🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
3.  Episode -3 
My Rugged Professor & Husband
📖 My Rugged Professor & Husband · Chapter 3 of 10

 Episode -3 

  • 17 Nov 2026
  • 103 reads
  • ★ 5.0 (11)
  • 12 min read

மனதில் ஓடிய அந்த ஒரு முடிவு, கீர்த்தியின் நடுங்கும் கால்களுக்கு ஏதோ ஒரு பிடிவாதமான வேகத்தைக் கொடுத்தது.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

‘வேற வழியே இல்ல… ராமா அங்கே லண்டன்ல கஷ்டப்படறான். அப்பா இங்கே உசுருக்குப் போராடறார். இந்த அக்ரஹாரத்து மானமும் பரம்பரை ஆத்து கௌரவமும் அப்பாவோட பிராணனை விட பெருசில்ல! வீடு போனா போறது… எப்படியாவது பணத்தை வாங்கிட்டு வந்து அப்பாவைக் காப்பாத்திடணும்!’

தன் ஒற்றைச் சடையும் துப்பட்டாவும் காற்றில் படபடக்க, ஆட்டோ பிடித்து நேராக மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டு, அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் வாசலில் வந்து நின்றாள் கீர்த்தி.

“பாண்டியன் இல்லம்”. என கரும்பளிங்குக் கல்லில் தங்க எழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது. கீர்த்தியின் பார்வை அருகில் இருந்த கேட் பக்கம் செல்ல, நல்லவேளை இரும்பு கிரில் கேட் அகலத் திறந்திருந்தது. ஒரு பெரு மூச்சுடன் காலடி எடுத்து வைத்த கீர்த்தி சட்டென்று முகம் சுளித்தபடி காதை மூடி கொண்டாள். 

உருக்கிய நட்சத்திர தூறல் தூறல் 

செதுக்கிய என்னழகின் சாரல் சாரல் 

ஒருக்கி மினிக்கி செதுக்கி பதித்த மூரல் மூரல் என பாடல் காதை செவுடாக்கும் அளவுக்கு ஸ்பீக்கரிலிருந்து ஹை-டெசிபலில் அந்தப் பாடல் அதிரடித்துக் கொண்டிருந்தது. 

பாட்டின் அதிரும் பேஸ் சத்தத்தோடு சேர்ந்து, அங்கே இரும்பு டம்பல்ஸ்கள் மோதும் ‘டங்… டங்…’ என்ற உலோக ஓசையும் கேட்டது.

கீர்த்தி பயந்துபோய் அந்தப் பக்கம் தன் பார்வையைத் திருப்பாமல், தலையைக் குனிந்தபடி வராண்டாவை நோக்கி நகர்ந்தாள். அங்கே தோட்டத்தில்… அவன்தான் நின்றிருந்தான்.  விக்டர் பாண்டியன்!

காலையிலேயே வெயில் ஏறத் தொடங்கியிருக்க, அவன் உடம்பெல்லாம் முத்து முத்தாய் வியர்வை வழிய தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். மேலே சட்டை ஏதுமில்லை; அகன்ற இரும்பு போன்ற நெஞ்சு, தோள்களில் நரம்புகள் புடைக்கத் திரண்டிருந்த கட்டுமஸ்தான பைசெப்ஸ் தசைகள், அவன் உடலின் முரட்டுத்தனமான ஆளுமையைப் பறைசாற்றின. அவனது கழுத்தில் கிடந்த தடித்த வெள்ளிச் சிலுவை, அவன் மார்பின் வியர்வையில் நனைந்து சூரிய வெளிச்சத்தில் தகதகவென மின்னியது.

அவனது முகத்தில் சில நாட்களாகச் செதுக்கப்படாத ரக்கட் தாடி, காற்றில் கலைந்த சுருள் முடி. ஒரு கையில் எடையுள்ள இரும்பு டம்பல்ஸை லாவகமாகத் தூக்கி இறக்கிக்கொண்டே, இன்னொரு கையால் வாயில் வைத்திருந்த சிகரெட்டை விரல்களுக்கிடையே எடுத்துப் புகையை வானத்தை நோக்கிக் ஊதினான் ரசனையுடன். ரக்கட் மிரட்டலும் காட்டுத்தனமான அழகும் ஒருங்கே கலந்த அசுர கம்பீரம் அவனிடம் கொப்பளித்தது. 

