரம்பிக்கணும்னாலே அட்லீஸ்ட் ஐம்பது லட்சம் உடனே டெபாசிட் பண்ணனும்.”

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கீர்த்தி கேவிக் கேவி அழுதபடி பார்க்க…

“நீ அழ வேணாம். கண்டிப்பா ஒன்றரைக் கோடி தேவைப்படும். நான் ட்ரஸ்ட் மூலமாகப் பாதி ரெடி பண்ணப் பார்க்கிறேன்; டெபாசிட் பணத்தை நான் ரெடி பண்றேன். நீ எனக்குத் தங்கச்சி மாதிரி. ஆனால் டோனர் டிமாண்ட் வைப்பாங்க, அதை நாம கொடுத்துதான் ஆகணும். இது ரொம்பப் பெரிய அமவுண்ட். உங்க அண்ணன் ரகுராம் லண்டன்ல இருக்கான்ல? அவன்கிட்ட பேசிப் பணத்தை உடனே ரெடி பண்ணப் பாரு. வி ஹேவ் வெரி லிட்டில் டைம், கீர்த்தி,” என்று முடித்தான்.

கையெடுத்துக் கும்பிட்ட கீர்த்தி, கேவிக் கேவி அழுதபடி வெளியே வந்தாள். என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஒரு கோடி எப்படி? ஒரு கோடியை எப்படித் தயார் செய்ய முடியும்? அந்த வார்த்தை அவள் காதுகளில் இடியென இறங்கியது. தலை கிறுகிறுவென சுற்றியது.

லண்டனில் விசா சிக்கலில், கம்பெனியின் கடுமையான ஒப்பந்தத்தில் மாட்டித் தவிக்கும் அண்ணன் ரகுராமிடம் போய் ‘அப்பா சாகக் கிடக்கார், ஒரு கோடி வேணும்’ என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? அங்கே வேலையை விட்டுவிட்டு நின்றால் இருக்கும் வருமானமும் போய்விடும்.

சொந்தக்காரர்களோ ஹோட்டல் நஷ்டமான போதே துடைத்துப் போட்டுவிட்டார்கள். ஓர் அனாதையைப் போல, இருபது வயதே நிரம்பாத ஒரு பெண், இந்த மாபெரும் மருத்துவமனையின் குளிரில், ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாள்.

“ஒரு கோடிக்கு என்ன பண்ணுவேன்?” எனக் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தாள். ‘எங்ககிட்ட… அந்தப் பரம்பரை ஆத்து மனையைத் தவிர வேற எதுவுமே இல்லையே… பகவானே, நான் எங்க போவேன் இந்தப் பணத்துக்கு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ரகுராம் அழைத்தான்.

வேகமாக போனை அட்டெண்ட் செய்தாள்: “ஹலோ, ராமா?”

“கீர்த்தி, எப்படி இருக்கடி? அப்பா எப்படி இருக்கார்? சவுக்கியம் தானே?” எனக் கேட்டான்.

எப்படி சொல்வாள் கிட்னி மாற்ற வேண்டும் என்று? “சவுக்கியம் ராமா. போஜனம் ஆச்சா?”

“ஆயிடுத்து. அப்பா சாப்பிட்டுத் தூங்கப் போயிட்டார். நான் வீட்டைச் சாத்த வந்தேன்,” என்றாள் கஷ்டப்பட்டுக் கவலையை அடக்கிக்கொண்டு.

“உன்னோட காலேஜ் ஃபீஸுக்கு இங்கே கம்பெனியில் அட்வான்ஸ் வாங்கிப் பணம் அனுப்பி இருக்கேன். இதுல பாதியை அந்தப் பாண்டியன் ஃபைனான்ஸுக்குக் கட்டித் தலைமுழுகிடு; மீதியைப் ஃபீஸ் கட்ட வச்சுக்கோ. என்ன வேணும்னாலும் நான் இருக்கேண்டி, என்கிட்ட கேளு,” எனச் சொல்லிவிட்டு, இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுப் போனை வைத்தான் ரகு.

‘பாண்டியன் ஃபைனான்ஸ்’ என ரகுராம் சொன்ன வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருக்க… ‘அப்போ பத்திரத்தை அடமானம் வச்சு, அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணினதும் அதுக்கப்புறம் ராமன்கிட்ட சொல்லிடுவோம்,’ எனத் தனக்குத்தானே முடிவெடுத்தவளாகப் புறப்பட்டாள்.

(தொடரும்…)

How did this episode feel?
Rate this episode ★ 4.8 (22)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!