Pradhanya

Active member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
122
விடியற்காலை நான்கு மணி இருக்கும். முதல் மழை இரவு அடித்து ஓயிந்து போக முதல் அனுபவத்தில் மலர் புது உணர்விலும் புது சுகவலியிலும் திணறித்தான் போனாள். இரண்டாம் மழை நடுசாமத்தில் விடவில்லை வெற்றி. அதிகாலை நான்கு மணிக்கு மேல் வெற்றிக்கு உறக்கம் வரவில்லை மூன்றாம் மழைக்கு தயாரானான்.

தன் மேல் களைத்து ஓய்ந்து தூங்குபவளை பார்க்க முதலில் திருட்டு முத்தத்தை கொடுக்க வேண்டும் என தோன்றியது. அதில் என்ன பரவசமோ தெரியாது. மொத்த மலரும் அவனுக்கு தான். ஆனால் இந்த திருட்டு முத்தம் ரொம்ப ஸ்பெசல்.. அவளின் முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டான் மெல்ல, நேற்று ருசித்த உதட்டுக்கும் இப்பொழுது அவளின் உதட்டுக்கும் நிறையவே வித்தியாசம். என்னாச்சு? வேற என்னாகும் உதட்டை கடிச்சு கடிச்சு புண்ணு பண்ணிட்டு இப்போ வேற எப்படி இருக்கும்.

இருந்தாலும் பரவாயில்லை என கொடுத்தானே திருட்டு முத்தம். ஒரு பெண்ணிடம் இத்தனை இன்பமா? அவனுக்கே வியப்பு தான். மலரை நினைக்காமல் இருக்க முடிய வில்லை. தினமும் இரவு படுக்கையில் செய்யும் அட்ராசிட்டி அதை நினைத்து பார்க்க சிரிப்பாக தான் வருகிறது. தலையணை சுவற்றை வைத்து விட்டு கொஞ்ச நேரத்தில் அத்தனையையும் தூக்கத்தில் தள்ளி விட்டு மார்பில் வந்து ஒட்டிக் கொள்வாள்.

அதே போல குளிக்க பாத் ரூம் செல்வாள். ஹீட்டர் ஸ்விட்ச் வெளியே தான் இருக்கிறது. அதை மறந்து விட்டு குளிக்க ஆரம்பிப்பவள் பாதி குளியலில் கதவை திறந்து எட்டி பார்த்து விட்டு ஸ்விட்ச்சை தட்டுவாள். அந்த நொடி குளியலறையில் இருந்து வரும் சோப்பு வாசம் அடடா! அவளுடன் இன்னொரு முறை சேர்ந்து குளிக்க தோன்றும்.

தலையை சிடுக்கு எடுத்து ஜடை போடும் அழகு மயில் உதிர்ந்த முடியை டஸ்ட் பின்னில் போட முடை, நிறைய முறை வெற்றி அதை சுத்தம் செய்திருக்கிறான். அரக்க பறக்க தான் பள்ளிக்கு செல்வாள். பள்ளியில் பிள்ளைகளை மிரட்டும் போது அழகு தான்! அவளது தோழிகளின் கூட்டத்துடன் செல்லும் போது பார்த்திருக்கிறான். கண்ணெடுக்காமல் அவனது மொத்த கவனமும் காறிகையின் மேல் தான் இருக்கும். எதாவது வேலை என்றால் வேண்டும் என்றே அவளது பள்ளியின் வழியாக செல்வான். ஏனோ இதயத்துக்கு நெருக்கனானவள் இருக்கும் பகுதியில் அமைதியும் பரவசமும் தோன்றும்.

இதற்கு அர்த்தம் என்ன? என திருமணமாகி மூன்று மாதங்கள் யோசனையில் தான் சென்றது. இரண்டாவது மாதத்தில் மாற்றம் நிகழ்ந்தது. எப்பொழுது? ஹாஸ்டலில் இருந்து வந்தவள் வீட்டிலுருந்து பள்ளி செல்லும் போது தான் இந்த மாற்றம் அவனுக்குள்.

மெல்ல முத்தங்கள் கொஞ்சம் திசை மாற தொடங்கியது. மலர் வேண்டும். அவ்வளவே!! மலர் என எழுப்பினான். மாமா தூக்கம் வருது!! என அவள் திரும்பி கொள்ள, தூங்கு டி நான் இன்னும் கொஞ்சம் தூங்க வைக்கிறேன் என கூறினான். அவனின் செய்கையில் கொஞ்சம் கொஞ்சமாக முழிப்பு தட்டியவள். மெல்ல அவனது தலையை கோதி கொடுத்தாள்.

தூக்கம் வரலையா? எதுக்கு எழுந்த?

பச்சை குழந்தை வச்சிருக்கேனே! என அவள் அவனை முறைக்க, ஆமாம் டிஇஇ! என அவனது பல் வரிசை அவளின் மார்பில்.. மெல்ல சிணுங்கினாள்.

