Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
கோவிலுக்கு செல்லும் வழியில் வெற்றி அவளை கண்ணாடி வழியாக பார்த்தான். மலர் தீவிர யோசனையில் வந்து கொண்டிருந்தாள். வெற்றியிடம் எதுவும் பேச வில்லை..அது நம்ம நாயகனுக்கு மிகவும் குறையாக இருந்தது

"ம்க்கும்" என தொண்டையை கணைத்தான் வெற்றி.

மலர் மலரவும் இல்லை திரும்பவும் இல்லை.

"மலரே!"

"ம்ம்"

"இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க!"

"தேங்க்ஸ்"

அவ்ளோ தானா? என்பதை போல இருந்தது வெற்றிக்கு.

எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்கா! என வெற்றிக்கு சஞ்சலமாகவே இருந்தது. அவள் குரலில் உணர்வுகள் மிஸ்ஸிங் அதன் கூடவே மாமா மிஸ்ஸிங்.

மலர் நன்றாக இருந்தால் தானே மாறன் இயல்பாக இருக்க முடியும். இப்பொழுது அவள் முகம் தூக்கி இருப்பது உள்ளுக்குள் எதோ பிசைவது போல இருக்க உடனே யோசிக்க ஆரம்பித்தான். "ஒரு வேளை அம்மா கிட்ட காலையில் சொன்ன விடயத்துக்கு என் மேலே கோவிச்சிட்டு இருக்காளா? என்ன ஏதுன்னு க்லியர் பண்ணிக்கனும்" என நினைத்தவன்.

"மலரு"

"சொல்லுங்க"

"ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"ஒன்னும் இல்ல"

"என்னன்னு சொல்லு டி! உன்னோட கை எங்கே? என்னை புடிச்சுக்கோ என வெற்றி அவளிடம் பேச முயற்சி செய்தான்.

இல்ல எனக்கு இதுவே கம்ஃபார்ட்டபிலா தான் இருக்கு என சொல்லி விட்டு திரும்பி கொண்டாள் மலர்விழி.

வெற்றி அதற்கு மேல் பேச வில்லை. கோவில் வந்து சேர்ந்தார்கள். வெற்றி சரவணனுக்கு போனில் அழைத்து இரண்டு நாட்கள் பத்திர ஆபிஸையும், செக்யூரிட்டி ஆபிசையும் பார்த்துக் கொள்ளும் படி பொறுப்புகளை ஒப்படைத்தான்.

ஒரு வழியாக கோவில் வந்ததும் பல்லவி சொன்னதை போல மாலையை கோவில் கிணற்றில் சாமியை வேண்டி கொண்டு போட்டார்கள். முதலில் பிரகாரத்தில் இருக்கும் கடவுள் விக்ரகங்களை மலர்விழி வழிபட்டு கொண்டே வந்தாள். வெற்றிக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை. இது அனைத்தும் பல்லவிக்காக மட்டுமே.

இதற்கு மேல் பொறுமை இழந்தவன் இப்பொழுதே பேசி விட வேண்டும் என முடிவெடுத்து அவளை அழைத்தான். மலர் உன் கிட்ட முக்கியமா பேசணும் வா!

சாமி கும்பிட்டுவிட்டு பேசலாமே!

மனசுல சஞ்சளத்தோட சாமி கும்பிட கூடாது. நான் சொல்றத கேளு பேசி முடிச்சிட்டு அதுக்கு அப்புறம் சேர்ந்து கும்பிடளாம் என அவளின் கைகளை பிடித்து ஒரு பக்கம் கூட்டி சென்றான்.

கைய விடுங்க நானே வரேன் என்றாள் மலர்விழி.

இல்ல விட மாட்டேன். இனி எப்பவும் என்றவன் அவளின் முகத்தை பார்த்து இப்போ உனக்கு என்னாச்சு? எதுக்கு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?

இல்லையே நான் எப்போவும் போல தான் இருக்கேன் என மலர்விழி சொல்ல..

"பொய் சொல்லாத டி எனக்கு தெரியும். எதோ இருக்கு. என்னன்னு சொல்லு "

ஒன்னும் இல்ல என மலர்விழி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

இட்ஸ் ஓகே நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.

என்ன?

வெற்றி அவளின் முகத்தை பார்த்தவன். நான் அம்மா சொன்ன பேரில் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

"அது தான் தெரியுமே"

நீயும் அதே போல தானே! வேற வழியே இல்லாம தானே என்னை கல்யாணம் பண்ண?

ஆமா என்றாள் மலர்விழி.

