என்ன பண்ணுது? சொல்லு! மலரே!" என குட்டி போட்ட பூனையை போல திரிந்தான் வெற்றி.
அவனது அன்பு தொல்லையில் சில்லாகித்து போனவள். சலித்து கொண்டே "மாமா கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடி சுத்தி வரீங்க?"
"இல்ல நீ ரொம்ப சோர்வா இருக்க மாதிரி தெரியுது. அது தான் கேட்டேன். ஏன் நான் கேட்க கூடாதா?" என முறுக்கு மீசை விறைத்து கொண்டது கோபத்தில்..
"கேட்கலாம் தான் ஆனால் இது கொஞ்சம் ஓவரா போகுதே! அதுக்கு தான் யோசிச்சேன்." என்றாள் மலர்.
அவளை முறைத்து பார்த்தவன். எதுவும் கண்டு கொள்ளாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்தான்.
உள்ளே சென்ற மலருக்கு பெரிதாக சமைத்து சாப்பிட தோன்ற வில்லை. அதனால் யிப்பி நூடில்ஸ் சாப்பிட தோன்றியது. நாக்கு நமனமவென இருக்க, அதில் இரண்டு முட்டைகளை போட்டு தயார் செய்தாள்.
சுட சுட இரண்டு முள் கரண்டியை போட்டுக் கொண்டே வெளியே எடுத்து வந்தாள் மலர். வெற்றி விரைப்புடன் ஆங்கில செய்தி தாளை புரட்டினான்.
"மாமா!" என அவனுக்கு எதிரில் அமர்ந்து அவனுக்கு ஒரு கப்பை தள்ளினாள்.
வெற்றி பார்ப்பான் இல்லை.
"மாமா! எனக்கு அத்தை மாதிரி டேஸ்ட்டா இப்போ உடனே பண்ண முடியல. ரொம்ப பசி அதும் இல்லாமல் நூடில்ஸ் சாப்பிடணும் போல இருந்தது. அது தான் செஞ்சேன். சாப்பிட்டு பாருங்க."
பதில் இல்லை! பார்வை படினாற்றமும் இல்லை.
"மாமா உங்களை தான்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அப்போ நான் செஞ்சு கொடுத்தது வேணாமா? சரி ஓகே நானே சாப்பிடுவேன். உங்களுக்கு வேணாம்ல" என முகத்தை தூக்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளை ஓர கண்ணால் பார்த்தவன். ஊட்டி விடு சாப்பிடுறேன் என்றான்.
மலர் நிமிர்ந்து பார்க்க, உன்னை தான் டி எனக்கு ஊட்டி விடு என்றான் வெற்றி.
"அது இந்த மாதிரி டைமில் பக்கத்தில் வர கூடாது. அது தீட்டு!"
அப்படியா? என்றவன் அவளின் அருகில் ஒட்டி உரசி அமர்ந்தான்.
"என்ன பண்றீங்க? நான் தான் சொல்றேன்ல! என மலர் விலக போராட!"
உன்னோட அழுக்கு தான் என்னோட சுத்தம் ஐ மின் உன் கிட்ட தான் என்னோட புனிதமே இருக்கு தேவையில்லாம பேசாத என்றவன் அவளின் கையில் இருந்து பிடுங்கி சாப்பிட்டான்.
அய்யோ இந்த மாமனை என்ன பண்றது? என நினைத்தவள் நொந்து கொண்டு இன்னொரு கப்பை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ம்ம் மலரு நல்லாருக்கு டி! எதோ மேஜிக் பண்ற! என இடையில் கிள்ளினான்.
ஹவுச் என எழுந்தாள். முகமெல்லாம் சோர்வாக இருக்க, அவளின் கையில் இருந்த பாத்திரங்களை விடா பிடியாக பிடிங்கி கழுவி வைத்தான் வெற்றி.
சோர்வாக கட்டிலில் விழுந்தவழுக்கு பள்ளியில் நின்று பாடம் எடுப்பது எல்லாம் சேர்ந்து இப்பொழுது கால் வலி பின்னி எடுத்தது. கூடவே கொஞ்சம் வயிறு வலி வேறு ஒட்டிக் கொண்டது.
புரண்டு புரண்டு படுத்தாள் மலர்.
அடுத்த நொடி கால் இரண்டும் இதமாக இருந்தது. வெற்றி மாறன் தொடையில் அவளது கால்கள்.
வெடுக்கென முழித்தவள். அச்சோ மாமா! என்ன பண்றீங்க? நீங்க எதுக்கு என்னோட காலை பிடிக்கிறீர்க? வேணாம் மாமா விடுங்க! அய்யோ என்ன மாமா இது? என சலித்தாள்.