மலர்! என அழைத்துக் கொண்டு ஆட்டாத்தை ஆரம்பித்தான். மா.. மா! கொஞ்சம் மெதுவா! இன்னும் நிறைய.. என கண்கள் சொக்க முனகினாள்.

அழகி! என கைகள் சென்ற இடமெல்லாம் பல்தடத்தை தடவி பார்த்து பிசைந்து கொடுத்தது, உச்சம் எய்தி சொக்கி அவளிடம் மொத்தமாக தஞ்சம் அடைந்தவன் மெதுவாக சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிரீங்க! என அவள் முதுகு காட்ட அவளின் நெஞ்சு குழியில் முகம் புதைத்தவன். இனி ஜாகிங் வேணாம் எக்சர்சைஸ் வேணாம் எதுவும் தேவையில்லை..

ஏன்? என அவனை கட்டிக் கொண்டாள் மலர்விழி.

வேணாம் விடென்!

இல்ல சொல்லணும்!

"சொன்னா டீச்சர் கோப படுவா"

இப்போ சொல்லல அடி விழும் குச்சியில் என மிரட்டினாள் மலர்.

இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜாகிங் போனேன்.பாரேன் எப்டி வியர்க்குது!

எப்போ போனீங்க? என அவனது முகத்தை உற்று பார்த்தாள் மலர்விழி.

வெற்றி அவளின் காதுகளில் கிசுகிசுப்பாக எதோ சொல்ல, நான் உங்களுக்கு? ஹஹஹ நான் உங்களுக்கு ட்ரட் மில்லா? என உதட்டை பிதுக்கினாள்.

அடியே அழகி! அப்படி இல்ல சும்மா சொன்னேன். ஜாகிங் போனாலும் காலொரி பர்ன் ஆகும். என் மலர் விழிய.. கடிச்சு தின்னா இன்னும் குறையும் டி.. டெய்லி டெய்லி என முத்தமிட்டான் வெற்றி.

சரி சரி பாவமேன்னு விடுறேன் என மலர் சொல்ல, நான் பாவம் பார்க்கவே மாட்டேன் என அவளை சுருட்டி போட்டு மொத்த ஆட்டத்தையும் ஆடி முடித்தான்.

அவர்களின் சிந்தையில் இளமாறன் என்னும் கேரக்டர் வந்தது எதுவும் நினைவில் இல்லை. வெற்றி மாறன் மற்றும் மலர்விழி இருவரும் ஒரு தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான சின்ன உலகம். வெற்றிக்கு மலர். மலருக்கு தன் மாமன் என இருந்தார்கள்.

இளமாறன் தனக்கு அருகில் படுத்திருப்பவளை பார்த்தான். அவனை கட்டிக் கொண்டு உறங்கினாள். உண்மையில் சொல்ல போனால் அவர்களின் திருமணம் முழுக்க முழுக்க ஸ்ருதியின் விருப்பத்தில் தான்! நினைத்ததை அடைந்தே தீரும் குணம் கொண்டவள் கண்களில் சிக்கியது இளமாறன் தான். அவனை நினைத்ததை போலவே அடைந்து விட்டாள். அவளின் அந்த குணம் தான் மூர்க்கமான விடயங்களை செய்ய தூண்டும். ஒரே மகள் என பாபு செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்.

இளமாறன் கொஞ்சம் நகர்ந்து படுக்க, என்னை விட்டு போகாதே! மாறா! என தூக்கத்தில் கூட அவன் அருகாமை தெரிகிறது. இந்த அதீத அன்பு விஷம்.. இது அன்பு என சொல்ல முடியாது. ஆதிக்கம் அகங்காரம் என்று கூட சொல்லலாம். பார்ப்போமே.

இங்கே தான் ஸ்ருதி இருக்கேன் பாத்ரூம் போறேன் என சென்று வந்தான். அதற்குள் எழுந்து கொண்டாள் ஸ்ருதி.

நீ இங்கே இருந்து எதுக்கு கஷ்ட படனும்? நம்ம ஊருக்கு போலாம் ஸ்ருதி! என மாறன் கூற, ஏன் நான் இங்கே இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்னை இளா? என கேட்டாள் ஸ்ருதி.

பிரச்னை ஒன்னும் இல்ல! எங்க அம்மாவுக்கு என் மேலே கோபம். நான் பெரிய விசயம் பண்ணிட்டேன். அதனாலே.. என இளமாறன் சொல்ல, கோபமாக எழுந்து அமர்ந்த ஸ்ருதி அவனை பார்த்து, என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணீட்டீங்களா? இளமாறன் என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்தாள்.

நான் எப் எப்போ அப்படி சொன்னேன்! ஆனாலும் நம்ம..

இதுக்கு மேலே நான் இங்கே இருக்கிறதுல அர்த்தம் இல்ல! என அவளின் கண்களில் நீர் முட்டி கொண்டது.

