Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
120
இன்னும் எவ்ளோ நேரம் சுதா? என ராமச்சந்திரன் காத்துகொண்டிருக்க, இப்போ என்ன? அவ்ளோ அவசரம் கிளம்பி வரணும் தானே! என புடவையை நீவிய படி வந்தார்.

அப்புறம் மி எங்கே என ரோஹன் ஆரம்பித்து கொண்டே வர, டேய் ரோஹன் என் கிட்ட உதை வாங்குவ நீ! வெளியே போகும் போது எங்கே போறீங்கன்னு கேட்க கூடாதுன்னு அடங்காத நாயே! என அடித்தார்.

சாரி சாரி மே... சாரி மி.. மம் என வித விதமாக கொஞ்சினான் ரோஹன். போதும் போதும் என சொல்லி கொண்டே வெளியே வந்தவர். அருவி மா! அருவி மா! என அழைத்தார்.

"அம்மா!" என வெளியே வந்தாள் அருவி. உணவு மேஜையில் இருக்கும் பாத்திரங்களை திறந்து பார்த்தவர். எல்லாமே அப்படியே இருக்கு. இன்னும் சாப்பிடலயா நீ! என்ன மா நீ இப்படி பண்ற? உன் புருசன் வந்தால் என் கிட்ட சண்டை கட்டுவான் கொஞ்சம் சாப்பிடு அருவி. சலித்து கொண்டார் சுதா.

என்ன மா அருவி? பாரு மெலிஞ்சி போயிட்ட! என ராம சந்திரன் பார்த்தார். சாரி அப்பா! இனி நான் சாப்பிடுவேன். இப்போவே சாப்பிடுறேன்! என அருவி சொல்ல, சுதா ரோஹனிடம் டேய் அண்ணி சாப்பிட்டதும் நீ உன் வேலைய பாரு! இங்கேயே வெயிட் பண்ணு என கூறி விட்டு கிளம்பியவர் உடனே அருவியிடம் அம்மா அங்கே தான் குத்து விளக்கில் சாமிய ரெடி பண்ண போறோம் அதை சுத்தி அலங்காரம் பண்ண என்ன வாங்கலாம்ன்னு ரோகன் கிட்ட லிஸ்ட் போட்டு கொடு கண்ணு. டேய் பூஜைக்கு தேவையான எல்லா அலங்கார பொருளையும் வாங்கிட்டு வந்திடு! அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்காத மோஹித் பேரை சொல்லி, உங்க அண்ணன் வந்தா ஆடுவான் என்றுவிட்டு கிளம்பினார்.

அருவியின் எதிரில் அமர்ந்து போனை நோண்டி கொண்டிருந்தான் ரோஹன். அவனை பார்க்க அருவிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அவள் உணவை பிசைந்து கொண்டிருக்க, "அண்ணி என்னாச்சு? உங்களுக்கு பிடிக்கலயா? உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் ஆர்டர் பண்றேன்."

இல்ல வேணாம் என அவள் அவனை கூச்சமாக பார்த்தாள். அதன் பின் ரோஹன் எழுந்து கொண்டு அண்ணி நான் அந்த பக்கம் இருக்கேன். நீங்க சாப்பிடுங்க அப்புறம் லிஸ்ட் போடலாம் என நகர்ந்தான். ஒரு பெரு மூச்சை விட்ட அருவி வயிற்றை பிடித்துக் கொண்டு இரண்டு வாய் தள்ளவே மிகவும் சிரமமாக இருந்தது.

ரோஹன் தீவிரமாக போன் நோண்டிக் கொண்டிருக்க, அருவிக்கு அதற்கு மேல் குமட்டி கொண்டு வர வேகமாக சென்று வாமிட் எடுத்தாள். எதெட்சையாக திரும்பி பார்க்க அவள் வாமிட் எடுப்பது தெரிய அண்ணி என்னாச்சு? என பதட்டத்துடன் வந்தான்.

ஒன்னும் இல்ல ஜஸ்ட் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன் என சமாளித்தாள்.

நீங்க சரியா சாப்பிடவே இல்ல அண்ணி என ரோஹன் சொல்ல, எனக்கு வேணாம் போதும் பிளீஸ் அம்மா கிட்ட சொல்லாதீங்க! அப்புறம் அவர் கிட்ட சொல்லிட்டா என் கிட்ட பேச மாட்டாரு திட்டுவாரு என்றாள் அருவி.

அதுக்காக இப்படியே சாப்பிடாமல் இருக்க போறீங்களா? என ரோஹன் கவலையுடன் பார்த்தான்.