இல்ல உனக்கு கால் வலிக்குது அது தான் இப்படி கஷ்டமா இருக்கு நான் கொஞ்ச நேரம் பிடிச்சு விடுவேன் எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை என பணிவிடைகள் அனைத்தையும் ஆரம்பித்தான் வெற்றி.
முதலில் தயங்கி தயங்கி காலை கொடுத்தவள். வெற்றியின் அதீத அன்பில் மொத்தமாக கரைந்து காலை நீட்டினாள். முரட்டு கைகளில் மெல்லிய பாதம் சிக்கி கொண்டது என்று சொல்லலாம். அவளுக்கு வலி குறையும் வரை செவ்வென அழுத்தி விட்டான். மலர் தூங்கியதும் இன்னொரு பக்கம் வந்து படுத்துக் கொண்டான்.
இங்கே பல்லவி மிகவும் சந்தோசமாக இருந்தார். என்னால நம்பவே முடியல மா நிஜமாவா சொல்றீங்க? என பொற்கொடி கேட்க.. பினம் சும்மாவா? மலரை இந்த வெற்றி பையன் எப்படி பார்த்துக்கிறான் தெரியுமா? இப்போ வேற மாதிரி இருக்கான் டி! மலர் அவனை மாத்திட்டா! கெட்டதுலயும் ஒரு நல்ல விசயம்ன்னு சொல்லுவாங்களே! அது மலர் வெற்றிக்கு கிடைச்சது தான்! அப்பா ஆசை வெற்றி சந்தோஷமா இருக்கிறது தான்! என் மூத்த பிள்ளை பத்தி இனி கவலை இல்லை. எல்லாத்தையும் மலர் பார்த்துப்பா! சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வாரிசு வந்திடும் டி என பேசிக் கொண்டே தூங்கி விட்டார்.
அம்மா கிட்ட எப்படி இந்த விசயத்தை சொல்றது? வேணாம் வேணாம்! இப்போ அம்மா தூங்கிட்டு இருக்காங்க எழுந்ததும் எல்லாத்தையும் சொல்லிடலாம்! என நினைத்துக் கொண்டே தூங்கினாள் பொற்கொடி.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. பல்லவி நேரத்தோடு வீட்டுக்கு கிளம்பினார்.
"அம்மா! அம்மா!" என ஓடி வந்தாள் பொற்கொடி.
என்ன சொல்லு? சீக்கிரம் நேரம் வேற ஆகுது. அங்கே மலர் தனியா சமைக்க கஷ்ட படும். எப்படி இருந்தாலும் என் பையனுக்கு நான் சமைச்சு போட்டால் தான் பிடிக்கும் என பல்லவி சொல்லிக் கொண்டிருக்க, அம்மா அது... என இழுத்தாள் பூங்கொடி.
அடி வாங்காத புள்ளை என்ன விசயம் சீக்கிரம் சொல்லு என அதட்டினார் பல்லவி.
அம்மா சொல்லிடுறேன் ஆனால் நீ கோப படாத என பொற்கொடி எட்சிலை விழுங்கி கொண்டு தன் அன்னைய பார்த்தாள்.
"நேராமாகுது படபடன்னு என்னன்னு சொல்லு!" என பல்லவி கேட்க, அம்மா அது மாறன் வரானாம்! இளமாறன் அவனோட பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டுக்கு வரானாம் என ஒரு வழியாக கூறி முடித்தாள் பொற்கொடி.
அவன் எங்கேயோ வரட்டும். ஆனால் நம்ம வீட்டு பக்கம் வந்தால் மரியாதை கெட்டிடும். முதல்ல அவன் கிட்ட எதுக்கு பேசின நீ! எவ்ளோ திமிர் இருக்கும் ஒரு பொண்ணை கட்டிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டு போயிருக்கான். இவன் வற்புறுத்தி கேட்டோமா? அவன் இங்கே வர கூடாது. அந்த ஓடுகாளி நாயாள என்னோட வெற்றி வாழ்க்கையை கெடுக்க முடியாது.
இல்ல மா அது வந்து!..
எது வந்தாலும் சரி போனாலும் சரி அவன் வர கூடாது. அவனால வெற்றி மலர் வாழ்க்கையில் பிரச்னை வர கூடாது. அம்மா இளமாறன் வேற ஒரு பொண்ணை கட்டிக்கிட்டான் தானே! என பொற்கொடி தன் தம்பிக்கு பரிந்து பேசினாள்..
அவனே வேணாம் என்னு சொல்லிட்டேன். அவன் சம்மந்தப்பட்ட எதுவும் என் கண்ணு முன்னாடி வர கூடாது. அதே போல நீயும் அவன் கூட பேசுற தாக இருந்தால் என்னமோ பண்ணிக்க ஆனால் அவனோட பேச்சை என் கிட்ட சொல்லவே கூடாது. என்று விட்டு வேகமாக கிளம்பினார்.