இளமாறன் அவளின் அருகில் வந்து கைகளை பிடித்துக் கொண்டவன் இல் இல்ல ஸ்ருதி எனக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இஷ்ட பட்டு தான் கல்யாணம் பண்ணேன்! என எவ்வளவோ கெஞ்ச.. இனி ஒரு வார்த்தை நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசினீர்கள்? நான் உயிரோட இருக்க மாட்டேன் என கூறி விட்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.

உள்ளுக்குள் கலவரமானது இளமாரனுக்கு. இப்படி தான் அவளிடம் சிக்கினான். ஒரு வகையில் சொல்ல போனால் மலர்விழியை விட ஸ்ருதியை அவனுக்கு பார்த்ததும் பிடித்து போனது. பாபுவின் ஒரே மகள் கூடவே அனைத்து சொத்துகளுக்கும் வாரிசு! அழகாக இருக்கிறாள். நல்ல படிப்பு திருமணம் செய்து கொண்டால் நல்ல மதிப்பு என யோசித்தது அவன் மூளை.

சாதாரணமாக ஆரம்பித்த பழக்கம் அதன் பின் நட்பு என வட்டமானது. ஸ்ருதி எல்லாம் தனக்கு எட்டா கணி என்று நினைத்து தான் வீட்டில் மலர்விழியை கட்டிக்கொள்ள சம்மதம் இளமாறன். அவளுக்கு பெரிதாக பின்புலம் இல்லை என்பது அவனுக்கு வருத்தம் தான். ஆனால் அவன் சம்மதம் சொல்லி விட்டு வந்ததும், இங்கே ஸ்ருதி அவளின் விருப்பத்தை வீட்டில் சொல்லி விட... எதோ ஒரு ஆசையில் கட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்தான். கட்டில் பாடம் மொத்தமும் சலித்து போனது ஸ்ருதியுடன் மோகத்தில் இருவரும் பின்னி பிணைந்து கிடந்தார்கள். ஸ்ருதி உயிருக்கு உயிராக கூடவே ஒரு தங்க புதையல் போல தெரிந்தாள் இளமாறன் கண்களுக்கு. மொத்த சொத்தின் ஒரே வாரிசு.

ஆனால் ஆனால் ஆண்களுக்கு என்றுமே அடங்கி போகும் பெண்ணை தானே பிடிக்கும். ஆனால் ஸ்ருதி வேறு ரகம்... கொஞ்சம் பாய்சனஸ் கேர்ள் அவளிடம் யாராலும் குப்பை கொட்ட முடியாது. என அதன் பின் தான் தெரிந்து கொண்டான்.

யாரை வேண்டாம் என சொன்னானோ! அவள் இன்று தன் அண்ணனின் மனைவி! அதை விட இப்பொழுது பேரழகியாக இருக்கிறாள் என்பதை இப்பொழுது கூட இளமாறனால் நம்ப முடிய வில்லை. ஒன்றும் செய்ய முடியாது மலர் இப்பொழுது தனக்கு அண்ணி! நினைக்கவே சங்கடமாக இருந்தது. ஆனாலும் இனி ஒரே வீட்டில் குடும்பத்தில் இருப்பதால் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தான். சம்பிரதாயத்துக்காக மட்டுமே! பார்ப்போமே என்ன நடக்கிறது என்று.

எங்கே தூக்கிட்டு போறீங்க என? மலர் கேட்க... சேர்ந்து குளிப்போம். என்றவன் வேலையை ஆரம்பித்தான். சுடு நீர் உடலில் படபட கொஞ்சம் இதமாக இருந்தது. என்ன டி ஒரு மாதிரி இருக்க? ரொம்ப கஷ்ட படுத்துறேனா?.. மலர் பார்வையை கூர்மையாக்கி உங்களை சாதாரணமா எடை போட்டுட்டேன். ஆனால் இப்படி வெற்றிக்கு இன்னொரு முகம் இருக்குன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.. என அவனுக்கு முதுகு காட்டினாள்.

எதுக்கு அந்த பக்கம் திரும்பி நிக்கிற என அவளை திருப்பினான் வெற்றி.

மாமா! விடுங்க என அவள் தட்டி விட... அப்படி என்ன மறைக்கிற? கொஞ்சம் காட்டென்!!

ச்சீ! இதுக்கு மேலே காட்ட என்ன இருக்கு?

அப்போ இந்த பக்கம் திரும்பு!!

வெட்கத்த விட்டு சொல்றேன் எனக்கு ரொம்ப ரொம்ப வெட்கமா இருக்கு! என மலர் சொல்ல.. கொட்டும் தண்ணீரை
உறிஞ்சி கொண்டே அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான் வெற்றி.

வருவான்.
 

Author: Pradhanya
Article Title: அத்தியாயம்-24
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top