அது நான் நைட்டுக்கு சேர்த்து சாப்பிட்டுக்கிறேன் பிளீஸ் என அருவி கெஞ்ச, சரி நீங்க லிஸ்ட் போடுங்க நான் வரேன் என ரோஹன் கிச்சனில் எதோ செய்து கொண்டிருக்க, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் செஞ்சு தரேன் என அருவி சொல்ல, இல்ல அண்ணி நீங்க லிஸ்ட் எழுதுங்க நான் வரேன் என அவன் ஃப்ரெஷ் ஜுஸ் செய்து கொண்டு வந்தான்.

"அண்ணி லிஸ்ட் இருக்கட்டும் நீங்க இதை குடிங்க" என அவன் எடுத்துக் கொண்டு வர, அருவி எழுதி முடித்தபடி இதை சரி பார்த்திடுங்க நான் யூ ட்யூப்ல பிரவுஸ் பண்ணி சில தீம் செலக்ட் பண்ணி, அதுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் லிஸ்ட் போட்டிருக்கேன் என்றவள் எழுந்து வரும் போது அப்படியே மயங்கி சரிய எதிரே வந்த ரோஹன். அண்ணி! அண்ணி! என அழைத்த படி கத்தினான். அருவி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள். சோபாவை பிடித்து அப்படியே அமர்ந்தாள்.

"அண்ணி ஓகே வா! இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் நீங்க கீழே விழுந்திருப்பீங்க என்ற ரோஹன் அவனது போனை எடுத்து நான் இப்போவே மோஹித்க்கு சொல்றேன். எப்போ பாரு அவனுக்கு ஷூட்டிங் தான் முக்கியம் போல... உங்களை கவனிக்காம அவனுக்கு என்ன வேலை? என டயல் செய்தான்.

பிளீஸ் பிளீஸ் அவரை டிஸ்டப் பண்ண வேணாம் என அருவி கெஞ்சினாள்.

"இல்ல அண்ணி இது சீரியஸ் உடனே ஹாஸ்பிடல் போகனும்! நான் அம்மாவுக்கு கால் பண்றேன் அவங்க வந்து உங்களை கூட்டிட்டு போகட்டும்" என சுதாவுக்கு அழைக்க..

"அய்யோ பிளீஸ் அவங்க பூஜை விசயமா போறேன்னு போயிருக்காங்க டிஷ்டப் பண்ண வேணாம் டிரை டூ அண்டர்ஸ்டான்ட்" என அருவி போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

ரோஹன் அவளை கவலையுடன் பார்த்தான். இப்போ உங்களுக்கு என்ன? இந்த ஜுஸ் குடிக்கணும் அவ்ளோ தானே இப்போவே குடிக்கிறேன் என மெதுவாக பருகினாள். அந்த ஜுஸ் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. அவள் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு அவனை பார்த்தாள்.

"சரி அப்போ கிளம்புங்க..."

எங்கே? என அருவி கேட்க... ஹாஸ்பிடல் போலாம் அண்ணி!

வேணாம் வேணாம் என்னால வர முடியாது. என அருவி விடாபிடியாக மறுத்தாள்.

சொல்றத புரிஞ்சுகோங்க! இது என்ன ஏதுன்னு செக் பண்ணனும் அது தான் நல்லது.

நம்ம அப்புறம் போயிக்கலாம் அவர் வரட்டும் நான் எடுத்து சொல்லி பூஜை முடிஞ்சு போறேன் என்றாள் அருவி.

நீங்க ஊருக்கு போறீங்கன்னு அண்ணா சொன்னான். அம்மாவும் நேத்து பேசி கிட்டாங்க. சோ வாங்க போயி என்னன்னு பார்த்திட்டு வரலாம். நார்மல் செக் அப் தான் பயப்படாதீங்க!

இல்ல அது வந்து என தயங்கினாள் அருவி.

அண்ணி உங்களுக்கு என்னை பார்த்தால் தயக்கமா இருக்கு. அது தானே!! உங்க முகத்தை பார்த்ததும் நான் கண்டு பிடிச்சுட்டேன்! என்னை வெளி ஆளாக நினைக்க வேணாம். உங்களோட தம்பியா நினைச்சுக்கோங்க..

"இல்ல நீங்க என்னை விட பெரியவர்"

"உங்களுக்கு ஏஜ் என்ன?"

19 என்றாள்.

அடப்பாவி மோஹித் அண்ணா ஒரு குட்டி பொண்ணை மேரேஜ் பண்ணிட்டான்.

இல்ல அவரை திட்டாதீங்க! நான் தான் அவரை மேரேஜ் பண்ணிகிட்டென் என்றாள் அருவி.

"ஓ சப்போர்ட்டு சரி அது இருக்கட்டும் இப்போ வாங்க போலாம்"

"எப்படி உங்க கூட வர முடியும்? அது..."