ஆனால், தன் அப்பாவித்தனமும் அவசரமும் கண்களை மறைக்க, தலை குனிந்து துப்பட்டாவால் முகத்தை மூடியபடி நடுங்கி நடந்ததால் கீர்த்தி அவனை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. அவனும் தன் கண்பார்வையின் ஓரத்தில் ஏதோ ஒரு சுடிதார் பெண் உள்ளே செல்வதைக் கவனித்தானே தவிர, யார் என்று ஆராய்ச்சி செய்யவில்லை. சிகரெட் புகையை ஊதிவிட்டு அடுத்த செட் புல்-அப்ஸுக்குத் திரும்பிவிட்டான். ஒருவரை ஒருவர் முகத்தை நேராகப் பார்த்துக்கொள்ளவே இல்லை. 

கீர்த்தி அந்தப் பிரம்மாண்ட வாசலில் நுழைந்ததும், வரவேற்பறையின் நடுவே மாபெரும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவப் படம் ஒன்று கருணை ததும்பும் கண்களோடு ஆசீர்வதிக்கும் கோலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னால் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க, அடியில் சிலுவையும் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதே நேரத்தில் உள்ளே சமையலறையிலிருந்து காரசாரமான செட்டிநாட்டு நாட்டுக் கோழி வறுவலும் மட்டன் குழம்பும் கொதிக்கும் அசைவ உணவு வாசம் சுளீரென்று மூக்கைத் துளைத்தது! ஆச்சாரமான அக்ரஹாரத்து மடியில் வளர்ந்து, வெங்காயம் பூண்டு கூடத் தொடாத கீர்த்திக்கு அந்த அசைவ வாசனை மூக்கைத் தாக்கியதும் வயிறு புரட்டிக் குமட்டிக்கொண்டு வந்தது.

துப்பட்டாவின் தலைப்பால் சட்டென மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு நின்றாள். “ஹரே கிருஷ்ணா… பகவானே…” என்று உதடுகள் முணுமுணுத்தன. 

அப்போது உள்ளிருந்து தட்டுகளை எடுத்துக்கொண்டு வந்த அந்த வீட்டு வயதான வேலைக்கார அம்மாள், வாசலில் மருண்டு போய் ஒண்டிக்கொண்டு நின்ற கீர்த்தியைப் பார்த்ததும் கேள்வியாக, “யாரு கண்ணு நீ? வாசல்லயே நிக்கிற… யாரைப் பாக்கணும்?” என கேட்டார். 

“நா… நான்… பாண்டியன் ஃபைனான்ஸ்… பெரிய ஐயா சண்முகபாண்டியன் ஐயாவை பாக்க வந்தேங்க… பத்திரம் அடமானம் வைக்கணும்,” என்று தொண்டை அடைக்க, நடுங்கும்  குரலில் கூறினாள்.

“ஓ… அடமானமா? உள்ள வா கண்ணு.. அய்யா ஹால்ல தான் பேப்பர் படிச்சுட்டிருக்காரு, வா,” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துச் சென்றாள்.

விசாலமான அந்த ஹாலில், தேக்குமர ஊஞ்சலில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் சண்முகபாண்டியன். தலை முழுக்க நரைத்த வெள்ளை முடி, கண்களில் பணத்தையும் அதிகாரத்தையும் கையாண்டு பழுத்த ஒரு தீர்க்கமான பார்வை. வெள்ளை கதர் வேஷ்டி, சட்டையில் இருந்தவர் கீர்த்தியைக் பார்த்தவர் 

“வாங்கம்மா… உட்காருங்க.. என்ன விஷயம்?”

