வெற்றி நேராக செக்யூரிட்டி ஆபிஸ் சென்றான். இன்று காலையில் இருந்த மனநிலை இப்பொழுது அவனிடம் இல்லை.
என்ன டா ரெண்டு நாள் பார்த்துகோன்னு சொல்லிட்டு இப்போவே வந்துட்ட? என்ன விசயம் என சரவணன் கேட்டுக் கொண்டே அருகில் வந்தான்.
"மாறன் வந்துட்டான் டா!" என வெற்றி மெதுவான குரலில் கூற, நீ தான் டா மாறன்! நீ யார் சொல்ற? என சரவணன் திரும்ப கேள்வி கேட்டான்.
ஒரு பெரு மூச்சை விட்ட வெற்றி நெற்றியை நீவிய படி, "இளமாறன் வந்துட்டான்"
"சரி வந்தால் வந்துட்டு போகட்டுமே!" என சரவணன் எதிரில் அமர்ந்தான்.
வெற்றிக்கு என்ன பேசுவது என தெரிய வில்லை. அமைதியாக தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
"என்ன டா? மலரை நினைச்சு கவலை படுறியா?" என சரவணன் கேட்க...
வெற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். டேய் இப்படி சோர்ந்து போகாத! முதல்ல இங்கே எதுக்கு வந்த? நீ மலர் பக்கத்தில் இருக்க வேண்டியது. அவளை விட்டுட்டு வந்துட்ட! போடா! எழுந்திரு! முதல்ல வீட்டுக்கு கிளம்பி போ என கூறினான் சரவணன்.
வெற்றி அமைதியாக இருந்தான் வெகு நேரம். அவனது மூளைக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிய வில்லை. சரவணன் தன் நம்பனை பார்த்து, எதுக்கு டா இப்படி இருக்க? என்னாச்சு வெற்றி? சொன்னால் தானே டா தெரியும்? என கேட்க...
"ஒன்னும் இல்ல விடு"
"வெற்றி சொல்லு டா! நீ கொஞ்சம் கூட சரி இல்ல"
"இல்ல டா நான் நல்லா தான் இருக்கேன். நீ போ!"
"வெற்றி நீ சரி இல்ல அது உன்னோட முகத்தை பார்த்தாலே தெரியுது. என்ன விசயம்ன்னு சொல்லு."
முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டே வெற்றி, " எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு! ம... மலர்... அது மலருக்கு என்னை பிடிக்குமா?"
"என்ன டா லூசு தனமா கேட்கிற? உனக்கு என்னாச்சு? மலர்விழி உனக்காக பிறந்தவ!" என சரவணன் கூற..
வெற்றி தன் நண்பனை பார்த்தான்.
சரவணன் தீர்க்கமான பார்வையுடன், "அவளுக்கு உன்னை பிடிக்காம தான் இன்னிக்கி வந்தாளா?"
அது அப்படி இல்ல முதன் முதல்ல அவள் இளமாறன தானே கட்டிக்க... என வெற்றி சொல்ல வர..
போதும் நிறுத்து அது முடிஞ்சு போன கதை! போனது போனது தான்! திரும்ப பொண்ணுங்க மனசு பின்னாடி இருக்க வாழ்க்கைக்கு தாவாது. அதே போல மலர் புருசன் நீ தான். உன்னை விட்டு எதுக்கு அவள் வேற ஒருத்தனை நினைக்க போறா! அவளோட மனசுல நீ தான் இருக்க. தேவையில்லாம எதை நினைச்சும் மனச போட்டு குழப்பிக்க வேணாம். முதலில் உனக்கு இங்கே என்ன வேலை? போ! இப்போ இனி நீ அவள் கூட இருக்க வேண்டிய நேரம் என சரவணன் வலுக்கட்டாயமாக வெற்றியை அனுப்பி வைத்தான்.
வீட்டுக்கு செல்லவே மிகவும் தயக்கமாக இருந்தது. சொல்ல போனால் பயம்! யாரிடமும் இத்தனை மென்மையாக இருந்ததில்லை. அவனது மொத்த மென்மை பக்கமும் மலரவள் ஒருத்தியிடம் மட்டுமே காட்டி இருக்கிறான். கிட்ட தட்ட வெற்றியின் சந்தோஷம் அனைத்தும் மலர் தான். ஆசை வைத்து விட்டான் ஆண் மகன். அவனுக்காக படைக்க்கபட்டவள் அவள் என!!