அண்ணி உங்களை நான் என்னோட சிஸ்டரா நினைச்சிக்கிறேன். என்னை தயவு செஞ்சு தப்பா நினைக்காதீங்க.. வாங்க அண்ணி என ரோஹன் அழைத்தான்.

இதற்கு மேலும் மறுப்பது நல்லத்தில்லை என தோன்றியது அருவிக்கு. அதனால் கிளம்பினாள் அவனுடன்.

அண்ணி போலாம் நீங்க ஒரி பண்ணிக்க வேணாம். ஜஸ்ட் ஹாஃப் அண்ட் ஹவர் தான்.. நார்மல் செக் அப் பண்ணிட்டு வந்திடுவோம் என்றவன் வெளியே செல்ல முத்து அவர்கள் இருவரையும் பார்த்தவர். தம்பி!! என அழைத்தார்.

பூஜை சாமான் வாங்க கடைக்கு போயிட்டு வரோம். நானும் அண்ணியும் நீங்க அம்மா வந்தால் சொல்லிடுங்க நான் போன் பண்ணிட்டு தான் போறேன். அண்ணா போன் எடுக்கல, மோஹித் அண்ணா வந்தால் சொல்லுங்க என்று விட்டு காரை கிளப்பினான்.

அருவி பின்னால் அமர்ந்து கொண்டாள். மிகவும் பதட்டமாக இருந்தது. சாமி காட்டு காளி எந்த பிரச்னையும் இருக்க கூடாது. நான் என் சாமி கூட ரொம்ப நாள் வாழணும் என வேண்டிக் கொண்டாள்.

கார் ஹாஸ்பிடலை அடைந்தது. ரோஹன் உள்ளே அழைத்து சென்றான். வாங்க அண்ணி என இருவரும் சென்றார்கள். இது வரை அருவி ஹாஸ்பிடல் வந்ததே இல்லை. இது தான் முதல் முறை. அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றாள்.

பேசன்ட்டுக்கு நீங்க என்ன வேணும்? என செவிலி பெண் கேட்க..

அவங்க என்னோட சிஸ்டர் என்று கூறியவன். Op பார்க்க பணத்தை கட்டி விட்டு காத்திருந்தார்கள் இருவரும்.

அருவி வாங்க என செவிலி அழைக்க, அண்ணி போலாம் என இருவரும் சென்றார்கள்.

நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார் உள்ளே கூப்பிடும் போது போங்க என செவிலி சொல்ல நல்லதா போச்சு என ரோஹன் வெளியே காத்திருந்தான்.

சார் உள்ளே வாங்க டாக்டர் கூப்பிடுறாங்க என அழைக்க, ரோஹன் பதட்டத்துடன் உள்ளே சென்றான்.

சொல்லுங்க டாக்டர் என்னோட சிஸ்டருக்கு எந்த பிரச்னையும் இல்லையே என கேட்டான் ரோஹன்.

அவங்க மேரிட் தானே! அவங்களோட ஹஸ்பண்ட் எங்கே? என டாக்டர் கேட்க...

அவர் வேலை விசயமா வெளியூர் போயிருக்கார். எதுவும் இஸ்யூவா டாக்டர் என ரோஹன் கேட்க... குட் நியூஸ் தான் உங்க சிஸ்டர் கன்சீவா இருக்காங்க 70 டேஸ் ஆகுது. என டாக்டர் புன்னகையுடன் கூற, அருவிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி கூடவே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. தனது மணி வயிற்றை வருடி பார்த்தாள். சாமி கிட்ட சொல்லணும்! காட்டு காளி என இப்பொழுதே வேண்ட ஆரம்பித்தாள்.

"ஓகே டாக்டர் ஹாப்பி" என்ற ரோஹன் சந்தோசத்துடன் அருவியை பார்த்தான்.

அப்புறம் ரொம்ப வீக்கா இருக்காங்க அதுக்கு டேப்லெட் டானிக் எல்லாம் இருக்கு. அதை ஒரு நாள் விடாமல் கன்டின்யூ பண்ணனும் என டாக்டர் சொல்லி கொண்டிருக்க, ஓகே டாக்டர் எல்லாமே வாங்கிக்கறோம் என்றான்.

சில டெஸ்ட் எழுதி தரேன். நெக்ஸ்ட் வீக் வந்து அதை எடுக்கணும் அவங்க என எழுதி கொடுத்தார் டாக்டர்.

ஓகே என அனைத்தையும் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ரோஹன். புன்னகையுடன் நான் மறுபடியும் சித்தப்பா ஆகிட்டேன். மோஹித் டாடி ஆக்கிட்டான். ஹாப்பி இதை உடனே அண்ணா கிட்ட சொல்லணும் என
போனை எடுத்தான்.

ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்றாள் அருவி.

"சொல்லுங்க அண்ணி!"

அருவி...?

வருவாள்.
 
Top