“இல்லைங்க” என கீர்த்தி மறுக்க, வாங்கம்மா.. என இருக்கையை காட்டினார். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கீர்த்தி சோபாவின் நுனியில் தன் உடலை சுருக்கிக்கொண்டு அமர்ந்தாள். தன் பையிலிருந்து நடுங்கும் விரல்களால் அந்தப் பட்டுப் போன்ற மஞ்சள் துணியில் சுற்றப்பட்டப் பூர்வீகப் பத்திரங்களை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

என்னம்மா இது? என அவர் கேட்க, 

“ஐயா… இது எங்களோட பூர்வீக ஆத்து பத்திரம்… மயிலாப்பூர்ல இருக்குங்கோ. மெயின் ரோட்டுக்கு ரொம்ப கிட்ட. எங்க தோப்பனார் முரளிதரன்… ரொம்ப ஒடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்கார். ரெண்டு கிட்னியும் போயிடுத்துன்னுட்டாங்க… இப்பவே ஒரு கோடி வேணும்னு சொல்லிட்டாங்க. அண்ணா வெளிநாட்டுல இருக்கான்.  எப்படியாவது எனக்கு ஒரு ஒரு கோடி ரூபா கொஞ்சம் ரெடி பண்ணணுங்க..” என்று கீர்த்தி அவள் பக்க நியாயத்தை எடுத்து கூறினாள். 

சண்முக பாண்டியனின் முகம் தீவிரமாகிட, என்னாச்சுங்க!” என்று கண்களில் கண்ணீர் பெருக பார்த்தாள். 

இது கொஞ்சம் ரிஸ்க் கண்ணு.. நீ சின்ன பொன்னா இருக்க உன்னை நம்பி இவ்வளவு பெரிய ரிஸ்க் என்னால எடுக்க முடியாது. உங்க அப்பா சீரியஸா இருக்கான்னு சொல்ற, உங்க அண்ணாவும் இங்கே இல்ல.. என்றவர் உங்க அண்ணா பேர் என்ன? என கேட்டார். 

ரகுராம் என்று கீர்த்தி கூற.. 

அப்போ உங்க அண்ணன் கிட்ட பேசிட்டு அடுத்த புரோசஸ் பண்ணலாம் நம்பர் சொல்லு என கேட்டார். 

ஐயா தப்பா நினைச்சுக்காதீங்கோ! ராமனுக்கு இந்த ஹாஸ்பிடல் விசயம் தெரியாது. 

உங்க அண்ணா ஆல்ரெடி பணம் கொடுக்கணும் மா

அது புரியுது உங்களை கெஞ்சி கேட்கிறேன். நேக்கு இந்த ஒரு உபகாரம் பண்ணுங்கோ. எனக்கு 19 வயசு ஆகிடுத்து. நான் மேஜராக்கும். இதை அடமானம் வைக்கிறேன் அப்பாவ காப்பாத்தனும். காலேஜ் fees கட்டணும். அண்ணனோட கடனையும் கழிச்சிண்டு கொடுங்கோ மாசா மாசம் வட்டி வந்திடும். அண்ணா பணம் அனுப்புவான் நான் அப்படியே கொண்டு வந்து கட்டிடுறேன் என்றாள் கீர்த்தி. 

சண்முகபாண்டியன் அமைதியாக அந்தப் பத்திரங்களை எடுத்தார். பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தார். ஒரு அனுபவஸ்தனின் கண்கள் அந்தச் சொத்தின் மதிப்பை நொடியில் கணக்கிட்டன. அது குறைந்தது மூன்று கோடி தேறும் சொத்து.

“முரளிதரன் பொண்ணா நீ? ஹோட்டல் பிசினஸ்ல விழுந்துட்டாரே அந்த முரளிதரனா? அடடா… மனுஷன் ரொம்ப நல்லவருப்பா. ஆனா என்ன பண்றது, நேரம் சரியில்ல,” என்று பெருமூச்சு விட்ட சண்முகபாண்டியன் நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

ரொம்ப நன்றிங்க என கீர்த்தி கண்ணீரை துடைத்து கொண்டு பார்க்க, “பத்திரம் அசல் பக்கா தான். ஆனா அம்மா… இது ஃபைனான்ஸ். ஒரு கோடி கொடுக்கிறேன். ஆனா மாசா மாசம் வட்டி மட்டுமே ஒரு லட்சம் ரூபா கரெக்டா இந்த வாசல்ல வந்து சேரணும். ஒரு மாசம் தவறினாலும் தாத்தா சண்முகபாண்டியன் சும்மா இருக்க மாட்டேன், தெரியுமில்ல?” என்றார் குரலில் அத்தனை கண்டிப்போடு.

“அ… அப்டியே தந்துடறேங்க” என்றாள் உற்சாகத்துடன்.. 