பத்து மணி இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உள்ளுக்குள் புயலே கிளம்பியது. மலரை நினைத்து, வீடு வந்து சேரும் முன் சொன்னாலே அவளின் காதலை.... எல்லாமே நன்றாக போயி கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது? இப்பொழுது? மலர் வெற்றியை பிடிக்காமல் நடந்து கொண்டாலோ! முகத்தை ஒரு மாதிரி வைத்திருந்தாலோ அவ்வளவு தான் வெற்றி மொத்தமாக உடைந்து விடுவான். அப்படி கூட சொல்ல முடியாது. அவனது உணர்வுகள் செத்து விடும். அப்படி ஒரு நிலையில் இருக்கிறான்.
ஒவ்வொரு நிமிடமும் திக் திக்கென இருந்தது. வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சாந்த முகத்துடன்.. ஆனால் உள்ளுக்குள் கலவரமாக இருந்தது. மெல்ல அவனது அறையை பக்கம் பார்த்தான்.
"வெற்றி வந்துட்டியா? சாப்பாடு எடுத்து வைக்கவா?" என பல்லவி அக்கறையாக கேட்டார் அதை விட அவனது மனநிலை பற்றி மிகவும் கவலையாக இருந்தது அவருக்கு.
வெற்றி என்ற பெயரை கேட்டதும் அறை கதவு திறந்தது. மலர் தான் எட்டி பார்த்தாள். இல்ல மா எனக்கு வேணாம். என அவன் அறைக்குள் செல்ல யோசித்து கொண்டிருந்தான்.
மலரும் சாப்பாடு வேணாம்னு சொல்லிடுச்சு நீயும் வேணாம்னு சொல்ற? சரி எனக்கும் மனசே சரி இல்ல! ரொம்ப பாரமா இருக்கு! எப்படி தூங்க போறனோ என படுக்கை அறை பக்கம் திரும்பியவர் கண்கள் இளமாறன் அறையின் மீது படிந்தது. இது எப்படி போயி முடியும்? பிரச்னை இல்லாம இந்த ஒரு மாசமும் போகனும் என வேண்டி கொண்டே சென்றார். இன்னும் ஒரு மாதத்தில் லீவ் முடிந்து ஸ்ருதியை அழைத்து சென்று விடுவான்.
வெற்றி ஒரு பெரு மூச்சை விட்ட படி அறையின் கதவு வரை வந்தான். ஏனோ உள்ளே செல்ல எதுவோ தடுத்தது. தயக்கம் ஒரு பக்கம் ஏமாற கூடாது என இன்னொரு பக்கம் மூச்சு முட்டியது. அவனது கால்கள் வந்த வழியே பின்னோக்கி சென்றது. மொட்டை மாடியை நோக்கி...
வெற்றி வருவதற்காக காத்திருந்தாள் மலர். அவரோட மனதில் என்ன இருக்கோ? என உள்ளுக்குள் கவலையாக இருந்தது. அவன் இன்னும் வர வில்லை என தெரிந்து கொண்டவள். வெளியே வந்தாள் ஹாலின் அறை எரிந்து கொண்டிருந்தது. சமையல் அறையில் யாரும் இல்லை. எங்கே போனார் என வெளியே வந்து பார்த்தாள். புல்லட் நின்று கொண்டிருந்தது. அப்போ மொட்டை மாடி என தோன்ற மெதுவாக மேலே ஏறினாள்.
வெற்றி ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தான். நேராக அருகில் சென்றவள். என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்கே? நீங்க உள்ளே வரிவீங்கன்னு காத்திட்டு இருந்தேன்! ஆனால் நீங்க தான் ஆளையே காணோம் என மலர்விழி மெல்ல கூறினாள்.
"என்ன விசயம் சொல்லு?" என மொட்டையாக கேட்டான்.
"எதுக்கு கூப்பிடுவாங்க தூங்க தான்! வாங்க எனக்கு பசி கூட பயங்கரமா இருக்கு!"
ஏன் நீ சாப்பிடல என அவள் புறம் திரும்பினான்.
உங்களுக்காக காத்திருந்தேன். நீங்க வந்ததும் ஒண்ணா சாப்பிட நினைச்சேன் என்றாள் மலர்விழி.
அப்போ உனக்கு... அது... அப்போ என வெற்றி தயங்க..
என்ன பிரச்னை உங்களுக்கு? என மலர்விழி கேட்டாள்.
இல்ல அது வந்து உனக்கு மாறன்... அது என கம்பீர மனிதனின் உதடுகள் தந்தி அடித்தது.
"மாறனுக்கு என்ன?" என மலர்விழி அவனை பார்த்தாள்.
வெற்றிக்கு வார்த்தைகள் வரவில்லை. இதயம் கனத்து போனது.
மாறனுக்கு என்னாச்சு? அதை மாறன் தான் சொல்லணும்! ம்ம் சொல்லுங்க மாறன்? என அவனை பார்த்தாள் மலர்விழி.