பொற்கொடி தீவிர சிந்தனையில் இருந்தாள். இதை எப்படி அவன் கிட்ட சொல்வது? என்று தான். அவளுக்கு இரண்டு சகோதரர்களும் உயிர் தான்! தன் தம்பி மன்னிப்பு கேட்டு காலில் விழாத குறையாக கெஞ்சும் போது தன்னால் என்ன செய்ய முடியும்? என யோசனையில் சுற்றி கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் பல்லவி மலரிடம் வந்தார். அத்தை நான் தூரம் ஆகிட்டேன் என எடுத்ததும் மலர் சொல்ல, பல்லவி அவளின் கையை பிடித்து நானும் ஒரு பொண்ணை பெத்தவள் தான்! உன் கிட்ட தேவையில்லாம எதையும் எதிர்பார்க்க மாட்டேன். உங்க கல்யாணம் எந்த சூழலில் நடந்ததுன்னு எனக்கு தெரியும். நீ என் மகன் கூட இருந்தால் போதும் மலரு. இப்போ எல்லாம் வெற்றி சந்தோஷமா இருக்கான். அவனோட முகம் பளிச்சுன்னு இருக்கு. என் பையன நீ சந்தோஷமா பார்த்திக்கிட்டால் அது போதும் பொண்ணு என சொல்லி விட்டு அவளுக்கு உணவு தயாரிக்க சென்றார்.
ஒரு சில நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் தான் நகர்ந்தது. பல்லவிக்கு ஒரே மன சஞ்சலமாக இருந்தது. உடனே அவர் தன் அக்காவுக்கு அழைத்தார்.
"சொல்லு பல்லவி எதுவும் மாற்றம் தெரியுதா?" என சரஸ்வதி கேட்க... அதெல்லாம் ரெண்டு பேரும் இணக்கமாக தான் இருக்காங்க! ஆனால் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்களான்னு தெரியல. அதனால ஒரு தடவை ஜாதகம் பார்க்கலாம் கா! எனக்கு மனசு சரி இல்லை என கூறினார் பல்லவி.
அவ்ளோ தான ஒன்னும் கவலை பட வேணாம். நம்ம முறைப்படி சடங்குக்கு நாள் பார்ப்போம். முறையா செய்யலாம். ஜாதகம் தானே பார்க்கணும்.. நீ பழைய பஸ் ஸ்டாண்ட் வந்திடு என சொல்லி விட்டு போனை வைத்தார் சரஸ்வதி.
இருவரும் ஜோசியர் கிட்ட ஜாதகம் கொடுக்க பொது பலன் கூறியவர். நன்மையையும் தீமையையும் தனுசு தராசு போல கூறினார். அதில் பல்லவி கொஞ்சம் பயந்து போக, சரஸ்வதி அவரிடம் பரிகாரம் கேட்டு விட்டு சாந்தி முகூர்த்தத்துக்கு நாளை குறித்து கொடுக்க சொல்லி கேட்டார்.
நல்ல வேளை கா நீ வந்த! இல்லன்னா நான் உடைஞ்சு போயிருப்பேன். இப்போ சந்தோஷம். எனக்கு முதலில் அவங்க சேரனும். என்றார் பல்லவி.
அவர்கள் இருவரும் நிம்மதியாக அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தார்கள்.
பல்லவி நேரம் பார்த்து இருவரையும் அழைத்தார். வெற்றி வெற்றி!!
"சொல்லுங்க மா"
"மலரு நீயும் வா மா!" என பல்லவி அழைத்தார்.
சொல்லுங்க அத்தை என வந்து சேர்ந்தாள் மலர்விழி.
நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலையில் குளிச்சிட்டு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு வாங்க! நான் வெற்றிக்கு கல்யாணம் ஆகி சீக்கிரம் குழந்தை பிறக்கனும்ன்னு வேண்டி இருந்தேன். நல்ல படியா கல்யாணம் ஆகிடுச்சு அதுக்கு போய் சாமிய பார்த்து கும்பிட்டு வாங்க. அடுத்து குழந்தை வந்ததும் குடும்பத்தொட போய் அடுத்த வேண்டுதல் நிறைவேற்றனும் என்றார்.
மலர்விழி வெட்கத்துடன் வெற்றியை பார்க்க, அவன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தான்.
என்ன டா நின்னுட்டு இருக்கீங்க நேரத்தில் தூங்குங்க நாளைக்கு சடங்கு இருக்கு என நாசுக்காக சொல்லி விட்டு பல்லவி சென்று விட்டார்.
நாளைக்கு வரைக்கும் தாக்கு பிடிக்குமா என வெற்றியின் நிலை இருந்தது.
மலர்விழி...?
வருவான்.

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-18
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.