“சரசு… அந்த கேஷ் பேக்குகளையும் அக்ரிமெண்ட்டையும் கொண்டு வா,” என்று குரல் கொடுத்தார்.

வேலைக்காரி கொண்டுவந்து வைத்ததும், அந்த வெள்ளை தாள்களிலும் பிராமிசரி நோட்டுகளிலும் கீர்த்தியின் நடுங்கும் விரல்களால் கையெழுத்து வாங்கப்பட்டது. அசல் பத்திரங்கள் சண்முகபாண்டியனின் இரும்புப் பெட்டிக்குள் போயின. அவளுக்கு முன்னால் ஒரு கோடிக்கான பேங்க் டிடியும், மீதி மருத்துவச் செலவுகளுக்கும் காலேஜ் தேவைகளுக்கும் என கையில் ரொக்கமாக சில லட்சங்கள் கொண்ட பையும் வைக்கப்பட்டது.

“இந்தாம்மா… ஒரு கோடிக்கு டிரான்ஸ்பர் டிடி. கூடவே எமர்ஜென்சிக்கு ரெண்டு லட்சம் கேஷ் இருக்கு. பத்திரமா கொண்டு போய்ச் சேரு,” என்றார் சண்முகபாண்டியன்.

“ரொம்ப நன்றிங்க ஐயா… பெருமாள் கிட்ட நான் பிராத்திக்கிறேன்.” என்று அந்தப் பையையும் டிடியையும் தன் நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டு, கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள்.

வெளியே பாட்டின் சத்தமும் ஜிம் சத்தமும் அடங்கியிருந்தது; சரசு நாட்டுக்கோழி சூப் ரெடியா எடுத்து வைங்க என சொல்லி விட்டு 

விக்டர் குளிக்கச் சென்றிருந்தான்.  இருவரும் சந்திக்கவேயில்லை. நேராக ராகவேந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்குப் பறந்தாள் கீர்த்தி.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சண்முக பாண்டியன் உடனே டானியலுக்கு அழைத்தார். சொல்லுங்க தலைவரே என மறுமுனையில் இருந்து குரல் வர, ஒரு பொண்ணு நம்ம வீட்ல இருந்து போகுது. பெரிய தொகை அவங்க அப்பாவுக்கு ஹாஸ்பிடலில் கட்டணுமாம். 

சரிங்க தலைவரே? நான் என்ன பண்ணனும்? 

அந்த பொண்ணு சரியா பணம் கட்டணும். பாவம் சின்ன பொன்னா இருக்குது. பணத்தை தொலைச்சிட போகுது. கொஞ்சம் கண்காணி அந்த பொண்ணு ஹாஸ்பிடலில் பணம் கட்டினதும் சொல்லு என்று போனை வைத்தார். பாவம் மனது கேட்கவில்லை அவருக்கு. 

டானியல் உடனே கிளம்பி கீர்த்தியை கண்காணித்தான். கீர்த்தி நல்லபடியாக  அந்த ஒரு கோடிக்கான டிடியையும் டெபாசிட் தொகையையும் கட்டினாள். அதன் பின் நேராக ராகவை பார்க்க சென்றாள். 

கீர்த்தி உன்னோட கிட்னி உங்க அப்பாவுக்கு மேட்ச் ஆகாது ரிப்போர்ட்டில் வந்திடுச்சு. என்றவன் அவளின் முகத்தில் இருக்கும் கவலையை பார்த்து, நீ கவலை பட வேணாம் டோனர் ரெடி.. சீக்கிரமே ஆப்பரசன் நடந்திடும் என நம்பிக்கை கொடுத்தார். 

அன்று இரவே டோனர் கிட்டருந்து அனைத்து procedure விசயங்களும் வந்து சேர, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கட்டிய அடுத்த அரை மணி  நேரத்தில் ஹாஸ்பிடலில் வேலைகள் துரிதமாக தொடங்கியது. 

முரளிதரனை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஆபரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள். கதவுகள் அடைக்கப்பட்டன. சிவப்பு விளக்கு எரிந்தது.

வெளியே கீர்த்தி அந்த மரப் பெஞ்சில் அமர்ந்து, சுவற்றில் சாய்ந்து அழுதுகொண்டே அபிராமி அந்தாதியை லட்சமுறை உருப்போட்டாள்.