என்னால் அதை ஏத்துக்க முடியுது. அது தான் உண்மையும் கூட.. ஆனால் காலையில் அம்மா கிட்ட நான் இந்த விசயத்தை திரும்ப சொன்னதில் இருந்து உன்னோட முகமே சரி இல்ல என வெற்றி அவளின் முகத்தை பார்த்தான்.

கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ண விசயத்தை கேட்கும் போது தான் கொஞ்சம் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் சீக்கிரம் சரி ஆகிடுவேன். வாங்க போலாம் என முன்னால் நடந்தாள்.

நான் இன்னும் பேசி முடிக்கல என்றவன். அவளின் முன்னால் போயி நின்றான்.

என்ன விசயம்? என மலர்விழி வெற்று பார்வையுடன் கேட்டாள்.

இங்கே பாரு மலரு நீ அஞ்சு மாசத்துக்கு முன்னாடி என்னோட தம்பிக்கு நிச்சயம் பண்ண பொண்ணு. இதை நான் வேணும்னு சொல்லல ஜஸ்ட் க்லாரிபிக்கேசன் தான். அவனுக்கு மனைவியா வர போற உன்னை நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்படி இருக்கும் போது என்னோட அம்மா என் கிட்ட உன்னை பத்தி சொன்னதும் நான் அவங்க விருப்பத்துக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னேன். அது தான் சரியும் கூட...

இப்போ என்ன சொல்ல வரீங்க? என அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

நான் உன்னை பிடிச்சு கல்யாணம் பண்ணதாக சொன்னால் அது எப்படி இருக்கும் தெரியுமா டி! தம்பி கட்டிக்க போற பொண்ணு மேலே ஆசை பட்டதாக தோணும். இப்போ புரியுதா?

மலர்விழி அழ ஆரம்பித்தாள்.

ஹே மலரு உனக்கு நான் எப்படி புரிய வைக்கிறது? பிளீஸ் டி! என்னை குற்ற உணர்வில் நிக்க வைக்காத..

புரியுது இனி எதுவும் நினைச்சுக்க மாட்டேன் நீங்க சொல்றது சரி தான். ஒரு வேளை இளமாறன் வந்திருந்தால் எனக்கும் அவருக்கும் என மலர்விழி சொல்லி முடிக்க வில்லை.. அவ்விடத்தை விட்டு முன்னால் நடந்தான்.

மலர்விழி அவனது பின்னால் ஓடினாள். நில்லுங்க.. என அவனை பிடிக்க முயன்றாள்.

எதுவும் பேசாமல் கற்ப கிரகத்தின் பக்கம் சென்றார்கள். குருக்களிடம் வெற்றி எதையோ கூறினான். உடனே பண்ணிடலாம் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வாங்கோ என அவர் கூற.. இன்னொரு பக்கம் சென்று பூஜைக்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்தான்.

மலர்விழி எதுவும் பேசாமல் அவன் பின்னால் சென்றாள். ரெடியா தம்பி என குருக்கள் கேட்க..

தயாருங்க என்றான் வெற்றி.

இப்படி வந்து ரெண்டு பேரும் நில்லுங்க என குருக்கள் இருவரையும் அழைக்க.. மலர் வெற்றியை புரியாமல் பார்த்துக் கொண்டே சென்றாள்.

குருக்கள் உள்ளே சென்று இரண்டு மாலையை எடுத்து ஆளுக்கு ஒன்றை கொடுத்தார்.

வெற்றி அதை வாங்கி கொண்டு மலரை பார்க்க, அவளும் திருதிருவென முழித்து கொண்டு வாங்கி கொண்டாள் மாலையை.

ரெண்டு பேரும் மாலையை மாத்திகோங்க என குருக்கள் மந்திரங்களை சொல்லி கொண்டே கூறினார்.

வெற்றி மலரின் கழுத்தில் மாலையை போட, மலர் அவன் கழுத்தில் எக்கி மாலையை போட்டு விட்டாள்.

அவரின் தட்டில் பல்லவி கொடுத்த மாங்கல்யம் மின்னி கொண்டிருந்தது. அதை உள்ளே எடுத்து சாமியிடம் காட்டினார் அதற்குள் வெற்றி மலரின் கையை பிடித்து இந்த நாள் தான் இனி நம்ம எல்லா வருடமும் கல்யாண நாளாக கொண்டாட போறோம். உன்னை நான் இஸ்ட பட்டு கல்யாண் பண்ணிக்க போறேன். உனக்கு எப்படி? என்னை கட்டிக்க இஸ்டமா? என கேட்டான்.

அவள் தன்னிச்சையாக தலையை ஆட்டினாள். உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம். அதற்குள் குருக்கள் தங்க கொடி தாலியுடன் மந்திரங்களை ஓதினார்.