ஹே ஒரு நிமிசம் ஒரு நிமிசம்...
என்ன?
நீ நீ நீ வந்து இப் இப்போ யாரை மாறன்னு சொல்லிட்டு இருக்க? என வெற்றி கேட்க.
மலர்விழி அவனை பார்த்து என்னோட வாழ்க்கையில் மாறன் ஒருத்தர் தான் என்னோட வெற்றி மாறன் மாமா மட்டும் தான்! காலையில் இருந்து ரொமான்டிக் பாயா சுத்திட்டு இருந்தாரு. ஆனால் திடீர்னு இப்போ என்னாச்சுன்னு தெரில சொன்னால் தானே தெரியும் என மலர் கேட்க.. அடுத்த நொடி ஹக் என துள்ளினாள்.
ஆம் இரும்பு கரங்கள் இரண்டும் அவளை வளைத்து சுருட்டி கொண்டது. அந்த அணைப்பு சொன்னது அவனது தவிப்பை... வெற்றியின் இதய துடிப்பு வேகமாக துடித்து கொண்டிருந்தது.
ம.. ம.... மாமா என்னாச்சு உங்களுக்கு? எனக்கு மூச்சு முட்டுது மாமா! என மலர் விட்டு விட்டு கூறினாள்.
"மலர் நான் பயந்துட்டேன் டி! எனக்கு இப்போ தான் உயிரே வந்திருக்கு." என வெற்றி அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
க்ப்... எதுக்கு பயம்? என மூச்சை பிடித்து மொத்த பலத்தையும் வைத்து அவனை தள்ளி விட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
"அது வேணாம் விடு!"
"நான் சொல்றேன் உங்களுக்கு என்ன பயம்ன்னு எனக்கு தெரியும். என்னை தப்பா நினைச்ச்சிருப்பீங்க அது தானே!"
ஹே இல்ல டி! என வெற்றி புரிய வைக்க முயற்சி செய்ய, உங்களை லவ் பண்றேன்னு வெட்கத்தை விட்டு ஒரு பொண்ணு வந்து சொல்லிருக்கா! அதையும் மீறி உங்களுக்கு பயம் அப்டின்னா! என் மேலே உங்களுக்கு துளி கூட நம்பிக்கை இல்லன்னு நல்லா தெரியுது. ரொம்ப நல்லது. என அவ்விடத்தை விட்டு மலர் விழி வேகமாக படிகட்டின் பக்கம் சென்றாள்.
மலர் மலர் நில்லு டி! என அவளின் பின்னால் சென்றவன் கையை பிடித்து இழுத்து மீண்டும் கட்டி கொண்டான்.
வெற்றி விடுங்க வெற்றி! லீவ் மி!
No உன்னை விட மாட்டேன் என வெற்றி அவளின் கழுத்து குழியில் முத்தம் பதித்தான்.
வெற்றி விடுங்கஅஅஅ.. என ராகமாக கத்தினாள்.
தெரியாம சொல்லிட்டேன். என்னை விட்டு போகாத! பயம் தான் உண்மைய ஒத்துக்குறேன். எனக்கு பயம்! ஏன்னா நீ தான் என்னோட பலவீனம். உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.
"என்னால இருக்க முடியும் என்னை விடுங்க! எவ்ளோ தைரியம் இருந்தால் என் மேலே உங்களுக்கு சந்தேகம் வரும்? காலையில் என்ன சொல்லி தாலி கட்டினீங்க? அந்த விசயத்தை பத்தி நினைச்சு நான் பூரிச்சிட்டு இருக்கேன். ஆனால் நீங்க!!!..... நீங்க எனக்கு வேணாம் வெற்றி"
"இல்ல எனக்கு மலர் வேணும்!" என ஆவேசமாக அவளின் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான்.
உங்க முத்தம் யாருக்கு வேணும்? என் பக்கத்தில் வராதீங்க! தள்ளி போங்க என மலர்விழி அவனை விட்டு விலகுவதிலேயே குறியாக இருந்தாள்.
ஹே முரண்டு பிடிக்காத டிஇஇ! என உதட்டில் ஒற்றி எடுத்தவன். அவளின் கைகள் இரண்டையும் பின்னால் வளைத்து பிடித்துக் கொண்டு முத்தமிட்டான் மலர் விழியை.. விடுங்குஉஊ! என மலர் சொல்ல, வார்த்தை முடியும் முன் உதட்டை கவ்வி கொண்டான்.
முத்தம் வேகமாக இருந்தது. மலரின் கைகள் இரண்டும் அவனது ஒரு
கையில் சிறை பட்டிருக்க, முரண்டு பிடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல அடங்கினாள். முத்தத்தில்…
வருவான்

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-22
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.