கிட்டத்தட்ட ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மாலை வேளையில் அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த ராகவின் முகத்தில் எல்லாம் நன்றாக நடந்தது என்ற ஒளிவட்டம் தெரிய அப்படியே அவளின் அருகில் வந்தவன்.  

“கீர்த்தி… காட் இஸ் கிரேட்! ஆபரேஷன் ரொம்ப சக்சஸ்ஃபுல். புது கிட்னி உடம்புல நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு. உன் அப்பா அபாய கட்டத்தைத் தாண்டிட்டார். ஆனா… இன்பெக்ஷன் ஆகாம இருக்க குறைஞ்சது 15 நாள் அவர் இங்கே தீவிரக் கண்காணிப்புல, போஸ்ட் ஆபரேட்டிவ் வார்டுல இருந்தாகணும். நீ தைரியமா இரு, அப்பாக்கு ஒண்ணும் ஆகாது,” என்றான் தோளைத் தட்டி.

கீர்த்திக்கு மூச்சே இப்போதுதான் வந்தது. “பெருமாளே… … உனக்கு கோடி கோடி நமஸ்காரம்!” என்று தரையில் விழுந்து வணங்காத குறையாகக் கண்ணீர் வடித்தாள்.

இனி எல்லாமே நல்லதா நடக்கும் பீல் பண்ணாத கீர்த்தி.. நீ ரொம்ப பொறுப்பான பொண்ணு எவ்ளோ பெரிய விசயம் செஞ்சிருக்க தெரியுமா? என மெட்சியபடி சென்றான் ராகவ். 

அடுத்த நாள் காலை.அப்பாவை ஒருமுறை தூரத்திலிருந்து பார்த்தவளுக்கு, காலேஜில் உடனே கட்ட வேண்டிய முதல் செமஸ்டர் ஃபீஸ் ஞாபகம் வந்தது. கையில் மீதமிருந்த ரொக்கப் பணத்திலிருந்து ஃபீஸை எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தைப் பத்திரமாகத் தன் வங்கிக் கணக்கில் போட்டு வைக்க நினைத்தாள். அண்ணன் அனுப்பிய பணமும் இதில் சேமிப்பாக இருக்க வேண்டும்.

பையைத் தோளில் இறுக்கிக் கொண்டு, மருத்துவமனைக்கு அருகிலிருந்த ஒரு வங்கியின் வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கினாள். படிக்கட்டுகளை நோக்கி அவள் ஏறிய அந்த வினாடி  திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கருப்பு பல்சர் பைக் அவள் பக்கத்தில் சீறிக்கொண்டு வந்து பிரேக் போட்டது. 

பின்னால் அமர்ந்திருந்த முகமூடி அணிந்த ஒருவன், மின்னல் வேகத்தில் கீர்த்தியின் தோள்பட்டையைப் பிடித்து இழுத்து, அவள் நெஞ்சோடு இறுகப் பிடித்திருந்த பணப் பையை வெறித்தனமாகப் பறித்தான்!

“ஐயோ… திருடன்! யாராவது பிடிங்க… என் பணம்… அய்யோ திருடன் திருடன் காலேஜ் ஃபீஸ்… பிடிங்கோ… ஐயோ!” என்று கீர்த்தி அலறியபடி பையை விடாமல் இழுத்தாள்.

ஆனால் அந்தத் திருடன் அவளைக் கீழே பலமாகத் தள்ளிவிட்டான். 

கீர்த்தி நிலைதடுமாறி படிக்கட்டின் விளிம்பில் விழுந்து தலையிலும் முழங்காலிலும் அடிபட, வேகமாக எழுந்தவள் ஓடி சென்றாள் பைக் சென்ற திசையை பார்த்தபடி, பைக் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நொடியில் பறந்து மறைந்தது!

சுற்றிலும் இருந்த மக்கள் கூடி வேடிக்கை பார்த்தார்களே தவிர, பைக்கைத் துரத்த எவனும் வரவில்லை.