அன்னிக்கு முதல் முறை உன்னோட கழுத்தில் விருப்பம் இல்லாம தாலி கட்டி இருக்கலாம். ஆனால் இந்த முறை என்னோட விருப்பத்தோடு என்னோட மலருக்கு இந்து தாலியை போட்டு விடுறேன் என வெற்றி மாறன் மலரின் கழுத்தில் கொடியை போட்டு விட்டான்.

கோவில் மணி டும் டும் வாசிக்க... மலர்விழி வெற்றி மாறனை கண்களில் நீருடன் நெஞ்சு கூடு ஏறி இறங்க எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் பார்த்தாள்.

"குங்குமம் வச்சு விடுங்கோ!" என குருக்கள் ஆரத்தி தட்டினை நீட்ட... அதை வலுது கை விரலில் எடுத்தவன் அவளின் திரு மாங்கல்யத்திலும் அவளின் நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டு கொண்டே "இனி உன்னோட வாழ்க்கையில் மாறன் அப்டின்னா நான் மட்டும் தான் நியாபகத்துக்கு வரணும். நான் மட்டும் தான்." என அழுத்தி கூறியவன் இனி நீ மலர்விழி வெற்றி மாறன்" என முடித்தான்.

சரிங்க மாமா என்றாள் மலர்விழி ஆசை பொங்க..

போலாமா! என புருவத்தை தூக்கினான்.

ம்ம் என்றாள்.

அதுக்கு முன்னாடி போய் சட்ட படி இந்த கோவில் ஆபிஸில் பதிவு பண்ணிட்டு வந்திடலாம். நம்ம கல்யாணத்தை என சொல்லி கொண்டே சென்றவன். மலர்விழியின் ஆதார் கார்ட், வெற்றி மாறனின் ஆதார் கார்ட் , பாஸ் போட் சைஸ் போட்டோ என அனைத்தையும் கையுடன் கொண்டு வந்திருந்தான்.

எப்படி இதெல்லாம்? என மலர்விழி கண்கள் விரிய கேட்க..

நான் அம்மா சொன்னதும் பிளான் பண்ணிட்டேன். என அழகாக கண்களை சிமட்டியது அந்த கிரேக்க சிற்பம்.

இங்கே பொற்கொடியின் வீட்டில் இருந்து இளமாறன் கிளம்பும் போது ஜெகபதி பாபு அழைத்தார்.

சொல்லுங்க கர்னல்.

"மாறன் நாங்க ஆல்மோஸ்ட் ரீச்ட் உங்க அம்மா கிட்ட அந்த சந்தோசமான விசயத்தை சொன்னீங்களா? நீங்க எங்கே இருக்கீங்க?! கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க." என கேட்டார்.

அது வந்து கர்னல்.. இப்போதைக்கு வேணாம். நம்ம கிளம்பலாம் அம்மா இங்கே இல்ல என்றான் இளமாறன் தயங்கி கொண்டே.

என்ன மாறன் பேசிட்டு இருக்கீங்க? ஸ்ருதி இப்போ கன்சீவ் தெரியும் தானே! அதனால் தான நான் புரோப்பரா உங்க கல்யாணத்தை சட்ட பூர்வமாக அன்னவ்ன்ஸ் பண்ண நினைக்கிறேன். அது மட்டுமா? உங்களுக்கு ஒன் மந்த் லீவ்.. முக்கிய வேலையா நானும் ஆண்டியும் டெல்லி போகனும். நீங்க உங்க அம்மா வீட்டில் இருந்து ஸ்ருதிய பார்த்துக்கிட்டா நல்லாருக்கும். உங்க அம்மா எங்கே இருக்காங்க சொல்லுங்க நான் வந்து பேசுறேன் என கேட்டார் பாபு.

நானே பேசிட்டு இப்போ கால் பண்றேன் கர்னல் என சொல்லி விட்டு போனை வைத்தவன். அம்மா ஒரு முக்கியமான விசயம் நீங்க பாட்டி ஆக போறீங்க! இதை சொல்லி ஸ்ருதிய கூட்டிட்டு வரலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அதுக்குள்ள நீங்க என்னை போக சொல்லிட்ங்க இப்போ என்னோட மாமனார், என்னோட மனைவி ரெண்டு பேரும் இங்கே வந்துட்டாங்க. நான் இப்போ என்ன பண்றது? சொல்லுங்க? என இளமாறன் கூறி முடித்தான்.

பல்லவி...?

வெற்றி மற்றும் மலர்விழி இருவரும் சந்தோசமாக வீட்டை நோக்கினார்கள். உதட்டை சுளிச்சிட்டு வரியா டி! இன்னிக்கி வாயேன் உன்னோட உதடு இருக்காது என இங்கிருந்தே ஆரம்பித்து விட்டான்.

வருவான்
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-20
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top