கீர்த்தி முழங்கால் ரத்தம் வழிய, அந்த பேங்க் வாசலின் சுடுமணலில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள். கையில் ஃபீஸ் கட்ட ஒரு ரூபாயும் இல்லை. ஆஸ்பத்திரியில் அப்பா படுத்திருக்கார். மாசா மாசம் ஒரு லட்சம் வட்டி கட்டணும். இந்த லட்சணத்தில் காலேஜ் ஃபீஸும் போச்சு… என்று விமலும் அழுகையும் அதிகமாகிட விரக்தியுடன் நடந்து சென்றாள். அவள் பாதையின் வளைவில் திரும்பிட..

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

எதிரில் வந்த வண்டியின் மீது மோதியிருந்தாள். அடிங்க உன் அப்பன் போட்ட ரோடா கண்ணு தெரியுமா தெரியாதா? என பற்களை கடித்தபடி கட்டுப்கடங்காத ஆத்திரத்துடன் ஏறிட்டான். 

கீர்த்தி மூக்கை உறுஞ்சி கொண்டு கண்களை வேகமாக துடைத்தவள் என் என்னை மன்னிச்சுக்கோங்கோ என கையெடுத்து கும்பிட்டவள் விசும்பி கொண்டே சென்று விட்டாள். ஆக மொத்ததில் சண்முக பாண்டியன் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்து போனது. 

டானியல் பதட்டத்துடன் சண்முக பாண்டியனிடம் விவரத்தை கூறினான். 

கைகளை பிசைந்தபடி அமர்ந்திருத்தவர் அங்கே பக்கத்துல போலீஸ் ஸ்டேசனில் அந்த பொண்ணு பேரில் ஒரு கம்பளன்ட் கொடுத்திடு டானி நான் இப்போவே கமிஷ்னர் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்றேன். என்றார். 

டானியல் அவரை உற்று பார்க்க, என்னடா என மீசையை முறக்கியபடி ஏறிட்டார். 

அந்த பொண்ணு வேண்டிய பொண்ணுங்களா தலைவரே? என்டு கேட்டு தலையை சொரிந்தான் டானியல். 

என் பொண்ணு இந்திராணி போல இருக்கிறா! சின்ன வயசுல விக்டர் அம்மா இப்படி தான் இருப்பா!! சின்ன முகம் குச்சியாட்டம் லட்சணம்.. பாவம் அப்பாவி என்றவர் முகம் சடுதியில் மாறி, என் மகளை மயக்கி அந்த ஜான்சன் காதலிச்சு இழுத்துட்டு போயிட்டான் என்றார் வருத்தமாக.. 

தெரியாம கேட்டுட்டேன் மன்னிச்சிடுங்க தலைவரே பழச நியாபகபடுத்திட்டேன் என டானியல் அவர் சொன்ன வேலைகளை செய்ய கிளம்பினான். 

இங்கே வீட்டுக்கு வந்த கீர்த்தி அவளிடம் இருந்த கம்மல் மற்றும் கழுத்து செயின் அனைத்தையும் கழட்டி எவ்வளவு நகை தேறும் என்று பார்த்தாள். வீட்டில் இருந்த பரம்பரை குத்து விளக்குகள், ஒரு வெள்ளி குத்து விளக்கு என சில பொருட்களை எடுத்து அதை விற்று விட்டு நகையை அடமானம் வைத்தாள். அதில் வந்த பணத்தை கொண்டு கல்லூரிக்கு அட்மிஷன் போட சென்றாள். ECE தேர்வு செய்தாள். 12ம் வகுப்பில் 545 மதிப்பெண் எடுத்திருந்தாள். பணத்தை குறைத்து கொள்ள மாட்டோம் என்று கறாராக இருந்தார்கள்.  கல்லூரி திறப்பு நாளுக்கு 1 மாதம்  இருந்தது. அருகில் உள்ள moon bugs கடையில் வேலைக்கு கேட்டாள். மாதம் 8k சம்பளம் என்று கூறியிருந்தார்கள்.  அதற்குள் முரளிதரனை வீட்டுக்கு அழைத்து வந்து விடலாம் என நினைத்து கொண்டு சென்றாள். 

அவ்வப்பொழுது முகத்தை மூடி அழுது கொள்வாள். முரளிதரன் மயக்கத்தில் இருக்க தந்தையின் அருகில் போய் அமர்ந்து கையை பற்றி கொண்டாள். 

தொடரும்.. 

How did this episode feel?
Rate this episode ★ 5.0 (11)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!